10th Science - Book Back Answers - Physics Unit 2 - Tamil Medium Guides

 


    SSLC / 10th - Science - Book Back Answers - Physics Unit 2 - Tamil Medium

    Tamil Nadu Board 10th Standard  Science - Physics Unit 2 : Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 11 – Physics from the Tamil Nadu State Board 10th Standard  Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Physics Unit 11 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!

    Topic: ஒளியியல்

    I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

    1. A,B,C,D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?
    அ) A
    ஆ) B
    இ) C
    ஈ) D
    விடைகுறிப்பு:

    அ) A

    2. பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப் பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு
    அ) f
    ஆ) ஈறிலாத் தொலைவு
    இ) 2f|
    ஈ) f க்கும் 21 க்கும் இடையில்
    விடைகுறிப்பு:

    இ) 2f
     
    3. மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது
    அ) விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்
    ஆ) குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்
    இ) இணைக் கற்றைகளை உருவாக்கும்
    ஈ) நிறக் கற்றைகளை உருவாக்கும்.
    விடைகுறிப்பு:

    இ) இணைக் கற்றைகளை உருவாக்கும்)

    4. குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ____ மதிப்புடையது.
    அ) நேர்க்குறி
    ஆ) எதிர்க்குறி
    இ) நேர்க்குறி
    (அ) எதிர்க்குறி
    ஈ) சுழி
    விடைகுறிப்பு:

    இ) நேர்க்குறி (அ) எதிர்க்குறி

    5. ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய் பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்ட இடம் _____
    அ) முதன்மைக் குவியம்
    ஆ) ஈறிலாத் தொலைவு
    இ) 2f
    ஈ) fக்கும் 2f க்கும் இடையில்
    விடைகுறிப்பு:

    ஆ) ஈறிலாத் தொலைவு

    6. ஒரு லென்சின் திறன் – 4D எனில் அதன் குவியத் தொலைவு
    அ) 4 மீ
    ஆ) – 40 மீ
    இ) -0.25 மீ)
    ஈ) -2.5 மீ.
    விடைகுறிப்பு:

    இ) – 0.25 மீ
     
    7. கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது தோற்றுவிக்கப்படுகிறது.
    அ) விழித்திரைக்குப் பின்புறம்
    ஆ) விழித்திரையின் மீது
    இ) விழித்திரைக்கு முன்பாக
    ஈ) குருட்டுத் தானத்தில்
    விடைகுறிப்பு:

    இ) விழித்திரைக்கு முன்பாக

    8. விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது
    அ) குவி லென்சு
    ஆ) குழி லென்சு
    இ) குவி ஆடி
    ஈ) இரு குவிய லென்சு
    விடைகுறிப்பு:

    ஈ) இரு குவிய லென்சு

    9. சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?
    அ) 5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு
    ஆ) 5 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு
    இ) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு
    ஈ) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு
    விடைகுறிப்பு:

    அ) 5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு

    10. ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் திசைவேகங்கள் VB,VG, VR எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது?
    அ) V
    B = VG = VR
    ஆ) vB > VG > VR
    இ) VB < VG < VR
    ஈ) vB < VG > VR

    விடைகுறிப்பு:
    இ)
    VB < VG < VR


    II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

    1. ஒளி செல்லும் பாதை _____ என்று அழைக்கப்படுகிறது.
    விடைகுறிப்பு:

    ஒளிக்கதிர்

    2. ஒரு ஒளிபுகும் ஊடகத்தின் ஒளி விலகல் எண் எப்போதும் ஒன்றை விட _____
    விடைகுறிப்பு:

    அதிகம்

    3. படுகின்ற ஒளிக்கற்றையின் ஆற்றலும் சிதறலடைந்த கற்றையின் ஆற்றலும் சமமாக இருந்தால் அது _____ சிதறல் எனப்படும்.
    விடைகுறிப்பு:

    மீட்சிச்

    4. ராலே சிதறல் விதிப்படி, சிதறல் அளவானது, படுகின்ற ஒளிக்கதிரின்ன் _____ ன் நான்மடிக்கு எதிர்தகவில் இருக்கும்.
    விடைகுறிப்பு:

    அலை நீளத்தின்

    5. _____ கண்ணிற்குள் நுழையும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
    விடைகுறிப்பு:

    ஐரிஸ் (Iris)

    III. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)

    1. அடர்வு மிகு ஊடகத்தில் ஒளியின் திசைவேகமானது, அடர்வு குறை ஊடகத்தில் இருப்பதை விட அதிகமாக இருக்கும்.
    விடைகுறிப்பு:

    தவறு.
    சரியான கூற்று: அடர்வு மிகு ஊடகத்தில் ஒளியின் திசைவேகமானது, அடர்வு குறை ஊடகத்தில் இருப்பதைவிட குறைவாக இருக்கும்.

    2. லென்சின் திறனானது லென்சின் குவிய தொலைவைச் சார்ந்தது.
    விடைகுறிப்பு:

    சரி.

    3. விழி லென்சின் குவிக்கும் திறன் அதிகரிப்பதால் தூரப்பார்வை ஏற்படுகிறது.
    விடைகுறிப்பு:

    தவறு.
    சரியான கூற்று: விழிலென்சின் குவிக்கும் திறன் குறைவதால் தூரப்பார்வை ஏற்படுகிறது.
     
    4. குவிலென்சானது, எப்போதும் சிறிய மாய பிம்பத்தையே உருவாக்கும்.
    விடைகுறிப்பு:

    தவறு.
    சரியான கூற்று: குழிலென்சானது எப்போதும் சிறிய மாயபிம்பத்தை தரும்.


    IV. பொருத்துக.

    1
    ரெட்டினா
    கண்ணில் ஒளிக்கதிர் செல்லும் பாதை
    2
    கண்பாவை
    சேய்மைப் புள்ளி விழியை நோக்கி நகர்தல்
    3
    சிலியரித் தசைகள்
    அண்மைப் புள்ளி விழியை விட்டு விலகிச் செல்லுதல்
    4
    கிட்டப்பார்வை
    விழித்திரை
    5
    தூரப்பார்வை
    விழி ஏற்பமைவுத் திறன்
    விடைகுறிப்பு:
    1
    ரெட்டினா
    விழித்திரை
    2
    கண்பாவை
    கண்ணில் ஒளிக்கதிர் செல்லும் பாதை
    3
    சிலியரித் தசைகள்
    விழி ஏற்பமைவுத் திறன்
    4
    கிட்டப்பார்வை
    சேய்மைப் புள்ளி விழியை நோக்கி நகர்தல்
    5
    தூரப்பார்வை
    அண்மைப் புள்ளி விழியை விட்டு விலகிச் செல்லுதல்
     

    V.  பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. பின்வருவனவற்றுள் எது
    சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க.

    (அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.
    (ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.
    (இ கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று. 
    () கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
    1. கூற்று: ஊடகத்தின் ஒளிவிலகல் எண் அதிகமாக இருந்தால் (அடர்வுமிகு ஊடகம்), அந்த ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் குறைவாக இருக்கும்.
    காரணம்: ஊடகத்தின் ஒளிவிலகல் எண், ஒளியின் திசைவேகத்திற்கு எதிர்த்தகவில் இருக்கும்.
    விடைகுறிப்பு:

    (அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.

    2. கூற்று: விழி லென்சின் குவிக்கும் திறன் அதிகரிப்பதால், கிட்டப்பார்வை என்னும் பார்வைக் குறைபாடு தோன்றுகிறது.
    காரணம்: குழிலென்சைப் பயன்படுத்தி கிட்டப்பார்வைக் குறைப்பாட்டைச் சரிசெய்யலாம்.
    விடைகுறிப்பு:

    (ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.



    VI. சுருக்கமாக விடையளி

    1. ஒளிவிலகல் எண் என்றால் என்ன?
    விடைகுறிப்பு:

    காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் (c), மற்றோர் ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் (v) இடையே உள்ள தகவு ஒளிவிலகல் எண் (µ) எனப்படும்.
    μ=cv

    2. ஸ்நெல் விதியைக் கூறுக.
    விடைகுறிப்பு:

    ஒளிக்கதிர் ஓர் ஊடகத்திலிருந்து, மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும் போது, படுகோணத்தின்
    சைன் மதிப்பிற்கும், விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையே உள்ள தகவானது அவ்விரு ஊடகங்களின் ஒளிவிலகல் எண்களின் தகவிற்கு சமம். இவ்விதி ‘ஸ்நெல் விதி என்று அழைக்கப்படுகிறது.
    sinisinr=μ2μ1
     
    3. குவிலென்சு ஒன்றில் F மற்றும் 2F புள்ளிகளுக்கு இடையே பொருள் வைக்கப்படும் போது உருவாக்கப்படும் பிம்பத்திற்கான கதிர் வரைபடம் வரைக.
    விடைகுறிப்பு:

    4. நிறப்பிரிகை வரையறு.
    விடைகுறிப்பு:

    வெள்ளொளிக் கற்றையானது, கண்ணாடி, நீர் போன்ற ஒளிபுகும் ஊடகத்தில் ஒளிவிலகல் அடையும் போது அதில் உள்ள நிறங்கள் தனித் தனியாகப் பிரிகை அடைகின்றன. இந்நிகழ்வு ‘நிறப்பிரிகை’ எனப்படும்.

    5. ராலே சிதறல் விதியைக் கூறுக.
    விடைகுறிப்பு:

    ஓர் ஒளிக்கதிர் சிதறலடையும் அளவானது, அதன் அலைநீளத்தின் நான்மடிக்கு எதிர்த் தகவில் இருக்கும். சிதறல் அளவு α1λ4
    இவ்விதியின் படி, குறைந்த அலைநீளம் கொண்ட நிறமானது, அதிக அலைநீளம் கொண்ட நிறத்தை விட அதிகமாக சிதறல் அடைகிறது.

    6. குவிலென்சு மற்றும் குழிலென்சு – வேறுபடுத்துக.
    விடைகுறிப்பு:
    குவிலென்சு
    குழிலென்சு
    மையத்தில் தடித்தும், ஓரத்தில் மெலிந்தும் காணப்படும்.
    மையத்தில் மெலிந்தும் ஓரத்தில் தடித்தும் காணப்படும்.
    இவை குவிக்கும் லென்சு.
    இவை விரிக்கும் லென்சு.
    பெரும்பாலும் மெய்ப்பிம்பங்களைத் தோற்றுவிக்கும்.
    மாயப்பிம்பங்களைத் தோற்றுவிக்கும்.
    தூரப்பார்வை குறைபாட்டைச் சரிசெய்யப் பயன்படுகிறது.
    கிட்டப்பார்வை குறைபாட்டைச் சரிசெய்யப் பயன்படுகிறது.
     
    7. விழி ஏற்பமைவுத் திறன் என்றால் என்ன?
    விடைகுறிப்பு:

    அருகில் உள்ள மற்றும் தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காண்பதற்கு ஏற்ப விழி லென்சு தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும் தன்மை, விழி ஏற்பமைவுத் திறன்’ எனப்படுகிறது.
     
    8. கிட்டப்பார்வை குறைபாட்டிற்கான காரணங்கள் யாவை?
    விடைகுறிப்பு:

    1. விழி லென்சின் குவிய தூரம் குறைவதாலும்
    2. விழி லென்சிற்கும் விழித் திரைக்கும் இடையே உள்ள தொலைவு அதிகரிப்பதாலும்
    3. விழிக்கோளம் நீண்டு விடுவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது.

    9. வானம் ஏன் நீலநிறமாகத் தோன்றுகிறது?
    விடைகுறிப்பு:

    சூரிய ஒளியானது, வளிமண்டலத்தின் வழியாகச் செல்லும் போது, குறைந்த அலைநீளம் உடைய நீல நிறமானது, அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு நிறத்தை விட அதிகமாக சிதறல் அடைகிறது. இதனால் வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது.

    10. போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்படுவதன் காரணம் என்ன?
    விடைகுறிப்பு:

    1. சிவப்பு நிறம் அதிக அலைநீளம் உடையது.
    2. எனவே, குறைவாக சிதறல் அடையும் சிவப்புநிற ஒளி மூடுபனி, புகை போன்றவற்றிலும் எளிதாக ஊடுருவி நமது கண்ணை அடைகிறது.


    VII. விரிவாக விடையளி.

    1. ஒளியின் ஏதேனும் ஐந்து பண்புகளைக் கூறுக.
    விடைகுறிப்பு:

    1. ஒளி என்பது ஒருவகை ஆற்றல்.
    2. ஒளி எப்போதும் நேர்க்கோட்டில் செல்கிறது.
    3. ஒளி பரவ ஊடகம் தேவையில்லை. வெற்றிடத்தின் வழியாகக் கூட ஒளிக்கதிர் செல்லும்.
    4. காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் C = 3 × 108 மீ வி
    -1.
    5. ஒளியானது அலை வடிவில் செல்வதால், அது அலைநீளம் (λ) மற்றும் அதிர்வெண் (v) ஆகிய பண்புகளைப் பெற்றிருக்கும். இவை C = vλ என்ற சமன்பாட்டின் மூலம் தொடர்புபடுத்தப்படுகிறது.

    2. குவிலென்சு ஒன்றினால் தோற்றுவிக்கப்படும் பிம்பங்களுக்கான விதிகளை கதிர்படங்களுடன் விளக்குக.
    விடைகுறிப்பு:
     
    விதி 1:
    ஒளிக்கதிரானது, ஒரு குவிலெ ன்சு அல்லது குழிலென்சின் ஒளியியல் மையத்தின் வழியாகச் செல்லும் போது விலகலடையாமல் அதே பாதையில்
    செல்கிறது.
    விதி 2:
    முதன்மை அச்சுக்கு இணையாக வரும் ஒளிக்கதிர்கள், குவிலென்சின் மீது படும்போது முதன்மைக் குவியத்தில் குவிக்கப்படும். குழிலென்சின் மீது படும்போது முதன்மைக் குவியத்திலிருந்து விலகலடைந்து செல்வது போல் தோன்றும். 
    விதி 3:
    முதன்மைக்குவியம் வழியாகச் சென்று குவிலென்சின் மீது விழும் ஒளிக்கதிர்களும், முதன்மைக் குவியத்தை நோக்கிச் சென்று குழிலென்சின் மீது விழும் ஒளிக்கதிர்களும் விலகலடைந்த பிறகு முதன்மை அச்சுக்கு
    இணையாகச் செல்லும்.

     
    3. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடுகளை வேறுபடுத்துக.
    விடைகுறிப்பு:

    கிட்டப்பார்வை
    தூரப்பார்வை
    'மையோபியா' எனப்படும்.
    'ஹைப்பர் மெட்ரோபியா' எனப்படும்.
    விழிக்கோளம் சிறிது நீண்டு விடுவதால் ஏற்படுகிறது.
    விழிக்கோளம் சுருங்குவதால் ஏற்படுகிறது.
    அருகில் உள்ள பொருள்களை மட்டுமே காணமுடியும். தொலைவில் உள்ள பொருள்களை காண முடியாது.
    தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காண முடியும். அருகில் உள்ள பொருட்களைக் காண முடியாது.
    விழி லென்சின் குவியதூரம் குறைவதால் விழி லென்சிற்கும் விழித் திரைக்கும் இடையே உள்ள தொலைவு அதிகரிப்பதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது.
    விழி லென்சின் குவிய தூரம் அதிகரிப்பதாலும் விழி லென்சிற்கும் விழித்திரைக்கும் இடையே உள்ள தொலைவு குறைவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது.
    கண்ணின் சேய்மைப் ஈறில்லாத் தொலைவில் புள்ளியானது அமையாமல் கண்ணின் அண்மைப் புள்ளியை நோக்கி நகர்ந்து விடுகிறது.
    தொலைவில் உள்ள பொருள்களின் பிம்பங்கள் விழித்திரைக்கு முன்பாக உருவாக்கப்படுகின்றன.
    தகுந்த குவிய தொலைவு கொண்ட குழிலென்சை பயன்படுத்துவதன் மூலம் இக்குறைபாட்டை சரி செய்யலாம்.
    அண்மைப் புள்ளியானது 25 செ.மீ என்ற தொலைவில் அமையாமல் சேய்மைப்புள்ளியை நோக்கி நகர்ந்து விடுகிறது.
    அருகில் உள்ள பொருள்களின் பிம்பங்கள் விழித் திரைக்கு உருவாக்கப்படுகின்றன. அப்பால் (பின்புறம்)
    தகுந்த குவிய தொலைவு கொண்ட குவிலென்சை பயன்படுத்துவதன் மூலம் இக்குறைபாட்டை சரி செய்யலாம்.
     
     
    4. கூட்டு நுண்ணோக்கி ஒன்றின் அமைப்பையும் செயல்படும் விதத்தையும் விளக்குக.
    விடைகுறிப்பு:

    அமைப்பு: கூட்டு நுண்ணோக்கியானது இரண்டு குவி லென்சுகளைக் கொண்டது.
    1) பொருளருகு லென்சு (அ) பொருளருகு வில்லை.
    2) கண்ணருகு லென்சு (அ) கண்ணருகு வில்லை.
    பொருளருகு லென்சு: பொருளுக்கு அருகில் உள்ள குறைந்த குவியதூரம் கொண்டு குவிலென்சு
    கண்ணருகு லென்சு: கண்ணிற்கு அருகில் உள்ள அதிக விட்டமும், அதிக குவிய தூரமும் கொண்ட குவிலென்சு.
    இந்த இரண்டு லென்சுகளும் முன்னும் பின்னும் நகரக்கூடிய வகையில் குறுகலான குழாயினுள் பொருத்தப்பட்டுள்ளது.
      
    செயல்படும் விதம்:
    1. பொருள் (AB)-யானது, பொருளருகு லென்சின் குவியதூரத்தை விடச் சற்றுக் கூடுதலான தொலைவில் வைக்கப்படுகிறது.
    2. பொருளருகு லென்சின் மறுபுறத்தில் பெரிய, தலைகீழான, மெய்ப் மெய்ப்பிம்பம் தோற்றுவிக்கப்படுகிறது.
    3. இந்த பிம்பமானது கண்ணருகு லென்சிற்குப் பொருளாகச் செயல்படுகிறது.
    4. மேலும், இப்பிம்பமானது (A’B’) கண்ணருகு லென்சின் முதன்மைக் குவியத்திற்குள் அமையுமாறு கண்ணருகு லென்சு சரிசெய்யப்படுகிறது. கண்ணருகு லென்சு, அளவில் பெரிய நேரான மாயபிம்பத்தைப் (A”B”) பொருள் இருக்கும் அதே பக்கத்தில் தோற்றுவிக்கிறது.



    VIII. கணக்கீடுகள்.

    1. 10 செ.மீ குவிய தொலைவு கொண்ட குவிலென்சிலிருந்து 20 செ.மீ தொலைவில் பொருளொன்று வைக்கப்படுகிறது எனில் பிம்பம் தோன்றும் இடத்தையும், அதன் தன்மையையும் கண்டறிக.
    விடைகுறிப்பு:
     
    கொடுக்கப்பட்டவை:
    பொருளின் தொலைவு U = -20 செ.மீ
    குவிலென்சின் குவியதூரம் f = 10 செ.மீ
    கண்டறிய:
    பிம்பத்தின் தொலைவு v=?
    பிம்பத்தின் தன்மை யாது?
    தீர்வு:
    பொருளானது லென்சின் இடது பக்கத்தில் வைக்கப்படும்போது f = 10 செ.மீ
    u = – 20 செ.மீ
    1f=1v-1u
    1v=1f+1u 
    1v=110+1-20
    1v=110-120=120
    பிம்பத்தின் தொலைவு v = 20 செ.மீ
    பெரிதாக்கப்பட்ட தலைகீழான பிம்பம் 20 செ.மீ தொலைவில் லென்சின் வலப்பக்கத்தில் உருவாகிறது.
    உருப்பெருக்கம் m=vu=20-20=-1
    (-ve குறி பிம்பத்தின் தன்மையை குறிக்கிறது. தலைகீழான பிம்பம்)

    2. 3 செ.மீ உயரமுள்ள பொருளொன்று 15 செ.மீ குவிய தொலைவு கொண்ட குழிலென்சிற்கு முன்பாக 10 செ.மீ தொலைவில் வைக்கப்படுகிறது எனில் – லென்சினால் உருவாக்கப்படும் பிம்பத்தின் உயரத்தைக் கண்டுபிடி.
    விடைகுறிப்பு:
     
    கொடுக்கப்பட்டவை:
    பொருளின் தொலைவு u = -10 செ.மீ
    (பொருளானது இடப்பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது)
    குவிய தொலைவு f = -15 செ.மீ
    (∵ குவிலென்சு)
    கண்டறிய:
    பிம்பத்தின் தொலைவு v = ?
    பொருளின் உயரம் h = 3 செ.மீ
    தீர்வு:
    1f=1v-1u
    1v=1f+1u 
    1v=1-15+1-10
    1v=-10-15150=-25150
    v=150-25=6செ.மீ
    உருப்பெருக்கம்

    m=vu=610=0.6
    m=h'h
    ∴ பிம்பத்தின் அளவு,
    h’ = 1.8 செ.மீ


    IX.  உயர்சிந்தனைக்கான வினாக்கள்.

    1. ராஜா என்ற மாணவர், குவிலென்சு ஒன்றின் குவியத் தொலைவைக் கண்டறிவதற்கான சோதனையை மேற்கொள்ளும் போது, குவிலென்சானது ! தவறுதலாக கீழே விழுந்து, இருசம துண்டுகளாக உடைந்துவிடுகிறது. அவர். அதே லென்சைப் பயன்படுத்தி தொடர்ந்து சோதனையைச் செய்தால்,
    1) அவருக்கு பிம்பங்கள் கிடைக்குமா?
    2) கண்டறியப்படும் குவியத் தொலைவில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா?
    விடைகுறிப்பு:

    1. மாணவர் தொடர்ந்து சோதனையை செய்ய முடியும். குவிலென்சு உடைவதற்கு முன்னால் எவ்வித பிம்பம் கிடைக்குமோ அதே அளவுள்ள பிம்பம் கிடைக்கும்.
    2. ஆம். அவருக்கு பிம்பங்கள் கிடைக்கும். ஆனால், உருவாக்கப்படும் பிம்பத்தின் செறிவு குறைவாக இருக்கும்.

     
    2. ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண் பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன. இவ்வமைப்பு அவற்றுக்கு எவ்வாறு உதவுகின்றன?
    விடைகுறிப்பு:

    (i) ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண்பாவை ஆகியவை அளவில் பெரிதாக உள்ளதெனில் அதன் பார்வைப்புலம் மற்றும் ரெட்டினாவின் பரப்பும் அதிகமாக இருக்கும். இதனால் இரவு நேரத்தில் படும் சுற்றுப்புற ஒளியானது அதிக அளவில் கண்ணை அடையும். எனவே, இரவு நேரத்தில் இரையைத் தேட எளிதாக இருக்கும்.
    (ii) இதனால் இரவு நேரத்தில் படும் சுற்றுப்புற ஒளியானது அதிக அளவில் கண்ணை அடையும். எனவே, இரவு நேரத்தில் இரையைத் தேட எளிதாக இருக்கும்.





     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive