கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை தேர்வு செய்து விருது - முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் தகவல். - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, July 28, 2021

கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை தேர்வு செய்து விருது - முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் தகவல்.


காணொலிக் காட்சி மூலம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சார்ந்த விவரம் :

1. மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள்

அரசு பள்ளிகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவேண்டும் 2. தொடக்கக் கல்வி இயக்குநர்

2021-22ம் கல்வி ஆண்டில் 1 ம் வகுப்பு முதல் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை EMIS- ல் பதிவேற்றம் செய்யவேண்டும். 2021-22ம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். அதில் உதவிப் பெறும் பள்ளிகளில் 1,00,000 பேர் சேர்ந்திருக்கிறார்கள் , 1 கிலோ மீட்டர் தொலைவில் தொடக்க பள்ளிகளும் , 3 கிலோமீட்டர் தொலைவில் நடுநிலைப் பள்ளிகளும் உள்ளது. இந்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கவேண்டும். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1125 மாணவர்கள் புதியதாக சேர்ந்து இருக்கிறார்கள். அரசு உதவிபெறும் பள்ளிகளில் இந்த வருடம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நரிக்கட்டி பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டும் 450 போர் மாணவர்களை சேர்த்துள்ளார். பெற்றோர்களை அணுகி மாணவர்களின் எண்ணிகையினை அதிகரித்துள்ளார். அதுபோன்று மற்ற மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள் பெற்றோர்களை அணுகி மாணவர்களை ஊக்குவித்தும் சேர்க்கையை அதிகரிக்கவேண்டும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தமுடியாத சூழ்நிலையில் அவர்கள் அரசு பள்ளியை நாடுகிறார்கள் , அவ்வாறு வரும் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்த்துக்கொள்ளவேண்டும். புதிய - 2021-22ம் கல்வி ஆண்டில் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு கால அட்டவணை தயார் செய்து தலைமையாசிரியர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும். கல்வித் தொலைக்காட்சியில் பாடத்திட்டங்கள் நடைபெறுகிறது என்ற தகவல்களை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்கள் தகவல்களை தெரிவிக்கவேண்டும்.

3.Samagra Siksha

அனைத்து மாவட்டப் பள்ளிகளிலும் Hi - Tech Lab செயல்பாட்டில் இருக்கவேண்டும். இனி வருங்காலங்களில் PFMS மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பள்ளிக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்படாத நிலையில் இருந்தால் விரைவில் கட்டி முடிக்கவேண்டும். பள்ளிகளுக்கு தேவையான கழிவறைகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவேண்டும். 4.ஆணையர் பள்ளிக் கல்வி

2020-2021ம் கல்வி ஆண்டில் SC / ST மாணவர்களை அதிகம் சேர்த்த தலைமையாசிரியர்களுக்கான ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் பயனடையும் வகையில் பாடங்களை நடத்தி வருகிறது. அது மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைகிறதா என்று பார்க்கவேண்டும். தலைமையாசிரியர்களும் , ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களை வீட்டிற்கு சென்று கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்கள் புரிகிறதா அவர்கள் ஆர்வமுடன் பார்க்கிறார்களா என்று பார்க்கவேண்டும். கல்வித் தொலைக்காட்சியில் எடுக்கப்படும் பாடங்களுக்கு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்தும் , அவ்வாசிரியர்கள் நன்றாக பாடம் கற்பிக்கிறார்களா , அவர் கற்பித்த பாடத்தை அவருக்குநன்கு புரிந்து பாடம் நடத்துகிறா என்று பார்க்கவேண்டும். கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படும். அரசின் அறிவிப்பின்படி மாவட்டத்திலுள்ள அனைத்து ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.Post Top Ad