8th Social Science - Book Back Answers - Civics Unit 6 - Tamil Medium Guide

  

 


    8th Social Science - Book Back Answers - Civics Unit 6 - Tamil Medium

    Tamil Nadu Board 8th Standard Social Science - Civics Unit 6: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 6 – Civics from the Tamil Nadu State Board 8th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Civics Unit 6 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!


    அலகு 6 :பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

    I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

    1. இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி__________
    அ) குடியரசுத் தலைவர்
    ஆ) பிரதம அமைச்சர்இ
    இ) ஆளுநர்
    ஈ) முதலமைச்சர்
    விடைகுறிப்பு:
    அ) குடியரசுத் தலைவர்

    2. இந்திய இராணுவப் படையின் முதன்மை நோக்கமானது
    அ) தேசிய பாதுகாப்பு
    ஆ) தேசிய ஒற்றுமை
    இ) அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டைக் காத்தல்
    ஈ) மேற்கூறிய அனைத்தும்
    விடைகுறிப்பு:
    ஈ) மேற்கூறிய அனைத்தும்

    3. இராணுவ தினம் அனுசரிக்கப்படும் நாள்
    அ) ஜனவரி 15
    ஆ) பிப்ரவரி 1
    இ) மார்ச் 10
    ஈ) அக்டோபர் 7
    விடைகுறிப்பு:
    அ) ஜனவரி 15

    4. அஸ்ஸாம் ரைபிள்ஸ் எதன் கீழ் செயல்படுகிறது?
    அ) பாதுகாப்பு அமைச்சகம்
    ஆ) தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
    இ) திட்ட மேலாண்மை நிறுவனம்
    ஈ) உள்துறை அமைச்சகம்
    விடைகுறிப்பு:
    ஈ) உள்துறை அமைச்சகம்

    5. இந்தியக் கடலோரக் காவல்படை நிறுவப்பட்ட ஆண்டு
    அ) 1976
    ஆ) 1977
    இ) 1978
    ஈ) 1979
    விடைகுறிப்பு:
    இ) 1978

    6. இந்திய வெளியுறவுக் கொள்கையானது பல்வேறு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அவைகளுள் ஒன்று
    அ) சத்தியமேவ ஜெயதே
    ஆ) பஞ்சசீலம்
    இ) மேற்கூறிய இரண்டும்
    ஈ) மேற்கூறிய எவையுமில்லை
    விடைகுறிப்பு:
    ஆ) பஞ்சசீலம்

    7. பின்வருவனவற்றுள் எந்த தீவுகள் இந்தியாவிற்கு சொந்தமானவை?
    அ) அந்தமான் மற்றும் மாலத்தீவு
    ஆ) அந்தமான் மற்றும் லட்சத்தீவுகள்
    இ) இலங்கை மற்றும் மாலத்தீவு
    ஈ) மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகள்
    விடைகுறிப்பு:
    ஆ) அந்தமான் மற்றும் லட்சத்தீவுகள்

    II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

    1. மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவின் மையம் அமைந்துள்ள இடம் உதகமண்டலம்
    2. இந்திய கடற்படையின் தலைமை தளபதி குடியரசுத்தலைவர் ஆவார்.
    3. இந்திய விமானப்படையிலிருந்து ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட மார்ஷல் பதவிக்கு உயர்வு பெற்ற முதல் மற்றும் ஒரே அதிகாரி அர்ஜீன் சிங் ஆவார்.
    4. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினை வடிவமைத்த முதன்மைச் சிற்பி ஜவஹர்லால் நேரு
    5. அணிசேராமை என்ற சொல்லை உருவாக்கியவர் வி .கே .கிருஷ்ணமேனன்.


    III. பொருத்துக. 

    1. நெல்சன் மண்டேலா - இனவெறிக் கொள்கை
    2. தேசிய போர் நினைவுச்சின்னம் - புது டெல்லி
    3. மானக் ஷா - பீல்டு மார்ஷல்
    4. சார்க் - 8 உறுப்பினர்கள்
    5. பி.சி.ஐ.எம் - எரிசக்தி மேம்பாடு

    IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.   

    1. மத்திய ஆயுதக் காவல் படைகள் (CAPF) பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
    விடைகுறிப்பு:
    தவறு

    2. மெட்ராஸ் ரெஜிமென்ட் பழமையான காலாட்படைப் பிரிவுகளில் ஒன்று.
    விடைகுறிப்பு:
    சரி

    3. விரைவு அதிரடிப் படையானது, மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) ஒரு சிறப்பு பிரிவு ஆகும்.
    விடைகுறிப்பு:
    சரி

    4. NCC மாணவர்களுக்கு அடிப்படை இராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    விடைகுறிப்பு:

    சரி

    5. வங்காளதேசம் இந்தியாவின் ஒரு பகுதி ஆகும்.
    விடைகுறிப்பு:

    தவறு

    6. இந்தியாவிற்கும், ASEAN என்ற கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கும் மியான்மர் ஒரு நிலப்பாலமாக செயல்படுகிறது.
    விடைகுறிப்பு:

    சரி

    V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

    1. ஆயுதப்படைகள் தொடர்பான பின்வரும் கூற்றினை ஆராய்க.
    i. இந்திய இராணுவப் படை ஆயுதப் படைகளின் நிலஅடிப்படையிலான பிரிவு ஆகும்.
    ii. இந்திய இராணுவப் படையின் நோக்கம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் மனித மீட்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது.
    அ) i மட்டும் சரி
    ஆ) ii மட்டும சரி
    இ) i மற்றும் ii சரி
    ஈ) i மற்றும் ii தவறு
    விடைகுறிப்பு:
    இ) i மற்றும் ii சரி

    2. கூற்று: குடியரசுத் தலைவர் இந்திய ஆயுதப் படைகளின் தலைமை தளபதி ஆவார்.
    காரணம்: குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராகவும் மிக உயர்ந்த பதவி நிலையையும் வகிக்கிறார்.
    அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
    ஆ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
    இ) கூற்று சரி, காரணம் தவறு
    ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
    விடைகுறிப்பு:
    அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

    3. கூற்று: பன்னாட்டு கூட்டுறவை இந்தியா ஆதரிக்கிறது.
    காரணம்: நட்பு கூட்டுறவு மூலம் நாடுகளுக்கிடையே உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என்று இந்தியா நம்புகிறது.
    அ) கூற்று சரி, காரணம் தவறு
    ஆ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
    இ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
    ஈ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
    விடைகுறிப்பு:
    இ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

    4. இனவெறிக் கொள்கை பற்றி பின்வரும் எந்த கூற்று சரியானவை அல்ல.
    i. நிறவெறிக் கொள்கை என்பது இனப்பாகுபாட்டின் ஒரு மோசமான வடிவம்.
    ii. இது மனிதாபிமானத்திற்கு எதிரானது.
    ii. இனப்பாகுபாட்டுக் கொள்கை இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.
    அ) i மற்றும் ii
    ii மற்றும் iii
    இ) ii மட்டும்
    ஈ) iii மட்டும்
    விடைகுறிப்பு:
    ஈ) iii மட்டும்

    5. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
    அ) மாலத்தீவு
    ஆ) இலங்கை
    இ) மியான்மர்
    ஈ) லட்சத்தீவுகள்
    விடைகுறிப்பு:
    ஈ) லட்சத்தீவுகள்

    VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி.

    1. தேசிய பாதுகாப்பு மிக அவசியமானது ஏன்?
    • ஒவ்வொரு நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அதன் தேசிய பாதுகாப்பு மிகவும் அவசியமானது ஆகும்.
    2. பின்வருவனவற்றிற்கு விரிவாக்கம் தருக.
    அ) SFF
    ஆ) ICG
    இ) BSF
    ஈ) NCC
    அ) SFFசிறப்பு -எல்லைப்புற படை (Special Frontier Force)
    ஆ) ICGஇந்தியக் - கடலோரக் காவல்படை(Indian Coast Guard)
    இ) BSFஎல்லை பாதுகாப்பு படை (Border Security Force)
    ஈ) NCCதேசிய மாணவர் படை (National Cadet Corps)

    3. மத்திய ரிசர்வ் காவல் படை பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
    • தேசிய ஒருமைப்பாட்டைக் காப்பதற்கும் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பினைத் திறம்பட பராமரிப்பதற்கும் இந்திய அரசாங்கத்திற்கு உதவுவதே மத்திய ரிசர்வ் காவல் படையின் நோக்கம் ஆகும்.
    4. அணிசேரா இயக்க நிறுவனத் தலைவர்களின் பெயர்களை குறிப்பிடுக.
    • இந்தியா- ஜவஹர்லால் நேரு, யுகோஸ்லாவியா- டிட்டோ, எகிப்து - நாசர், இந்தோனேசியா - சுகர்னோ மற்றும் கானா - குவாமே நிக்ரூமா.
    5. இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கொள்கைகளை எழுதுக.
    • தேதிய நலனைப் பாதுகாத்தல்
    • உலக அமைதியினை அடைதல்
    • நட்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்
    • பொருளாதார வளர்ச்சி
    6. சார்க் உறுப்பு நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக.
    • இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், நேபாளம், பூடான், இலங்கை மாலத்தீவு மற்றும் ஆப்கானிஸ்தான்.

    VII. விரிவான விடையளி.   

    1. இந்திய இராணுவப் படையின் அமைப்பு மற்றும் நிர்வாகத்தினை விவரி.
    • இந்திய இராணுவப் படை என்பது நில அடிப்படையிலான ஒரு பிரிவு ஆகும்.
    • இது ஜெனரல் என்றழைக்கப்படும் படைத் தளபதியால் வழிநடத்தப்படுகிறது.
    • இந்திய இராணுவம் ரெஜிமென்ட் என்ற அமைப்பு முறையைக் கொண்டது.
    • இது புவியியல் அடிப்படையிலும் ஏழு படைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
    • நாட்டின் அமைதியையும் பாதுகாப்பையும் பேணுதல் இதன் முதன்மைப் பணிகளாகும்.
    2. துணை இராணுவப் படை பற்றி எழுதுக.
    • இராணுவத்திற்கு உதவும் படைகள் துணை இராணுவப் படைகள் என்றழைக்கப்படுகின்றன.
    • இப்படைகள் உள்நாட்டு, கடலோரப் பகுதியை பாதுகாக்கிறது.
    • எண்ணெய் வயல்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை பாதுகாக்கும் பணியைச் செய்கிறது.
    • இயற்கை பேரழிவுகளிலிருந்து மக்களை மீட்கும் பணியிலும் இப்படைகள் ஈடுபடுகின்றன.
    • அமைதி காலங்களில் சர்வதேச எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை வகிக்கின்றன
    • அவைகள்:
    • 1. அஸ்ஸாம் ரைபிள்ஸ் (AR)
    • 2. சிறப்பு எல்லைப்புறப் படை (SFF)
    3. பஞ்சசீலத்தின் ஐந்து கொள்கைகளை எழுதுக.
    1. ஒவ்வொரு நாட்டின் எல்லையையும், இறையாண்மையையும் பரஸ்பரம் மதித்தல்.
    2. பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை.
    3. பரஸ்பர உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல்.
    4. பரஸ்பர நலனுக்காக சமத்துவம் மற்றும் ஒத்துழைத்தல்.
    5. அமைதியாக இணைந்திருத்தல்.

    4. இந்தியா தனது அண்டை நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. எப்படி?
    • இந்தியா எப்போதும் சர்வதேச நாடுகளுடன் ஒத்துழைப்பை கொண்டுள்ளது.
    • இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது அண்டை நாடுகளுடன் நட்புறவுகளை வளர்ப்பது.
    • கருவிகள் மற்றும் பயிற்சி ஆகிய வடிவில் அண்டை நாடுகளுக்கு தேவையான ஆதரவினை இந்தியா அளித்து வருகிறது.
    • ஆற்றல், மூலதனம் மற்றும் தகவல்கள் ஆகியவற்றின் தடையில்லா இணைப்பும் ஒருங்கிணைப்பும் அளிக்கப்படுகிறது
    • இவை இந்தியாவின் அண்டை நாடு

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive