Tamil Nadu Board 7th Standard Tamil - Unit 3.4: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 3.4 – from the Tamil Nadu State Board 7th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Unit 3.4 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 7 students! Prepare well and aim for top scores. Thank you!
இயல் 3.4 ஒரேழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்
I. கற்பவை கற்றபின்
1. பாடப்பகுதியில் இடம்பெற்ற சொற்களில் பகுபதம், பகாப்பதம் ஆகியவற்றைக் கண்டறிந்து தனித்தனியே தொகுக்க.விடைகுறிப்பு:
பகுபதம்:
பெயர்ப்பகுபதம் :
பொருள் – பொன்னன் (பொன் + அன்)
இடம் – நாடன் (நாடு + அன்)
காலம் – சித்திரையான் (சித்திரை + ஆன்)
சினை – கண்ண ன் (கண் + அன் )
பண்பு – இனியன் (இனிமை + அன்)
தொழில் – உழவன் (உழவு + அன்)
வினைப்பகுபதம் : உண்கின்றான் – உண் + கின்று + ஆன்
பகாப்பதம் :
பெயர்ப் பகாப்பதம் – நிலம், நீர், நெருப்பு, காற்று
வினைப் பகாப்பதம் – நட, வா, படி, வாழ்.
இடைப் பகாப்பதம் – மன், கொல், தில், போல்
உரிப் பகாப்பதம் – உறு, தவ, நனி, கழி.
2. உங்கள் வகுப்பு மாணவ – மாணவிகளின் பெயர்களைப் பகுபதம், பகாப்பதம் என வகைப்படுத்துக.
விடைகுறிப்பு:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.
II. மதிப்பீடு
சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக
ஆ)42
2. எழுதினான் என்பது ___________.
ஆ) வினைப்பகுபதம்
3. பெயர்பகுபதம் ___________ வகைப்படும்.
இ)ஆறு
4. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு ______________.
இ)இடைநிலை
பொருத்துக.
1.
|
பெயர்ப்பகுபதம்
|
வாழ்ந்தான்
|
2.
|
வினைப்பகுபதம்
|
மன்
|
3.
|
இடைப்பகாப் பதம்
|
நனி
|
4.
|
உரிப்பகாப்பதம்
|
பெரியார்
|
1.
|
பெயர்ப்பகுபதம்
|
பெரியார்
|
2.
|
வினைப்பகுபதம்
|
வாழ்ந்தான்
|
3.
|
இடைப்பகாப் பதம்
|
மன்
|
4.
|
உரிப்பகாப்பதம்
|
நனி
|
சரியான பகுபத உறுப்பை எழுதுக
1. போவாள் – போ + வ் + ஆள்போ – பகுதி
வ் – எதிர்கால இடைநிலை
ஆள் – படர்க்கைப் பெண்பால் வினைமுற்று விகுதி
2. நடக்கின்றான் – நட + க் + கின்று + ஆன்
நட – பகுதி
க் – சந்தி
கின்று – நிகழ்கால இடைநிலை
ஆன் – படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி
பின்வரும் சொற்களைப் பிரித்துப் பகுபத உறுப்புகளை எழுதுக
1. பார்த்தான் – பார் + த் + த் + ஆன்பார் – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
ஆன்- படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி
2. பாடுவார் – பாடு + வ் + ஆர்
பாடு – பகுதி
வ் – எதிர்கால இடைநிலை
ஆர் – படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி
குறுவினா
விடைகுறிப்பு:
ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக வருவது ஓரெழுத்து ஒருமொழி ஆகும்.
2.பதத்தின் இருவகைகள் யாவை?
விடைகுறிப்பு:
பகுபதம்,
பகாப்பதம்
3. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?அவை யாவை?
விடைகுறிப்பு:
பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும். அவை
பகுதி,
விகுதி,
இடைநிலை,
சந்தி,
சாரியை,
விகாரம்
4. விகுதி எவற்றைக் காட்டும்?
விடைகுறிப்பு:
திணை,
பால்,
எண்,
இடம்
5. பெயர்ப்பகுபதம் எத்தனை வகைப்படும்?அவை யாவை?
விடைகுறிப்பு:
ஆறு வகைப்படும்:
பொருள்,
இடம்,
காலம்,
சினை,
பண்பு,
தொழில்
III மொழியை ஆள்வோம்
கேட்க.
1. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பேச்சின் ஒலிப்பதிவைக் கேட்டு மகிழ்க.விடைகுறிப்பு:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.
கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடம் பேசுக
1. தேசியம் காத்த செம்மல்விடைகுறிப்பு:
முன்னுரை :
தேசியம் காத்த செம்மல், வேதாந்த பாஸ்கர், பிரணவகேசரி, சன்மார்க்க சண்டமாருதம், இந்து புத்த சமய மேதை எனப் பலவாறு பாராட்டப்பட்டவர் முத்துராமலிங்கத் தேவர்.
பிறப்பு மற்றும் பெற்றோர் :
உக்கிரபாண்டித் தேவருக்கும், இந்திராணி அம்மையாருக்கும் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் நாள் பசும்பொன் என்ற ஊரில் இவர் பிறந்தார். பிள்ளைப் பருவத்திலேயே தாயை இழந்ததால் இவருக்கு இஸ்லாமியப் பெண்மணி ஒருவர் தாயாகப் பாலூட்டி வளர்த்தார். பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்தவர்.
கல்வி :
தேவர், இராமநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்தார். அங்கு பிளேக் நோய் பரவியதால் கல்வி தடைப்பட்டது. எனினும் கேள்வி அறிவும் பட்டறிவும் பெற்று, ஆங்கிலத்திலும் தமிழிலும் மேடைகளில் பேசும் வல்லமை பெற்றார். எடுத்துக்காட்டாக, ஒருமுறை காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் அவர் ஆங்கிலத்தில் உரையாற்றியதைக் குறிப்பிடலாம். அனைவரும் அவருடைய பேச்சில் மயங்கினர். அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய சர்.சி.பி. இராமசாமி ஆங்கிலம் உலகை ஆள்கிறது. நம் தேவர் மூன்று மணிநேரம் ஆங்கிலத்தை அடக்கி ஆண்டார்’ என்று பாராட்டினார்.
அரசியல் :
அரசியல் வாழ்வில் தேவர், மேன்மை பெற்று விளங்கினார். தமிழக்கத்தில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து ஐந்து முறை வெற்ற வெற்றிகள் மக்களிடம் அவருக்கிருந்த செல்வாக்கைக் காட்டின. அவர் எப்போதும் ஓட்டு கேட்பதற்காகத் தொகுதிகளுக்குச் சென்றதில்லை. தொண்டு செய்வதற்காக மட்டுமே செல்வார்.
தேவர் வாழ்ந்த விதம் :
தேவர் விவேகானந்தரின் தூதராவும், நேதாஜியின் தளபதியாகவும், சத்திய சீலராகவும், முருக பக்தராகவும், ஆன்மீகப் புத்திரராகவும், தமிழ் பாடும் சித்தராகவும், தென்பாண்டிச் சீமையின் முடிசூடா மன்னராகவும், புலமையில் கபிலராகவும், இந்தியத் தாயின் நன்மகனாகவும் தேசியம் காத்த செம்மலாக வாழ்ந்தார்.
மனித குலத்தின் வழிகாட்டி :
மனித மனநிலையை இருள், மருள், தெருள், அருள் எனக் குறிப்பிட்டார். இறப்பு என்பது எல்லா வகைகளிலும் வரலாம். அதாவது, பனை மரத்திலிருந்து விழுந்தவன் பிழைத்ததும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்தவன் இறந்ததும் உண்டு என்று கூறுவார். இவ்வகையில் சமயம், சமுதாயம் குறித்த இவருடைய சிந்தனைகள், மனித குலத்திற்கு வழிகாட்டுவனவாயின.
முடிவுரை :
தெய்வத் திருமகனார் தேவர் அவர்கள் தம் பேச்சாற்றலால் இலக்கியப் பணி, சமுதாயப் பணி, அரசியல் பணி என அனைத்தையும் ஒரு சேரச் செய்தவர். 1963 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் இவ்வுலகை விட்டு இவருடைய இன்னுயிர் பிரிந்தது. அவருடைய பொன்னுடல் மறைந்தாலும் புகழுடல் மறையவில்லை.
2. கப்பலோட்டிய தமிழர்
விடைகுறிப்பு:
முன்னுரை:
‘சிதம்பரனாரின் பிரசங்கத்தைக் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும், புரட்சி ஓங்கும் அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்’ என்ற கூற்றின் படி பேச்சாற்றல் மிக்க வ. உ. சிதம்பரனாரின் வாழ்வியல் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இளமை காலம்:
சிதம்பரனார் 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் வண்டானம் ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் பிறந்தார். பெற்றோர் உலகநாத பிள்ளை , பரமாயி அம்மாள் ஆவர்.
கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் தன் தந்தையைப் போன்று வழக்கறிஞரானார். வ.உ.சி. ஏழைகளுக்காக வாதாடினார். சில சமயங்களில் கட்டணம் பெறாமலும் வாதாடினார். சிறந்த வழக்கறிஞர் என்று போற்றப்பட்டார்.
வெள்ளையர்களின் வீழ்ச்சி:
சுதேசக் கப்பலின் வருகையால் வெள்ளையர்களின் கப்பல் வாணிகம் தளர்ந்தது. வெள்ளையர்கள் பல சூழ்ச்சிகளைச் செய்தனர். வ.உ.சிதம்பரனாருக்குக் கையடக்கம் தருவதாகவும் கூறினர். பலரைப் பயமுறுத்தினர். இறுதியில் அடக்குமுறையைக் கையாண்டனர்.
சிறையில் தமிழ்ப்பணி:
சிறைச்சாலையில் செக்கிழுத்த துயரத்தையும், கடும் பணிபுரிந்தபோது வந்த கண்ணீரையும் தமிழ் நூல்களைப் படித்து மாற்றிக்கொண்டார். தொல்காப்பியம், இன்னிலை ஆகிய நூல்களைப் படித்தார். ஆலன் என்பவர் இயற்றிய ஆங்கில மொழி நூலை மனம் போல் வாழ்வு’ என்று தமிழில் மொழிபெயர்த்தார். மெய்யறிவு, மெய்யறம் என்ற நூல்களை இயற்றினார்.
முடிவுரை:
வ.உ.சிதம்பரனார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் துறைமுகத்தை வந்து பார்த்தார். சுதேசக் கப்பலைக் காணாமல் துயருற்றார். பட்ட பாடெல்லாம் பயனற்றுப் போயிற்றே என்று பரிதவித்தார். விடுதலைக்காகப் போராடி நாட்டு மக்களின் துயர் துடைத்த வ.உ.சி. அவர்கள் 1936 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாள் இயற்கை எய்தினார்.
ஒரு தொடரில் மூன்று பகுதிகள் இடம்பெறும்.
அவை 1. எழுவாய், 2. பயனிலை, 3. செயப்படுபொருள்.
ஒரு தொடரில் யார்? எது? எவை? என்னும் வினாக்களுக்கு விடையாக அமைவது எழுவாய்.
எடுத்துக்காட்டு:
நீலன் பாடத்தைப் படித்தான்.
பாரி யார்?
புலி ஒரு விலங்கு. இத்தொடர்களில் நீலன், பாரி, புலி ஆகியன எழுவாய்கள்.
ஒரு தொடரை வினை, வினா, பெயர் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடித்து வைப்பது பயனிலை.
எடுத்துக்காட்டு:
கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.
கரிகாலன் யார்?
கரிகாலன் ஒரு மன்ன ன்.
இத்தொடர்களில் கட்டினான், யார், மன்னன் ஆகியன பயனிலைகள்.
யாரை, எதை, எவற்றை என்னும் வினாக்களுக்கு விடையாக வருவது செயப்படுபொருள்.
எடுத்துக்காட்டு :
நான் கவிதையைப் படித்தேன்.
என் புத்தகத்தை எடுத்தது யார்?
நெல்லிக்கனியைத் தந்தவர் அதியமான்.
இத்தொடர்களில் கவிதை, புத்தகம், நெல்லிக்கனி ஆகியன செயப்படுபொருள்கள்.
பின்வரும் தொடர்களை எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எனப் பிரிக்க
2. பொதுமக்கள் அந்நியத்துணிகளைத் தீயிட்டு எரித்தனர்.
3. கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீன்கொடி பறந்தது.
4. திருக்குறளை எழுதியவர் யார்?
5. கபிலர் குறிஞ்சிப்பாட்டை எழுதிய புலவர்.
|
எழுவாய்
|
பயனிலை
|
செயப்படு பொருள்
|
1
|
வீரர்கள்
|
காத்தனர்
|
நாட்டை
|
2
|
பொது மக்கள்
|
தீயிட்டு எரித்தனர்
|
அந்நியத் துணிகளை
|
3
|
பாண்டியன்
|
மீன்கொடி பறந்தது
|
கொற்கைத் துறைமுகத்திலே
|
4
|
யார்
|
எழுதியவர்
|
திருக்குறள்
|
5
|
கபிலர்
|
எழுதிய புலவர்
|
குறிஞ்சிப்பாட்டை
|
கட்டுரை எழுதுக
1. நான் விரும்பும் தலைவர் - பெரியார்முன்னுரை:
பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர் பெரியாரே! நான் விரும்பும் தலைவர் ஆவார்.
பெரியார் வாழ்வு:
ஈரோடு நகரில் பெரியார் பிறந்தார்.தொடக்கக் கல்வியுடன் தம் படிப்பை நிறுத்திக் கொண்டார்..
கேரளத்தில் வைக்கம் ஊரில் தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார். அதனால் வைக்கம் வீரர் என்று
அழைக்கப்பட்டார்.
பெரியார் சுயமரியாதைஇயக்கம்தொடங்கினார். இந்த இயக்கத்தின் வாயிலாக சாதி ஏற்றத் தாழ்வு போக்குதல், தீண்டாமை ஒழித்தல், மூடநம்பிக்கை ஒழித்தல் ஆகியவற்றைச் செய்தார்.பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார்.
கவரக் காரணம்:
எளிமையான வாழ்வு .சுயமரியாதை பெண்ணுரிமை பேசுதல்-ஆகிய காரணங்களால் பெரியாரை விரும்புகின்றேன்.
முடிவுரை:
பெரியாரைப் போற்றுவோம்.அவரின் வழி நடப்போம்.
IV மொழியோடு விளையாடு
இடைச்சொல் 'ஐ' சேர்த்துத் தொடரை மீண்டும் எழுதுக.
(எ.கா) வீடு கட்டினான் - வீடு + ஐ + கட்டினான் = வீட்டைக் கட்டினான்1. கடல் பார்த்தாள்
2. புல் தின்றது
3. கதவு தட்டும் ஓசை
4. பாடல் பாடினாள்
5. அறம் கூறினார்
கண்
|
அழகு உண்டு
|
கண்ணழகு
|
கண்ணுண்டு
|
மண்
|
|
|
|
விண்
|
|
|
|
பண்
|
|
|
கண்
|
அழகு
உண்டு
|
கண்ணழகு
|
கண்ணுண்டு
|
மண்
|
மண்ணழகு
|
மண்ணுண்டு
|
|
விண்
|
விண்ணழகு
|
விண்ணுண்டு
|
|
பண்
|
பண்ணழகு
|
பண்ணுண்டு
|
அகம் என முடியும் சொற்களை எழுதுக
விடைகுறிப்பு:
1. உணவகம்
2. காப்பகம்
3. மருந்தகம்
4. இனிப்பகம்
5. அடுக்ககம்
கோடிட்ட இடங்களைத் தமிழ் எண் கொண்டு நிரப்புக
(எ.கா) திருக்குறள் ங பால்களைக் கொண்டது2. நான் படிக்கும் வகுப்பு எ
3. தமிழ் இலக்கணம் ரு வகைப்படும்.
4. திருக்குறளில் கந அதிகாரங்கள் உள்ளன.
5. இந்தியா க கூ ச எ ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.
குறிப்புகளைக் கொண்டு தலைவர்களின் பெயர்களைக் கட்டங்களிலிருந்து கண்டுபிடித்து எழுதுக.

2. வீரமங்கை
3. பாஞ்சாலங்குறிச்சி வீரன்
4. வெள்ளையரை எதிர்த்த தீரன்
5. கொடிகாத்தவர்
6. எளிமையின் இலக்கணம்
7. தில்லையாடியின் பெருமை
8. கப்பலோட்டிய தமிழர்
9. பாட்டுக்கொரு புலவன்
10. விருதுப்பட்டி வீரர்
11. கள்ளுக்கடை மறியல் பெண்மணி
12. மணியாட்சியின் தியாகி
2. வீரமங்கை – வேலுநாச்சியார்
3. பாஞ்சாலங்குறிச்சி வீரன் – கட்டபொம்மன்
4. வெள்ளையரை எதிர்த்த தீரன் – சின்னமலை
5. கொடி காத்தவர் – திருப்பூர் குமரன்
6. எளிமையின் இலக்கணம் – காமராசர்
7. தில்லையாடியின் பெருமை – வள்ளியம்மை
8. கப்பலோட்டிய தமிழர் – சிதம்பரனார்
9. பாட்டுக்கொரு புலவன் - பாரதியார்
10. விருதுப்பட்டி வீரர் – காமராசர்
11. கள்ளுக்கடை மறியல் பெண்மணி – நாகம்மை
12. மணியாட்சியின் தியாகி – வாஞ்சிநாதன்
V நிற்க அதற்குத் தக
கலைச்சொற்கள்
2. பேச்சாற்றல் - Elocution
3. துணிவு - Courage
4. ஒற்றுமை - Unity
5. தியாகம் - Sacrifice
6.முழக்கம் - Slogan
7. அரசியல் மேதை - Political Genius
8. சமத்துவம் - Equality
0 Comments:
Post a Comment