ஆசிரியர்களை பணிநீக்கம் செய்தால் நடவடிக்கை! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, July 22, 2021

ஆசிரியர்களை பணிநீக்கம் செய்தால் நடவடிக்கை!


அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவர் அனில் டி.சகஸ்கரபுத்தே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று 2-வது அலைபரவலால் கல்விக் கட்டண வசூலில் தளர்வுகள் வழங்கவும், பணியாளர்களுக்கு உரிய ஊதியத்தை அளிக்கவும் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், முழு கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு மாணவர்களை வற்புறுத்துவதாகவும், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை எனவும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

நாட்டில் அசாதாரண சூழல் விலகும்வரை முழு கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது.

இயல்புநிலை திரும்பியபின் 3 அல்லது 4 தவணைகளில் கட்டணத்தை வசூலிப்பதுடன், இதன்விவரங்களை கல்லூரி இணையதளத்தில் வெளியிட வேண்டும். அதேபோல, கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது. மேலும், அவர்களுக்கான ஊதியத்தை மாதந்தோறும் உரிய நேரத்தில், நிலுவையின்றி வழங்க வேண்டும். அதேபோல, பிற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் இணையதள வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.

இணைய வசதி இல்லாதமாணவர்களுக்கு வருகைப்பதிவில் சற்று தளர்வு வழங்க வேண்டும். இந்த வழிமுறைகளை மீறியது தொடர்பாக புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad