தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு – CEO உத்தரவு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, July 30, 2021

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு – CEO உத்தரவு!


கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளில் பயிலும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பள்ளி மாணவிகளுக்கான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் சீண்டல்கள் தற்போது அதிகரித்து வரும் சூழலில் இவற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிகளில் பயிலும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு குறித்த விவரங்களை தெளிவுபடுத்த வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதன் படி ஒவ்வொரு 10 மாணவிகளுக்கும், ஒரு ஆசிரியை நியமித்து விழிப்புணர்வை கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியைகளையும், 10 மாணவிகளுக்கு incharge ஆக நியமிக்க வேண்டும். இப்படி நியமிக்கப்படும் போது மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்க நிலை ஆசிரியர்கள் என பாகுபாடு காட்டக்கூடாது. அந்த வகையில் மாணவிகளை பிரிக்கும் போது ஆசிரியைகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு பிரிக்க வேண்டும். ஒரு படிவத்தில் மாணவிகள் மற்றும் அவர்களின் நியமன ஆசிரியர்கள் பெயரை இணைத்து, பள்ளியின் பெயர் மற்றும் முகவரியை மேல் மற்றும் கடைசி பக்கத்தின் அடியிலும் பதிவு செய்து அனுப்ப வேண்டும். இது தொடர்பாக மேலும் விவரங்களை, கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், 7373003103 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்த ஆசிரியைகள் நியமிக்கப்பட்டுள்ள பட்டியலை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், karurc3ceo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்ட படிவத்தை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post Top Ad