8th Social Science - Book Back Answers - Geography Unit 7 - Tamil Medium Guide

  

 


    8th Social Science - Book Back Answers - Geography Unit 7 - Tamil Medium

    Tamil Nadu Board 8th Standard Social Science - Geography Unit 7: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 7 – Geography from the Tamil Nadu State Board 8th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Geography Unit 7 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!


    அலகு 7: கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)

    I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

    1. ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை__________
    அ) கேப்பிளாங்கா
    ஆ) அகுல்காஸ் முனை
    இ) நன்னம்பிக்கை முனை
    ஈ) கேப்டவுன்
    விடைகுறிப்பு:
    இ) நன்னம்பிக்கை முனை
     
    2. எகிப்திற்கும் சினாய் தீபகற்பத்திற்கும் இடையில் ஒரு நிலச்சந்தி வழியாக உருவாக்கப்பட்ட செயற்கை கால்வாய்__________
    அ) பனாமா கால்வாய்
    ஆ) அஸ்வான் கால்வாய்
    இ) சூயஸ் கால்வாய்
    ஈ) ஆல்பர்ட் கால்வாய்
    விடைகுறிப்பு:
    இ) சூயஸ் கால்வாய்
     
    3. மத்திய தரைக்கடல் காலநிலையோடு தொடர்புடைய பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொண்டு சரியான விடையை தேர்வு செய்க.
    (i) சராசரி மழையளவு 15 சென்டிமீட்டர்.
    (ii). கோடைகாலம் வெப்பமாகவும் வறண்டதாகவும் குளிர்காலம் மழையுடனும் இருக்கும்.
    (iii) குளிர்காலம் குளிர்ச்சியாகவும், வறண்டும், கோடை வெப்பமாகவும், ஈரப்பத்துடனும் இருக்கும்.
    (iv) சிட்ரஸ் வகை பழங்கள் வளர்க்கப்படுகின்றன.
    அ) i சரியானது
    ஆ) ii மற்றும் iv சரியானவை
    இ) iii மற்றும் iv சரியானவை
    ஈ) அனைத்தும் சரியானவை
    விடைகுறிப்பு:
    ஆ) ii மற்றும் iv சரியானவை
     
    4. ஆஸ்திரேலியாவின் மேற்கு மற்றும் கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளை பிரிக்கும் மலைத்தொடர்__________
    அ) பெரிய பிரிப்பு மலைத்தொடர்
    ஆ) இமய மலைத்தொடர்
    இ) பிளிண்டர்கள் மலைத்தொடர்
    ஈ) மெக்டோனெல் மலைத்தொடர்
    விடைகுறிப்பு:
    அ) பெரிய பிரிப்பு மலைத்தொடர்
     
    5. கல்கூர்லி சுரங்கம்__________கனிமத்திற்கு புகழ்பெற்றது.
    அ) வைரம்
    ஆ) பிளாட்டினம்
    இ) வெள்ளி
    ஈ) தங்கம்
    விடைகுறிப்பு:
    ஈ) தங்கம்

    II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

    1. அட்லஸ் மலை ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ளது.
    2. ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரம் கிளிமஞ்சாரோ ஆகும்.
    3. ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் மரம் யூக்கலிப்டஸ்
    4. ஆஸ்திரேலியாவில் உள்ள மிதவெப்ப மண்டல புல்வெளிகள் நல்லார்பார் சமவெளி என அழைக்கப்படுகின்றன.
    5.அண்டார்டிகாவில் நிறுவப்பட்ட முதல் இந்திய ஆய்வு நிலையம் தட்சின் கங்கோத்ரி

    III. பொருத்துக. 

    1. பின்னாக்கள்            -        சுண்ணாம்பு பாறை தூண்கள்
    2. கிரில்                        -        சிறிய செம்மீன்
    3. நெருப்புக்கோழி     -        பறக்க இயலாத பறவை
    4. ஐரி ஏரி                     -        உப்பு ஏரி
    5. புவியின் அணிகலன்-     புவியிடைக் கோட்டுக்காடுகள்

    IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.   

    1.கூற்று: அரோரா என்பது வானத்தில் தோன்றும் வண்ண ஒளிகள் ஆகும்.
    காரணம்: அவை வளிமண்டலத்தின் மேலடுக்கு காந்த புயலால் ஏற்படுகின்றன.
    அ)கூற்று மற்றும் காரணம் உண்மை, கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் உண்மை, கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம் அல்ல ரியான
    இ) கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு.
    ஈ) காரணம் உண்மை ஆனால் கூற்று தவறு.
    விடைகுறிப்பு:
    அ)கூற்று மற்றும் காரணம் உண்மை, கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்.
     
    2. கூற்று: ஆப்பிரிக்காவின் நிலவியல் தோற்றங்களில் ஒரு முக்கிய அம்சம் பெரிய பிளவுப் பள்ளத்தாக்கு ஆகும்.
    காரணம்:புவியின் உள்விசை காரணமாக புவியின் மேற்பரப்பில் உண்டான பிளவு.
    அ) கூற்று மற்றும் காரணம் சரி கூற்றுகான காரணம் சரியான விளக்கம்.
    ஆ)கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் கூற்றுகான கார காரணம் சரியான விளக்கம்அல்ல
    இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
    ஈ) காரணம் சரி ஆனால் கூற்று தவறு.
    விடைகுறிப்பு:
    அ) கூற்று மற்றும் காரணம் சரி கூற்றுகான காரணம் சரியான விளக்கம்.

    V. சுருக்கமாக விடையளி.

    1. ஆப்பிரிக்கா 'தாய் கண்டம்' என அழைக்கப்படுவது ஏன்?
    • புவியில் மனித இனங்கள் வாழ்ந்த பழமையான கண்டம் என்பதால் ஆப்பிரிக்காவானது 'தாய் கண்டம்' என அழைக்கப்படுகிறது.
     2. ஆப்பிரிக்காவின் முக்கியமான ஆறுகள் யாவை?
    • நைல் நதி காங்கோ ஆறு .சாம்பசி ஆறு, ஆரஞ்சு ஆறு.
     3. ஆஸ்திரேலியாவின் நிலத்தோற்ற பிரிவுகள் யாவை?
    • மேற்கு ஆஸ்திரேலிய பெரிய பீடபூமி
    • மத்திய தாழ் நிலங்கள்
    • கிழக்கு உயர் நிலங்கள்
     4. அண்டார்டிகா கண்டத்தின் தன்மை குறித்து எழுதவும்.
    • அண்டார்டிகா தென் துருவப்பகுதியில் அமைந்துள்ள உலகின் ஐந்தாவது பெரிய கண்டமாகும்.
    • இப்பகுதி நிரந்தர பனியுடன் மிக குளிர்ந்த பிரதேசமாக உள்ளது.
    5. ஆஸ்திரேலியாவின் பொருளாதார நடவடிக்கைகள் ஏதெனும் நான்கினை குறிப்பிடுக.
    1. வேளாண்மை
    2. உற்பத்தி தொழிலகங்கள்
    3. வணிகம்
    4. சேவைப்பிரிவு.

    V. வேறுபடுத்துக.

    1. சாஹேல் மற்றும் சகாரா
     
    சாஹேல்
    சகாரா
    1
    இது சஹாரா பாலைவனத்திற்கும் சவானா புல்வெளிக்கும் இடையில் அமைந்துள்ளது.
    ஆப்பிரிக்காவின் வட பகுதியில் அமைந்துள்ளது.

     

    2
    இது ஒரு அரை வறண்ட சவானா புல்வெளி பகுதியாகும்.
    இது உலகின் மிகப்பெரிய வெப்ப மண்டல பாலைவனமாகும்.
     
    2. மேற்கு அண்டார்டிகா மற்றும் கிழக்கு அண்டார்டிகா
     
    மேற்கு அண்டார்டிகா
    கிழக்கு அண்டார்டிகா
    1
    இப்பகுதி பசிபிக் பெருங்கடலை நோக்கி அமைந்துள்ளது.
    இப்பகுதி அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களை நோக்கி அமைந்துள்ளது.
    2
    இப்பகுதி ஆண்டிஸ் மலைத்தொடரின் நீட்சி ஆகும்.
    இப்பகுதியில் மவுண்ட் எரிபஸ் ஒரு செயல்படும் எரிமலை ஆகும்.
     
    3. பெரிய பவளத் திட்டு மற்றும் ஆர்டீசியன் வடிநிலம்.
     
    பெரிய பவளத் திட்டு
    ஆர்டீசியன் வடிநிலம்
    1
    பசிபிக் பெருங்கடல் பகுதியில் குயின்ஸ்லாந்தின் கிழக்கு கடற்கரையை ஒட்டிய வடகிழக்கு பகுதியில் உள்ளது
    ஆர்டடீசியன் வடிநிலப்பகுதி,
    பெரும்பிரிப்பு மலைத்தொடருக்கு மேற்கே அமைந்துள்ளது.
    2
    இது சிறிய பவள நுண்ணுயிரிகளால்உருவானது.
    இது உலகின் மிகப்பெரிய மற்றும் ஆழமான படுகையாகும்.

    VI. காரணம் கூறுக.

    1. எகிப்து நைல் நதியின் நன்கொடை என அழைக்கப்படுகிறது ஏன்?
    • நைல் நதி எகிப்தின் வாழ்வாதாரமாக விளங்குவதால் இந்நதி எகிப்தின் நன்கொடை என அழைக்கப்படுகிறது.
     2. வெப்ப பாலைவனங்கள் கண்டங்களின் மேற்கு விளிம்புகளில் அமைந்துள்ளன.
    • இப்பாலைவனங்கள் வியாபாரக் காற்று ஈரப்பதத்தை இழந்து வீசும் மண்டலத்தில் அமைந்துள்ளன.
    • எனவே கண்டங்களின் மேற்கு பகுதிகள் பாலைவனங்களாக உள்ளன.
     3. அண்டார்டிகா ஆராய்ச்சியாளர்களின் கண்டம் என அழைக்கப்படுகிறது.
    • உலகின் எந்த ஒரு நாட்டின் மக்களும் அண்டார்டிகாவில் ஆய்வுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
    • எனவே இக்கண்டம் ஆராய்ச்சியாளர்களின் கண்டம் என அழைக்கப்படுகிறது.

    VII. விரிவான விடையளி.   


    1. ஆஸ்திரேலியாவின் கனிம வளங்கள் குறித்து விரிவாக எழுதவும்.
    • கனிமங்கள் ஆஸ்திரேலியாவின் மிக முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாகும்.
    • இவை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 சதவீத பங்களிப்பை அளிக்கின்றன.
    • தங்கம், மாங்கனீசு தாது மற்றும் துத்தநாகம் உற்பத்தியில் இரண்டாவது முன்னணி உற்பத்தியாளராகும்.
    • இரும்புத்தாது மற்றும் யுரேனியம் உற்பத்தியில் மூன்றாவது பெரிய உற்பத்தியாளராகும்.
    • நிலக்கரி உற்பத்தியில் நான்காவது பெரிய உற்பத்தியாளராகவும் இந்நாடு திகழ்கிறது.
     2. அண்டார்டிகா கண்டத்தின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பற்றி விவரி?
    • இக்கண்டத்தில் வெப்பநிலை ஆண்டு முழுவதும் உறை நிலைக்கு கீழே இருப்பதால் பெரிய தாவரங்கள் எதுவும் காணப்படவில்லை.
    • சிறிய வகை தாவரங்களான பாசிகள் மரப் பாசிகள் நுண்ணிய பூஞ்சைகள் போன்றவைகள் வளர்கின்றன.
    • சிறியவகை செம்மீன்களான கிரில்கள் பெரிய திரளாக காணப்படுகின்றன.
    • நீலத்திமிங்கலம் கடற்பசு போன்ற விலங்கினங்களும் காணப்படுகின்றன.
    • பென்குவின், ஸ்டவுட் போன்ற பறவைகளும் காணப்படுகின்றன.
     3. ஆப்பிரிக்காவின் இயற்கைப் பிரிவுகளை எழுதி அவற்றில் ஏதேனும் ஒன்றினை விளக்கவும்.
    • ஆப்பிரிக்காவின் இயற்கை அமைப்பை 8
    • பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
    • அவை. 1. சகாரா 2. சாஹேல் 3. சவானா 4. பெரிய பிளவு பள்ளத்தாக்கு மற்றும்
    • ஆப்பிரிக்காவின் பெரிய ஏரிகள் 5. கிழக்கு ஆப்பிரிக்க உயர் நிலங்கள் 6. சுவாலி
    • கடற்கரை 7. காங்கோ வடிநிலம் / ஜையர் வடிநிலம் 8. தென் ஆப்பிரிக்கா
    1. சகாரா:-
    • ஆப்பிரிக்காவின் வட பகுதியில் சகாரா பாலைவனம் அமைந்துள்ளது.
    • இது உலகின் மிகப்பெரிய வெப்ப மண்டல பாலைவனமாகும்.
    • இது 9.2 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது.

    VIII. வரைபட திறன்.   

    asas

    IX. உயர் சிந்தனை வினா.   

    asas

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive