11th Tamil - Book Back Answers - Unit 5 - Guides

    

 


    Plus One / 11th Tamil - Book Back Answers - Unit 5 - Download

    Tamil Nadu Board 11th Standard Tamil - Unit 5: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 5 – from the Tamil Nadu State Board 11th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 5 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 11 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 5

    I. நம்மை அளப்போம்

    அ) பலவுள் தெரிக.

    1. பொருந்தாததைத் தேர்க.
    அ) ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள், பன்னிரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
    ஆ) ஒவ்வொருநாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை, நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிடாமல் செய்திகளை எழுதியுள்ளார்.
    இ) ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு, 18ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
    ஈ) ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடையக் கப்பல்களுக்கு எட்டுத் திங்கள் தேவைப்பட்டன.
    i) அ, ஆ
    ii) ஆ.இ
    iii) அ, இ
    iv) ஆ, ஈ
    விடை குறிப்பு : 
    iv) ஆ, ஈ

    2. ஆனந்தரங்கருக்குத் தொடர்பில்லாத குறிப்பு எது?
    அ) மொழிபெயர்ப்பாளர்
    ஆ) இந்தியாவின் பெப்பிசு
    இ) பிரெஞ்சு ஆளுநரின் தலைமை மொழிபெயர்ப்பாளர்
    ஈ) உலக நாள்குறிப்பு இலக்கியத்தின் தந்தை
    விடை குறிப்பு : 
    ஈ) உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை

    3. கூற்று : எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து, புறம் சார்ந்த நூல்.
    காரணம் : சேர மன்னர் பதின்மரின் சிறப்புகளைக் கூறுகிறது இந்நூல்.
    அ) கூற்று சரி; காரணம் தவறு
    ஆ) இரண்டும் சரி
    இ) இரண்டிற்கும் தொடர்பு இல்லை
    ஈ) கூற்று தவறு காரணம் சரி.
    விடை குறிப்பு : 
     
    ஆ) இரண்டும் சரி

    4. சரியானதைத் தேர்ந்தெடுக்க.
    அ) வரை - மாலை 

    ஆ) வதுவை -திருமணம்
    இ) வாரணம் - யானை
    ஈ) புடவி - கடல்
    i) அ, ஆ, இ - சரி; ஈ -தவறு
    ii) ஆ, இ, ஈ சரி; அ - தவறு
    iii) அ, இ, ஈ - சரி; ஆ - தவறு
    iii) அ, இ, ஈ - சரி; ஆ - தவறு
    iv) அ, ஆ, ஈ சரி; இ - தவறு 
    விடை குறிப்பு : 
    i) அ, ஆ, இ - சரி; ஈ -தவறு


    ஆ) குறு வினா

    1. மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம் என்னும் கூற்றினை உறுதிப்படுத்துக.
    • மதீனா நகரின் மேன்மாடங்கள், மேருமலையினைப் போன்று உயர்ந்து இருந்தன.
    • அங்காடிகள் நிறைந்த தெருக்களில் எழுந்த ஒலி, பெருங்கடல் ஒலி போன்று இருந்தது.
    • மதீனா நகரின் வீதிகள், பிரபஞ்சத்தைப் போன்று பரந்து இருந்தன.
    • அந்நகரில் சிறிதும் இடைவெளியின்றி மாளிகைகள் நெருக்கமாக அமைந்து இருந்தன.
    2. “ஊனமில் ஊக்கமும் ஒளிரக் காய்த்தநல்
    தீன்எனுஞ் செல்வமே பழுத்த சேணகர்”- இப்பாடலடிகளில் ஒளிரக் காய்த்தது எது? பழுத்தது எது?
     
    ஒளிரக் காய்த்தது :
            திண்ணிய வலிமை நல்கும் வெற்றியும், அவ்வெற்றியைத் தருகின்ற குறைவற்ற ஊக்கமும் ஒளிரக் காய்த்து இருந்தன.
    பழுத்திருந்தது :  
    செம்மை பொருந்திய மதீனா நகரில், தீன் எனும் செல்வம் பழுத்து இருந்தது.
    நெருங்கி, இரங்கி உறுப்பிலக்கணம் தருக.
    நெருங்கின நெருங்கு + இ (ன்) + அ
    நெருங்கு - பகுதி
    இ (ன்) - இறந்தகால இடைநிலை
    அ - பெயரெச்ச விகுதி.
    இரங்கி - இரங்கு + இ
    இரங்கு - பகுதி
    இ - வினையெச்ச விகுதி.
     
    5. செந்துறைப் பாடாண்பாட்டு துறை விளக்கம் எழுதுக.
     
            உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதல் செந்துறை ஆகும். இதனைச் 'செந்துறைப் பாடாண் பாட்டு' எனவும் கூறுவர். அதாவது, மக்களிடம் இயற்கையாக அமைந்த, அவர்களின் நல்லியல்புகளைப் பாடுவது, செந்துறைப் பாடாண் பாட்டாகும்.


    இ) சிறு வினா

    1. "கலைவலார் மறையவர் கருத்தில் எண்ணியது" யாது?
            கலையில் வல்லவர்கள் தங்கள் கலையைப் போற்றும் மக்களையும் பரிசில் வழங்கும் வள்ளல்களையும் மனத்தில் எண்ணினர்.
    மறையவர் கருத்தில் எண்ணியது :
            வறுமை, நோய், பகை ஆகியன இல்லாமல் நாட்டில் ஆட்சி நீதியோடு நடைபெற வேண்டும் என்று மறையவர் கருத்தில் எண்ணினர். இவ்வாறு கலை வல்லாரும் மறையவரும் நினைக்கின்ற பொருள் வளத்தைக் கொண்டதாக, மதீனா நகரம் இருந்தது என உமறுப்புலவர் பாடியுள்ளார்.
     
    2. "மறுவிலாத அரசென இருந்த மாநகர்" - உவமையைப் பொருளுடன் விளக்குக.
    உவமை: 
    குறைவில்லாத மானுட அறத்தை உடைய செங்கோலாட்சி நடத்திய சிறந்த அரசு.
    உவமஉருபு:  என
    உவமேயம் : மதீனா நகரம் பொலிவுடன் இருந்தது.
    பொருத்தம் : குறைவில்லாத மானுட அறத்தை உடைய செங்கோல் ஆட்சி நடத்திப் பெரும்புகழ் பெற்ற சிறந்த அரசைப்போல, மதீனா நகரம் பொலிவுடன் இருந்தது.
     
    3. ஆனந்தரங்கர் ஒரு வரலாற்று ஆசிரியர் என்பதைப் பாடப்பகுதி வழி எடுத்துக்காட்டுக.
    வரலாற்று நிகழ்வுகள்:
            தேவனாம்பட்டணத்தைக் கைப்பற்றுவதற்காக ஆங்கிலேயருடன் பிரெஞ்சு அரசு நடத்திய படையெடுப்புகள் புகழ்பெற்ற ஆம்பூர் பற்றிய செய்திகள். தஞ்சை கோட்டைமீது நடத்திய முற்றுகை இராபர்ட் கிளைவின் படையெடுப்பு.
    ஆங்கிலேயர் புதுச்சேரியை முற்றுகை இட்டது முதலியவற்றை எல்லாம் நாட்குறிப்பில் ஆனந்தரங்கர் விளக்கிக் கூறியுள்ளார். பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ், நாணய அச்சடிப்பு உரிமை பெறப் பெருந்தொகை செலவிட்டதை எழுதி வைத்துள்ளார்.
            1745இல் வீசிய பெருங்காற்றால் புதுவையில் ஏற்பட்ட விளைவுகள், பஞ்சம், பட்டினி பற்றி எல்லாம் எழுதி வைத்துள்ளார். இவற்றால் ஆனந்தரங்கரை ஒரு வரலாற்று ஆசிரியர் எனக் கூறுவது மிகையாகாது.

    4. 'சேரநாடு செல்வ வளம் மிக்கது என்ற கூற்றிற்குரிய காரணங்களைக் குறிப்பிடுக.
            சேரலாதனின் குடிமக்கள் எப்பொழுதும் நல்ல செயல்களையே செய்து வருபவர்கள். பசி, பிணி அறியாத அவர்கள் சேரநாட்டைவிட்டுப் புலம் பெயராமல் அந்நாட்டிலேயே சுற்றத்தாரோடு வாழ விரும்புவர். அவ்வாறான குடிமக்களால் சேரநாடு வளமுடையதாக இருந்தது.
    வாழும் அனைத்து உயிர்களுக்கும் கொடுக்கும் பண்பு உடையவன் சேரலாதன். அவன், சான்றோர் களுக்கு அரிய பொருள்களை வழங்குவான். எப்பொழுதும் விழாக்கள் நடக்கும் நாட்டிற்குரிய நெடுஞ்சேரலாதன், நெடியோன் போன்ற புகழினையும் வளமான நாட்டையும் உடையவன் என்று, புலவர் குமட்டூர்க் கண்ணனார் வியக்கிறார்.
            சேரநாடு செல்வ வளம் மிக்கது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், தன் நாட்டையும் மக்களையும் கண் எனக் காத்தான். ஆகவே, அவன் நாட்டு மக்கள் புலம் பெயர்ந்து வேற்று நாட்டிற்குச் செல்ல விரும்புவதில்லை. புதுவருவாய்ப் பெருக்கத்திலும், செல்வத்திலும், ஈகை அறத்திலும் வளமானது சேரநாடு. இவற்றைத் தெளிவாக உரைக்கிறது பதிற்றுப்பத்து.
     
    5. ஆக்கப்பெயர் விகுதிகள் தற்கால வாழ்வியலில் மிகுந்துள்ளன - ஏன்?
            சமூகச் செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்கு இன்று பல்வேறு துறைகள் பல்கிப் பெருகி உள்ளன. அந்தத் துறைகளின் பணிகளை ஆற்றுவதற்குப் பல்வேறு பணி அமைப்புகள் தேவைப்படுகின்றன.
            இவற்றின் தேவைக்கான ஆக்கப் பெயர்ச் சொற்களை உருவாக்கவே, விகுதிகள் தற்கால வாழ்வியலில் மிகுந்துள்ளன.
            ஊடகம் என்னும் துறைக்குள் பத்திரிகைத்துறை, வானொலித்துறை, தொலைக்காட்சித் துறை, அஞ்சல் துறை, கணினித் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை ஆகிய துறைகளும் அடங்கியுள்ளன. அந்தந்தத் துறைசார்ந்த கலைச்சொற்களின் தேவை இன்று ஏற்பட்டுள்ளதால், ஆக்கப்பெயர் விகுதிகள் தற்காலத்தில் அதிகம் தேவைப்படுகின்றன.
     

    ஈ) நெடு வினா

    1. 'தாம் வாழ்ந்த காலகட்டத்தின் நாகரிகப் புதையலாக நாட்குறிப்பைப் பயன்படுத்தியவர் ஆனந்தரங்கர்' என்பதை நிறுவுக.
     
    முன்னுரை:
            பன்மொழிப் புலமையும் பல்துறை ஆளுமையும் கொண்ட ஆனந்தரங்கர், புதுச்சேரி வரலாற்றினைப் பதிவு செய்தவரில் முதன்மையானவர். அவருடைய நாட்குறிப்புகள் 18ஆம் நூற்றாண்டின் புதுவை வரலாற்றினை அறிந்துகொள்ள நமக்குக் கிடைத்த அரிய பெட்டகமாகும்.
     
    நாட்குறிப்பின் சிறப்பு:
            ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள், 12 தொகுதிகளாகத் தமிழில் வெளிவந்தன. இவருடைய நாட்குறிப்புகள், 25 ஆண்டுகாலத் தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துவன.
     
    நாட்குறிப்பால் வெளிப்படும் சமுதாயச் சிறப்புகள்:
            ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு, 18ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகத்தைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. அத்துடன், பண்பாடு, சமயம், சாதி, நீதி, வணிகம், நம்பிக்கைகள் முதலான பல்வேறு கூறுகள் அடங்கிய நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளது.
     
    தண்டனைகள்:
            பல்வேறு குற்றக் காரணங்களுக்காக மரண தண்டனை வழங்கல், காதறுத்தல், சாட்டையடி, கிடங்கில் போடுதல் முதலிய தண்டனைகள் அக்காலத்தில் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வீடுகளில் திருடிவரும் கும்பல் பிடிபட்டபோது, அவர்களுள் தலைமைத் திருடனைக் கடைத்தெருவில் தூக்கில் தொங்கவிட்டனர். ஏனைய இருவருக்கும் காதுகளை அறுத்து, ஐம்பது கசையடிகள் தரப்பட்டன.
     
    ஈரமும் இரக்கமும்:
            1745ஆம் ஆண்டு 21ஆம் நாள் வியாழக்கிழமை மாலைப்பொழுதில் வீசிய பெருங்காற்று, புதுச்சேரியைச் சூறையாடியது. இப்பேரிடர் புதுச்சேரியில் நிகழ்ந்தபோது மக்கள் அனைவரும் உணவும் நீரும் இன்றி வாடினர். அப்போது ஒழுகரையிலே கனகராயர், பெருஞ்சோறு அளித்துத் தமிழரின் இரக்கத்தையும், ஈரத்தையும் வெளிப்படுத்தியதை, ஆனந்தரங்கர் பெருமிதத்துடன் பதிவு செய்துள்ளார்.
     
    அரசியல் செய்திகள்:
            தென்னிந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு அரசியல் நிகழ்வுகளை ஆனந்தரங்கர் பதிவு செய்துள்ளார். தேவனாம்பட்டணத்தைக் கைப்பற்றுவதற்காக ஆங்கிலேயருடன் பிரெஞ்சு அரசு நடத்திய படையெடுப்பு, புகழ்பெற்ற ஆம்பூர் படையெடுப்பு. ஆங்கிலேயர் புதுச்சேரியை முற்றுகை யிட்டது என, வரலாற்றாசிரியர்போல நாட்குறிப்பில் விளக்கிக் கூறியுள்ளார்.
     
    முடிவுரை:
    தாம் வாழ்ந்த காலகட்டத்தின் நாகரிகப் புதையலாக நாட்குறிப்பைப் பயன்படுத்திய ஆனந்தரங்கர், 12.01.1761இல் மறைந்தார். அந்தக் காலகட்டத்தில் நடந்த அனைத்துச் செய்திகளையும் ஒன்று தவறாமல் நல்ல பாஷையில் எழுதி வைத்துள்ளார் ஆனந்தரங்கர் என்று மகாகவி பாரதி கூறுவது முற்றிலும் உண்மை.
     
    2. 'மதீனா நகரம் ஒரு வளமான நகரம்' என உமறுப்புலவர் வருணிக்கும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
     
            மதீனா நகரில், உயரத்தில் இமயமலைக்கு ஒப்பு எனக் கூறத்தக்க அளவில் மாடங்களைக் கொண்ட மாளிகைகள் அமைந்திருந்தன. கடைவீதியில் கொள்வோரும் கொடுப்போரும் எழுப்பும் ஒலி, கடலோசை போல் இருந்தது.
            ஒரே சீராய் அமைந்திருந்த தெருக்கள், பூமியை அளப்பனபோல நீண்டு அமைந்திருந்தன. கட்டுவதற்கு இனி இடம் இல்லை எனக் கூறத்தக்க வகையில் மாடங்களைக் கொண்ட கட்டடங்கள் நெருக்கமாய் அமைந்திருந்தன.
            எண்ணிய பொருள் உறுதியாய்க் கிட்டும் என்று கூறத்தக்க அளவிற்கு எல்லாப் பொருள்களும் மதீனா நகரில் விற்கப்பட்டன. நகருக்குப் புதிதாய் வந்திருப்பவரை முகமலர்ந்து, இன்முகத்தோடு உபசரித்து, விருந்து அளித்தனர் மதீனா மக்கள்.
            பகை, வறுமை, நோய் முதலான தீமைகள் அகன்று, நல்லாட்சி பெற்று மதீனா மக்கள் வாழ்ந்தனர். முத்துகளால் ஆன மாலையும், தங்கம், வைரம், வைடூரியத்தால் ஆன நகைகளும் விற்பனைக்காக மதீனா நகரத் தெருக்களில் சிதறிக் கிடந்தன. இவ்வாறு மதீனா நகரத்தை ஒரு வளமான நகரமாக உமறுப்புலவர் வருணிக்கிறார்.
     
    3. நர்த்தகி நடராஜின் நேர்காணல்வழி அறிந்தவற்றைத் தொகுத்து அளிக்க.
     
    முன்னுரை :
            தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சி கொண்ட நர்த்தகி நடராஜ் நாட்டியக் கலையில் தனக்கெனத் தனியிடம் பிடித்தார். இவரின் நேர்காணல் வழி நாம் அறிந்த கருத்துகளை இங்குக் காண்போம்.
     
    இளமைப்பருவம் :
            நர்த்தகி நடராஜ், மதுரை அனுப்பனாடியைச் சேர்ந்தவர். ஐந்து வயதுமுதல் தோழியான சக்தியுடன் இவர் நடனம் பயின்றார். அந்த நட்பு இன்றுவரை தொடர்கின்றது. சக்தி, நர்த்தகியின் முன்னேற்றத்திற்குப் பெருந்துணையாக இருந்தாள்.
     
    மகளாகவே ஏற்ற கிட்டப்பா:
            இவள் வைஜெயந்திமாலாவின் நடனத்தால் ஈர்க்கப்பட்டு அவருடைய குருவான தஞ்சை கிட்டப்பாவிடம் பரதம் கற்க ஆசையுடனும் ஆர்வமுடனும் சென்றாள். அவர் இசைவு தரவில்லை; என்றாலும், ஓர் ஆண்டு விடாமுயற்சி செய்து இறுதியில் கிட்டப்பாவின் மாணவி ஆனார். கிட்டப்பா இவரைத் தம் மகளாகவே ஏற்று, அவரது இல்லத்திலேயே தங்க வைத்துப் பரதம் கற்றுத் தந்தார். அவரே 'நர்த்தகி' என்று நடராசனுக்குப் பெயர் சூட்டினார்.
     
    அன்றும் இன்றும்:
            இவர் தன்னுடைய குழந்தைப் பருவத்திலேயே தனக்குள் மறைந்திருக்கும் பெண்மையைக் கண்டு கொண்டார். எவ்விதத் தடையுமில்லாமல் 'அவளை' உணர்வதற்கு இவரின் நடனம் உதவியது. தொடக்கத்தில் திரைப்பட நடனம் இவரை ஈர்த்து, அதைப் பார்த்து நடனம் ஆடத்தொடங்கினார். ஆனால், நிகழ்ச்சிகளுக்காக ஆடியபோது மூன்று மணிநேரம்கூட ஆடினார். சில சமயங்களில் நாட்டியத்திற்கான கருத்தை ராகதாளத்துடன் அறிமுகம் செய்தார்.
     
    பரதம் விழிப்புணர்வு ஆயுதம்:
            இவர் திருநங்கையர்க்கான இடம் என்ன என்பதை அறிய இலக்கியங்களைப் படிக்க ஆரம்பித்தார். எல்லாக் காலகட்டத்திலும் திருநங்கையர் இருந்துள்ளதை இலக்கியங்கள் இவருக்கு எடுத்துக் கூறின. சிலப்பதிகாரம் குறிப்பிடும் ஆடற்கலையில் வேளிர் ஆடல் முக்கியமானது என்பதை உணர்ந்தவர் தொல்காப்பியத்திலும் திருநங்கையர் இருந்ததற்கான சான்றுகள் இருப்பதை அறிந்தார். தமிழச்சி என்பதில் தாளாத பெருமை கொண்டவர் பரதம் ஆடினார். “பரதமும் ஒருவகை விழிப்புணர்வு ஆயுதம்தான்” என்று கூறும் இவர் பல்வேறு நடன நிகழ்ச்சிகளை உலகெங்கும் நடத்தி வருகிறார்.
     
    அபிநயத்தால் எந்நாட்டிலும் பேசலாம்:
            ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் முழுக்க முழுக்க ஜப்பானியர்கள் மட்டுமே இருந்த அரங்கில், திருவாசகம், தேவாரப் பண்ணிசைகளைப் பரதமாக நிகழ்த்தினார். பரதம், தேவாரம், திருவாசகம் எதுவும் தெரியாத ஜப்பானியர், இவரின் அபிநயத்தால் கண்கலங்கியதும், மௌனமாகக் கவனித்ததும், 
    கரவொலி எழுப்பியதும், இவரின் அபிநயத்திற்குக் கிடைத்த பெருவெற்றியாகும்.
     
    இலக்கியங்களைத் தொடர்ந்து படிப்பவர் :
            தமிழ்வழிக் கல்வி பயின்று, ஆசிரியர்களின் துணையோடு வளர்ந்த நடராஜ், இதழ்களில் எழுத்தாற்ற லையும் இலக்கிய மேடைகளில் பேச்சாற்றலையும் வெளிப்படுத்துகிறார். “நடனமும் வாசிப்புமே தன்னைக் குழந்தையாக வைத்திருக்கின்றன" எனக் கூறும் நடராஜ், திவ்வியப் பிரபந்தம், திருப்புகழ், தேவாரம் ஆகியவற்றை நடனத்தின்மூலம் பரப்புவதோடு, 
    இவ்விலக்கியங்களைப் பற்றித் தொடர்ந்து ஆய்வு செய்தும் வருகின்றார்.
     
    நாட்டியத்தால் வெல்கிறார்:
            மற்ற மானுடரைவிட எல்லாச் சோதனைகளையும் இரண்டு மடங்காக அனுபவிக்கும் நடராஜ், “வலிதான், நான் கொடுத்த விலை” என்கிறார். அகிலனின் 'தாமரை நெஞ்சம்' கதாநாயகி துக்கம் பொங்கி வரும்போதெல்லாம் ஒரு சொம்புத் தண்ணீர் குடிப்பாள். அதுபோல் துயரைத் தீர்க்கத் தான் நாட்டியம் ஆடிவிடுவதாக இவர் கூறுவது, நடனம் இவருடைய வாழ்வோடு ஒன்றிவிட்டது என்பதைக் காட்டுகிறது.
    தாய்மை பெருக்கெடுக்கும் நேரம் :
            இவர் நடத்தும் வெள்ளியம்பலம் அறக்கட்டளை நடனக் கலைக்கூடம் வாயிலாக நூற்றுக்கணக்கான மாணவிகளை உருவாக்கியுள்ளார். தன் அம்மாவால் புறக்கணிக்கப்பட்ட இவரை, மாணவிகள் அனைவரும் 'அம்மா' என்று அழைத்து இவருக்குள் தாய்மை உணர்வைப் பெருக்கெடுக்கச் செய்கின்றனர்.
     
    முதன்முதலாக :
            நர்த்தகி நடராஜ், தன்னுடைய நடனத் திறமையால் அமெரிக்கா, இலண்டன், கனடா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் பயணம் மேற்கொண்டு, தம் பரதத்தால் பல்லாயிரம் மேடைகளை அழகாக்கி உள்ளார். இவர்தான் 'திருநங்கை' என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர். திருநங்கைகளுள் முதன்முதலில் இவர்தான் கடவுச்சீட்டு, தேசியவிருது, மதிப்புறு முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்றவர்.
    முடிவுரை:
            முத்தமிழ் வளர்த்த முல்லை மணக்கும் மதுரையில் பிறந்து, தம் நாட்டியத் திறமையால் இலக்கியங்களையும், பண்பாட்டையும் பரப்பி வருகின்ற நர்த்தகி நடராஜ், தம் வாழ்வின் சாதனைகளால் நம் உள்ளங்களில் நடனமாடிக் கொண்டுள்ளார்.

     

    II. மொழியை ஆள்வோம்

    அ) சான்றோர் சித்திரம்

    இரசிகமணி டி. கே. சிதம்பரநாதர் (1882-1954)
    “தமிழில் எல்லாம் உண்டு; தமிழின் கவிச்சுவைக்கு ஈடுமில்லை இணையுமில்லை; தமிழால் அறிவியல் மட்டுமன்று; அனைத்து இயல்களையும் கற்க முடியும்” எனச் சான்றுகளுடன் எடுத்துச் சொன்ன பெருந்தகை இரசிகமணி டி. கே. சிதம்பரநாதர். இவர், தமது இலக்கிய இரசிகத்தன்மையால் தமிழுக்கும் தமிழருக்கும் புத்துணர்வு ஊட்டியவர். டி. கே. சி.யின் வீட்டுக் கூடத்தில் வட்டவடிவமான தொட்டிக் கட்டில். ஞாயிறுதோறும் மாலை ஐந்து மணிக்குக் கூடிய கூட்டம், இலக்கியத்தைப் பற்றிப் பேசியது. அவ்வமைப்பு, 'வட்டத் தொட்டி' என்றே பெயர் பெற்றது. டி. கே. சி., இலக்கியங்களின் நயங்களைச் சொல்லச் சொல்லக் கூட்டத்திலுள்ள அனைவரும் தங்களை மறந்து இலக்கியத்தில் திளைப்பர். தமிழின் இனிமை என்பது மட்டும் அவர்கள் உள்ளங்களில் நிறைந்திருக்கும். வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிடத் தமிழின்பத்தில் திளைப்பதையே டி.கே.சி. விரும்பினார். தமிழ்க்கலைகள், தமிழ்இசை, தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் சுவையையும் மேன்மையையும் தனித்தன்மையையும் எடுத்துச் சொன்னார். கடிதங்களிலும் அவற்றையே வியந்து எழுதினார். அவர்தம் கடிதங்கள், இலக்கியத் தரம் கொண்டு புதிய இலக்கிய வகையாகவே கருதப்பட்டன. இதய ஒலி, கம்பர் யார்? முதலான நூல்கள
    வினாக்களுக்கு விடையளிக்க.
     
    1. அன்று, அல்ல என்பவற்றுக்கான பொருள்வேறுபாடு அறிந்து தொடர் அமைக்க.
    எழுவாய் ஒருமையாக இருந்தால், குறிப்பு வினைமுற்றாகிய 'அன்று' என்பதைப் பயன்படுத்துக.
    எழுவாய்ப் பன்மையாக இருந்தால், குறிப்பு வினைமுற்றாக 'அல்ல' என்பதைப் பயன்படுத்துக.
    கா : இது சிறந்த விடைத்தாள் அன்று.
    துரித உணவுகள் நல்லன அல்ல.
     
    2. சொல்லச் சொல்ல, திளைப்பர் -இலக்கணக்குறிப்புத் தருக.
    சொல்லச் சொல்ல அடுக்குத்தொடர்
    திளைப்பர் - பலர்பால் எதிர்கால வினைமுற்று.
     
    3. ரசிகர் -தமிழ்ச்சொல் எழுதுக. மாநில மேலவை ஆங்கிலக் கலைச்சொல் தருக.
    ரசிகர் - சுவைஞர்
    மாநில மேலவை - Legislative Council
     
    4. வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிடத் தமிழின்பத்தில் திளைப்பதையே டி.கே.சி. விரும்பினார் விடைக்கேற்ற வினா அமைக்க.
    டி.கே.சி. எத்தொழில் புரிவதைவிட எந்த இன்பத்தில் திளைப்பதையே விரும்பினார்?
     
    5. மேலவை, புத்துணர்வு -இச்சொற்களின் புணர்ச்சி வகையைக் கண்டறிக.
    மேலவை இயல்பு புணர்ச்சி
    மேல் + அவை, 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' என்னும் விதிப்படி, 'மேலவை' என இயல்பாகப் புணர்ந்தது
    புத்துணர்வு - பண்புபெயர்ப் புணர்ச்சி
    புத்துணர்வு - புதுமை + உணர்வு.
    'ஈறுபோதல்' விதிப்படி புது + உணர்வு
    'தன் ஒற்று இரட்டல்' விதிப்படி 'புத்து + உணர்வு'
    'உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்' விதிப்படி 'புத்த் + உணர்வு
    'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' விதிப்படி, 'புத்(த் + உ) ணர்வு' - புத்துணர்வு
    எனவே பண்புப்பெயர்ப் புணர்ச்சி ஆயிற்று.
     

    ஆ) தமிழாக்கம் தருக.

    The folk songs of TamilNadu have in them a remarkable charm just as we find in the folk songs of any other country. But what is special in these Tamil songs is, they not only possess a native charm and the aroma of the soil but have preserved in them a certain literary and artistic quality. This is so because the people who speak the language of these folk songs, the Tamils, have had a great historical past and a wonderful literary tradition. Folk songs are so old and yet so full of life that they are always new and progressively modern. These songs were born several centuries ago; they are being born every generation; they will be born and reborn over and over again!
    விடைகுறிப்பு: 

    தமிழ்நாட்டின் நாட்டுப்புறப் பாடல்கள், பிறநாடுகளின் நாட்டுப்புறப் பாடல்களைப்போன்றே அளவிட முடியாத, கவர்ந்து இழுக்கும் திறன் கொண்டவை. தமிழின் நாட்டுப்புறப் பாடல்களின் சிறப்பு என்னவென்றால், அவை தமக்கே உரிய குணத்தோடு, தாம்வாழும் மண்சார்ந்த மணத்தையும் பெற்றிருப்பதோடு, இலக்கிய மற்றும் கலைப் பண்பின் தரத்தையும் பாதுகாக்கின்றன. இந்த நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும் மக்களின் மொழியான தமிழ், மாபெரும் வரலாற்றுப் பின்னணியையும், வியக்கத்தக்க இலக்கிய வளத்தையும் பாரம்பரியத்தையும் கொண்டு இலங்குகிறது. நாட்டுப்புறப்பாடல்கள் பழமையானவை என்றாலும் அவை வாழ்வோடு நிறைந்திருப்பதால் நவீன உலகிற்கு ஏற்ப வளர்ச்சி பெறுகின்றன. நாட்டுப்புறப் பாடல்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றியவை என்றாலும், ஒவ்வொரு தலைமுறையிலும் அவை புதிதாகப் பிறக்கின்றன. மீண்டும், புதுப் பிறவி எடுக்கும், அவை மீண்டும் மீண்டும் பிறந்துகொண்டே இருக்கும்.

     

    இ) கீழ்க்காணும் பாடலின் முதலடியைக் கவனித்துப் பிற அடிகளில் உள்ள சீர்களை ஒழுங்கு செய்க.

    கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே ஓடையிலேஊறுகின்றதீஞ்சுவைத்தண்ணீரே உகந்ததண்ணீர் இடைமலர்ந்தசுகந்தமணமலரே மேடையிலேவீசுகின்றமெல்லியபூங்காற்றே மென்காற்றில்விளைசுகமேசுகத்திலுறும்பயனே ஆடையிலேஎனைமணந்தமணவாளா பொதுவில் ஆடுகின்றஅரசேஎன் அலங்கலணிந்தருளே.
    விடைகுறிப்பு:
    கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனே ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில் ஆடுகின்ற அரசோன் அலங்கலணிந் தருளே!
     

    ஈ) படித்துப் பார்த்துப் படைத்துக் காட்டுக

    புத்தகத் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு வருகை தந்த சான்றோர் குறித்த அறிமுக உரை :
            பேரன்பு கொண்டோரே! பேரறிவுச் செல்வமே பெருஞ்செல்வம் எனக் கருதி வந்திருக்கும் சான்றோரே! இளைய தலைமுறையே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெரி வித்துக் கொள்கிறேன்.
            புத்தக வாசிப்பை மூச்சுக்காற்றாய்ச் சுவாசித்து வாழ்கின்ற படிப்பாளர்களாகிய உங்கள் முன்பு படைப்பாளர் ஒருவரை, மிகச் சிறந்த பண்பாளரை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்வு கொள்கின்றேன்.
            சிறுவயது முதலாகத் தனக்குப் பெற்றோர்கள் அளித்த சில்லறைகளைச் சேகரித்து, ஆண்டுதோறும் புத்தகம் வாங்கும் வழக்கத்தைக் கொண்டவர். புத்தகங்களோடு வாழ்ந்து வருபவர். புத்தகத்தை வாங்குவதோடு மட்டுமல்லாமல் முழுமையாக அவற்றை வாசிப்பதும், குறிப்பெடுப்பதும் இளைய தலைமுறையினர்க்குத் தன்னம்பிக்கை அளிக்கும் கூட்டங்களில் பேசுவதும் எனப் பல்வேறு திறன்களைப் பெற்றவர்.
            ஷேக்ஸ்பியர் என்னும் மாபெரும் படைப்பாளரின் பிறந்த நாளான ஏப்ரல் 23, உலகம் முழுவதும் புத்தக நாளாகக் கொண்டாடப்படுகிறது. அதற்குக் காரணம் அவரிடம் இருந்த வாசிப்புப் பழக்கமே ஆகும்.
            அவ்வகையில் வாசிப்பையே தம் வாழ்க்கையாய்க் கொண்டிருக்கும் நம் சிறப்பு விருந்தினர், நமக்கெல்லாம் முன்மாதிரியானவர். அவர் வழியில் புத்தக வாசிப்பைத் தொடர்வோம்! புதியதோர் உலகம் படைப்போம்! வெல்வோம்!
    விடைகுறிப்பு:
            "கேடில் விழுச்செல்வம் கல்வி” என்னும் வள்ளுவன் வாக்கை நன்கு தெளிந்த வாசகப் பெருமக்களே! தாய்மார்களே! அவைத்தலைவர் அவர்களே! வணக்கம்!
     
            இன்று நம் பகுதியில் அமைந்துள்ள நூலகத்தில் உறுப்பினராய்ச் சேர்ந்துள்ள புத்தம் புதியவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது.
     
            கல்வி என்பது பள்ளியோடு முடிந்துவிடக்கூடிய ஒன்று அன்று. அது தொடக்க நிலை என்றே கொள்ள வேண்டும். பள்ளி முடித்து வெளியே வந்தபிறகு நாம் படித்தறிய வேண்டியவை எண்ணற்றனவாக உள்ளன. அதற்கான அறிவுச் செல்வத்தை அள்ளித் தரும் அமுதசுரபிதான் நூலகமாகும். எவன் ஒருவன் நூலகத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கின்றானோ அவனே எதிர்காலத்தில் சிறந்த அறிஞனாய், உன்னத மனிதனாய் உருவெடுக்க முடியும்.
             
            இன்று, புதியவர்களுக்கு உறுப்பின அட்டை வழங்கி, உரையாற்றுவதற்காகச் சிறப்பமைந்த கவிஞர் செந்தாமரை அவர்கள் இங்கு வருகை தந்துள்ளார்கள். அவர் நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும், இறைப்பற்றும் நிறைந்தவர். இந்த முப்பற்றும் கொண்டவனே ஒப்பற்ற தமிழன் ஆவான் என, அவர் தம் கவிதைகளில் வலியுறுத்தியுள்ளார். எளிய மக்களுக்கும் தம் கருத்து சென்று சேர வேண்டும் என்னும் நோக்கில் சந்த நடை துள்ளியெழும் செந்தமிழ்ப்பாக்கள் பலவற்றைப் படைத்துள்ளார். அவர் கவிதை நூல்கள் தவழாத கரங்களே தமிழகத்தில் இல்லை எனலாம். அத்தகை அரும்புகழ் படைத்த கவிஞரின் கையால் அட்டைகள் பெறும் உறுப்பினர்கள் நிச்சயம் உயர்நிலை பெறுவீர்கள் என்று கூறி, கவிஞர் அவர்களை உறுப்பினர் அட்டை வழங்கி அறிவுக்கும் சிந்தனைக்கும் விருந்தளிக்கும் உரையை ஆற்ற வருமாறு அன்போடு அழைக்கிறேன்.
     
    நன்றி வணக்கம்!
     

    உ) உங்கள் பகுதி நூலகத்தில் வாசகர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டை வழங்க வருகைதரும் அறிஞர் ஒருவரைக் குறித்து அறிமுக உரை எழுதுக.

    திரண்டுள்ள அனைவருக்கும் வணக்கம்.
     
            நாம் இன்று இங்குத் திரண்டிருப்பதன் நோக்கத்தை அனைவரும் அறிவீர்கள். இன்று, பெருமைக்குரிய ஐயா, அறிவொளி அவர்கள் இங்கு உங்கள் அனைவருக்கும் நூலக உறுப்பினர் அட்டை வழங்க வந்துள்ளார் என்பதை உணர்ந்திருப்பீர்கள். இவரை நான் உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. இருப்பினும் சில கூறி அமைக்கிறேன். இவர் சிறந்த சொற்பொழிவாளர், உன்னதமான எழுத்தாளர், உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குச் சென்று, நம் தமிழின் பெருமையை, தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பைப் பறையறைந்து கொண்டிருப்பவர். இவர் போன்றவர்களை நாம் பெற்றிருப்பது, நம் நாட்டுக்கும் மொழிக்கும் பெருமை சேர்க்கிறது.
     
            இவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் நான் பெருமகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன். இந்த விழாவைப் பற்றிக் குறிப்பிட்டு அழைத்ததும், முகமலர்ச்சியோடு மறுப்புத் தெரிவிக்காமல் வர உடன்பட்டார். இனி அவர் தரும் நூலக அட்டைகளைப் பெற்றுச் சென்று, இந்த நூலகத்திலுள்ள நூல்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று வாசித்து, மகிழ்ச்சி அடையுமாறு வேண்டுகிறேன்.
    ஐயாவுக்கும் உங்களுக்கும் நன்றி. வணக்கம்.
     

    ஊ) இலக்கிய நயம் பாராட்டுக.

    செந்நெல்லும் கரும்பும் விளைந்தனவே - நல்ல
    தேன்பொழி மலர்களும் விரிந்தனவே
    இன்னலும் பசியும் போயொழிக - தேசம்
    எழிலுடன் கூடியே நலமுறுக
    பிரிவுகள் பேசியே பூசலிட்ட பழம்
    பேதமை தனைத்தள்ளி அனைவருமே
    ஒருதனிக் குடும்பமாய் வாழ்ந்திடுவோம் நம்முள்
    ஒற்றுமை ஓங்கிடச் செய்திடுவோம்
    தமிழன் திருநாள் பொங்கலென்றால் - அதில்
    தமிழன் பண்புகள் பொங்குமன்றோ?
    புவியெலாம் சேர்ந்தொரு வீடதிலே யாரும்
    புறம்பிலை என்றசொல் தமிழன்றோ?
    யாதும் ஊரெனச் சாற்றியதும் - மக்கள்
    யாவரும் கேளிர் என்றதுவும்
    மேதினிக் குரைத்தவர் நம்முன்னோர் - இன்று
    வேற்றுமை நாமெண்ணல் சரியாமோ?
                                                -பெ. தூரன்
    ஆசிரியர் குறிப்பு :
    'பெ. தூரன்' என்று சுருக்கப் பெயரில் குறிப்பிடப் பெறுபவர், 'பெரியசாமித் தூரன்' சிறந்த இலக்கியப் புலமையும், ஆழ்ந்த அறிவியல் அறிவும் பெற்றவர். தமிழில் பல நூல்களை எழுதியுள்ளார். குழந்தைகளுக்காகத் தாய்மொழியில் இனிய எளிய பாடல்களை எழுதி, நல்லறிவு புகட்ட முயன்றார். தமிழ்மொழியில் குழந்தைகளுக்கான கலைக்களஞ்சியத்தைப் படைத்தளித்த உழைப்பாளி.
     
    மையக்கருத்து: “இயற்கையைப் போற்ற வேண்டும். அதனால் வளம் பெருகும். உணவுப் பொருள் உற்பத்தி பெருகும். வறுமை போகும் சாதி, சமய வேறுபாடுகளால் சிதைந்து அடிமைப்பட்டதைச் சுட்டிக்காட்டி, அவற்றை நீக்கி அனைவரும் ஒரு குடும்பமாக வாழவேண்டும். மனத்தில் வேற்றுமையை வளர்த்தல் சரியல்ல" என்னும் அறிவுரையை மையக்கருத்தாகக் கொண்டுள்ளது இவர் பாடல்.
    எதுகை: அடிகளிலோ சீர்களிலோ முதலெழுத்து மாத்திரை அளவால் ஒத்திருக்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகை ஆகும். 
    மிழன், தமிழன் - சீர் எதுகை
     
    மோனை: அடிகளிலோ சீர்களிலோ முதலெழுத்து ஒன்றிவருவது எதுகை ஆகும்.
     
    சீர்எதுகை
    ருதனி,ற்றுமை
    மிழன், மிழன்
    புவியெலாம், புறம்பிலை
     
    இயைபு: செய்யுள் அடிகளின் இறுதியில் அமைந்த எழுத்தோ சொல்லோ சீரோ ஒன்றிவரத் தொடுப்பது இயைபு.
     
    சீர் இயைபு: 
    யாதும், யாவரும்
    விளைந்தனவே, விரிந்தனவே
    போயொழி, நலமுறு
    வாழ்ந்திடுவோம், செய்திடுவோம்
    சாற்றியதும், ஏற்றதுவும்
     
    சந்தம்: எளிய சொற்களில் ஓசைநயம் பெறப் பாடி இன்புறுவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளமை, சந்தநயத்தைப் புலப்படுத்தும்.
     
    சுவை: இயற்கையோடு ஒன்றி, மக்கள் பண்பு குறையாமல் ஒற்றுமையுடன் வாழ்வது இன்பம் தரும் என்பது வலியுறுத்தப் பெறுவதால் 'சமனிலை' என்னும் சுவை வெளிப்படுகிறது.
     
    அணி: இப்பாடலில் 'புவியெலாம் சேர்ந்தொரு வீடு' என்ற தொடரில் உருவக அணி பயின்று வந்துள்ளது.
     

    எ) தொடர் மாற்றம்

    1.மூன்று நாள்கள், கல்லூரிக்கு விடுமுறை. மாணவர்கள், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலுக்குச் சென்றனர். சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தனர். (கலவைத் தொடராக மாற்றுக)
    விடைகுறிப்பு:
    மூன்று நாள்கள் கல்லூரிக்கு விடுமுறையாதலால் மாணவர்கள், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலுக்குச் சென்று, சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தனர்.
     
    2. தஞ்சைக் கோவில், எண்பட்டை வடிவில் கட்டப்பட்ட திராவிடக் கலைப்பாணியாகும். (வினாத் தொடராக்குக)
    விடைகுறிப்பு:
    தஞ்சைக் கோவில் எந்த வடிவில் கட்டப்பட்ட, எவ்வகைக் கலைப்பாணி?
     
    3. என்னே! மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் சிற்பக் கலை. (செய்தித் தொடராக்குக)
    விடைகுறிப்பு:
    மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் சிற்பக் கலை மிகவும் அழகானது.
     
    4. நான், வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்குச் செல்வேன். (பொருள்மாறா எதிர்மறைத் தொடராக மாற்றுக)
    விடைகுறிப்பு:
    நான் வாரத்தின் இறுதிநாள்களில் நூலகத்திற்குச் செல்லாமல் இரேன்.
     

    III மொழியோடு விளையாடு

    அ) கருத்துப்படத்தைப் புரிந்துகொண்டு பத்தியாக எழுதுக.

        
            தமிழில் பழமையான இலக்கண நூலைத் தொல்காப்பியர் இயற்றினார். எழுத்து, சொல், பொருள் என்னும் மூவகை இலக்கணத்தைக் கூறும் நூல் தொல்காப்பியம் எனப்படும். இதில் பொருள் இலக்கணம் என்னும் பகுதி, மனிதன் வாழ்வதற்குரிய இலக்கணத்தைச் சொல்கிறது. இவ்வகைப் பொருள் இலக்கணம் தமிழ்மொழிக்கே சிறப்பாக அமைந்துள்ளது. பிறமொழிகளில் மனித வாழ்வியலை விவரிக்கும் பொருள் இலக்கணம் என்பது இல்லை. பொருள் இலக்கணம் அகப்பொருள், புறப்பொருள் என இரண்டு வகைப்படும். அகப்பொருள், தலைவன் தலைவியின் அகவாழ்வையும், புறப்பொருள், யாவருக்கும் சொல்லத்தக்க செய்திகளையும் கொண்டது. அகப்பொருளுள் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவை அடங்கும்.
             
            முதற்பொருள் என்பது நிலம், பொழுது பற்றிக் கூறுவதாகும். பொழுது என்பதைச் சிறுபொழுது, பெரும்பொழுது எனத் தொல்காப்பியம் இரண்டாக வகுக்கின்றது. ஒரு நாளின் ஆறு பிரிவு, சிறுபொழுது, ஓர் ஆண்டின் ஆறு பிரிவு, பெரும்பொழுது என, இந்நூல் பிரித்துக் கூறுகிறது.
     

    ஆ) எண்ணங்களை எழுத்தாக்குக.

    விடைகுறிப்பு:
    மலையில் வாழும் தேனீக்கள் 
    அற்புதம் அதன் தேன்கூடு 
    பலநாள் உழைப்பின் சாரத்தை 
    கொள்ளை அடிக்க எண்ணுகிறான் மனிதன்! 
    சுற்றிச் சுற்றியே தேனைச் சேகரித்த 
    தேனீயின் உழைப்பைச் சுரண்டுகிறான்! 
    உயரே கட்டிய தேன்கூட்டை 
    உடைத்து எறிந்தான் சோம்பேறி! 
    நூலேணி கட்டி மேலேறிக் 
    கூட்டைக் கலைத்தான் கயவன் அவன்! 
    ஏதிலிகளான தேனீக்கள் புகலிடம்தேடி 
    பூமியைச் சுற்றின ஏமாற்றமாய்!
     
     

    இ) புதிர்களுக்கான விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

    (கம்பு, மை, வளை, மதி, இதழ், ஆழி)
     
    1. எலியும் நுழையும்; எழிலரசி கையும் நுழையும்
    விடைகுறிப்பு: 
    எலியும் நுழையும்; எழிலரசி கையும் நுழையும் வளை.
     
    2. சிலம்பம் சுற்றலாம்; கோடைக்குக் கூழாகக் குடிக்கவும் செய்யலாம்
    விடைகுறிப்பு: 
    அடிக்கவும் செய்யலாம்; கோடைக்குக் கூழாகக் குடிக்கவும் செய்யலாம் கம்பு.
     
    3. கண்ணிலும் எழுதலாம்; வெண்தாளிலும் எழுதலாம்.
    விடைகுறிப்பு:  
    கண்ணிலும் எழுதலாம்; வெண்தாளிலும் எழுதலாம் மை.
     
    4. அறிவின் பெயரும் அதுதான்; அம்புலியின் பெயரும் அதுவேதான்
    விடைகுறிப்பு:
    அறிவின் பெயரும் அதுதான்; அம்புலியின் பெயரும் அதுதான் மதி.
     
    5. பூவின் உறுப்பும் நானே; புன்னகையின் பிறப்பிடமும் நானே
    விடைகுறிப்பு: 
    பூவின் உறுப்பும் நானே; புன்னகையின் பிறப்பிடமும் நானே இதழ்.
     
    6. வண்டியையும் இயக்கும்; பெரும் கப்பலையும் தாங்கும்
    விடைகுறிப்பு: வண்டியையும் இயக்கும்; பெரும் கப்பலையும் தாங்கும். ஆழி
     

    IV நிற்க அதற்குத் தக

    நாகரிகம்
    கடைப்பிடிப்பேன்
    கலைவாணன், தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறான். கடைக்குச் சென்ற அவன் தாத்தா, பை நிறையப் பொருள்களைத் தூக்கிக்கொண்டு வருகிறார். சுமை தாங்காது உதவிக்கு அழைக்கிறார். தொலைக்காட்சியில் வைத்தகண் வாங்காமல் நிகழ்ச்சியொன்றினைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவன் என்ன செய்ய வேண்டும்?
    1. கலைவாணன் விரைந்து சென்று தாத்தாவிடம் உள்ள பைகளை வாங்க வேண்டும்.
    2. தாத்தாவை நாற்காலியில் அமரச் சொல்ல 
    வேண்டும்.
    3. அவருக்கு அருந்தத் தண்ணீர் தர வேண்டும்.
    4. மின்விசிறியை இயக்கி அவருக்குக் காற்றுக் கிடைக்க வழி செய்யவேண்டும்.
    உங்களது வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வந்திருக்கிறார். முன்னறி விப்பின்றி வந்திருக்கும் அவர், மிகவும் களைப்புடன் காணப்படுகிறார். நீங்கள் அவரை எவ்விதம் வரவேற்பீர்கள்?

     

    1. அவருக்கு இருக்கை தந்து அமரச் செய்வேன்.
    2. அவர் அருந்த நீர் கொடுப்பேன்.

    3. தேநீர் தயாரித்துக் கொடுப்பேன்.
    4. வீட்டிலுள்ள பழங்களை அவருக்குத் தருவேன்.
    5. அவரைச் சற்று நேரம் படுக்கச் சொல்லி, கட்டில் எடுத்துப் போடுவேன்.

    படிப்போம்; பயன்படுத்துவோம்!

    Document - ஆவணம்
    Translator - மொழிபெயர்ப்பாளர்
    Agreement - ஒப்பந்தம்
    Invasion படையெடுப்பு
    Culture பண்பாடு
    Sailor - மாலுமி
     

    V இலக்கணத் தேர்ச்சி கொள்

    அ)  கீழ்க்காணும் பத்தியில் உள்ள ஆக்கப் பெயர்களை எடுத்தெழுதுக.

    பயிற்சி - 1
    எங்கள் பள்ளியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவிற்குக் காவல்துறை ஆணையாளர், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர், "மாணவர்களாகிய நீங்கள் படிப்பகங்களைப் பயன்படுத்தி விண்ணியல், மண்ணியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். நல்ல நண்பர்களைக் கூட்டாளி ஆக்கிக்கொண்டு, உதவியாள் இல்லாமலே ஒரு நிறுவனத்தின் மேலாளராகவோ முதலாளியாகவோ ஆகலாம்" என்று கூறி, மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
    ஆக்கப்பெயர்கள்:
    1. ஆணையாளர்
    2. அழைப்பாளர்
    3. படிப்பகம்
    4. விண்ணியல்
    5. மண்ணியல்
    6. கூட்டாளி
    7. உதவியாள்
    8. மேலாளர்
    9. முதலாளி.
    பயிற்சி - 2
    அடைப்புக்குள் உள்ள ஆக்கப்பெயர் விகுதிகளைக் கொண்டு, விடுகதைகளுக்குரிய ஆக்கப்பெயர்களைக் கண்டறிக.
     
    1. வேவு பார்த்திடுவான்; ஒசையின்றிச் சென்றிடுவான் (ஆளி)
    விடைகுறிப்பு:
    உளவாளி
     
    2. அறிவைத் தேடிப் போகுமிடம்; உலகம் அறிய உதவுமிடம் (அகம்)
    விடைகுறிப்பு:
    நூலகம்
     
    3. வந்தால் மகிழ்ச்சி இது; உழைத்தால் கிடைக்கும் இது (மானம்)
    விடைகுறிப்பு:
    வருமானம்
     
    4. வேட(ஷ)ம் போட்டவன் வேடதாரி; பட்டம் வாங்கியவன்? (தாரி)
    விடைகுறிப்பு:
    பட்டதாரி
     
    5. வேடம் போட்டவன் வேடதாரி; பட்டம் வாங்கினவன்
    அ) உளவாளி
    ஆ) பட்டதாரி
    இ) வருமானம்
    ஈ) கொடையாள்
    விடைகுறிப்பு:
    ஆ) பட்டதாரி
     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive