Tamil Nadu Board 10th Standard Science - Chemistry Unit 11: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 11 – Chemistry from the Tamil Nadu State Board 10th Standard Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Chemistry Unit 11 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!
Topic: தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை ……..அ) 6, 16
ஆ) 7, 17
இ) 8, 18
ஈ) 7, 18
விடைகுறிப்பு:
ஈ) 7, 18
2. நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை …..
அ) அணு எண்
ஆ) அணு நிறை
இ) ஐசோடோப்பின் நிறை
ஈ) நியூட்ரானிக் எண்ணிக்கை
விடைகுறிப்பு:
அ) அணு எண்
3. ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியைச் சேர்ந்தது?
அ) 17வது
ஆ) 15வது
இ) 18வது
ஈ) 16வது
விடைகுறிப்பு:
அ) 17வது
4. ………………. என்பது ஆவர்த்த ன பண்பு
அ) அணு ஆரம்
ஆ) அயனி ஆரம்
இ) எலக்ட்ரான் நாட்டம்
ஈ) எலக்ட்ரான் கவர்தன்மை
விடைகுறிப்பு:
ஈ) எலக்ட்ரான் கவர்தன்மை
5. துருவின் வாய்ப்பாடு
அ) FeO × H2O
ஆ) FeO4 × H2O
இ) Fe2O3 × H2O
ஈ) FeO
விடைகுறிப்பு:
இ) Fe2O3 × H2O
6. அலுமினோ வெப்ப வினையில், அலுமினியத்தின் பங்கு
அ) ஆக்ஸிஜனேற்றி
ஆ) ஆக்ஸிஜன் ஒடுக்கி
இ) ஹைட்ரஜனேற்றி
ஈ) சல்பர் ஏற்றி
விடைகுறிப்பு:
ஆ) ஆக்ஸிஜன் ஒடுக்கி
7. மெல்லிய படலமாக துத்தநாக படிவை பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு ……….. எனப்படும்.
அ) வர்ண ம் பூசுதல்
ஆ) நாகமுலாமிடல்
இ) மின்முலாம் பூசுதல்
ஈ) மெல்லியதாக்கல்
விடைகுறிப்பு:
ஆ) நாகமுலாமிடல்
8. கீழ்க்கண்ட மந்த வாயுக்களில் எது வெளிப்புற ஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களை கொண்டது?
அ) He
ஆ) Ne
இ) Ar
ஈ) Kr
விடைகுறிப்பு:
அ) He
9. நியான் வாயுவின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜியம் ஆக காரணம்
அ) நியூட்ரானின் உறுதியான வரிசை அமைப்பு
ஆ) எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்பு
இ) குறைந்த உருவளவு
ஈ) அதிக அடர்த்தி
விடைகுறிப்பு:
ஆ) எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்ப
10. இரசக் கலவை உருவாக்கலில் தேவைப்படும் முக்கியமான உலோகம்.
அ) Ag
ஆ) Hg
இ) Mg
ஈ) AI
விடைகுறிப்பு:
ஆ) Hg
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ஒரு மூலக்கூறில் இரு பிணைப்புற்ற அணுக்கட்டு இடையில் உள்ள எலக்ட்ரான் கவர் ஆற்றல் வித்தியாசம் 1.7க்கு மேல் எனில், பிணைப்பின் இயல்பு ………… ஆகும்.விடைகுறிப்பு:
அயனித்தன்மை
2. நவீன ஆவர்த்தன அட்டவணையின் அடிப்படை ………. ஆகும்.
விடைகுறிப்பு:
அணு எண்]
3. தனிம வரிசை அட்டவணையில் மிக நீள் தொடர் …………… ஆகும்.
விடைகுறிப்பு:
6வது தொடர்
4. Cl2 மூலக்கூறில் உள்ள CI அணுக்களுக்கு இடையில் உள்ள தூரம் 1.98A எனில் CI அணுவின் ஆரம்
விடைகுறிப்பு:
0.99A
5. A–, A+ மற்றும் A இவற்றில் மிகச்சிறிய உருவ அளவு உள்ளது …..
விடைகுறிப்பு:
A+
6. நவீன ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கிய விஞ்ஞானியின் பெயர் …………
விடைகுறிப்பு:
ஹென்றி மோஸ்லே
7. அயனி ஆரம், தொடரில் ……. (குறைகின்றது, அதிகரிக்கின்றது)
விடைகுறிப்பு:
குறைகின்றது
8. …………. மற்றும் ………….. ஆனது உள் இடைத் தனிமங்கள் எனப்படும்.
விடைகுறிப்பு:
லாந்தனைடுகள், ஆக்டினைடுகள்
9. அலுமினியத்தின் முக்கியத்தாது………. ஆகும்.
விடைகுறிப்பு:
பாக்சைட்
10. துருவின் வேதிப்பெயர்………. ஆகும்.
விடைகுறிப்பு:
நீரேற்றமடைந்த பெர்ரிக் ஆக்சைடு
III. பொருத்துக.
1
|
முலாம் பூசுதல்
|
அ.
|
மந்த வாயுக்கள்
|
2
|
காற்றில்லா வறுத்தல்
|
ஆ.
|
துத்தநாகம் பூச்சு
|
3
|
ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினை
|
இ.
|
சில்வர் - டின் ரசக்கலவை
|
4
|
பற்குழி அடைத்தல்
|
ஈ
|
அலுமினோ வெப்ப ஒடுக்க வினை
|
5
|
18ஆம் தொகுதி தனிமங்கள்
|
உ.
|
காற்றில்லா சூழ்நிலையில் சூடேற்றும் நிகழ்வு
|
1
|
முலாம் பூசுதல்
|
ஆ.
|
துத்தநாகம் பூச்சு
|
2
|
காற்றில்லா வறுத்தல்
|
உ.
|
காற்றில்லா சூழ்நிலையில் சூடேற்றும் நிகழ்வு
|
3
|
ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினை
|
ஈ
|
அலுமினோ வெப்ப ஒடுக்க வினை
|
4
|
பற்குழி அடைத்தல்
|
இ.
|
சில்வர் - டின் ரசக்கலவை
|
5
|
18ஆம் தொகுதி தனிமங்கள்
|
அ.
|
மந்த வாயுக்கள்
|
IV. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)
விடைகுறிப்பு:
தவறு.
சரியான கூற்று:
மோஸ்லேவின் தனிம வரிசை அட்டவணை அணு எண்ணைச் சார்ந்தது
2. இடப்புறத்திலிருந்து வலப்புறம் செல்கையில் அயனி ஆரமானது தொடரில் அதிகரிக்கும்.
விடைகுறிப்பு:
தவறு.
சரியான கூற்று:
இடப்புறத்திலிருந்து வலப்புறமாக செல்கையில் அயனி ஆரம் குறைகிறது.
3. எல்லா தாதுக்களும் கனிமங்களே. ஆனால் எல்லா கனிமங்களும் தாதுக்கள் ஆகா.
விடைகுறிப்பு:
சரி.
4. அலுமினியக்கம்பிகள், மின்கம்பிகள் உருவாக்க பயன் படுவதன் காரணம் அதன் வெள்ளியைப் போன்ற நிறமே.
விடைகுறிப்பு:
தவறு.
சரியான கூற்று:
அலுமினியக்கம்பிகள், மின் கம்பிகள் உருவாக்க பயன்படுவதன் காரணம் அதன் கடத்தும் திறனே.
5. உலோகக் கலவை என்பது உலோகங்களின் பல படித்தான கலவை ஆகும்.
விடைகுறிப்பு:
தவறு.
சரியான விடைகுறிப்பு:
உலோகக்கலவை என்பது உலோகங்களின் ஒருபடித்தான கலவை ஆகும்.
V. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க.
கீழ்க்கண்ட வினாக்களை, கீழ்க்கண்ட குறிப்புகள் மூலம் விடைகுறிப்புயளிக்கவும்.(i) கூற்றும் காரணமும் சரியானது. காரணம் கூற்றை நன்கு விளக்குகிறது.
(ii) கூற்று சரி, காரணம் தவறு.
(iii) கூற்று தவறு, காரணம் சரி.
(iv) கூற்றும் காரணமும் சரி. ஆனால், காரணம் கூற்றை விவரிக்கவில்லை.
1. கூற்று: HF மூலக்கூறில் உள்ள பிணைப்பு அயனிப்பிணைப்பு.
காரணம் : ‘H’ க்கும் ‘F’ க்கும் இடையே உள்ள எலக்ட்ரான் கவர் ஆற்றல் வித்தியாசம் 1.9
விடைகுறிப்பு:
(iii) கூற்று தவறு, காரணம் சரி.
குறிப்பு: HF மூலக்கூறில் உள்ள பிணைப்பு, முனைவுறும் சகப்பிணைப்பு (Polar Covalent bond) ஆகும்.
2. கூற்று: மெக்னீசியத்தை இரும்பின் மீது பூசுவதால், துருப்பிடித்தலிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
காரணம்: மெக்னீசியம், இரும்பைவிட வினைபுரியும் தன்மைமிக்கது.
விடைகுறிப்பு:
(i) , கூற்றும் காரணமும் சரியானது. காரணம் கூற்றை நன்கு விளக்குகிறது.
3. கூற்று : சுத்தப்படுத்தப்படாத தாமிர பாத்திரத்தில் பச்சை படலம் உருவாகிறது
காரணம்: தாமிரம், காரங்களால் பாதிக்கப்படுவதில்லை.
விடைகுறிப்பு:
(iv) கூற்றும் காரணமும் சரி. ஆனால், காரணம் கூற்றை விவரிக்கவில்லை.
VI. சுருக்கமாக விடையளி
1. A என்பது செம்பழுப்பு உலோகம் இது. ‘O2‘ உடன் வினையுற்று < 1370 K வெப்பநிலையில், B என்ற கருமையான சேர்மத்தை உருவாக்கும். > 1370 K வெப்பநிலையில் A-யானது சிவப்பு நிற C-ஐ உருவாக்கும் எனில் A, B, C என்னவென்று வினைகளுடன் விளக்குக. விடைகுறிப்பு:செம்பழுப்பு உலோகம் A என்பது தாமிரம் (காப்பர்) ஆகும்.

குறியீடு
|
வாய்பாடு
|
பெயர்
|
A
|
Cu
|
தாமிரம் (காப்பர்)
|
B
|
CuO
|
குப்ரிக் ஆக்சைடு
|
C
|
Cu₂O
|
குப்ரஸ் ஆக்சைடு
|
2. A என்பது வெள்ளியின் வெண்மை கொண்ட உலோகம். A-ஆனது ‘O2‘ உடன் 800°C-யில் வினைபுரிந்து B-யை உருவாக்கும். A-யின் உலோகக் கலவை விமானத்தின் பாகங்கள் செய்யப் பயன்படும். A மற்றும் B என்ன?
விடைகுறிப்பு:
வெள்ளியின் வெண்மை கொண்ட A உலோகம் அலுமினியம் ஆகும்.

குறியீடு
|
வாய்பாடு
|
பெயர்
|
A
|
Al
|
அலுமினியம்
|
B
|
A1203
Al,
|
அலுமினியம் ஆக்சைடு
|
விடைகுறிப்பு:
1. இரும்பானது ஈரக்காற்றுடன் வினைபுரிந்து பழுப்பு நிற, நீரேறிய பெர்ரிக் ஆக்சைடை உருவாக்குகிறது.
2. இச்சேர்மமே துரு எனப்படும். இந்நிகழ்ச்சி துருபிடித்தல் எனப்படும்.
4Fe + 3O2 + x H2O → 2 Fe2O3.xH2O
(துரு)
4. இரும்பு துருபிடித்தலுக்கான இரு காரணங்களை தருக.
விடைகுறிப்பு:
1. ஆக்ஸிஜன் (காற்று)
2. நீர்
VII. விரிவாக விடையளி.
1. அ) பாக்சைட் தாதுவை தூய்மையாக்கும் போது அதனுடன் சோடியம் ஹைட்ராக்சைடு காரத்தை சேர்ப்பதன் காரணம் என்ன?விடைகுறிப்பு:
1. பாக்சைட் தாதுவினை நன்கு தூளாக்கி, சலவை சோடாவுடன் 150°C வெப்பநிலையில், குறிப்பிட்ட அழுத்தத்தில் வினைப்படுத்தும்போது, சோடியம் மெட்டா அலுமினேட் உருவாகிறது.
Al2O3 + 2 NaOH → 2NaAlO2+ H2O
2. இதனை நீரினால் நீர்க்கச் செய்து அலுமினியம் ஹைட்ராக்சைடு பெறப்படுகிறது.
3. இதனை 1000°C வெப்பநிலையில் உலர்த்திட, அலுமினா உருவாகிறது.
4. அலுமினாவை மின்னாற்பகுப்பு மூலம் ஒடுக்கி அலுமினியம் பெறப்படுகிறது.
5. ஆக்சைடை, ஹைட்ராக்சைடாக மாற்றி ஒடுக்குவதற்காக பாக்சைட் தாதுவை தூய்மையாக்கும் போது அதனுடன் சோடியம் ஹைட்ராக்சைடு காரம் சேர்க்கப்படுகிறது.
ஆ) அலுமினா மற்றும் கிரையோலைட்டுடன், இன்னும் ஒரு பொருள், மின்பகுளியுடன் சேர்க்கப்பட்டு அலுமினியம் பிரிக்க உதவுகிறது. அது என்ன? அதற்கான காரணம் என்ன?
விடைகுறிப்பு:
1. அலுமினா மற்றும் கிரையோலைட்டுடன் சேர்க்கப்படும் மற்றொரு மின்பகுளி ஃப்ளூரஸ்பார் ஆகும்.
2. இது மின்பகுளியின் உருக்கு வெப்ப நிலையைக் குறைக்கிறது.
2. ஒரு உலோகம் A-யின் எலக்ட்ரான் ஆற்றல் மட்டம் 2,8,18,1 ஆகும். A-ஆனது ஈரக்காற்றுடன் வினைபுரிந்து பச்சை படலத்தை உருவாக்கும். A அடர் H2SO4 உடன் வினைபுரிந்து C மற்றும் D ஐ உருவாக்கும். D யானது வாயுநிலை சேர்மம் எனில் A, B, C மற்றும் D எவை?
விடைகுறிப்பு:
உலோகம் A ஆனது காப்பர் ஆகும்.
2Cu + O2 + CO2 + H2O → CuCO3. Cu (OH)2
(B) (கார காப்பர் கார்பனேட்)

குறியீடு
|
வாய்பாடு
|
பெயர்
|
A
|
Cu
|
காப்பர்
|
B
|
CuCO3.Cu(OH)2
|
கார காப்பர் கார்பனேட்
|
C
|
CuSO4
|
காப்பர் சல்பேட்
|
D
|
SO2,
|
சல்பர் டை ஆக்சைடு
|
விடைகுறிப்பு:
ஊது உலையில் உருக்கிப்பிரித்தல்:
கீழ்ப்பகுதி (எரிநிலை மண்டலம்) :
1. இந்தப் பகுதியின் வெப்பநிலை 1500°C ஆகும் வெப்பக் காற்றுடன் தாதுக்கலவை சேரும்போது, ஆக்சிஜனுடன் எரிந்து CO2வாக மாறுகிறது.
2. இவ்வினையிலிருந்து வெப்ப ஆற்றல் வெளியாவதால் வெப்ப உமிழ் வினை எனப்படும்.

(i) இப்பகுதி 1000°C வெப்பவினையில் உள்ளது. இங்கு CO2 ஆனது CO ஆக ஒடுக்கமடைகிறது.
வெப்ப ஆற்றல்
(ii) சுண்ணாம்புக்கல் சிதைந்து, கால்சியம் ஆக்சைடையும் CO2– வையும் தரும்.
-வெப்ப ஆற்றல்
(iii) மேற்கண்ட இருவினைகளில், வெப்பம் உட்கவரப்படுவதால் வெப்ப கொள்வினைகள் ஆகும். கால்சியம் ஆக்சைடு மணலுடன் சேர்ந்து கால்சியம் சிலிகேட் எனும் கசடாகிறது.
மேற்பகுதி (ஒடுக்கு மண்டலம்):
(i) இப்பகுதியில் 400°C வெப்பநிலையில் ஃபெரிக் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு மூலம் இரும்பாக ஒடுக்கம் அடைகிறது.
(ii) கசடை நீக்கிய பிறகு, உருக்கிய இரும்பானது, உலையின் அடியில் சேகரிக்கப்படுகிறது. இவ்விரும்பு மீண்டும் உருக்கப்பட்டு விதவித அச்சுக்களில் வார்க்கப்படுதால், இது வார்ப்பிரும்பு எனப்படும்.
VIII. உயர்சிந்தனைக்கான வினாக்கள்.
1. A என்ற உலோகம் 3-ஆம் தொடரையும் 13ம் தொகுதியையும் சார்ந்தது. செஞ்சூடேறிய A நீராவியுடன் சேர்ந்து B யை உருவாக்கும். உலோகம் A-யானது NaOH உடன் சேர்ந்து C-ஐ உருவாக்கும் எனில் A,B,C எவை எவை என வினைகளுடன் எழுதுக.விடைகுறிப்பு:
3-ஆம் தொடரையும் 13ம் தொகுதியையும் சார்ந்த உலோகம் அலுமினியம் (A).
2 Al + 3H2O → Al2O3 + 3H2 ↑
(B)
(அலுமினியம் ஆக்சைடு)
2A1 + 2 NaOH + 2 H2O → 2 NaAlO2 + 3H2↑
(C)
(சோடியம் மெட்டா அலுமினேட்)
முடிவு:
குறியீடு
|
வாய்பாடு
|
பெயர்
|
A
|
Al
|
அலுமினியம்
|
B
|
Al2O3
|
அலுமினியம் ஆக்சைடு
|
C
|
NaAIO₂
|
சோடியம் மெட்டா அலுமினேட்
|
2. எந்த அமிலம், அலுமினிய உலோகத்தை செயல்படா நிலைக்கு உட்படுத்தும், ஏன்?
விடைகுறிப்பு:
1. நீர்த்த மற்றும் அடர் நைட்ரிக் அமிலம் அலுமினிய உலோகத்துடன் வினைபுரியாது.
2. மாறாக, அலுமினியத்தின் மேல் ஆக்சைடு படலம் உருவாவதால், அதன் வினைபடும் திறன் தடுக்கப்படுகிறது.
3. (a) HF மூலக்கூறில் உள்ள H மற்றும் F க்கு இடையில் உள்ள பிணைப்பு எது?
(b) இப்பிணைப்பை அறிய உதவும் ஆவர்த்தன பண்பு எது?
(c) இப்பண்பு தொடரிலும் தொகுதியிலும் எவ்வாறு வேறுபடுகிறது?
விடைகுறிப்பு:
(a) முனைவுறும் சகப்பிணைப்பு (Polar covalent bond)
(b) எலக்ட்ரான் கவர்தன்மை
(c)
1. தொடரில், இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக செல்லும்போது எலக்ட்ரான் கவர்தன்மை அதிகரிக்கும். ஏனெனில் அணுக்கரு மின்சுமை அதிகரிக்கும் போது எலக்ட்ரான் கவர்ச்சி விசை அதிகமாகும்.
2. தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்குகையில் எலக்ட்ரான் கவர்தன்மை குறைகிறது. ஏனெனில் ஆற்றல் மட்டத்தின் எண்ணிக்கை அதிகமாகிறது.
0 Comments:
Post a Comment