மீன்வள உதவியாளா் பணியிடம்: விண்ணப்பிக்க ஆக.2 கடைசி


"மீன்வள உதவியாளா் காலிப் பணியிடத்துக்கு, ஆக.2-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையில் சென்னை மண்டல மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணை இயக்குநா் கட்டுப்பாட்டில் சேத்துப்பட்டு ஆய்வக அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு மீன்வளஉதவியாளா் பணியிடத்தை பொதுப்போட்டி (முன்னுரிமைபெற்றவா்) பிரிவில் தகுதியின் அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 30 வயதுக்குள்பட்ட பொதுப்பிரிவினா் (தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயது வரை) விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ளவா்கள், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணை இயக்குநா் (மண்டலம்), சென்னைஅலுவலகம், டி.எம்.எஸ் வளாகம் மூன்றாம் தளம், தேனாம்பேட்டை, சென்னை 600 006 என்ற முகவரிக்கு, ஆக.2-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 044 2432 8596 என்ற எண்ணை அணுகலாம்."





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive