மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான சிறப்பு இணையதளத்தை CBSE கல்வி வாரியம் துவங்கியுள்ளது.
தேர்வு முடிவுகள்
நாடு முழுவதும் பேரலையாக உருவான கொரோனா பெருந்தொற்றால் கடந்த 2 மாதங்களாக பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதனிடையே பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவியதால், அவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதே போல மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (CBSE) கீழ் படித்து வரும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து அம்மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண்களை வழங்க திட்டமிட்ட CBSE கல்வி வாரியம் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் CBSE 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்கள் கடந்த ஆண்டுகளில் பெற்ற இறுதி மதிப்பெண்கள் மற்றும் உள் மதிப்பீடுகளின் அளவில், இறுதி மதிப்பீடுகள் நடைபெற்று வருகிறது. அதே போல 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அவர்கள் 9 ஆம் வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்களை வைத்து இறுதி மதிப்பீடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் CBSE கல்வி வாரியம் அறிவித்ததை போல ஜூலை மாத இறுதிக்குள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. அதன்படி ஜூலை 31 ஆம் தேதிக்குள் CBSE தேர்வு முடிவுகளை அறிவிப்பதற்காக, ஒரு சிறப்பு இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளமானது ஜூலை 16 முதல் ஜூலை 22 ஆம் தேதிக்குள் செயல்படுத்தப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.