12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் இன்று காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2020-21-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.tnresults.nic.in
https://www.dge1.tn.nic.in
https://www.dge2.tn.nic.in
https://www.dge.tn.gov.in
ஆகிய இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை, மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 22-ம் தேதி காலை 11 மணி முதல் http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.