8th Social Science - Book Back Answers - Civics Unit 5 - Tamil Medium Guide

  

 


    8th Social Science - Book Back Answers - Civics Unit 5 - Tamil Medium

    Tamil Nadu Board 8th Standard Social Science - Civics Unit 5: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 5 – Civics from the Tamil Nadu State Board 8th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Civics Unit 5 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!


    அலகு 5சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

    I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

    1. சிவப்பு விளக்கு ஒளிரும் போது
    அ) பாதை தெளிவாக இருக்கும் போது நீங்கள் தொடர்ந்து செல்லல்லாம்
    ஆ) நீங்கள் வாகனத்தை நிறுத்தி பச்சை விளக்கு ஒளிரும் வரை காத்திருக்கவேண்டும்
    இ) உன் நண்பனின் குறுந்தகவலுக்கு விரைவாக பதில் அனுப்பலாம்
    ஈ) செல்லிடப்பேசியில் உரையாடலாம்
    விடைகுறிப்பு:
    ஆ) நீங்கள் வாகனத்தை நிறுத்தி பச்சை விளக்கு ஒளிரும் வரை காத்திருக்கவேண்டும்
     
    2. பாதசாரிகள் சாலையை கடக்குமிடம்__________
    அ) எங்குவேண்டுமானாலும்
    ஆ) சமிக்ஞைகளுக்கு அருகில்
    இ) வரிகோட்டு பாதையில்
    ஈ) இவற்றில் எதுவுமில்லை
    விடைகுறிப்பு:
    இ) வரிகோட்டு பாதையில்
     
    3. சாலை பாதுகாப்பு வாரம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் மாதம்__________
    அ) டிசம்பர்
    ஆ) ஜனவரி
    இ) மார்ச்
    ஈ) மே
    விடைகுறிப்பு:
    ஆ) ஜனவரி
     
    4. அவசர காலத்தில், அவசர சிகிச்சை ஊர்தி சேவைக்காக அழைக்க வேண்டிய எண்
    அ) 108
    ஆ) 100
    ) 106
    ) 101
    விடைகுறிப்பு:
    அ) 108
     
    5. சாலை விபத்துக்களுக்கான காரணங்கள் யாவை?
    அ) அதிவேகம்
    ஆ) குடிபோதையில் ஓட்டுதல்
    இ) ஓட்டுநர்கள் கவனச்சிதறல்
    ஈ) இவை அனைத்தும்
    விடைகுறிப்பு:
    ஈ) இவை அனைத்தும்
     
    6. போக்குவரத்து குறியீடுகளின் முதல் வகை_________
    அ) கட்டாய குறியீடுகள்
    ஆ) எச்சரிக்கை குறியீடுகள்
    இ) தகவல் குறியீடுகள்
    ஈ) இவற்றில் எதுவுமில்லை
    விடைகுறிப்பு:
    அ) கட்டாய குறியீடுகள்

    7. சேது பாரதம் திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு
    ) 2014
    ஆ) 2015
    ) 2016
    ) 2017
    விடைகுறிப்பு:
    ) 2016
     
    8. ABS என்பதனை விரிவாக்கம் செய்க.
    அ) எதிர் நிறுத்தி ஆரம்பம் (Anti Brake Start)
    ஆ) வருடாந்திர அடிப்படை அமைப்பு (Annual Bare System)
    இ) பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti-lock Braking System)
    ஈ) இவற்றுள் எதுவுமில்லை
    விடைகுறிப்பு:
    இ) பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti-lock Braking System)
     
    9. வளைவில் முந்துவது
    அ) அனுமதிக்கப்படுகிறது
    ஆ) அனுமதியில்லை
    இ) கவனத்துடன் அனுமதிக்கப்படுகிறது
    ஈ) நமது விருப்பம்
    விடைகுறிப்பு:
    ஆ) அனுமதியில்லை
     
    10. அவசர சிகிச்சை ஊர்தி வரும்பொழுது
    அ) முன்பக்கம் வாகனம் இல்லாத போது கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.
    ஆ) முன்னுரிமை எதுவும் அளிக்கத் தேவையில்லை.
    இ) நம் வாகனத்தினை சாலை ஓரமாக செலுத்தி தடையில்லாமல் கடக்க அனுமதிக்க வேண்டும்.
    ஈ) அவசர சிகிச்சை ஊர்தியின் பின்புறம் மிகுந்த வேகத்துடன் பின் தொடர வேண்டும்.
    விடைகுறிப்பு:
    இ) நம் வாகனத்தினை சாலை ஓரமாக செலுத்தி தடையில்லாமல் கடக்க அனுமதிக்க வேண்டும்.
     

    II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

    1. வாகனம் ஓட்டும் பொழுது எப்போதும் இடது புறம் செல்லவும்.
    2. கட்டாய குறியீடுகள் வட்ட வடிவில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
    3. பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (ABS)வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்துகின்றது
    4. அதிக வேகம்: அதிக ஆபத்து.
    5. நான்கு சக்கர வாகனத்தில் இருக்கைப் பட்டை அணிவதும் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிவதும் கட்டாயம் எனச் சட்டம் உள்ளது. உள்ளது.
     

    III. பொருத்துக. 

    1. மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்   -        ஆறு மாதங்கள்
    2. புதிய சிற்றுந்துகளுக்கான ஒரு முறை வரி -  15 வருடங்கள்
    3. பாதசாரி                                     -        வரிக் கோட்டு பாதை
    4. பிரேசிலியா பிரகடனம்            -        பன்னாட்டு மாநாடு
    5. சுவச்ச சேஃபர்                            -        சாலைப்பாதுகாப்பு குறித்த
    சித்திரபுத்தகம்
     

    IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.   

    1. சாலை விபத்துக்கள் தொடர்பான பிரச்சனை சாலையில் மட்டுமே உள்ளது.
    விடைகுறிப்பு:
    தவறு
     
    2. பாதை தடத்தை மாற்றும் முன்பு கண்ணாடியினை பார்க்க வேண்டும்.
    விடைகுறிப்பு:
    சரி
     
    3. ஒளிரும் மஞ்சள் விளக்கு, வேகத்தினை குறைத்தும் எச்சரிக்கையுடனும் செல்லவேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
    விடைகுறிப்பு:
    சரி
     
    4. இருசக்கர வண்டியில் ஒருவர் மட்டுமே பின் இருக்கையில் அமர அனுமதிக்கப்படுகிறார்கள்.
    விடைகுறிப்பு:
    சரி
     
    5. சாலைகள் மனிதனின் மிக மோசமான கண்டுபிடிப்புகளில் ஒன்று.
    விடைகுறிப்பு:
    தவறு
     

    V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

    1. பின்வரும் கூற்று(களில் சரியல்லாதது எது?
    (i) முன்புற வாகனத்திலிருந்து சரியான இடைவெளியில் தொடரவும்.
    (ii) வேக கட்டுப்பாட்டு அளவினை க் கடை பிடிக்க வேண்டும். ஒருபோதும்
    வேகத்திற்கான எல்லயினை தாண்டக்கூடாது.
    (iii) வாகனம் ஓட்டும்பொழுது இருக்கை வார்பட்டை அணியத் தேவையில்லை.
    (iv) வளைவுகளிலும் திருப்பங்களிலும் வேகத்தினை குறைக்க வேண்டாம்.
    அ) i, iii மட்டும்
    ஆ) ii, iv மட்டும்
    இ) i, ii மட்டும்
    ) iii, iv மட்டும்
    விடைகுறிப்பு:
    ) iii, iv மட்டும்
     
    2. கூற்று: மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது விபத்துக்களை ஏற்படுத்துகின்றது.
    காரணம்: மயக்கம் காரணமாக பார்வை பாதிக்கப்படுகின்றது.
    அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
    ஆ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல
    இ) கூற்று சரி காரணம் தவறு
    ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
    விடைகுறிப்பு:
    அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
     
    3. கூற்று: சாலை குறியீடுகள் எளிதில் புரிந்துகொள்ள கூடிய ஒன்று
    காரணம்: அவைகள் பெரும்பாலும் படங்களான இருக்கின்றன.
    அ) கூற்று சரி, காரணம் தவறு
    ஆ)கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
    இ) கூற்று தவறு, காரணம் சரி
    ஈ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
    விடைகுறிப்பு:
    ஆ)கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
     
    4. பொருந்தாத ஒன்றை கண்டுபிடி (சாலை பாதுகாப்பு விதிகள்).
    அ) வளைவுகளில் மெதுவாக செல்
    ஆ) வேக கட்டுப்பாட்டு அளவினைக் கடைபிடி
    இ) வாகனம் ஓட்டும் பொழுது செல்லிடப் பேசியை பயனபடுத்து
    ஈ) சாலைகளில் நடப்பதை தவிர்க்கவும்
    விடைகுறிப்பு:
    இ) வாகனம் ஓட்டும் பொழுது செல்லிடப் பேசியை பயனபடுத்து
     
    5. பின்வரும் குறியீடுகள் எதைக் குறிப்பிடுகின்றன.

     

    VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி.

    1. சாலைப் பாதுகாப்பினை நீவிர் எவ்வாறு உறுதி செய்வாய்?
    • நான் சாலை விதிகளை கடைபிடிப்பதன் மூலம் சாலைப் பாதுகாப்பினை உறுதி செய்வேன்.
     2. சாலைப் பாதுகாப்பு நமக்கு ஏன் முக்கியமானது?
    • சாலை விபத்துக்கள் படுகாயங்கள், இறப்புகளை ஏற்படுத்துகின்றன.
    • இதனை தவிர்க்க சாலைப் பாதுகாப்பு நமக்கு முக்கியமானது.
     3. சாலைப் விபத்துக்களின நேரடி விளைவுகள் என்ன?
    • உயிரிழப்பு, படுகாயம், உடமைகளுக்கு சேதம்.
     4. போக்குவரத்து சமிக்ஞைகளின் படம் வரைந்து அதன் பொருளைக் குறிப்பிடுக.
     
     
    5. சாலைப் பாதுகாப்பு குறித்த பிரேசிலியா அறிவிப்பைப் பற்றிக் குறிப்பு எழுதுக.
    • இது ஐ. நா. உலக சுகாதார அமைப்பு இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பிற்கான உயர்மட்ட மாநாடு ஆகும்.
    • இந்தியா, பிரேசிலியா பிரகடனத்தில் 2015 ஆம் ஆண்டு கையெழுத்திட்டது.
     6. சாலைப் பாதுகாப்பு வாரம் கடைபிடிப்பதன் நோக்கம் யாது?
    • சாலை பாதுகாப்பு விதிகள் பற்றிய விழிப்புணர்வினை வலுப்படுத்த சாலை போக்குவரத்து அமைச்சகத்தால் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகின்றது.
     7. ஏதேனும் நான்கு சாலை விதிகளை எழுதுக.
    • ஓட்டுநர் வாகனத்தைச் இடப்புறம் மட்டுமே செலுத்த வேண்டும்.
    • பாதசாரி கடக்கும் இடங்களில் வாகனத்தின் வேகத்தை குறைக்க வேண்டும்.
    • தடை செய்யப்பட்ட இடங்களில் ஒலிப்பான்களை பயன்படுத்தக் கூடாது.
    • மருத்துவ ஊர்தி, தீயணைப்பு வாகனங்கள் போன்றவைகளுக்கு வழிவிடுவது நமது பொறுப்பாகும்.
     8. மது அருந்துதல் வாகன ஓட்டுதலை எவ்வாறு பாதிக்கின்றது?
    மது அருந்துவது கவனத்தைக் குறைக்கும்.
    • அதன் காரணமாக பார்வை தடைபட்டு விபத்துக்கள் ஏற்படுகிறது.

     VII. விரிவான விடையளி.   
    1. சாலை விபத்துக்களுக்கான காரணங்களை விவரி.
    1. ஓட்டுநர்கள் :-
    அதிக வேகத்தில் செலுத்துதல், விதிகளை மீறுதல் மற்றும் மது அருந்துதல் போன்றவை
    2. பாதசாரிகள் : -
    கவனமின்மை தவறான இடங்களில் சாலையைக் கடப்பது மற்றும் கவனிக்காமல் சாலையின் குறுக்காக செல்பவர்.
    3. பயணிகள் :-
    படிக்கட்டுகளில் பயணம் செய்வது. ஓடும் பேருந்தில் ஏறுவது போன்றவை.
    4. சாலைகளின் தரம் :-
    பழுதடைந்த சாலைகள், குழிகளான சாலைகள், வேகத்தடைகள் மற்றும் திருப்பங்கள்
    5. வானிலை :-
    மூடுபனி, பனி, கனமழை, காற்று, புயல் மற்றும் ஆலங்கட்டி மழை
     
    2. சாலை விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளைக் விளக்குக.
    • கனரக வாகனங்களில் பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பும், இரு சக்கர வண்டிகளில் தானியங்கி முகப்பு விளக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
    • உடனடி அவசர சிகிச்சை ஊர்திகள் தேசிய நெடுஞ்சாலைகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) நிறுத்தப்பட்டிருக்கின்றது.
    • தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற பயணம் செய்ய பாலங்களை கட்டுவதற்கான திட்டம் 2016இல் தொடங்கப்பட்டது.
    • வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளை பொருத்துவதை கட்டாயமாக்கியுள்ளது.
    • போக்குவரத்து நெருக்கடியுள்ள சாலைகளில் பெரிய டிஜிட்டல் பலகைகள் வாயிலாக தகவல்கள் அளிக்கப்படுகின்றன.
     3. சாலை விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் என்ன?
    • எப்பொழுதும் இடதுபுறமாகவே செல்வது.
    • வளைவுகளிலும் திருப்பங்களிலும் வேகம் குறைத்தல்.
    • இரு சக்கர வாகனம் தலைக்கவசம் ஓட்டும்போது அணிய வேண்டும்
    • வேக வரம்பை ஒருபோதும் மீறக்கூடாது.
    • சரியான இடைவெளிவிட்டு பின் தொடரவும்.
    • சாலை குறியீடுகளைப் பின்பற்றுதல்




    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive