8th Social Science - Book Back Answers - Civics Unit 3 - Tamil Medium Guide

  

 


    8th Social Science - Book Back Answers - Civics Unit 3 - Tamil Medium

    Tamil Nadu Board 8th Standard Social Science - Civics Unit 3: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 3 – Civics from the Tamil Nadu State Board 8th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Civics Unit 3 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!


    அலகு 3சமயச் சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்


    I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.


    1. சமயச்சார்பின்மை என்பது
    அ) அரசு அனைத்து சமயத்திற்கும் எதிரானது
    ஆ) அரசு ஒரே ஒரு சமயத்தை மட்டும் ஏற்றுக் கொள்கிறது
    இ) எந்த சமயத்தைச் சார்ந்த குடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணக்கமாக வாழ்தல்
    ஈ) இவற்றுள் எதுவுமில்லை
    விடைக்குறிப்பு:
    இ) எந்த சமயத்தைச் சார்ந்த குடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணக்கமாக வாழ்தல்
     
    2. இந்தியா ஒரு ___________கொண்ட நாடாகும்.
    அ) பல்வேறு சமயநம்பிக்கை
    ஆ) பல்வேறு பண்பாட்டு நம்பிக்கை
    இ) (அ) மற்றும் (ஆ) இரண்டும்
    ஈ) இவற்றுள் எதுவுமில்லை
    விடைக்குறிப்பு:
    இ) (அ) மற்றும் (ஆ) இரண்டும்
     
    3. இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு
    அ) 1951
    ஆ) 1976
    ) 1974
    ) 1967
    விடைக்குறிப்பு:
    ஆ) 1976
     
    4. பின்வருவனவற்றுள் எது இந்தியாவை சமயச்சார்பற்ற நாடாக விவரிக்கிறது?
    அ) அடிப்படை உரிமைகள்
    ஆ) அடிப்படை கடமைகள்
    இ) அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள்
    ஈ) அரசியலமைப்பின் முகவுரை
    விடைக்குறிப்பு:
    ஈ) அரசியலமைப்பின் முகவுரை
     
    5. சமயச் சுதந்திர உரிமை எதனுடன் தொடர்புடையது
    அ) நீதித்துறை
    ஆ) பாராளுமன்றம்
    இ) அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கை
    ஈ) அடிப்படை உரிமைகள்
    விடைக்குறிப்பு:
    ஈ) அடிப்படை உரிமைகள்
     
    6. அரசியலமைப்பின் பிரிவு 28 எந்த வகையான கல்வியை அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் தடை செய்துள்ளது?
    அ) சமய போதனைகள்
    ஆ) நீதி நெறிக்கல்வி
    இ) உடற்கல்வி
    ஈ) இவற்றுள் எதுவுமில்லை
    விடைக்குறிப்பு:
    அ) சமய போதனைகள்
     
    7. ஒரு நாடு சமயச்சார்பற்ற நாடாக எப்போது கருதப்படும் எனில் அது
    அ) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளித்தால்
    ஆ) அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் சமய போதனைகளை தடை செய்தால்
    இ) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்
    ஈ) எந்த சமய நம்பிக்கைகளையும் பரப்ப தடை விதித்தால்
    விடைக்குறிப்பு:
    இ) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்

    II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

    1. சமயம் நமக்கு பகைமையை போதிக்கவில்லை.
    2. சமயச்சார்பின்மை ஜனநாயகத்தின் ஒரு பகுதி. அது சம உரிமையை அளிக்கிறது.
    3. நாத்திகம் என்பது கடவுள் மற்றும் கடவுள்கள் மீது நம்பிக்கையற்றிருப்பதாகும்.
    4. நமது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை ஊக்குவிப்பதாகும்.
    5. பிரிவு 15 சமயம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில்பாகுபாடு காட்டுவதை தடை செய்கிறது.

    III. பொருத்துக. 

    1. நாத்திகம்                - கடவுள் நம்பிக்கையற்றிருப்பது
    2. குழந்தைகள்         - வருங்கால குடிமக்கள்
    3. தீன் – இலாஹி      - தெய்வீக நம்பிக்கை
    4. அரசியலமைப்பு - 1950
    5. ஹோல் யோக்     - Secularism என்ற பதத்தை உருவாக்கியவர்
    6. இராஜாராம் மோகன்ராய் - சமூகச் சீர்திருத்தவாதி
     

    IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.   

    1. இந்திய நாட்டிற்கென ஒரு சமயம் உள்ளது. 
    விடைக்குறிப்பு:

    தவறு

    2. சமயச்சார்பின்மை என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டுள்ளது. 
    விடைக்குறிப்பு
    :
    தவறு

    3. மொகலாய பேரரசர் அக்பர் சமயச் சகிப்புத்தன்மைக் கொள்கையை பின்பற்றினார். 
    விடைக்குறிப்பு:

    சரி

    4. சமண சமயம் சீனாவில் தோன்றியது. 
    விடைக்குறிப்பு:

    தவறு

    5. இந்திய அரசாங்கம் அனைத்து சமய விழாக்களுக்கும் விடுமுறையை அறிவிக்கிறது. 
    விடைக்குறிப்பு:

    சரி

    V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

    (i) இந்தியா போன்ற சமயப் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்திற்கு சமயச்சார்பின்மை விலைமதிப்பற்ற ஒன்றாகும்.
    (ii) சமயச்சார்பற்ற என்ற சொல்லானது 1950ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை.
    (iii) அரசியலமைப்பு பிரிவு 26 ஒரு குறிப்பிட்ட சமயத்திற்காக வரி செலுத்துவதற்கு ஊக்கமளிக்கிறது.
    (iv) அக்பரின் கல்லறை ஆக்ராவிற்கு அருகிலுள்ள சிக்கந்தராவில் உள்ளது.
    அ) i, ii மட்டும்
    ஆ) ii, iii மட்டும்
    இ) iv மட்டும்
    ஈ) i, ii, iv மட்டும்
    விடைக்குறிப்பு:
    ஈ) i, ii, iv மட்டும்
      
