சென்னை:குழந்தைகளுக்கு சத்துணவு கிடைக்க, கிராமப்புறங்களில் தொடக்கப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களை திறப்பது குறித்து, அரசு ஆய்வு செய்யலாம் என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், குழந்தைகளுக்கு சூடான சத்துணவு கிடைப்பதில்லை; எனவே, சத்துணவு வழங்க அரசு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, உயர் நீதிமன்றத்தில், 'சிட்டிசன் கன்ஸ்யூமர் சிவிக் ஆக் ஷன் குரூப்' வழக்கு தொடர்ந்தது.
நடவடிக்கை
இவ்வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி, ''பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்கள் சிலர் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் பெற்றோருக்கும் நிதி நெருக்கடி உள்ளது.''அங்கன்வாடி மையங்கள் திறப்பது குறித்து, தேசிய மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இங்கும் அங்கன்வாடி மையங்கள் வாயிலாக, உணவு வழங்க நடவடிக்கை எடுக்கலாம்,'' என்றார்.
அரசு தரப்பில், உணவுப் பொருள் வழங்கப்படுவதை தெரிவித்த அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், அங்கன்வாடி மையங்கள் திறப்பது குறித்து, அரசின் கருத்தை பெற்று தெரிவிப்பதாக கூறினார்.ஆலோசனைஇதையடுத்து, கிராமப்புறங்களில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை திறப்பது குறித்து, அறிவியல் பூர்வ ஆலோசனைகளை பெறும்படி, அரசுக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
அங்கன்வாடி மையங்களை திறப்பது குறித்தும், அரசு ஆலோசிக்க உத்தரவிட்டது.மாநில அரசுக்கு வழிகாட்டும் விதமாக, மத்திய அரசிடம் அறிவியல் ஆலோசனை, புள்ளி விபர வசதிகள் இருப்பதால், இந்தப் பிரச்னையை உடனடியாக எப்படி அணுகலாம் என்பதை மத்திய அரசு தெரிவிக்கவும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.