Tamil Nadu Board 11th Standard Tamil - Unit 2: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 2 – from the Tamil Nadu State Board 11th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Unit 2 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 11 students! Prepare well and aim for top scores. Thank you!
இயல் 2
I. நம்மை அளப்போம்
அ) பலவுள் தெரிக.
அ) ஒற்றை வைக்கோல் புரட்சி மரபுக் கவிதை
ஆ) மனோன்மணீயம் - சிறுகதை
இ) யானை டாக்டர் - குறும்புதினம்
ஈ) ஐங்குறுநூறு - புதுக்கவிதை
விடைகுறிப்பு:
இ) யானை டாக்டர் - குறும்புதினம்
2. மண்ணுக்கு வளம் சேர்ப்பன
அ) மண்புழு
ஆ) ஊடுபயிர்
இ) இயற்கை உரங்கள்
ஈ) இவை மூன்றும்
விடைகுறிப்பு:
ஈ) இவை மூன்றும்
3.'போது' என்ற சொல் உணர்த்தும் பொருள்
அ) போதும்
ஆ) காடு
இ) மொட்டு
ஈ) மேகம்
விடைகுறிப்பு:
இ) மொட்டு
4. கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை
அ) மதிப்புக் கூட்டுப் பொருள்கள்
ஆ) நேரடிப்பொருள்கள்
i) அ - மட்டும் சரி
ii) ஆ - மட்டும் சரி
iii) இரண்டும் சரி
iv) அ-தவறு, ஆ-சரி
விடைகுறிப்பு:
i) அ மட்டும் சரி
5. பிழையான தொடரைக் கண்டறிக.
அ) பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றைத் தயாரிக்கின்றனர்.
ஆ) ஏதிலிக்குருவிகள் என்பது வாழ்வதற்கான சூழல் கிடைக்காத குருவிகளாகும்.
இ) குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநூறு நூல்களுள் உடையது.
ஈ) யானைகளால் வெகுதொலைவில் உள்ள நீரினை, வாசனைமூலம் அறியமுடியும்.
விடைகுறிப்பு:
இ) குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநூறு நூல்களுள் உடையது.
ஆ) குறு வினா
1. தமிழ்நாட்டின் மாநில மரம் - சிறு குறிப்பு வரைக.விடைகுறிப்பு:
- தமிழ்நாட்டின் மாநில மரம் பனைமரம். பனைமரம் நுங்கு, பதநீர் மட்டுமன்றிக் கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்ற மதிப்புக் கூட்டுப் பொருள்களையும் வழங்குகிறது.
- சிறந்த காற்றுத் தடுப்பான். நிலத்தடி நீர்மட்டம் குறையாது சேமித்து வைக்கும் தன்மையுடையது.
2. “உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்து நீ ” தொடரின் பொருள் யாது ?
விடைகுறிப்பு:
- “உழைப்பில் சிறந்த உழைப்பு உழவுத்தொழில் செய்வதாகும். அத்தகைய சிறந்த உழவுத் தொழிலைச் செய்யும் உழவர்களுக்கு எல்லாம் நீயே விரும்பிப் போற்றத்தக்க அரசனாவாய்” என்பது பொருள். உன்னை 'உழவனின் நண்பன்' என்றுதானே சொல்வார்கள்.
3. ஐங்குறுநூறு - குறிப்பு வரைக.
விடைகுறிப்பு:
- ஐந்து + குறுமை + நூறு - ஐங்குறுநூறு. மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல்.
- திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக, ஐந்து திணைகளுக்கும் ஐந்நூறு பாடல்களைக் கொண்டது.
4. அலர்ந்து - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
விடைகுறிப்பு:
- அலர்ந்து - அலர் + த் (ந்) + த் + உ
- அலர் - பகுதி
- த் - சந்தி, 'ந்' ஆனது விகாரம்
- த் - இறந்தகால இடைநிலை
- வினையெச்ச விகுதி.
5. ஐந்து வேளாண்மை மந்திரங்கள் எவை?
விடைகுறிப்பு:
- உழப்படாத நிலம்,
- வேதியியல் உரம் இல்லா உற்பத்தி.
- பூச்சிக்கொல்லி தெளிக்கப்படாத பயிர்ப் பாதுகாப்பு,
- தண்ணீர் நிறுத்தாத நெல் சாகுபடி.
- ஒட்டுவிதை இல்லாமல் உயர் விளைச்சல்.
இ) சிறு வினா
விடைகுறிப்பு:
- வேதிக்கலப்பில்லாத பூச்சிக்கொல்லி தயாரிப்பதும் பயன்படுத்துவதும் நடைமுறைக்குச் சாத்தியமே. ஏனென்றால், அதைத் தயாரிக்கப் பயன்படும் பொருள் இயற்கையில் கிடைப்பவை.
- அவை மண் வளத்திற்குப் பாதகம் ஏற்படுத்துவதில்லை. விவசாயத்திற்கு உதவிபுரியும் மண்புழு முதலான உயிர்கள் அழிவது முற்றிலும் தடுக்கப்படுகிறது. மண்ணில் நுண்ணுயிர்ப் பெருக்கம் தடைப்படுவதில்லை.
- வேப்பங்கொட்டை, நொச்சி இலை, புங்கன், பிரண்டை, கற்றாழை இவையனைத்தையும் இடித்துக் கோமியத்தில் ஊற வைத்துத் தெளித்தால் பூச்சிகள் போகும்; மண்வளம் காக்கப்படும்.
2. குறித்த காலத்திற்கு முன்பாக ஊர் திரும்பிய தலைவன் கூறுவனவற்றை ஐங்குறுநூறு கொண்டு விளக்குக.
விடைகுறிப்பு:
- இல்லறம் சிறக்கப் பொருள்தேடச் சென்ற தலைவன், கார்காலத்தில் திரும்புவதாகக் கூறிச் சென்றான். ஆனால், தன் முயற்சி விரைவில் நிறைவேறியதனால், தான் முன்னரே திரும்பி வந்துள்ளதைத் தலைவிக்கு உணர்த்த நினைக்கிறான்.
- ஆகவே, “பெரிய அழகிய கண்களையுடையவளே! இம்மாலை நேரத்தில் காயா, கொன்றை, நெய்தல், முல்லை, பிடவம் முதலிய மலர்கள் மலர்ந்துள்ளன.
- அவற்றை எல்லாம் கண்டு மகிழ்ந்து ஆடுவோம். விரைவாக வா" என்று கூறி அழைத்துத் தன் வரவை ‘ஐங்குறுநூற்றுத் தலைவன்' உணர்த்தினான்.
3. "இவ்வயின் யாமெலாம் செவ்விதில் துன்னில் தழைப்பதற்கு இடமில்லை” பொருள் விளக்குக. இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
விடைகுறிப்பு:
இடம்:மனோன்மணீயத்தில் நடராசன் தனிமொழியில் புல்லின் சிறப்பைப் பாராட்டி உரைக்குமிடத்தில் கூறியது.
பொருள்:"இவ்விடத்திலே நாம் எல்லாரும் சேர்ந்திருந்தால், நம் வாழ்வுக்குச் சிறப்பான இடமாக அமையாது" என்பது பொருள்.
விளக்கம்:புல்லின் சிறப்புகளைப் பாராட்டிக் கூறும்போது நடராசன், புல் தன் இனத்தைக் காக்க எவ்வாறு செயல்படுகிறது என்பதனை விளக்கும்போது, தன் இனத்தைப் பரப்ப, தன் விதைகளுக்குச் சிறு துரட்டி கொடுத்து மாடு, ஆடுகளின் உடல்மேல் ஒட்டி வேறு இடத்தில் சென்று வாழச் சொல்லும்போது “நாம் எல்லாரும் இங்கே ஓரிடத்திலேயே வாழ நினைத்தால் அது பிழையாகிவிடும். எனவே, தனித்தனியே தழைத்து வளரச் செல்லுங்கள்" எனக் கூறுவதாகக் கூறுகிறான்.
4. ஐங்குறுநூற்றுப் பாடல் சுட்டும் திணை, முதற்பொருள், கருப்பொருள்களை அட்டவணைப் படுத்துக.
விடைகுறிப்பு:
திணை: முல்லை
முதற்பொருள்: நிலம் காடும் காடு சார்ந்த பகுதியும்
பொழுது: சிறுபொழுது -மாலை; பெரும்பொழுது - கார்காலம்
கருப்பொருள்: கார்காலத்தில் முல்லை நிலத்தில் மலரும் மலர்கள் காயா, கொன்றை, நெய்தல், முல்லை, தளவம், பிடவம் முதலியன பட்டியலிடப்பட்டுள்ளன.
ஈ) நெடு வினா
1. 'சுற்றுச்சூழலை வளப்படுத்துவது இயற்கை வேளாண்மை' என்னும் தலைப்பில் மேடைப்பேச்சிற்கான உரையை உருவாக்குக.விடைகுறிப்பு:
எல்லாருக்கும் வணக்கம்!
நாகரிகத்தின் பெயரால் இயற்கையின் வளங்களை மக்கள் மெல்ல மெல்லப் பாழ்ப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையை மாற்ற, மக்களிடம் ஆழ்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் என் உரையைத் தொடக்குகிறேன்.
இயற்கை வேளாண்மை :
விதைப்பதில் தொடங்கி அறுவடைவரை எவ்வித வேதிப்பொருள் கலப்பையும் பயன்படுத்தாமல் இயற்கை உரம், இயற்கைப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதற்குத்தான் இயற்கை வேளாண்மை என்று பெயர். இயற்கை விவசாயம் செய்வதனால் அனைத்து வளங்களையும் ஒருங்கிணைத்து மண்வளத்தையும், சுற்றுச்சூழலையும், பாதுகாப்பதோடு, அதிக விளைச்சலையும் பெறலாம்.
தொழுஉரம் :
மாட்டுச் சாணம், கோமியம், வைக்கோல், காய்ந்த இலைச்சருகு, சாம்பல் ஆகியவற்றைக் கொண்டு தொழுஉரம் தயார் செய்து பயன்படுத்தலாம்.
இயற்கைப் பூச்சிக்கொல்லி :
வேதிப் பூச்சிக்கொல்லிகள் உண்மையில் பூச்சிகளை மட்டும் கொல்வதில்லை; மக்களையும் சிறுகச் சிறுகக் கொல்கிறது. இயற்கையில் கிடைக்கும் கசப்புத் தன்மை கொண்ட பொருட்களைப் பயன்படுத்திப் பூச்சிகளை விரட்டியடிக்கலாம்.
ஒற்றை வைக்கோல் புரட்சி :
இயற்கை வேளாண்மை பற்றிப் பேசும் இந்நேரத்தில், இயற்கை வேளாண்மையின் தந்தை மசானபு ஃபுகோகாவைக் கட்டாயம் நினைவுகூர வேண்டும்.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மசானபு ஃபுகோகா, 'ஒற்றை வைக்கோல் புரட்சி' என்னும் நூலின் மூலம், இயற்கை வேளாண்மையின் இன்றியமையாமையைப் பற்றி எடுத்தியம்புகிறார்.
உணவே நஞ்சு :
வேதி உரம், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தியதால் உயிர் வாழ்க்கைக்குப் பயன்பட வேண்டிய உணவே நஞ்சாகிவிட்டது. மண்ணின் வளமும் குறைந்து விட்டது. இன்று மக்களிடையே இயற்கை முறையில் உருவான காய்கறிகளும், தானியங்களும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
பாரம்பரிய விவசாயம் :
பாரம்பரிய முறை இயற்கை விவசாயம் செய்வதனால் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, குடிபெயர்தல் முதலானவை தடுக்கப்படும்.
இயற்கை வேளாண்மை செய்யும்போது விவசாயிக்குத் தன் நிலத்துடனான உறவை நெருக்கமாக்குகிறது.
இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம்தான். இயற்கை உரம், இயற்கைப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்திப் பெருக்கத்தையும், மண்வளத்தையும் அதிகரித்துச் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்.
பல்உயிரும் பயன்பெறும் அதைப் பழகு”
என்ற வரிகளுக்கு ஏற்ப, இயற்கை வேளாண்மையே சிறந்தது என்று கூறி விடைபெறுகிறேன்... நன்றி!... வணக்கம்!
2. புல் நாங்கூழ்ப் புழுவை நோக்கி நடராசன் உரைப்பனவற்றைத் தொகுத்து எழுதுக.
விடைகுறிப்பு:
ஊர்ப்புறத்தே அதிகாலையில் பணியைத் தொடங்கிய நடராசன், உலகில் அனைத்து உயிரினங்களும் ஏதேனும் ஒரு குறிக்கோளுடன் செயல்படுவதாக எண்ணினான். அதனைப் பாராட்ட விரும்பினான்.
எனவே, அருகே வாய்க்காலில் முளைத்திருந்த புல்லைக் கண்டு மகிழ்ந்தான். இந்தச் சிறுபுல்கூட எப்பொழுதும் தன் குறிக்கோளோடு செயலாற்றுகிறது. தன் சிறு பூங்கொத்தை உயர்த்தி, தன்னிடமுள்ள தேனைச் சுவைக்க ஈக்களை அழைக்கிறது. அவை சென்றபின் தன் மலரைச் சிறு காயாக மாற்றி, ஆடையிலோ உடலிலோ சிக்கிக் கொள்ளச் சிறு துரட்டியும் கொடுத்து, “இங்கே நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து வாழ இயலாது. எனவே, ஆடு மாடுகளின்மேல் தொத்திச் சென்று வேறு இடத்தில் தழைத்து வாழச் செல்லுங்கள்" என அறிவுறுத்தி அனுப்புகிறது. இப்புல்லின் அன்பு, பொறுமை, அறிவு ஆகியவற்றைச் சிந்திக்கும்போது வியப்பாக உள்ளது. இச்சிறு புல்லின் வடிவம், செயல், குறிப்பறிந்து செயலாற்றும் முயற்சி ஆகியவற்றைக் காணும்போது நம் கண்களில் நீர் துளிர்க்கிறது எனக் கூறி மகிழ்ந்தான்.
புல்லினைக் கண்டு வியந்து திரும்பிய நடராசன், அருகில் வாய்க்காலில் ஊர்ந்த மண் புழுவைக் கண்டான். அதன் உழைப்பைக் கண்டு வியந்தான். உழைப்போர் உழைப்பில் மண்புழுவின் உழைப்புக்கு எதுவும் ஈடாகாது எனப் பாராட்டினான். “ஏ, மண்புழுவே, நீ உழவர்களுக்கு எல்லாம் விரும்பத்தக்க அரசனாவாய். எந்த மண்ணையும் நல்ல மண்ணாக்கி விடுவாய். அதற்காகவே உன் பிறவியை எடுத்துள்ளாய். உன் உழைப்பு இல்லையானால், எப்பயிரும் விளையாது. நீ செய்யும் செயலை எவரும் பாராட்டுவதை விரும்பாததனால், மண்ணை மெழுகினும் மெல்லிதாக்கி, உருட்டி உன் வழியின் வாயை அடைத்து மூடிவிடுகிறாய். இவற்றை எல்லாம் எண்ணிப் பார்க்காமல் உனக்குத் துன்பம் செய்யும் உயிரினங்கள் கோடிக்கணக்கில் உள்ளன. எனினும், உன்னிடம் இருக்கும் ஒழுக்கமும் பொறுமையும் வேறு எவரிடம் உள்ளது? உன்னை நான் அதிகமாகப் பாராட்டுவதாக எண்ணாதே! உன் இணையிலா அன்பையும் குறைபாடு இல்லாத பெருமையையும் தெளிவாக அறிந்தவர் எவர் உளார்?” என்று பாராட்டி உரைத்தான்.
விடைகுறிப்பு:
யானை டாக்டர் :
இயற்கை ஆர்வலர் ஜெயமோகன் எழுதிய குறும்புதினம் 'யானை டாக்டர்'. காட்டு வளத்தின் மூலவராகவும் தமிழ்நாட்டுப் பண்பாட்டுக்கு அர்த்தமாகவும் யானைகளின் வழித்தடத்தில் நம்மைக் கரம்பிடித்து எழுத்தாளர் ஜெயமோகன், 'யானை டாக்டர்' குறும்புதினம்மூலம் அழைத்துச் செல்கிறார். இதன்மூலம் இயற்கையின் மாபெரும் அதிசயங்களையும், உயிரினப் பாதுகாப்பின் அவசியத்தையும் நம்மையறியாமலேயே நம் இதயத்துள் பாய்ச்சுகிறார்.
இயற்கையே இறைவன் :
'மனிதன் தன் அவசியத் தேவைகள் அனைத்திற்கும் இயற்கையையும், இயற்கையோடு இயைந்து வாழும் பிற உயிரினங்களையுமே சார்ந்திருக்கிறான். இயற்கையோடு இயைந்த வாழ்க்கை அனைத்து உயிரினங்களுக்கும் இதமானது. இக்காலத்தில் வாழும் மனிதன் தனக்கு அரணாயிருக்கும் இயற்கைக்கும், பிற உயிரினங்களுக்கும் ஊறு விளைவிப்பதை நாம் கண்கூடாய்க் காண்கிறோம். ஆறறிவு படைத்த மனித மனம் மாற வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும்.
காட்டு வளமே நாட்டு வளம் :
நாட்டில் மழை வளம் வேண்டுமானால், காட்டு வளம் அவசியம். எனவே, காட்டு வளத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். படிக்காதவனோ, பாமரனோ எவரும் இயற்கைக்கு ஊறு விளைவிப்பதில்லை. மாறாகப் படித்தவர்களும், வசதி வாய்ப்பு பெருகியவர்களும் தங்களின் அறிவு மமதையில், செல்வச் செருக்கில் இயற்கையை மாசுபடுத்துகிறார்கள். சுயநலத்திற்காக, விளைவை அறியாது ஊறு விளைவிக்கிறார்கள். இன்பச் சுற்றுலா என்ற பெயரில் மரங்கள் அடர்ந்த, வன விலங்குகள் நடமாட்டம் கொண்ட, ஆறுகளும் அருவிகளும் ஆர்ப்பரிக்கும் காட்டுப்பகுதிக்குள் சென்று, குடித்துக் கும்மாளம் அடிப்பதோடு நில்லாது, மதுக்குப்பிகளை மமதையோடு வீசி எறிந்து உடைத்து, வனத்தின் தூய்மையைக் கெடுக்கிறார்கள். வன உயிரினங்களின் உயிருக்கு வேட்டு வைக்கும் கயவர்களை இக்குறும்புதினத்தில் அடையாளம் காட்டியிருக்கிறார்.
வன உயிரினப் பாதுகாப்பு:
தமிழ்நாட்டுப் பண்பாட்டிலிருந்து மமதை பிடித்த பிரிக்க முடியாத அங்கமாய் விளங்கும் யானைகளைப் பேணிப் பாதுகாப்பதன் அவசியத்தை, வாசிப்பவர் உள்ளங்களில் பாய்ச்சி ஊடுருவச் செய்திருக்கிறார். காட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்கும் 'காட்டின் மூலவர்' யானைகளுக்கு வைத்தியம் பார்ப்பதுபோல் புதினத்தை அமைத்து, யானைகளின் குணாதிசயங்களைப் பதிவு செய்திருக்கிறார். உதவி செய்தவர்களை எப்போதும் மறவாமல் நன்றி கூறும் தெளிவு யானைகளுக்கே உரித்தான, உயர்ந்த, இதுவரை நாம் அறியாத சிறப்பியல்புகளை அரங்கேற்றம் செய்திருக்கிறார். இத்தகு சிறப்பு வாய்ந்த உயிரினங்களை நாம் பேணிப் பாதுகாத்துப் போற்றுவோமாக!
II. மொழியை ஆள்வோம்
அ) சான்றோர் சித்திரம்
தமிழிசை இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் ஆபிரகாம் பண்டிதர், தென்காசிக்கு அருகேயுள்ள சாம்பவர் வடகரை என்னும் சிற்றூரில் பிறந்தவர். இளமையிலேயே புகைப்படக்கலை, அச்சுக்கலை, சோதிடம், மருத்துவம், இசை ஆகிய துறைகளில் பெருவிருப்பம்கொண்டு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதன் நுட்பங்களைப் பயின்றார். திண்டுக்கல்லில் ஆசிரியராகப் பணியாற்றும்போதே, சித்தமருத்துவத்தில் சீரிய அறிவு பெற்று, மக்களால் அன்புடன் 'பண்டுவர்' (மருத்துவர்) என்று அழைக்கப்பட்டார். சில ஆண்டுகள் பணியாற்றியபின், அதைவிடுத்து முழுமையாகச் சித்த மருத்துவத்தில் கவனம் செலுத்தினார். தஞ்சையில் குடியேறினார். மக்கள் அவரைப் 'பண்டிதர்' என அழைக்கத் தொடங்கினர். பண்டைத் தமிழ் நூல்களையெல்லாம் ஆழ்ந்து கற்று, 'சங்கீத வித்தியா மகாஜன சங்கம்' என்னும் அமைப்பை உருவாக்கி, தமது சொந்தச் செலவிலேயே தமிழிசை மாநாடுகள் நடத்தினார். அனைத்திந்திய அளவில் நடந்த இசை மாநாடுகளுக்கும் சென்று உரையாற்றினார். அவருடைய இசைத்தமிழ்த் தொண்டின் சிகரம் 'கருணாமிர்த சாகரம்'. எழுபத்தோராண்டுகள் வாழ்ந்து, தமிழுக்குத் தொண்டு செய்தவர் ஆபிரகாம் பண்டிதர்.வினாக்களுக்கு விடையளிக்க.
1. உடனிலை மெய்ம்மயக்கச் சொற்களை எடுத்து எழுதுக.
விடைகுறிப்பு:
இயக்கத்தின், போற்றப்படும், என்னும், சிற்றூரில், படக்கலை, கற்று, வித்தியா, அமைப்பை, உருவாக்கி, அச்சுக்கலை, மருத்துவம், விருப்பம், கிடைக்கும், போதெல்லாம், நடத்தினார், மாநாடுகளுக்கும், உரையாற்றினார், மக்களால், சித்த, செலுத்தினார், அழைக்க, இசைத்தமிழ்,
தமிழுக்கு.
2. வேற்றுநிலை மெய்ம்மயக்கச் சொற்களை எடுத்து எழுதுக.
விடைகுறிப்பு:
தந்தை, என்று, பண்டிதர், தென்காசி, சாம்பவர், பிறந்தவர், தொண்டு, நுட்பங்களை, பயின்றார், அன்புடன், பண்டுவர், ஆண்டுகள், தஞ்சை, தொடங்கினார், பண்டை, நூல்களை, ஆழ்ந்து, சொந்த, சென்று, தொண்டின், கருணாமிர்த, தொண்டு, செய்தவர்.
3. உடனிலை மெய்ம்மயக்கமாகவும், வேற்றுநிலை மெய்ம்மயக்கமாகவும் உள்ள சொற்களை எழுதி, மெய்களை அடிக்கோடிடுக.
விடைகுறிப்பு:
திண்டுக்கல்லில், அனைத்திந்திய
4. கீழ்க்காணும் வடமொழிச் சொற்களைத் தமிழாக்குக.
விடைகுறிப்பு:
அ) சங்கீதம் - இசை
ஆ) வித்தியா - கலையறிவு
இ) மகாஜனம் - பெருமக்கள்
ஈ) சாகரம் - கடல்
5. பகுபத உறுப்பிலக்கணம் தருக.
அ) பயின்றார்
ஆ) தொடங்கினார்
விடைகுறிப்பு:
அ) பயின்றார்
பயில் - பகுதி, 'ல்', 'ன்' ஆனது விகாரம்,
ற் - இறந்தகால இடைநிலை,
ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி.
ஆ) தொடங்கினர்
தொடங்கு - பகுதி,
இன் - இறந்தகால இடைநிலை,
அர் - பலர்பால் வினைமுற்று விகுதி.
ஆ) தமிழாக்கம் தருக.
வெறும் வாழ்க்கை என்பது போதாது. வாழ்வில் புகழ், உரிமை, மகிழ்ச்சி இருக்க வேண்டும் ஹேன்ஸ் ஆண்டர்சன்
2. In nature, light creates the colour. In the picture, colour creates the light - Hans Hofmann.
இயற்கை ஒளி வண்ணத்தை உருவாக்குகிறது. ஓவியத்தில் வண்ணம் ஒளியை உருவாக்குகிறது. ஹேன்ஸ் ஹோஃப்மன்
3. Look deep into nature and then you will understand everything better - Albert Einstein
இயற்கையை ஆழமாக நோக்கினால், நீ ஒவ்வொன்றையும் சிறப்பாகப் புரிந்து கொள்வாய். ஆல்பர்ட் ஐன்ஸ்டின்
4. Simplicity is nature's first step, and the last of art - Philip James Bailey.
எளிமை இயற்கையின் முதற்படி; கலையின் கடைசியும் அதுவே பிலிப் ஜேம்ஸ் பெய்லி
5. Roads were made for journeys not destination - Confucius.
பாதைகள் பயணத்திற்காக அமைக்கப்பட்டவை; முடிவுக்காக இல்லை. - கன்ஃபுஷியஸ்.
இ) மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
1. உலை, உளை, உழை:
மன உளைச்சல் தீரவும், வீட்டில் உலை கொதிக்கவும் உழைக்க வேண்டும்.
2. வலி, வளி, வழி:
வலிமையான வளிமண்டல, தாழ்வழுத்தம் சென்னை வழியே கரையைக் கடந்தது.
3. கலை, களை, கழை:
கலை நிகழ்ச்சிகள் களை கட்டக் கழைக் கூத்தாடிகள் மேடையேறினர்.
4. கனை, கணை:
கனைத்துக் கொண்டிருந்த குதிரையைக் கணையால் வீழ்த்தினான்.
5. குரை, குறை:
குரைக்கிற நாயின் ஒலி குறையவில்லை.
6. பொரி, பொறி:
பொரியை உண்டவாறு வந்த கண்ணன், நெருப்புப் பொறியைத் தண்ணீர் தெளித்து அணைத்தான்.
ஈ) கீழ்க்காண் விளம்பரத்தைப் பத்தியாக மாற்றி அமைக்க.

அந்த நிகழ்ச்சியில் ஆவாரம்பூச்சாறு, குதிரைவாலிப் பொங்கல், வாழைப்பூ வடை, தினைப் பணியாரம், வல்லாரை அப்பளம், முடக்கத்தான் தோசை, தூதுவளைச் சாறு, சாமைப் பாயசம், கேழ்வரகு உப்புமா, கம்புப் புட்டு, அகத்திப்பூ போண்டா, முள்முருங்கை அடை என இன்னும் பல உணவுகள் சுவையாகக் கிடைக்கும்.
உ) இலக்கியநயம் பாராட்டுக
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளைகண் விழித்து நோக்க,
தெண்திரை எழினி காட்ட, தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, மருதம்வீற் றிருக்கும் மாதோ.
'கல்வியில் பெரியவர் கம்பர்', 'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்' என்னும் வழக்குகள், கம்பரின் கல்விப் பெருமையை விளக்கும். வடமொழியில் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தைத் தழுவித் தமிழ் மரபுக்கு ஏற்ப, 'கம்பராமாயணம்' காப்பியத்தைப் பாடியுள்ளது சிறப்பாகும். இங்குக் கம்பராமாயணப் பாடலொன்று, நயம் பாராட்டக் கொடுக்கப்பட்டுள்ளது.
மையக்கருத்து:
மருதநிலத் தலைவன் கொலுவீற்றிருக்கும் காட்சி இப்பாடலின் மையக் கருத்தாக உள்ளது. கம்பரின் கற்பனை வளத்திற்கு இது மிகச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு.
எதுகை:
அடிகளிலோ சீர்களிலோ முதல் எழுத்து மாத்திரை அளவு ஒத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகை ஆகும்.
அடிஎதுகை:
தெண்திரை, வண்டுகள்
பாடல் அடியின் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவருவது சீர்மோனை ஆகும்.
சீர்மோனை:
கொண்டல், குவளை
தெண்டிரை, தேம்பிழி
ஓரடியின் இறுதிச் சீர்தோறும் நின்ற எழுத்தோ சொல்லோ, தொடரோ ஒன்றிவரத் தொடுப்பது இயைபு.
தாங்க, நோக்க -இயைபு
சுவை:
மருத நிலத்தின் இயற்கை அழகை மருதத்தலைவன் அரச சபையில் கொலு வீற்றிருப்பதாகக் கூறியிப்பதால் இதில், 'பெருமிதச் சுவை’ அமைந்துள்ளது.
அணி:
மாலைநேரக் காட்சிகளை இயற்கையோடு கலந்த உள்ளதை உள்ளபடி கூறியிருப்பதால் இதில், 'இயல்பு நவிற்சி அணி ' அமைந்துள்ளது. மயில் ஆடு மகளாகவும், தாமரை அரும்பு விளக்காகவும், மேக முழக்கம் மத்தள ஓசையாகவும், குவளைமலர்கள் கண்விழித்து நோக்கும் மக்களாகவும், வண்டுகளின் ரீங்காரம் மகர யாழிசையாகவும், தெளிந்த நீர்ப்பரப்பு எழி னியாகவும் இச்செய்யுளில் உருவகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, உருவக அணியும் அமைந்துள்ளது.
III. மொழியோடு விளையாடு
அ) எண்ணங்களை எழுத்தாக்குக.
ஆக்ஸிஜன் இல்லாமல்
வாழும் மக்கள் இன்னல்
அனுபவிக்கட்டும்!
மரங்களை வெட்டியதால்
மழை குறைந்து மானிடம்
அல்லல் உறட்டும்!
இத்தனையும் நடந்தபின்தான்
மனிதா உனக்குப் புத்திவரும்
என்றால்... மரங்களை வெட்டு!
ஆ) புதிர்களில் மறைந்துள்ள சொற்களைக் கண்டுபிடிக்க.
முதலிரண்டோ, பாட்டெழுதுபவரின் பட்டம்
இரண்டும் மூன்றுமோ, பசுப்பால் என்பதன் பின் இறுதி
கடைசி இரண்டெழுத்தோ, மானினத்தில் ஒரு வகையாம்
இரண்டும் ஐந்துமோ, பொருளை விற்கத் தேவையாம்
அஃது என்ன?
விடைகுறிப்பு:
2. இறுதி இரண்டெழுத்தோ,
பழத்தின் முந்தைய பச்சைநிலை
தமிழ்க்கடவுளின் முற்பாதியை, முதலிரு எழுத்துகளில் வைத்திருக்கும்
நடுவிலோ, ஒரெழுத்து ஒருமொழி
அதற்கும் முன், பொட்டு வைத்த ஙகரம்
சேர்த்தால், காயாவான் பிரித்தால் நிலைமொழியில் மரமாவான்
ஏழெழுத்துக்காரன் - அவன் யார்?
விடைகுறிப்பு:
இ) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, இயற்கைப் பாதுகாப்பு குறித்த முழக்கத்தொடர்கள் எழுதிக் காட்சிப்படுத்துக.
எ-கா: 1. விதைப்பந்தை எறிந்திடுவீர்! பூமிப்பந்தைக் காத்திடுவீர்!2. சிட்டுக்குருவிக்குக் கொஞ்சம் அரிசியிடு ! உலக உயிர்களுக்கு உன் கருணையிடு!
3. வீடுதோறும் மரம் வளர்ப்போம்! வீதியெல்லாம் பசுமையாக்குவோம்!
4. விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி.
5. கேரி பேக்கிற்கு விடைகொடுப்போம்! மஞ்சள் பைக்குப் படையெடுப்போம்!
6. பாலிதீன் ஒழிப்போம்! மண்வளம் காப்போம்!
7. மண்குளிர மழை வேண்டும்! மழைபொழிய மரம் வேண்டும்!
ஈ) செய்து கற்ப்போம்
க
கலப்பை ஏற்று - மாடு கட்டித் தண்ணீர் இறைப்பது
கொழுகலப்பை - கலப்பையின் கூர்முனை
கலப்பைக்கயிறு - கலப்பையுடன் மாட்டைக் கட்டும் கயிறு
குழுமி - நீரைத் திறந்து விடும் மடை
ச
சால் - உழுவது
சாற வைத்தல் - விதையை நீரில் வைத்தல்
சாவி - சாய்ந்த கதிர்
சூரக்கட்டை - கருகிய பயிர் உடைய நிலம்
த
தரிசு உழவு - தரிசு நிலத்தை உழுவது
தலையடி நெல் - போரடித்தலில் முதலில் கிடைக்கும் நெல்
தாள் மேய்த்தல் - நெல் தாளை வைக்கோல் ஆக்கல்
தூற்றுதல் - நெல் மணிகளின் தூசி நீக்கல்
தொழியடித்தல் - எரு, இலைகள் வயலில் போடுதல்
பொ
பொன்னி மிதித்தல் - கலப்பையில் சிக்கும் களைகளை நீக்கல்
போரடித்தல் -நெல்லையும் வைக்கோலையும் பிரிப்பது
பொலி போடுதல் - முதல் நெல்மணிகளை லாபம் எனக்கூறிப் பெட்டியில் போடுதல்
பரம்புப் பலகை மண்ணின் கட்டி முட்டிகளைப் பண்படுத்தும் பலகை
ந
நாட்டு வாய்க்கால் - வயலுக்கு நீர் கொண்டு செல்லும் வாய்க்கால்
நுகத்தடி - உழவு மாட்டில் மாட்டப்படும் கட்டை
நடவுசேர் - நடவு வயலைப் பண்படுத்தும் முதல் கட்டம்
நாற்றங்கால் - விதை போடப்படும் வயல்
ம
மடை - நீரைத் திறக்கும் கதவு
முடி - நாற்றைக் கட்டுவது
வ
வடக்கயிறு, வால்கயிறு - வேளாண்மைக்குப் பயன்படும் கயிறுகள்.
IV. நிற்க அதற்குத் தக.
அ) படிப்போம்; பயன்படுத்துவோம்!
Root Nodes - வேர்முடிச்சுகள்
Chemical Fertilizers - வேதி உரங்கள்
Harvesting - அறுவடை
Shell Seeds - ஒட்டுவிதை
Value Added Product - மதிப்புக்கூட்டுப் பொருள்
Farmyard Manure - தொழுஉரம்
V இலக்கணத் தேர்ச்சிகொள்
1. குற்றிலுகரப் புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.இறுதியில் உள்ள குற்றியலுகரம், வருமொழியின் முதலில் உள்ள உயிரெழுத்துடன் புணரும்போது, குற்றியலுகரத்தின் நிலைமொழிச்சொல் மெய்யை நிறுத்தி உகரம் மறையும். அதன்பின் நிலைமொழி இறுதியில் உள்ள மெய், வருமொழி முதலெழுத்தாகிய உயிரெழுத்துடன் புணரும்.
எ. கா : மாசற்றார் மாசு + அற்றார்
'உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்' என்னும் விதிப்படி, 'மாச் + அற்றார்' என்றானது.
'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' என்னும் விதிப்படி, 'மாசற்றார்' எனப் புணர்ந்தது.
2. கருவிழி, பாசிலை, சிறியன், பெருங்கல் ஆகிய சொற்களைப் பிரித்துப் புணர்ச்சிவிதி தருக.
i. கருவிழி - கருமை + விழி
ii. பாசிலை பசுமை + இலை
“ஆதிநீடல்” (பாசு + இலை) என ஆனது.
"உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும் (பாச் + இலை) என ஆனது.
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” 'பாசிலை' எனப் புணர்ந்தது.
“ஈறுபோதல்" (சிறு + அன்) என்றானது.
“இடை உகரம் இய்யாதல்" (சிறி + அன்) என ஆனது.
“உயிர்வரின் இ ஈ ஐ வழி யவ்வும் உடம்படுமெய் என்றாகும்" (சிறி + ய் + அன்) எனஆனது.
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” 'சிறியன்' எனப் புணர்ந்தது.
"ஈறுபோதல் (பெரு + கல்) என ஆனது.
"இனமிகல்" பெருங்கல்' எனப் புணர்ந்தது.
3. புணர்ச்சிவிதி தந்து விளக்குக:
புலனறிவு, வில்லொடிந்தது, வழியில்லை, திரைப்படம், ஞாயிற்றுச்செலவு.
i. புலனறிவு - புலன் + அறிவு
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே”என்னும் விதிப்படி - புல (ன் + அ) றிவு -'புலனறிவு' எனப் புணர்ந்தது.
ii. வில்லொடிந்தது வில் + ஒடிந்தது
"தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்னும் விதிப்படி 'வில்ல் + ஒடிந்தது'என்றானது.
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் விதிப்படி வில் (ல்+ஒ) டிந்தது- 'வில்லொடிந்தது' எனப் புணர்ந்தது.
iii. வழியில்லை வழி + இல்லை
“உயிர்வரின்.... இ ஈ ஐ வழி யவ்வும்” என்னும் விதிப்படி, - 'வழி + ய் + இல்லை' என ஆனது.
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் விதிப்படி - 'வழியில்லை' எனப் புணர்ந்தது.
iv. திரைப்படம் - திரை + படம்
"இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்னும் விதிப்படி, -திரை + ப் + படம் 'திரைப்படம்' எனப் புணர்ந்தது.
ஞாயிற்றுச்செலவு ஞாயிறு + செலவு
“நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள் டற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே” என்னும் விதிப்படி, 'ஞாயிற்று + செலவு' என ஆனது.
"இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்னும் விதிப்படி, ஞாயிற்றுச் + செலவு - 'ஞாயிற்றுச்செலவு' எனப் புணர்ந்தது.
4. விதி வேறுபாடறிந்து விளக்குக.
ii. இனமிகல் வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்.
1. தன்னொற்றிரட்டல் - தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்:
பண்புப்பெயர்ப் புணர்ச்சியில், "ஈறுபோதல்” என்னும் விதிப்படி 'மை' விகுதி போனபின், நிலைமொழி இறுதி 'உகரமாக' இருந்து, வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால், “தன்னொற்று இரட்டல்” என்னும் விதி இடம்பெற வேண்டும்.
எ கா : வெற்றிலை வெறுமை + இலை
“ஈறுபோதல்" என்னும் விதிப்படி - 'வெறு + இலை' என ஆனது. “தன்னொற்று இரட்டல்” என்னும் விதிப்படி வெற்று + இலை எனப் புணர்ந்தது.
தனிக்குறிலைச் சார்ந்த மெய்யெழுத்தைப் பெற்ற நிலைமொழி, உயிரை முதலாகப் பெற்ற வருமொழியுடன் சேரும்போது, நிலைமொழி ஈற்றுமெய், இரட்டித்துப் புணரும். அப்போது, "தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்னும் விதி இடம்பெறும்.
எ.கா : கல் + எறிந்தான்
"தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” - 'கல்ல் + எறிந்தான்' என்றானது.
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” - 'கல்லெறிந்தான்' எனப் புணர்ந்தது.
ii. இனமிகல்:
- பண்புப்பெயர் புணர்ச்சியில் 'ஈறுபோதல்' விதிப்படி 'மை' விகுதி போனபின், மகரமெய் வராத நிலையில், வருமொழி முதலாகக் கசதப வந்தால், 'இனமிகல்' விதி இடம்பெறும்.
- எ கா : கருங்கடல் -கருமை + கடல்
- “ஈறுபோதல்” என்னும் விதிப்படி 'கரு + கடல்' என்றானது.
- “இனமிகல்" என்னும் விதிப்படி - கருங் + கடல் கருங்கடல்' எனப் புணர்ந்தது.
வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்:
- மகரமெய்யை இறுதியாகப் பெற்ற நிலைமொழி, வல்லினத்தை முதலில் பெற்ற வருமொழியுடன் புணரும்போது, நிலைமொழி இறுதி மகரம், வருமொழிமுதல் வல்லினத்தின் இனமான மெல்லினமாகத் திரியும்.
- எ கா காலங்கடந்தான் காலம் + கடந்தான்
- “மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்” என்னும் விதிப்படி, காலங் + கடந்தான் 'காலங்கடந்தான்' எனப் புணர்ந்தது.
5. பொருத்துக.
அ) அடி அகரம் ஐ ஆதல் - 1. செங்கதிர்
ஆ) முன் நின்ற மெய் திரிதல் - 2. பெருங்கொடை
இ) ஆதிநீடல் - 3. பைங்கூழ்
ஈ) இனமிகல் - 4. காரிருள்
அ) 4, 3, 1, 2
ஆ) 3, 1, 4, 2
இ) 2, 3, 1, 4
ஈ) 2, 1, 3, 4
விடைகுறிப்பு :
6. கூற்றுகளைப் படித்துக் கீழ்க்காண்பனவற்றுள் சரியானதைத் தேர்க.
அ) நிலைமொழியில் குற்றியலுகரமாகவும், வருமொழியின் முதல் உயிரெழுத்தாகவும் அமையும் போது, 'உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஒடும்' என்னும் விதியைப் பெறும்.
ஆ) நிலைமொழியின் ஈற்றில் இஈஐ வரும்போது, வகர உடம்படுமெய் பெறும்.
இ) பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் 'ஈறுபோதல்' என்னும் விதியே, முதன்மையானதாக விளங்கும்.
ஈ) 'தன்னொற்றிரட்டல்' என்னும் விதி, பண்புப்பெயர்ப் புணர்ச்சிக்குப் பொருந்தும்.
i) அ, ஆ, இ சரி, ஈ தவறு.
ii) அ, இ, ஈ சரி, ஆ தவறு.
0 Comments:
Post a Comment