இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை’ – மத்திய அரசின் புதிய ஊதிய குறியீடு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, July 25, 2021

இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை’ – மத்திய அரசின் புதிய ஊதிய குறியீடு!

‘இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை’ – மத்திய அரசின் புதிய ஊதிய குறியீடு!

மத்திய அரசு விரைவாக புதிய ஊதிய குறீயிடு குறித்த அறிவிப்பினை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டால் ஊழியர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை பார்க்க வேண்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஊதிய குறீயிடு

மத்திய அரசு இந்தியாவில் பணிபுரியும் அனைத்து வித ஊழியர்களின் நலன் கருதி “புதிய ஊதிய குறீயிடு” அறிவிப்பு ஒன்றினை கடந்த ஆண்டு வெளியிட்டது. இந்த முறை அமல்படுத்தப்பட்டால் ஊழியர்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை பார்க்க வேண்டி இருக்கும். இந்த முறை இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே அமல்படுத்தப்பட இருந்தது. பின்னர், சில காரணங்களால் இந்த முறை அமல்படுத்தப்படவில்லை. ஆனால், வரும் அக்டோபர் மாதம் முதல் இதனை செயல்படுத்த அரசு உத்தரவிடலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஊதிய குறீயிடு (New Wage Code) அமல்படுத்தப்பட்டால் ஊழியர்களின் வேலை நாட்கள், வேலை நேரம் மற்றும் சம்பளம் ஆகியவற்றின் தற்போதைய நிலை மாறும். இந்த புதிய ஊதிய குறீயிடு அறிவிக்கப்பட்டால், ஊழியர்கள் இனி 12 மணி நேரம் வரை வேலை பார்க்க வேண்டி இருக்கும். அதாவது ஒரு நாளைக்கு ஒரு பணியாளர் 8 மணி நேரம் வேலை பார்த்தால், அவர் வாரத்தில் 6 நாட்கள் பணி செய்ய வேண்டி இருக்கும். ஆனால், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை பார்த்தால், அவர் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டி இருக்கும்.

12 மணி நேரம் பணியினை பார்க்கும் ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் கண்டிப்பாக விடுமுறை அளிக்க வேண்டும் என்று நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஊழியர்களின் விடுப்பை 240 முதல் 300 ஆக உயர்த்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒருவர் தொடர்ந்து 5 மணி நேரம் வேலை பார்க்க கூடாது. அரை மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும் என்றும் புதிய ஊதிய குறீயிடு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. இது குறித்தான அறிவிப்பினை மத்திய அரசின் தொழிலாளர் அமைச்சகம் வெளியிட கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Post Top Ad