    2. கூற்று: ஒரு வெளிநாட்டவர் இந்தியாவில் தனது சமயத்தைப் பின்பற்றலாம்.
    காரணம் : அரசியலமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள சமய சுதந்திரம் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டவருக்கும் உண்டு.
    (i) கூற்று சரி காரணம் தவறு.
    (ii) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
    (iii) கூற்று தவறு. காரணம் சரி
    (iv) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.
    விடைக்குறிப்பு:
    (ii) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
     
    3. கூற்று இந்தியாவில் சமயச்சார்பின்மை என்ற கொள்கை மிக்க மதிப்புள்ளதாகும் காரணம் : இந்தியா பல்வேறு சமயம் மற்றும் பன்முக கலாச்சாரம் கொண்ட நாடாகும்.
    (i) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
    (ii) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.
    (ii) கூற்று தவறு, காரணம் சரி
    (iv) இரண்டும் தவறு
    விடைக்குறிப்பு:
    (i) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
      
    4. தவறான இணையைத் தேர்க
    (i) தீன் இலாகி              -        ஒரு புத்தகம்
    (ii) கஜுராஹோ          -        இந்து கோவில்
    (iii) அசோகர்                -        பாறைக் கல்வெட்டு
    (iv) இக்பால்                 -        கவிஞர்
    விடைக்குறிப்பு:
    (i) தீன் இலாகி              -        ஒரு புத்தகம்

    VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி.

    1. சமயச்சார்பின்மையை பரப்பிட பங்களித்த சில இந்தியர்களது பெயர்களைக் குறிப்பிடுக.
    • இராஜாராம் மோகன்ராய், சர் சையது அகமதுகான், மகாத்மா காந்தி மற்றும் B.R. அம்பேத்கர்.
     
    2. சமயச்சார்பின்மை என்பது எதனைக் குறிக்கிறது?
    • சமயச்சார்பின்மை என்பது பிற மதங்களின் மீது சகிப்புத்தன்மை மற்றும் அமைதியாக இணங்கி வாழும் ஒரு மனப்பாங்கு ஆகும்.
     
    3. சமயச்சார்பின்மையின் நோக்கங்களைக் கூறுக
    • ஒரு சமயக் குழு மற்றொரு சமயக் குழுவின் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பது.
    • அரசானது எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்தையும் பின்பற்ற வலியுறுத்தாமல் இருப்பது.
     
    4. அரசிடமிருந்து சமயத்தை பிரிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?
    • இந்தியா பல்வேறு சமயங்களை பின்பற்றும் மக்களைக் கொண்ட நாடாகும். ஆகவே அரசிடமிருந்து சமயத்தை பிரிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
     
    5. சமயச்சார்பற்ற நாட்டின் சிறப்புப் பண்புக் கூறுகள் யாவை?
    • எந்த சமயத்தையும் பின்பற்ற அரசு அனுமதியளித்தல்.
    • அரசு எந்த ஒரு சமயத்திற்கும் மற்றவற்றிற்கு மேலாக முன்னுரிமை அளிக்காதிருத்தல்
    • சமய விவகாரங்களில் அரசு நடுநிலைமை கொண்டிருத்தல்.
     
    6. சமயச்சார்பின்மை தொடர்பான இந்திய அரசியலமைப்பு பிரிவுகள் மூன்றினைக் குறிப்பிடுக
    1. பிரிவு 15: சமயம், இனம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடுத்துவதை தடை செய்கிறது.
    2. பிரிவு 16: பொது வேலை வாய்ப்பில் சமமான வாய்ப்பளித்தல்.
    3. பிரிவு 25 (1): எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும் பின்பற்றவும் பரப்பவும் உரிமை வழங்குகிறது.

    VII. விரிவான விடையளி.   

    1. சமயச்சார்பற்ற கல்வி நமக்கு ஏன் தேவை?
    • குறுகிய மனப்பான்மையை போக்குவதற்கும் மற்றும் அறிவான நோக்கத்தினை உருவாக்குவதற்கும்,
    • இளைஞர்களை நல்ல குடிமக்களாக்க பயிற்சியளிப்பதற்கும்,
    • சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மக்களாட்சியின் மதிப்புகளை பலப்படுத்துவதற்கும்,
    • ஒருவர் மற்றவர் நிலையிலிருந்து புரிந்துகொள்ளும் மனப்பான்மையை வளர்ப்பதற்கும்,
    • அன்பு, சகிப்புத்தன்மை, ஒத்துழைப்பு, சமத்துவம் மற்றும் இரக்க உணர்வை வளர்ப்பதற்கும் தேவைப்படுகிறது.
     
    2. இந்தியா போன்ற நாட்டிற்கு சமயச்சார்பின்மை அவசியம் - நிரூபிக்கவும்
    • இந்தியா பல சமய மற்றும் கலாச்சார, பண்பாட்டு நம்பிக்கைகள் கொண்ட நாடாகும்.
    • பல்வேறு சமய மக்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பராமரிக்க நமக்கு சமயச்சார்பற்ற நாடு அவசியமாகும்.
    • அது சம உரிமைகளையும் வழங்கும் மக்களாட்சியின் ஒரு பகுதி ஆகும்.
    • எனவே சமயச்சார்பின்மை இந்தியாவில் மக்களாட்சி வளர்ச்சிக்கான ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.




    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive