7th Tamil - Book Back Answers - Unit 3.2 - Guide


 


    7th Tamil - Book Back Answers - Unit 3.2 - Download

    Tamil Nadu Board 7th Standard Tamil - Unit 3.2: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 3.2 – from the Tamil Nadu State Board 7th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 3.2 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 7 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 3.2 தேசியம் காத்தல் செம்மல் பசும்பொன் 

    உ. முத்துராமலிங்கத்தேவர்        

    I.   கற்பவை கற்றபின்  

    1. நாட்டுக்கு உழைத்த சிறந்த பிற தலைவர்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டி எழுதுக.
    விடைகுறிப்பு:
     
    சுபாஷ் சந்திரபோஸ்(நேதாஜி):
    வங்காளத்தில் 1897-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் நாள் கோதாலியா என்ற சிற்றூரில் ஜானகிநாத் – பிரபாவதி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். தாயார் பிரபாவதியிடம் வீரம் நிறைந்த காளிதேவியின் கதைகளைக் கேட்டு அறிவார். 1915 ஆம் ஆண்டு பள்ளியின் மாணவத் தலைவனாக தேர்வு செய்யப்பட்டார். ஐரோப்பாவில் வாழ்ந்த வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் சுபாஷை “நேதாஜி” என்று அழைத்தனர். அன்று முதல் சுபாஷ் சந்திரபோஸ் “நேதாஜி” என்று அழைக்கப்படுகிறார்.

    இந்து, முஸ்லீம் என்று பிரிந்து கிடந்த இந்தியர்களை ஒன்றிணைக்க நேதாஜியால் அப்போது “ஜெய்ஹிந்த்” என்ற தாரக மந்திரம் எழுப்பப்பட்டது.

    1945-ஆம் ஆண்டு ஆகஸ்டு 16-ஆம் நாள் ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்த சைகோனிலிருந்து விமானத்தில் நேதாஜி புறப்பட்டார். ஆனால் வழியில் (தைவான்) தைஹோக் என்ற இடத்தில் அவர் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது என்றும், இதில் பலத்த காயமடைந்த நேதாஜி ஆகஸ்டு 18-ஆம் நாள் தனது இன்னுயிர் நீத்தார் என்றும் கூறப்பட்டது.
     
      

    II. மதிப்பீடு 

    சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

    1. முத்துராமலிங்கத்தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் ……....
    இ) சாயல்குடி

    2. முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர்…......
    ஆ) நேதாஜி

    3. தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர்…….....
    இ) திரு.வி.க.
     

    குறுவினா

    1. முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டிப் பெரியார் கூறியது யாது?
    விடைகுறிப்பு:

    • வீரப் பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகளை உண்டாக்கியவர்.உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர்.
    • சுத்தத் தியாகி. - பெரியார்

    2. முத்துராமலிங்கத்தேவரின் பேச்சுக்கு வாய்ப்பூட்டுச் சட்டத்தின் மூலம் தடைவிதிக்கப்படக் காரணம் யாது?
    விடைகுறிப்பு:
    • ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களிடம் பெரும் எழுச்சி ஏற்படும் படி வீர உரையாற்றினார். 
    • அவரது பேச்சைக் கேட்டு மக்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராக எழுந்தனர். இதனால், அவரைப் பலமுறை ஆங்கில அரசு கைது செய்தது.
     
    3.முத்துராமலிங்கர் பெற்றிருந்த பல்துறை ஆற்றலைப் பற்றி எழுதுக.
    விடைகுறிப்பு:

    • தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார். 
    • சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சுடுதல்,சோதிடம், மருத்துவம் ஆகிய பலதுறை ஆற்றல் உடையவராக விளங்கினார். 
     
     

    சிறுவினா

    1.நேதாஜியுடன் முத்துராமலிங்கத்தேவர் கொண்ட தொடர்புப் பற்றி எழுதுக.
    விடைகுறிப்பு:

    • நேதாஜியுடன் முத்துராமலிங்கத்தேவர் நெருங்கிய தொடர்புகொண்டு இருந்தார், 
    • அவரைத் தம் அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார்.
    • முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பை ஏற்று நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார்.
    • நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் முத்துராமலிங்கத்தேவரின் முயற்சியால் ஏராளமான தமிழர்கள் இணைந்தனர்.

    2.தொழிலாளர் நலனுக்காக முத்துராமலிங்கத்தேவர் செய்த தொண்டுகள் யாவை?
    விடைகுறிப்பு:
    • மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகஇருந்தார். 
    • மதுரையில் இருந்த நூற்பாலை ஒன்றில் வேலை செய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப.ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார். 
    • அதற்காக ஏழு மாதம் சிறைத் தண்டணை பெற்றார்.
    • உழவர்களின் நலன் காக்க இராஜ பாளையத்தில் மிகப்பெரிய அளவிலான மாநாடு ஒன்றை நடத்தினார்.

    சிந்தனை வினா

    1. சிறந்த தலைவருக்குரிய பண்புகள்எவை என நீங்கள் கருதுகிறீர்கள்?
    விடைகுறிப்பு:
    பொதுநலம்,அன்பு,அருள்,நேர்மை,தன்னம்பிக்கை,பேச்சாற்றல்,கடின உழைப்பு- ஆகியன சிறந்த தலைவருக்குரிய பண்புகளாக நாங்கள் கருதுகின்றோம்.





     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive