12th Economics - Book Back Answers - Unit 5 - Tamil Medium Guides

  

 


    Plus Two / 12th Economics - Book Back Answers - Unit 5 - Tamil Medium

    Tamil Nadu Board 12th Standard Economics - Unit 5 : Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 5 – Economics from the Tamil Nadu State Board 12th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Economics Unit 5 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 12 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 5:பணவியல் பொருளியல்


    I. சரியான விடையை தேர்வு செய்க.

    1. இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
    அ) டில்லி
    ஆ) சென்னை
    இ) மும்பை
    ஈ) பெங்களுரு
    விடைகுறிப்பு: 

    இ) மும்பை

    2. பணம் என்பது
    அ) உள்ளடக்க மதிப்பு இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படுவது
    ஆ) நிலையான வாங்கும் சக்தியை கொண்டது
    இ) உள்ளவற்றில் அதிக நீர்மைத்தன்மை கொண்ட சொத்து ஆகும்
    ஈ) வளங்களை பங்கிட்டுக்கொள்ள தேவைப்படுகிறது
    விடைகுறிப்பு: 

    இ) உள்ளவற்றில் அதிக நீர்மைத்தன்மை கொண்ட சொத்து ஆகும்

    3. காகிதப்பண முறையை மேலாண்மை செய்வது
    அ) மைய பணவியல் அமைப்பு
    ஆ) மாநில அரசு
    இ) மைய அரசு
    ஈ) வங்கிகள்
    விடைகுறிப்பு: 

    அ) மைய பணவியல் அமைப்பு

    4. M1 மற்றும் M2 ஆகிய இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்
    அ) அஞ்சலக அனைத்து வைப்புகள்
    ஆ) அஞ்சலக சேமிப்பு வங்கியின் சேமிப்பு வைப்புகள்
    இ) வங்கியின் கால வைப்புகள்
    ஈ) காகிதப்பணம்
    விடைகுறிப்பு:
     
    ஆ) அஞ்சலக சேமிப்பு வங்கியின் சேமிப்பு வைப்புகள்

    5. இர்விங் ஃபிஷரின் பண அளவுக் கோட்பாடு பிரபலமான ஆண்டு
    அ) 1908
    ஆ) 1910
    இ) 1911
    ஈ) 1914
    விடைகுறிப்பு: 

    இ) 1911

    6. MV என்பது
    அ) பணத்தேவை
    ஆ) சட்டப்படியான பண அளிப்பு
    இ) வங்கிப் பண அளிப்பு
    ஈ) மொத்த பண அளிப்பு
    விடைகுறிப்பு:

    ஆ) சட்டப்படியான பண அளிப்பு

    7. பணவீக்கம் என்பது
    அ) விலைகள் அதிகரிப்பு
    ஆ) விலைகள் குறைதல்
    இ) பணமதிப்பு அதிகரிப்பு
    ஈ) விலைகள் மாறாதிருத்தல்
    விடைகுறிப்பு:

    அ) விலைகள் அதிகரிப்பு

    8. ___________ பணவீக்கம் பணமதிப்பில் தீவிர மதிப்பு குறைவினை ஏற்படுத்துகிறது. 
    அ) தவழும்
     ஆ) நடக்கும்
    இ) ஒடும்
    ஈ) உயர்
    விடைகுறிப்பு:

    ஈ) உயர்

    9. கூலி மற்றம் மூலப்பொருட்கள் செலவு கூடுவதால் பொருட்களின் பொது விலைமட்டம் அதிகரிப்பது ___________ பணவீக்கம் ஆகும்
    அ) செலவு உந்து
    ஆ) தேவை இழுப்பு
    இ) ஒடும்
    ஈ) தாவும்
    விடைகுறிப்பு:

    அ) செலவு உந்து

    10. பணவீக்கத்தின் பொழுது பயனடைபவர்கள் யார்?
    அ) கடன் பெற்றோர்கள்
    ஆ) கடன் வழங்கியோர்
    இ) கூலி, சம்பளம் ஆகியன பெறுவோர்
    ஈ) அரசு
    விடைகுறிப்பு: 

    அ) கடன் பெற்றோர்கள்

    11. ____________ என்பது பணவீக்க விகிதம் குறைந்து செல்வது ஆகும்
    அ) எதிர் பணவீக்கம்
    ஆ) பணவாட்டம்
    இ) தேக்கவீக்கம்
    ஈ) மந்தம்
    விடைகுறிப்பு: 

    அ) எதிர் பணவீக்கம்

    12. தேக்க வீக்கத்தில் பணவீக்க விகிதத்துடன் இணைந்திருப்பது
    அ) தேக்கம்
    ஆ) வேலைவாய்ப்பு
    இ) உற்பத்தி
    ஈ) விலை
    விடைகுறிப்பு: 

    அ) தேக்கம்

    13. பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை____________ என்று அழைக்கின்றோம் .
    அ) பூரிப்பு
    ஆ) பின்னிறக்கம்
    இ) மீட்சி
    ஈ) வணிகச்சுழற்ச்சி
    விடைகுறிப்பு: 

    ஈ) வணிகச்சுழற்ச்சி

    14. மந்த காலத்தில் பொருளியல் நடவடிக்கைகள் இவ்வாறு இருக்கும்
    அ) உயர்ந்தபட்சமாக
    ஆ) மிக மோசமாக
    இ) மிக குறைந்த பட்சமாக
    ஈ) மிக நல்ல நிலையில்
    விடைகுறிப்பு: 

    இ) மிக குறைந்த பட்சமாக

    15. "பரிமாற்றங்களில் களில் பொதுவாக எற்றக்கொள்ளப்படும் ஒரு இடையீட்டுக் கருவியாகவும், அளவீடு மற்றும் மதிப்பினை இருப்பு வைத்தல் ஆகியவற்றினை செய்யும் ஒரு பொருள் பணம்" என்ற இலக்கணத்தை வழங்கியவர்
    அ) கிரௌத்தர்
    ஆ) பிகு
    இ) வாக்கர்
    ஈ) பிரான்சிஸ்டி பேக்கான்
    விடைகுறிப்பு:
     
    அ) கிரௌதர்

    16. பற்று அட்டை என்பது _________ உதாரணம் ஆகும்.
    அ) கட்டளைப் பண
    ஆ) காகிதப் பண
    இ) நெகிழிப் பண
    ஈ) கடன் பண
    விடைகுறிப்பு:

    இ) நெகிழிப் பண

    17. ஃபிஷரின் பண அளவுக் கோட்பாடு பணத்தின் இந்த பணியின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.
    அ) மதிப்பளவு
    ஆ) மதிப்பின் நிலைக்கலன்
    இ) பரிமாற்றக் கருவி
    ஈ) வருங்கால செலுத்துதல்களுக்கான அடிப்படை
    விடைகுறிப்பு: 

    இ) பரிமாற்றக் கருவி

    18. MV=PT என்ற சமன்பாட்டில், V என்பது
    அ) வணிகத்தின் அளவு
    ஆ) பணத்தின் சுழற்ச்சி வேகம்
    இ) ரொக்கப் பணத்தின் அளவு
    ஈ) வங்கி, கடன் பண அளவு
    விடைகுறிப்பு: 

    ஆ) பணத்தின் சுழற்ச்சி வேகம்

    19. விலைவாசி மெதுவாக உயரும் பொழுது ஏற்படுவது
    அ) தாவும் பணவீக்கம்
    ஆ) மிதமான பணவீக்கம்
    இ) உயர் பணவீக்கம்
    ஈ) பணவாட்டம்
    விடைகுறிப்பு:

    ஆ) மிதமான பணவீக்கம்

    20. ___________ பணவீக்கம் பொருளாதாரத்தினை எந்த வகையிலும் பாதிக்காது.
    அ) நடக்கும்
    ஆ) ஓடும்
    இ) தவழும்
    ஈ) தாவும்
    விடைகுறிப்பு:

    இ) தவழும்


    II. கீழ்க்காண்பவற்றுக்கு ஓரிரு சொற்களில் விடையளி

    21. பணத்தின் இலக்கணம் வரைக.
    விடைகுறிப்பு:

    • "பணம் எதைச் செய்கிறதோ, அதுதான் பணம்" - வாக்கர்.

    22. பண்டமாற்று என்றால் என்ன?
    விடைகுறிப்பு:

    • ஒரு பொருள் அல்லது பணியை கொடுத்து மற்றொரு பொருள் அல்லது பணியை பெற்றுக்கொள்ளும் பரிவர்த்தனையில் ஈடுபடுவது பண்டமாற்று எனப்படும்.

    23 . பண்டப் பணம் என்றால் என்ன?
    விடைகுறிப்பு:
    • பொது இடையீட்டுக் கருவிகளாக சில பண்டங்கள் பயன்படுத்தப்பட்டது. இதுவே பண்டப்பணம் ஆகும்.
    • (எ.கா)விலங்கின் தோல், உரோமம், உப்பு, அரிசி, கோதுமை, பாத்திரங்கள், ஆயுதங்கள்.

    24. பொன் திட்டம் என்றால் என்ன?
    விடைகுறிப்பு:

    • ஒரு பணத்தின் அலகு ஒரு குறிப்பிட்ட எடையிலான பொன் அளவினால் வரையறுக்கப்பட்டிருந்தது.
    • ஒரு பண அலகின் வாங்கும் திறன் அப்பொன் பணத்தின் எடை அளவுக்கு சமமாக நிர்வகிக்கப்பட்டு வந்தது.

    25. நெகிழிப் பணம் என்றால் என்ன? உதாரணம் தருக.
    விடைகுறிப்பு:

    • நெகிழிப் பணம் நடைமுறையில் உள்ள காகித பணத்திற்கு மாற்றாகும்.
    • நெகிழி அட்டையால் உருவாக்கப்பட்டிருப்பதால் இது நெகிழிப் பணம் என்றழைக்கப்படுகிறது.
    • எ.கா. ரொக்க அட்டை, கடன் அட்டை, பற்று அட்டை.

    26.பணவீக்கம் என்பதன் இலக்கணம் தருக
    விடைகுறிப்பு:
    • "குறைந்த அளவு பண்டங்களை அதிக அளவு பணம் துரத்தும் நிலை" கோல்பர்ன்

    27. தேக்கவீக்கம் என்றால் என்ன?
    விடைகுறிப்பு:

    • தேக்கவீக்கம் என்பது பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலையும், வேலைவாய்ப்பின்மையும், அதிக அளவிலான பணவீக்கமும் ஒன்றிணைந்த சூழ்நிலை ஆகும். 

    III. கீழ்வரும் வினாக்களுக்கு ஒரு பத்தி அளவில் பதில் தருக

    28. உலோகப் பணம் பற்றி ஒரு குறிப்பு வரைக.
    விடைகுறிப்பு:

    • உலோகத்திட்டத்தில் தங்கம், வெள்ளி போன்ற ஏதாவது ஒரு உலோகம் பணத்தின் திட்ட மதிப்பினை நிர்ணயிக்க பயன்படுத்தப்பட்டது.
    • இந்த நாணயங்கள் முழு மதிப்பு பணமாக அல்லது முழு நிறையுடைய சட்டமுறை பணமாக இருந்து வந்தன.
    • அந்நாணயங்களில் முக மதிப்பு மற்றும் உள்ளடக்க மதிப்பு ஆகிய இரண்டும் சமமாக இருந்தன.

    29. பண அளிப்பு என்றால் என்ன?
    விடைகுறிப்பு:

    • ஒரு பொருளாதாரத்தில் உள்ள மொத்தப் பண அளவே பண அளிப்பு ஆகும்.
    • ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாட்டில் புழக்கத்தில் உள்ள பண அளவைக் குறிப்பதே பண அளிப்பாகும்.

    30. பண அளிப்பினை தீர்மானிக்கும் காரணிகள் யாவை?
    விடைகுறிப்பு:
    • ரொக்க வைப்பு விகிதம்
    • ரொக்க இருப்பு வைப்பு விகிதம்
    • ரொக்க இருப்பு விகிதம்
    • சட்டப்பூர்வ நீர்மை விகிதம்

    31 பணவீக்கத்தின் வகைகள் பற்றி எழுதுக
    விடைகுறிப்பு:
    பணவீக்கத்தின வகைகள்:
    வேகத்தின் அடிப்படையில்:
    (1) தவழும் பணவீக்கம்
    (2) நடக்கும் பணவீக்கம்
    (3) ஓடும் பணவீக்கம்
    (4) தாவும் பணவீக்கம்

    தேவை இழுப்பு எதிர் செலவு உந்து பணவீக்கம்:
    (1) தேவை இழுப்பு பணவீக்கம்
    (2) செலவு உந்து பணவீக்கம்

    தூண்டும் அடிப்படையில்:
    (1) காகித பணவீக்கம்
    (2) கடன் பணவீக்கம்
    (3) வரவு செலவு பற்றாக்குறை தூண்டல்
    (4) இலாபத் தூண்டல் பணவீக்கம்
    (5) பொருள் பற்றாக்குறை தூண்டல்
    (6) வரி தூண்டல் பணவீக்கம்
     
    32. தேவை-இழுப்பு  மற்றும் செலவு உந்து பணளிக்கத்தினை விளக்குக.
    விடைகுறிப்பு:
    தேவை-இழுப்பு பணவீக்கம்:

    • அளிப்பு நிலையாக உள்ள நிலையில், பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும் பொழுது விலைவாசி உயருகின்றது. இது தேவை இழுப்பு பணவீக்கம் என்றழைக்கப்படுகிறது.
    செலவு உந்து பணவீக்கம்:
    • உற்பத்தியில் மூலப்பொருட்கள் மற்றும் இதர இடுபொருட்களுக்கான செலவு உயருகின்றபொழுது உற்பத்தி செலவு கூடி பொருட்களுக்கான விலை அதிகரிக்கின்றது. இவ்வகை பணவீக்கம் செலவு உந்து பணவீக்கம் எனப்படுகிறது.
    33. பண மதிப்பு பற்றிய கேம்பிரிட்ஜ் சமன்பாடுகளை விளக்குக.
    விடைகுறிப்பு:
    கேம்பிரிட்ஜ் அணுகுமுறை (ரொக்க இருப்பு அணுகுமுறை):
    (அ) மார்ஷலின் சமன்பாடு:
    •  மார்ஷலின் சமன்பாடு:M = KPY
    • மேற்கண்ட சமன்பாட்டினை மாற்றி எழுதும்பொழுது, P = MI/KY என்று பொதுவிலை மட்டத்தினை (P) காண உதவுகிறது.
    (ஆ) கீன்ஸின் சமன்பாடு: 
    • கீன்ஸின் சமன்பாடு:n = pk (or) p=n/k 
    • கீன்சின் விரிவான சமன்பாடு n =P(K+rK')
    • அல்லதுp=n/(k+rk')

    34. மீள்பணவீக்கம் பற்றி விளக்குக.
    விடைகுறிப்பு:
    • வேலைவாய்ப்பினை பாதிக்காத வகையில் கடன்களை கட்டுப்படுத்துவதன் மூலமும் பணவீக்கத்தினை குறைத்து வருவது மீள்பணவீக்கம் ஆகும்.
     

    IV. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடையளி

    35. இர்விங் ஃபிஷரின் பண அளவுக் கோட்பாட்டினை விளக்குக.
    விடைகுறிப்பு:
    • பண அளவுக் கோட்பாடுகள் பணத்தின் அளவிற்கும், பணத்தின் மதிப்பிற்கும் இடையேயான தொடர்பினை விளக்குகிறது.
    • ஃபிஷரின் பண அளவுக் கோட்பாட்டின் சமன்பாடு
    • MV = PT
    • M = மொத்த பண அளவு
    • V = 1 பணத்தின் சுழற்சி வேகம்
    • P = பொது விலைமட்டம்
    • T = வாணிபத்தின் அளவு
    • P = MV / T
    • ஃபிஷர் தனது சமன்பாட்டினை கீழ்கண்டவாறு விரிவாக்கினார்.
     PT=MV+M1V1 அதாவது P=MV+M1V1T


    36. பணத்தின் பணிகளை விளக்குக
    விடைகுறிப்பு:
    பணத்தின் பணிகள்:
    • முதன்மைப் பணிகள்
    • இரண்டாம் பணிகள்
    • துணைப் பணிகள்
    • இதரப் பணிகள்
    முதன்மைப் பணிகள்:
    (1) இடையீட்டுக் கருவி
    (2) மதிப்பின் அளவுகோல்
    இரண்டாம் பணிகள்:
    (1) மதிப்பின் நிலைகலன்
    (2) வருங்காலசெலுத்துகைக்கான ஒரு அடிப்படை
    (3) வாங்கும் திறனை மாற்றிக்கொள்ளும் ஒரு கருவி   
    துணைப் பணிகள்:
    (1) கடனுக்கான அடிப்படை
    (2) தேசிய வருவாய் பங்கீட்டிற்கு உதவுகிறது
    (3) இறுதிநிலை பயன்பாடுகளை ஒப்பிடவும், இறுதிநிலை உற்பத்தி திறன்களை ஒப்பிடவும் பயன்படுகிறது.
    (4) மூலதனத்துடன் உற்பத்தித் திறனை உயர்த்துகிறது. 
    இதரப் பணிகள்:
    (1) திரும்பச் செலுத்தும் திறனை தக்கவைக்க உதவுகிறது
    (2) பொதுமைப்படுத்தப்பட்ட வாங்கும் திறனை குறிக்கிறது.
    (3) மூலதனத்திற்கு நீர்மைத் தன்மையை தருகிறது.  
     
     37. ஒரு பொருளாதாரத்தில் பணவீக்கத்திற்கான காரணங்கள் மற்றும் விளைவுகள் யாவை?
    விடைகுறிப்பு:
    பண வீக்கத்திற்கான காரணங்கள்:
    (1) பண அளிப்பு உயர்வு
    (2) செலவிடத்தகுந்த வருவாயில் உயர்வு
    (3) உயர்ந்து வரும் பொதுச் செலவுகள்
    (4) நுகர்வோர் வார் செலவு அதிகரித்தல்
    (5) மலிவு பணக் கொள்கை
    (6) பற்றாக்குறை நிதியாக்கம்
    (7) கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள், நடவடிக்கைகள் மற்றும் கருப்பு பணம்
    (8) பொதுக்கடவை மீளச் செலுத்துதல்
    (9) ஏற்றுமதி உயர்வு

    பணவீக்கத்தின் விளைவுகள்:

    பணவீக்கத்தின் விளைவுகள் இரண்டு வகைப்படும்.
    (1) உற்பத்தியின் மீதான விளைவு
    (2) பகிர்வின் மீதான விளைவு

    38. வணிகச் சுழற்ச்சியின் பல்வேறு கட்டங்களை விவரிக்க,
    விடைகுறிப்பு:
    வணிகச் சுழற்சியில் நான்கு கட்டங்கள்:
    (1) பூரிப்பு
    (2) பின்னிறக்கம்
    (3) மந்தம்
    (4) மீட்சி 
    (1) பூரிப்பு கட்டம்:
    • பூரிப்பு நிலையில் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் உச்சநிலையில் இருக்கும்.
    (2)பின்னிறக்கம்:
    • பூரிப்பில் வெடிப்பு நிலை ஏற்பட்டு நடவடிக்கைகள் பின்னோக்கி திரும்புவதை பின்னிறக்கம் என்கிறோம்.
    (3)மந்தம்:
    • பொருளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குகீழ் மிகத்தீவிரமாக குறைந்து வரும். 
    (4) மீட்சி:
    • மந்தத்திலிருந்து பொருளாதார நடவடிக்கைகள் மேல்நோக்கி திரும்பும் நிகழ்வாகும்.
     
     
     
     
     
     
     
     
     
     





    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive