பொறியியல் படிப்புகளில் சேர நாளை (ஜூலை 26) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பஇ, பிடெக் உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்பதிவு நாளை துவங்குகிறது. நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஆக.,24ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். 25ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும். செப்., 4ம் தரவரிசை பட்டியல் வெளியீடப்படும். செப்.,7 முதல் அக்., 4 வரை கலந்தாய்வு நடக்கும். அக்., 13 முதல் 16 வரை துணைக்கலந்தாய்வு நடக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.அதேபோல், கல்லூரி கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள 143 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் www.tngasa.org மற்றும் www.tngasa.in என்ற இணையதளங்களில் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.