11th History - Book Back Answers - Unit 19 - Tamil Medium Guides

  

 


    Plus One / 11th History - Book Back Answers - History Unit 19 - Tamil Medium

    Tamil Nadu Board 11th Standard History Unit 19: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 19 – History from the Tamil Nadu State Board 11th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of History Unit 19 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 11th students! Prepare well and aim for top scores. Thank you!

    அலகு 18 - நவீனத்தை நோக்கி

    I. சரியான விடையைத் தேர்வு செய்க

    வினா  1.
    இந்தியாவில் சீர்திருத்தங்கள் பற்றிய பல கருத்துக்கள் தோன்றிய முதல் மாகாணம்………………

    அ) பஞ்சாப்
    ஆ) வங்காளம்
    இ பம்பாய்
    ஈ) சென்னை
    விடைகுறிப்பு:
    ஆ) வங்காளம்
     
    வினா  2.
    “இந்திய மறுமலர்ச்சியின் தந்தை” …………………. ஆவார்.

    அ) சுவாமி விவேகானந்தர்
    ஆ) தயானந்த சரஸ்வதி
    இ) இராஜா ராம் மோகன் ராய்
    ஈ) ஆத்மராம் பாண்டுரங்
    விடைகுறிப்பு:
    இ இராஜா ராம் மோகன் ராய்

    வினா  3.
    தேசிய சமூக மாநாடு …………………..முயற்சியால் ஒருங்கிணைக்கப்பட்டது.

    அ) ரானடே
    ஆ) தேவேந்திரநாத் தாகூர்
    இ கேசவ சந்திர சென்
    ஈ) இராமகிருஷ்ண பரமஹம்சர்
    விடைகுறிப்பு:
    அ) ரானடே

    வினா  4.
    “வேதங்களை நோக்கி திரும்புக” - என்று முழக்கமிட்டவர் ……………….. ஆவார்.

    அ) இராஜா ராம் மோகன் ராய்
    ஆ) தயானந்த சரஸ்வதி
    இ) விவேகானந்தர்
    ஈ) இராமகிருஷ்ண பரமஹம்சர்
    விடைகுறிப்பு:
    ஆ) தயானந்த சரஸ்வதி
     
    வினா  5.
    கதைகள் மற்றும் வியக்கத்தக்க உவமைகளின் மூலம் ………………. தனது கருத்துக்களை விளக்கினார்.

    அ) இராமகிருஷ்ண பரமஹம்சர்
    ஆ) தேவேந்திர நாத் தாகூர்
    இ) கேசவ சந்திர சென்
    ஈ) ஜோதிபா பூலே
    விடைகுறிப்பு:
    அ) இராமகிருஷ்ண பரமஹம்சர்

    வினா  6.
    “ஒரு பைசா தமிழன்” என்ற வாரப் பத்திரிக்கையை நடத்தியவர் ………………. ஆவார்.

    அ) சுவாமி விவேகானந்தர்
    ஆ) தயானந்த சரஸ்வதி
    இ) வைகுண்ட சாமிகள்
    ஈ) அயோத்திதாச பண்டிதர்
    விடைகுறிப்பு:
    ஈ) அயோத்திதாச பண்டிதர்

    வினா  7.
    பிரம்மஞான சபை ………………. ல் நிறுவப்பட்டது.

    அ) இந்தியா
    ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
    இ) பிரான்சு
    ஈ) இங்கிலாந்து
    விடைகுறிப்பு:
    ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

    வினா  8.
    தமிழ் நாட்டில் பிரம்ம சமாஜத்தின் ஆதரவாளராகத் திகழ்ந்த வர் ………………. ஆவார்.

    அ) இராமலிங்க அடிகளார்
    ஆ) காசிவிசுவநாத முதலியார்
    இ) அயோத்திதாச பண்டிதர்
    ஈ) தேவேந்திரநாத்தாகூர்
    விடைகுறிப்பு:
    ஆ) காசிவிசுவநாத முதலியார்
     
    வினா  9.
    மேற்கத்திய அறிவியலை அறிமுகப்படுத்த சையது அகமதுகான் நிறுவிய அமைப்பு ……………….. ஆகும்.

    அ) சத்ய சோதக் சமாஜம்
    ஆ) சிங் சபா இயக்கம்
    இ) அறிவியல் கழகம்
    ஈ) பிரம்ம ஞான சபை
    விடைகுறிப்பு:

    இ) அறிவியல் கழகம்

    வினா  10.
    இஸ்லாமிய சமூகத்தினரின் சமய மீளுருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டிருந்த இயக்கம்…………………. ஆகும்.

    அ) தியோபந்த் இயக்கம்
    ஆ) அகமதியா இயக்கம்
    இ) அலிகர் இயக்கம்
    ஈ) வாஹாபி இயக்கம்
    விடைகுறிப்பு:
    அ) தியோபந்த் இயக்கம்

    வினா  11.
    சரியான கூற்றினைத் தேர்வு செய்

    அ. சுத்தி இயக்கத்தை நிறுவியவர் டாக்டர் ஆத்மராம்பாண்டுரங்
    ஆ. சத்திய தரும சாலை இராமலிங்க அடிகளால் நிறுவப்பட்டது.
    இ) இராமகிருஷ்ண இயக்கத்தை நிறுவியவர் இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆவார்.
    ஈ) அகமதியர்கள் பொதுவான மசூதியில் தங்கள்
    வழிபாட்டினை மேற்கொண்டனர்.
    விடைகுறிப்பு:
    ஆ. சத்திய தரும சாலை இராமலிங்க அடிகளால் நிறுவப்பட்டது.

    வினா  12.
    கூற்று (கூ) : சையது அகமது கான் அலிகரில் நிறுவிய நவீனப் பள்ளி, பின்னர் முகமதிய ஆங்கிலோ – ஓரியண்டல் கல்லூரியாக வளர்ச்சி பெற்றது.
    காரணம் (கா) : முஸ்லீம்கள் ஆங்கிலக் கல்வி கற்பதை அவர் விரும்பினார்.

    அ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
    ஆ) கூற்றுதவறு; காரணம் தவறு
    இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானவை.
    ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
    விடைகுறிப்பு:
    இ) கூற்று சரி, காரணம், கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
     
    வினா  13.
    பொருத்துக
    i) ஆங்கிலேய சமயப் பரப்புக்குழு –1. சிகாகோ உலகச் சமய மாநாடு
    ii) பார்சி செய்தித்தாள் – 2. வில்லியம் காரே மற்றும் ஜான் தாமஸ்
    iii) தியோபந்த் இயக்கம் – 3.ராஸ்ட் கோப்தார்
    iv) விவேகானந்தர் – 4.முகமது காசிம் நநோதவி

    அ) 3,2,1,4
    ஆ) 1,2,3,4
    இ) 2, 3, 4, 1
    ஈ) 2,1,4, 3
    விடைகுறிப்பு:
    இ) 2, 3, 4, 1


    II. குறுகிய விடை தருக

    1.சமூக சீர்திருத்தத்திற்கு இராஜா ராம்மோகன் ராயின் பங்களிப்புகள் யாவை?
    • ராஜா ராம்மோகன் ராய் உருவ வழிபாடு, பெண் கொடுமை, சாதிமுறையை எதிர்த்தார்.
    • 1829 இல் உடன்கட்டை ஏறுதல் குற்றம் என சட்டம் இயற்ற துணையாக இருந்தார்.
    • விதவை மறுமணத்தை ஆதரித்தார். குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார்.

     

    2. சமூக நீதிக்கு ஜோதிபா புலேயின் பங்கு என்ன?
    • ஜோதிபா பூலே புனேயில் பெண்கள் பள்ளி ஒன்றை தொடங்கி நடத்தினார்.
    • தாழ்த்தப்பட்ட மற்றும் தீண்டத் தகாத மக்களுக்கான பள்ளியைத் தொடங்கினார்.
    • கைம்பெண்களின் குழந்தைகளுக்கு ஒரு இல்லத்தையும் நிறுவினார்.

     

    3. "சுத்தி" (சுத்திகரிப்பு) இயக்கம் ஏன் ஒரு மீட்டெடுப்பு இயக்கமாகக் கருதப்படுகிறது
    • "சுத்தி இயக்கம்" "வேதங்களை நோக்கித் திரும்புக" என அழைப்பு விடுத்தது. 
    • இந்து சமயத்தில் இருந்து மதம் மாறி சென்றவர்களை மீட்டுவருவதே நோக்கம்.
    • சுவாமி தயானந்த சரஸ்வதி மக்களை இந்துக்களாக மாற்ற முயன்றது.
     
    4. ஸ்ரீ நாராயண குருவின் தர்ம பரிபாலன இயக்கத்தின் பங்களிப்பை எழுதுக.
    • ஈழவர்கள் கோவிலுக்குள் நுழையவும், அரசியல் உரிமை பெறவும் போராடியது.
    • கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களைப் பயன்படுத்தும் உரிமையை கோரியது.
    • பொதுப் பள்ளிகள் மற்றும் அரசுப் பணிகளில் சேர்வதற்கு அனுமதி கோரியது.

     

    5. இராமலிங்க அடிகளார் பற்றி நீவிர் அறிவன யாவை?
    • வள்ளலார் என்று அழைக்கப்பட்டார். சத்திய ஞான சபையை நிறுவினார்.
    • வடலூரில் சத்திய தர்ம சாலையை நிறுவி ஏழைகளுக்கு உணவளித்தார்.
    • இராமலிங்க அடிகளார் பாடல்கள் திருவருட்பா என்ற பெயரில் திரட்டப்பட்டன.
     

    III. சுருக்கமான விடை தருக

    1. எம்.ஜி. ரானடே.
    • தேசிய சமூக மாநாடு என்ற அமைப்பை உருவாக்கினார்.
    • தக்காணக் கல்விக் கழகத்தை தீவிரமாக முன்னெடுத்தார்.
    • விதவை மறுமணச் சங்கம் உருவாகக் காரணமாக இருந்தார்.
    • பிரார்த்தனை சமாஜம் மூலம் பல சீர்திருத்தங்களை செய்தார்.

     

    2. சுவாமி விவேகானந்தர்.
    • சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா.
    • இராமகிருஷ்ண பரம்ஹம்சரின் முதன்மை சீடராக இருந்தார்.
    • தனது குருவின் கருத்துகளை உலகம் முழுவதும் பரப்பினார்.
    • 1893 - சிகாகோவில் நடந்த உலக சமய மாநாட்டில் பங்கேற்றார்.

     

    3. அகமதியா இயக்கம்.
    • அகமதியா இயக்கத்தை மிர்சா குலாம் அகமது தோற்றுவித்தார்.
    • புனித நூலான குரானில் கூறப்பட்டுள்ள கொள்கைகளை ஆதரித்தார்.
    • ஆரிய சமாஜம், கிறித்தவ மதபோதகர்கள் கூறிய கருத்துகளை எதிர்த்தார்.
    • பலதாரமணம், பெண்கள் முகத்திரை, பழைய விவாகரத்து விதிகளை ஆதரித்தார்.

     

    4. சிங் சபா இயக்கம்.
    • 1873 ஆம் ஆண்டு சிங் சபா இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
    • அகாலி இயக்கம் இதன் கிளை இயக்கமாகும்.
    • சிங் சபா இயக்கம் இரண்டு முக்கிய நோக்கங்களுக்காக உருவானது.
    1. கிறித்தவ மதமாற்றம், இந்து சமய மீட்டெடுப்பு நடவடிக்கைகளை எதிர்த்தல்.
    2. நவீன மேற்கத்தியக் கல்வியை சீக்கியருக்குக் கிடைக்கச் செய்தல்.
     

    IV. விரிவான விடை தருக  

    1. இந்தியாவில் கிறித்தவ மதப் பரப்பாளர்கள் ஆற்றிய பணிகளை விளக்குக.
    • சமூக, பொருளாதார ரீதியாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெனப் பள்ளிகள் நிறுவினர்.
    • அரசுப் பணி வழங்கி அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த முயற்சித்தனர்.
    • தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுச் சாலைகளைப் பயன்படுத்தும் உரிமைக்காக போராடினர்.
    • தாழ்த்தப்பட்ட பெண்கள் மேலாடைகள் அணிந்து கொள்ளும் உரிமைக்காக போராடினர்.
    • அனாதைக் குழந்தைகளை தங்கள் உறைவிடப் பள்ளிகளில் சேர்த்து கல்வி வழங்கினர்.
    • பஞ்சங்களின் போது மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
    • உரிமைகள் மறுக்கப்பட்ட ஏழை மக்களுக்குக் கல்வி வழங்கும் பொறுப்பை ஏற்றுது.
    • மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களை கிறித்துவ குழுகள் அமைத்துக் கொடுத்தது.

     

    2. தமிழ்நாட்டில் நடந்த சமூக சீர்திருத்த இயக்கங்களை எடுத்துக்காட்டுக. 

    இராமலிங்க அடிகள்:
    • இராமலிங்க அடிகளின் பாடல்கள் முற்போக்கு சிந்தனை கொண்டவை.
    • அவர் மதவெறியையும், பகுத்தறிவற்ற தன்மையையும் கண்டனம் செய்தார்.
    • வடலூரில் சத்திய தர்ம சாலை நிறுவி, சாதிமத வேறுபாடின்றி உணவளித்தார்.
    • தனது சீடர்களை ஒருங்கிணைக்க சத்யஞான சபை எனும் அமைப்பை நிறுவினார்.
    அயோத்திதாச பண்டிதர்:
    • 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பௌத்த மதம் புத்துயிர் பெறத் துவங்கியது.
    • 1890 களில் ஆதிதிராவிடர்களின் நலனுக்கான இயக்கத்தைத் தொடங்கினார்.
    • 1908 இல் ஒரு பைசாத் தமிழன் என்ற வாராந்திரப் பத்திரிகையை தொடங்கினார்.
    • ஆதிதிராவிடர்களே உண்மையான பௌத்தர்கள் என்று அயோத்திதாசர் வாதிட்டார்.

     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive