இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா...! 24 மணி நேரத்தில் 43,509 பேர் பாதிப்பு: 640 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, July 28, 2021

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா...! 24 மணி நேரத்தில் 43,509 பேர் பாதிப்பு: 640 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.22 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே போல், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.15 கோடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:


* புதிதாக 43,509 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,15,28,114 ஆக உயர்ந்தது.

* புதிதாக 640 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,22,662 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 38,465 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,07,01,612 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,03,840 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் இதுவரை 45,07,06,257 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


Post Top Ad