12 வயதுக்கு மேற்பட்டோருகு கோவிட் தடுப்பூசி - விரைவில் அமலுக்கு வருகை. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, July 12, 2021

12 வயதுக்கு மேற்பட்டோருகு கோவிட் தடுப்பூசி - விரைவில் அமலுக்கு வருகை.12 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஜைகோவ்-டி (ZyCov-D) என்ற தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டின் கீழ் பயன்படுத்த மத்திய மருந்து கட்டுப்பாடு ஜெனரல் அமைப்பு இன்னும் சில நாட்களில் அனுமதி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அகமதாபாத்தை தளமாகக் கொண்ட ஜைடோஸ் காடிலா நிறுவனம் ஜூலை 1 அன்று ஜைகோவ்-டி க்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கு மத்திய மருந்து கட்டுப்பாடு ஜெனரல் அமைப்பிடம் விண்ணப்பித்தது.


ஜைகோவ்-டி தடுப்பூசியானது 18 வயதுக்கு மேற்பட்டோரிடமும், அதே போல 12 வயதுக்கு மேற்பட்டோரிடமும் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் அடிப்படையில், ஜைகோவ்-டி தடுப்பூசி திருப்திகரமான செயல்பாட்டைக் கொண்டிருந்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் தடுப்பூசி ஆய்வு வல்லுநர் ஆலோசனை கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஜைகோவ்-டி தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் பங்கேற்போர், தங்கள் தடுப்பூசியின் திறனை நிரூபிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து பேசிய தடுப்பூசி நிர்வாகத்துக்கான தேசிய வல்லுநர் குழுவின் தலைவர் என்.கே.அரோரா கூறியதாவது:-12 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் வரும் செப்டம் மாதம் தொடங்கும். எனினும், இந்த தடுப்பூசியை அவசரப் பயன்பாட்டுக்காக அனுமதி சில வாரங்களில் வழங்கப்பட உள்ளது," என்று கூறினார்.12 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜைகோவ்-டி பாதுகாப்பானது என்று தரவு காட்டுகிறது, ஆண்டுதோறும் 100-120 மில்லியன் டோஸ் தடுப்பூசியை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.ஜைடஸ் ஒப்புதல் பெற்றவுடன், ஜைகோவ்-டி இந்தியாவில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட ஐந்தாவது கொரோனா எதிர்ப்பு தடுப்பூசியாக இருக்கும் அஸ்ட்ராஜெனெகா மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின், ஸ்புட்னிக் வி ஆகியவை அனுமதி பெற்று தற்போது இந்தியாவில் போடப்பட்டு வருகின்றன.


Post Top Ad