NEET தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!


 

நாடுமுழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 5 மணி முதல் அதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நீட் தேர்வு வேண்டாம் என தமிழக அரசு உறுதியாக சொல்லி வரும் நிலையில், அதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.



ஏற்கெனவே 155 நகரங்களில் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில் , கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தமுறை 198 நகரங்களில் நீட்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களை இன்று மாலை 5 மணிமுதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.



மத்திய அரசு மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் நுழைவுத் தேர்வை அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இதற்கு எதிரான அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வந்தாலும்கூட வரும் நீட் தேர்விற்கு தயாராகும்படி மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.



இந்நிலையில் நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் தெளிவான கொள்கை என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறும்வரை மாணவர்களுக்கு பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.



நீட் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில் தமிழக அரசின் தெளிவான முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive