8th Social Science - Book Back Answers - Geography Unit 2 - Tamil Medium Guide

  

 


    8th Social Science - Book Back Answers - Geography Unit 2 - Tamil Medium

    Tamil Nadu Board 8th Standard Social Science - Geography Unit 2: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 2 – Geography from the Tamil Nadu State Board 8th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Geography Unit 2 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!


    அலகு 2: வானிலையும் காலநிலையும்

    I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.


    1. புவியின் வளிமண்டலம் ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் அளவைக் கொண்டுள்ளது.
    அ. 78% மற்றும் 21%
    ஆ. 22% மற்றும் 1%
    இ. 21% மற்றும் 0.97%
    ஈ. 10 மற்றும் 20%
    விடைகுறிப்பு:
    அ. 78% மற்றும் 21%
     
    2. ஒரு பகுதியின் சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.
    அ. புவி
    ஆ. வளிமண்டலம்
    இ. காலநிலை
    ஈ. சூரியன்
    விடைகுறிப்பு:
    இ. காலநிலை
     
    3. புவி பெறும் ஆற்றல்
    அ. நீரோட்டம்
    ஆ. மின்காந்த அலைகள்
    இ. அலைகள்
    ஈ. வெப்பம்
    விடைகுறிப்பு:
    ஈ. வெப்பம்
     
    4. கீழ்க்கண்டவற்றில் எவை சம அளவு மழை உள்ள இடங்களை இணைக்கும் கோடு ஆகும்.
    அ. சமவெப்பக்கோடு
    ஆ. சம சூரிய வெளிச்சக் கோடு
    இ. சம காற்றழுத்தக் கோடு
    ஈ. சம மழையளவுக் கோடு
    விடைகுறிப்பு:
    ஈ. சம மழையளவுக் கோடு
     
    5. என்ற கருவி ஈரப்பதத்தை அளக்கப் பயன்படுகிறது.
    அ. காற்றுமானி
    , அழுத்தமானி
    இ. ஈரநிலைமானி
    ஈ. வெப்பமானி
    விடைகுறிப்பு:
    இ. ஈரநிலைமானி

    II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 


    1. வானிலை என்பது குறுகிய காலத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கூறுவது ஆகும்.
    2. வானிலையைப் பற்றிய அறிவியல் ஆய்வு வானிலையியல்
    3. புவியில் அதிகபட்ச வெப்பம் பதிவான இடம் கலிபோர்னியா
    4. காற்றில் உள்ள அதிக பட்ச நீராவிக் கொள்ளளவுக்கும் உண்மையான நீராவி அளவிற்கும் உள்ள விகிதாச்சாரம் ஒப்பு ஈரப்பதம்
    5. அனிமாமீட்டர் மற்றும் காற்றுமானி மூலம் காற்றின் வேகம் மற்றும் காற்றின் திசை ஆகியவை அளக்கப்படுகின்றன.
    6. சம அளவுள்ள வெப்பநிலையை இணைக்கும் கற்பனைக் கோடு சமவெப்பக் கோடு

    III. பொருத்துக. 


    1. காலநிலை     -        நீண்ட நாளைய மாற்றங்கள்
    2. ஐசோநெப்      -        சம அளவுள்ள பனிப்பொழிவு
    3. ஈரநிலைமானி        -        ஈரப்பதம்
    4. ரேடார்   -        புயலின் அமைவிடத்தையும் அது நகரும்
    திசையையும்அறிந்து கொள்வது
    5. குறைந்த அழுத்தம்         -        சூறாவளி

    IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.   


    1. புவியைச் சுற்றியுள்ள வளிமண்டலம் பல்வேறு வாயுக்களால் ஆன கலவையாகும்
    விடைகுறிப்பு:
    சரி
     
    2. வானிலை பற்றிய அறிவியல் பிரிவிற்கு காலநிலை என்று பெயர்
    விடைகுறிப்பு:
    தவறு
     
    3. சமமான சூரிய வெளிச்சம் உள்ள பகுதிகளை இணைக்கும் கோட்டிற்கு சம சூரிய வெளிச்சக் கோடு என்று பெயர்.
    விடைகுறிப்பு:
    சரி
     
    4. ஈரப்பதத்தை கணக்கிடும் கருவி அனிராய்டு அழுத்தமானி
    விடைகுறிப்பு:
    தவறு


    VII. வேறுபடுத்துக.   

    1. காலநிலை மற்றும் வானிலை

     
    காலநிலை
    வானிலை
    1
    இது வளிமண்டலத்தின் வானிலைக் கூறுகளின் 35 வருட சராசரி தன்மையினை கூறுவதாகும்.
    வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலவும் சூரிய வெப்பம் மழைப்பொழிவு மற்றும் பிறகூறுகளின் தன்மைகளை குறிப்பதாகும்.
     
     2. முழுமையான ஈரப்பதம் மற்றும் ஒப்பு ஈரப்பதம்
     
    முழுமையான ஈரப்பதம்
    ஒப்பு ஈரப்பதம்
    1
    ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள காற்றில் உள்ள நீராவியின் எடைக்கு உண்மையான ஈரப்பதம் என்று பெயர்.
    ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள காற்றில் உள்ள நீராவி அளவிற்கும், அதேசமயம் அக்காற்றில் தற்போது உள்ள நீராவி அளவிற்கும் உள்ள விகிதம் ஒப்பு ஈரப்பதம் எனப்படும்.
     
    3. கோள் காற்று மற்றும் பருவகாலக் காற்றுகள்
     
    கோள் காற்று
    பருவகாலக் காற்றுகள்
    1
    ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்றுகள் அல்லது நிலையான காற்று என்று அழைப்பர்.
    பருவக்காலக் காற்று என்பது பருவத்திற்கு ஏற்றவாறு அதன் திசையை மாற்றி வீசும்.
    2
    எ.கா. வியாபாரக் காற்று
    . கா.தென்மேற்கு பருவக்காற்று

    VIII. சுருக்கமாக விடையளி.   


    1. காலநிலை வரையறு
    • காலநிலை என்பது ஒரு பகுதியின் 35 வருட வானிலையின் சராசரியைக் குறிப்பதாகும்.
     2. "வெயிற் காய்வுஎன்றால் என்ன?
    • வெயில் காய்வு என்பது சூரியனின் வெப்பக் கதிர்வீச்சால் புவியின் வெப்பம் இடத்திற்கு இடம் மாறுபடுவதே ஆகும்.
     3. "வளிமண்டலக் காற்றழுத்தம்" என்றால் என்ன?
    • புவியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட பகுதியிலுள்ள உள்ள காற்றின் எடையே வளிமண்டல காற்றழுத்தம் எனப்படும்.
     4. சிறு குறிப்பு வரைக: கோள் காற்று / நிரந்தரக்காற்று
    • ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்றுகள் அல்லது நிலையான காற்று என்று அழைப்பர்.
    • எ.கா. வியாபாரக் காற்று
     5. சம அளவுக்கோடுகள் - "ஐசோ லைன்ஸ்" என்றால் என்ன?
    • நிலவரைபடங்களில் வானிலைக் கூறுகளின் பரவலைச் சம அளவுக் கோட்டு வரைபடம் மூலம் காண்பிக்கப்படுவது ஆகும்.

    IX. காரணம் கூறுக.   


    1. காலநிலையும் வானிலையும் வெவ்வேறு இடங்களில் மாறுபடுகின்றன.
    • காலநிலையையும், வானிலையையும் தீர்மானிக்கும் காரணிகள் இடத்திற்கு இடம் வேறுபடுவதால் மாறுபடுகின்றன.
     2. உயரம் அதிகரிக்கும் பொழுது வெப்பம் குறைகிறது.
    • உயரம் அதிகமுள்ள பகுதிகளில் காற்றிலுள்ள மூலக்கூறுகளின் அளவு குறைவதால் வெப்பமும் குறைகிறது.
     3. மலை ஏறுபவர்கள் உயர்ந்த சிகரங்களுக்குச் செல்லும் போது ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்கின்றனர்.
    • மிக உயரமான இடங்களில் காற்றில் ஆக்ஸிஜனின் அளவு குறைவாக ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்கின்றனர்.

    IX. விரிவான விடையளி.


    1. வெப்பநிலை எவ்வாறு அளவிடப்படுகிறது?
    • வெப்பநிலை என்பது ஒரு குறிப்பிட்ட கனஅளவு காற்றில் குறிப்பிட்ட நேரத்தில் அளவிடப்படுகிறது.
    • இது செல்சியஸ், பாரன்ஹீட் அளவுகளால் அளவிடப்படுதாகும்.
    • வானிலை ஆய்வாளர்கள் வெப்பநிலையை அளக்க வெப்பமானி, ஸ்டீவன்சன் திரை வெப்பமானி மூலமும் கணக்கிடுகிறார்கள்.
    • வளிமண்டலம் புவி கதிர் வீசலால் வெளியேற்றும் வெப்பத்தால் பிற்பகல் 2 மணியிலிருந்து நான்கு மணிக்குள் அதிக வெப்பமடைகிறது.
    • குறைந்தபட்ச வெப்ப நிலை அதிகாலை 4 மணி முதல் சூரிய உதயத்திற்கு முன் பதிவாகிறது.
     2. காற்றையும், அதன் வகைகளைப் பற்றியும் விவரி.
    1.காற்று:-
    கிடைமட்டமாக நகரும் வாயுவிற்கு காற்று என்று பெயர்.
    2.காற்றின் வகைகள்:-
    1. கோள் காற்றுகள்:
    ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்றுகள் என்று அழைப்பர்.
    2. பருவக்காலக் காற்றுகள்:
    பருவக்காலக் காற்று என்பது பருவத்திற்கு ஏற்றவாறு அதன் திசையை மாற்றி வீசும்.
    3. தலக் காற்றுகள்:
    ஒரு நாள் அல்லது ஆண்டின் குறுகிய காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சிறிய பகுதியில் வீசும்.

     
    3. வானிலைக் கூறுகளையும் அதை அளக்க உதவும் கருவிகளையும் பட்டியலிடுக.
     
    வானிலைக் கூறுகள்
    அளக்க உதவும் கருவிகள்
    1
    வெப்பநிலை
    வெப்பமானி
    2
    மழைப்பொழிவு
    மழைமானி
    3
    காற்றழுத்தம்
    காற்றழுத்தமானி
    4
    ஈரப்பதம்
    ஈரநிலைமானி
    5
    காற்று
    காற்றுமானி

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive