8th Social Science - Book Back Answers - Civics Unit 4 - Tamil Medium Guide

  

 


    8th Social Science - Book Back Answers - Civics Unit 4 - Tamil Medium

    Tamil Nadu Board 8th Standard Social Science - Civics Unit 4: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 4 – Civics from the Tamil Nadu State Board 8th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Civics Unit 4 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!


    அலகு 4: மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

    I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

    1. இரண்டாம் உலகப் போருக்குப் __________பின்னர் மனித உரிமைகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
    அ) ஐ. நா. சபை
    ஆ) உச்ச நீதிமன்றம்
    இ) சர்வதேச நீதிமன்றம்
    ஈ) இவைகளில் எதுவுமில்லை
    விடைகுறிப்பு:
    அ) ஐ. நா. சபை
     
    2. 1995ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து பெண்கள்
    இல் கூடினர்.
    அ) பெய்ஜிங்
    ஆ) நியூயார்க்
    இ) டெல்லி
    ஈ) இவைகளில் எதுவுமில்லை
    விடைகுறிப்பு:
    அ) பெய்ஜிங்
     
    3. தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு
    அ) 1990
    ஆ) 1993
    ) 1978
    ) 1979
    விடைகுறிப்பு:
    ஆ) 1993
     
    4. ஐ.நா. சபை 1979ஆம் ஆண்டை_________சர்வதேச ஆண்டாக அறிவித்தது.
    அ)பெண் குழந்தைகள்
    ஆ) குழந்தைகள்
    இ)பெண்கள்
    ஈ) இவற்றில் எதுவுமில்லை
    விடைகுறிப்பு:
    ஆ) குழந்தைகள்
     
    5. உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?
    அ) டிசம்பர் 9
    ஆ) டிசம்பர் 10
    இ) டிசம்பர் 11
    ஈ) டிசம்பர் 12
    விடைகுறிப்பு:
    ஆ) டிசம்பர் 10
     
    6. மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என அழைக்கப்படுவது எது?
    அ) மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHRC)
    ஆ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)
    இ) மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC)
    ஈ) சர்வதேசப் பெண்கள் ஆண்டு
    விடைகுறிப்பு:
    அ) மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHRC)
     
    7. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர் யார்?
    அ) ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி
    ஆ) ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
    இ) குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஏதேனும் ஒருவர்
    ஈ) ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி
    விடைகுறிப்பு:
    ஆ) ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
     
    8. உலக மனித உரிமைகள் அறிவிப்பில் உள்ள சட்டப்பிரிவுகளின் எண்ணிக்கை யாவை?
    அ) 20
    ஆ) 30
    ) 40
    ) 50
    விடைகுறிப்பு:
    ஆ) 30
     
    9. தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரின் பதவிக் காலம் என்ன?
    அ)5 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை
    ஆ) 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
    இ) 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
    ஈ) 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை
    விடைகுறிப்பு:
    ஈ) 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை
     
    10. தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
    அ) புது டெல்லி
    ஆ) மும்பை
    இ) அகமதாபாத்
    ஈ) கொல்கத்தா
    விடைகுறிப்பு:
    அ) புது டெல்லி

    II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

    1. ஒவ்வொரு தனிமனிதனும் கண்ணியமான வாழ்க்கை வாழ உரிமை உண்டு.
    2. மனித உரிமைகள் என்பது அனைத்து மனிதர்களுக்குமான இயல்பான   உ ரிமைகள்.
    3. மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட 1997 ஆண்டு.
    4. இந்திய அரசியலமைப்பின் 24 வது சட்டப்பிரிவு குழந்தை தொழிலாளர் முறையை தடைசெய்கிறது.
    5. ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட ஆண்டு 1945.

    III. பொருத்துக. 

    1. எலினார் ரூஸ்வெல்ட்      -        மனித உரிமைகளுக்கான
    ஆணையம்
    2. சைரஸ் சிலிண்டர்           -        உலகின் முதல் மனித உரிமைகள்
    சாசனம்
    3. பெண்களை கேலி செய்வதற்கு        -   1997
    எதிரான சட்டம்
    4. குழந்தை உதவி மைய எண்    -        1098
    5. வாழ்வியல்உரிமைகள்             -        அடிமைத்தனத்திலிருந்து
    விடுதலை
    6. அரசியல் உரிமை                      -        வாக்களிக்கும் உரிமை

    IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.   

    1. மனித உரிமைகள் மற்றும் வாழ்வியல் உரிமைகள் ஒரே மாதிரியானவை.
    விடைகுறிப்பு:
    தவறு
     
    2. மனித மற்றும் குடிமகனின் உரிமைகள் அறிவிப்பு இந்தியாவில் அறிவிக்கப்பட்டது.
    விடைகுறிப்பு:
    தவறு
     
    3. 1993ஆம் ஆண்டு மனித உரிமைச் சட்டம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உருவாக வழிவகுத்தது.
    விடைகுறிப்பு:
    சரி
     
    4. பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது.
    விடைகுறிப்பு:
    சரி
     
    5. மனித உரிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேசிய, மாநில அளவிலான மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்டுள்ளது.
    விடைகுறிப்பு:
    சரி

    V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

    1. தவறான கூற்றை கண்டறியவும்
    அ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு சட்டரீதியான அமைப்பாகும்.
    ஆ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஓர் அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாகும்
    இ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பாகும்.
    ஈ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு பலதரப்பு நிறுவனங்களைக் கொண்டதாகும்.
    விடைகுறிப்பு:
    ஆ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஓர் அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாகும்
     
    2. தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறித்து பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல.
    அ) இது 1993 இல் நிறுவப்பட்டது.
    ஆ) மனித உரிமை மீறல் வழக்குகளில் குற்றவாளியை தண்டிக்க ஆணையத்திற்கு எந்த உரிமையும் இல்லை 6
    இ) இந்த ஆணையத்தின் தலைவரும் உறுப்பினர்களும் இந்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.
    ஈ) இந்த ஆணையம் தனது ஆண்டு அறிக்கையை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு அனுப்புகிறது.
    விடைகுறிப்பு:
    இ) இந்த ஆணையத்தின் தலைவரும் உறுப்பினர்களும் இந்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.
     
    3. கூற்று: டிசம்பர் 10ஆம் நாள் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
    காரணம்:இது எலினார் ரூஸ்வெல்டின் பிறந்த நாளை நினைவு கூர்கிறது.
    அ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
    ஆ) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
    இ) கூற்று காரணம் இரண்டும் சரி
    ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு
    விடைகுறிப்பு:
    அ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
     
    4. பின்வரும் கூற்றை ஆராய்க
    1) மாநில மனித உரிமைகள் ஆணையம் பல உறுப்பினர்களை கொண்ட அமைப்பு ஆகும்.
    2) மாநில மனித உரிமைகள் ஆணையம் ஒரு தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களைக் கொண்டதாகும்
    மேற்கூறிய கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை ?
    அ) 1 மட்டும்
    ஆ) 2 மட்டும்
    )1, 2
    ஈ) எதுவுமில்லை
    விடைகுறிப்பு:
    )1, 2

    VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி.

    1. மனித உரிமைகள் என்றால் என்ன?
    • மனித உரிமைகள் என்பது இனம், பாலினம், மொழி மற்றும் சமய வேறுபாடின்றி அனைத்து மனிதர்களுக்குமான இயல்பான உரிமைகள் ஆகும்.
     2. மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பின் முக்கியத்துவத்தை எழுதுக.
    • ஐ.நா. பொதுச்சபையால் 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள் அறிவிக்கப்பட்டது.
    • இது மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என்றும் அழைக்கப்படுகிறது.
     3. இந்திய அரசியலமைப்பின் 45 வது சட்டப்பிரிவு எதனை அறிவுறுத்துகிறது?
    • பிரிவு 45 -6 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்ப கால கல்வியை வழங்க அரசு முயல்கிறது.
     4. கல்வி உரிமைச் சட்டம் பற்றி எழுதுக.
    • சட்டப்பிரிவு 21A 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வியை அரசு வழங்குவதற்கு வழிவகைச் செய்கிறது.
     5. பெண்களின் நலனைப் பாதுகாப்பதற்காக நிறைவேற்றப்பட்ட மூன்று சட்டங்களைக் குறிப்பிடுக.
    • இந்து விதவை மறுமணச் சட்டம் 1856
    • இந்து திருமணச் சட்டம் 1955
    • வரதட்சணைத் தடைச் சட்டம் 1961
     6. அரசியல் உரிமைகள் சிலவற்றை குறிப்பிடுக.
    • வாக்களிக்கும் உரிமை, அரசாங்கத்தில் பங்குகொள்ளும் உரிமை, பேச்சுரிமை மற்றும் தகவல்களைப் பெறும் உரிமை.
     7. மனித உரிமைகளின் ஐந்து முதன்மைப் பிரிவுகளை குறிப்பிடுக.
    1.வாழ்வியல் உரிமைகள், 2.அரசியல் உரிமைகள்,
    3.பொருளாதார உரிமைகள்,
    4.சமூக உரிமைகள், 5.கலாச்சார உரிமைகள்.

    VII. விரிவான விடையளி.   

    1. மனித உரிமைகள் மற்றும் வாழ்வியல் உரிமைகளை வேறுபடுத்துக.

     
    மனித உரிமைகள்
    வாழ்வியல் உரிமைகள்
    1
    பாலினம் மற்றும் வயது மத .இன இட வேறுபாடின்றி அனைவருக்கும் உரித்தானது.
    குறிப்பிட்ட நாட்டில் குடியுரிமை பெறுவதன் மூலம் ஒருவர் அனுபவிக்கும் உரிமைகள் ஆகும்.
    2
    உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் மற்றும் நாடுகளுக்கும் உரியதாகும்.
    அந்தந்த நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களுக்குகேற்றவாறு வேறுபடும்.
    3
    எந்தவொரு தேசமும் தனிநபருக்கான மனித உரிமைகளை பறிக்க முடியாது.
    அந்தந்த நாடுகளின் சிவில் உரிமைகள் மூலம் சுதந்திரத்தை வழங்கவோ அல்லது மறுக்கவோ முடியும்.
    4
    பிறப்பின் அடிப்படையில் இயற்கையாக அமையப்பெற்ற அடிப்படை உரிமைகள்
    சமூகத்தால் உருவாக்கப்படுகின்றன.
     
      
    2. மனித உரிமைகளின் ஏதேனும் ஐந்து அடிப்படைப் பண்புகளை விவரி.
    1.இயல்பானவை :-
    அவை எந்தவொரு நபராலும் அதிகாரத்தாலும் வழங்கப்படுவதில்லை.
    2.அடிப்படையானவை :-
    இந்த அடிப்படை உரிமைகள் இல்லையென்றால் மனிதனின் வாழ்க்கையும், கண்ணியமும் அர்த்தமற்றதாகிவிடும்.
    3.மாற்ற முடியாதவை :-
    இவைகள் தனிநபரிடம் இருந்து பறிக்க முடியாதவைகள் ஆகும்.
    4.பிரிக்க முடியாதவை :-
    மற்ற உரிமைகளை ஏற்கனவே அனுபவித்துக் கொண்டிருந்தாலும் கூட இந்த அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது.
    5.உலகளாவியவை :-
    இந்த உலகளாவிய உரிமைகள் ஒருவரின் நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இந்த உரிமைகள் பொருந்தும்.
     
    3. குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அரசு மேற்கொண்டுள்ள சில நடவடிக்கைகள்யாவை?
    1. கல்வி உரிமைச் சட்டம்:-
    6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வியை வழங்குவதற்கு வழிவகை செய்கிறது.
    2. குழந்தை தொழிலாளர் சட்டம்:-
    வயது பூர்த்தியடையாத எந்தவொரு குழந்தையும் வேலைக்கு அமர்த்துவதை 15
    தடை செய்கிறது.
    3.சிறார் நீதிச்சட்டம்:2000 -
    போதுமான கவனிப்பு இல்லாத குழந்தைகளை அணுகி அவர்களை சீர்திருத்த முயற்சி செய்கிறது.
    4.போக்சோ சட்டம் )POCSO( 2012:-
    பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கிறது.




    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive