7th Tamil - Book Back Answers - Unit 1.5 - Guide

 


    7th Tamil - Book Back Answers - Unit 1.5 - Download

    Tamil Nadu Board 7th Standard Tamil - Unit 1.5: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 1.5 – from the Tamil Nadu State Board 7th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 1.5 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 7 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்  

    I.   கற்பவை கற்றபின்  

    1. ஒன்று முதல் பத்து வரையுள்ள எண்ணுப் பெயர்களைப் பட்டியலிட்டு எழுதுங்கள்; அவற்றில் குற்றியலுகரச் சொற்களை எடுத்து எழுதுங்கள்.
    1. ஒன்று
    2. இரண்டு
    3. மூன்று
    4. நான்கு
    5. ஐந்து
    6. ஆறு
    7. ஏழு
    8. எட்டு
    9. ஒன்பது
    10. பத்து
    விடைகுறிப்பு:

    குற்றியலுகரச் சொற்கள் :
    1. ஒன்று – மென்தொடர்க் குற்றியலுகரம்
    2. இரண்டு – மென்தொடர்க் குற்றியலுகரம்
    3. மூன்று – மென்தொடர்க் குற்றியலுகரம்
    4. நான்கு – மென்தொடர்க் குற்றியலுகரம்
    5. ஐந்து – மென்தொடர்க் குற்றியலுகரம்
    6. ஆறு – நெடில்தொடர்க் குற்றியலுகரம்
    8. எட்டு – வன்தொடர்க் குற்றியலுகரம்
    9. ஒன்ப து – உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
    10. பத்து – வன்தொடர்க் குற்றியலுகரம்

    2. குற்றியலுகர எண்ணுப் பெயர்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.
    விடைகுறிப்பு:

    ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து

    நெடில் தொடர்க் குற்றியலுகரம் – ஆறு
    உயிர் தொடர்க் குற்றியலுகம் – ஒன்பது
    வன்தொடர்க் குற்றியலுகரம் – எட்டு, பத்து
    மென்தொடர்க் குற்றியலுகரம் – ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து

    3. குற்றியலுகர எண்ணுப் பெயர்களின் மாத்திரை அளவைக் கண்டுபிடியுங்கள்.
    விடைகுறிப்பு:
     
    4. கு, சு, டு, து, று ஆகிய குற்றியலுகரத்திதை இறுதியாகக் கொண்ட ஈரெழுத்துச் சொற்களைத் திரட்டுக. 
    விடைகுறிப்பு:
    பாகு.காசு, பாட்டு, பந்து, பயறு, பாக்கு, மாசு, பாடு, காது, பற்று, ஆகு,  தூசு, மாடு, மாது, மாறு .
     

    II. மதிப்பீடு

    கீழ்க்காணும் சொற்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.

    ஆறு, எஃகு, கரும்பு, விறகு, உழக்கு, எட்டு, ஏடு, பந்து, காசு, கொய்து.
    நெடில் தொடர்
    ஆய்தத் தொடர்
    உயிர் தொடர்
    வன் தொடர்
    மென் தொடர்
    இடைத் தொடர்
    ஆறு
    காசு
    ஏடு
    எஃகு
    விறகு
    உழக்கு
    எட்டு
    பந்து
    கரும்பு
    கொய்து
     

    பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக

    1. பசு, விடு, ஆறு, கரு – கரு
    2. பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து – பஞ்சு
    3. ஆறு, மாசு , பாகு , அது – அது
    4. அரசு, எய்து, மூழ்கு, மார்பு – அரசு
    5. பண்பு, மஞ்சு, கண்டு, எஃகு – எஃகு
     
     

    குறுவினா

    1. குற்றியலுகரம்' என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.
    விடைகுறிப்பு:
    குற்றியலுகரம் - குறுமை +இயல் +உகரம் தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும்.

    2. குற்றியலிகரம் என்றால் என்ன? 
    விடைகுறிப்பு:

    முழுமையாக ஒரு மாத்திரை அளவில் ஒலிக்காமல் அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் எனப்படும்.
     

    III மொழியை ஆள்வோம்

    கேட்க

    1. தமிழின் சிறப்பைப் பற்றிய அறிஞர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டு மகிழ்க. உயர்திரு. ச.பாலன் அவர்களின் சொற்பொழிவு:
    விடைகுறிப்பு:

    • மிக மிக உயர்ந்த மொழி தமிழ்மொழி.
    • பேரறிஞர்கள் பலர் தங்கள் நூல்கள் வாயிலாக தமிழ்மொழியின் சிறப்பை விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.
    • ”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றார் மகாகவி பாரதியார்.
    • ‘கம்பனை போல் வள்ளுவரைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்ஙனுமே பிறந்தது இல்லை என்றார் பாரதியார்.
    • பெருமை மிக்க நூல்களும் அறிஞர்களும் சிறப்பித்து பாடிய தமிழ் உலக அளவிலே மிகச் சிறந்த ஒரு மொழியாகப் போற்றப்படுகின்றது.
    • செம்மொழி என்றால் பிறமொழிகளின் தாக்கம் இல்லாமலும் சில மொழிகளுக்கு தாயாகவும் இலக்கண இலக்கிய வளமுடையதாகவும் இருக்க வேண்டும்.
    • கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகியவற்றிற்கு தாய்மொழியாக இருக்கிறது நம் தமிழ்மொழி.
    • தமிழின் பெருமையை விளக்கும் வண்ணம் அறிஞர்கள் பலர் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்கள்.

    கவிக்கோ அப்துல்ரகுமானின் உரை :
    • தமிழ்மொழி பேசுவதற்கு அதிகம் மூச்சு விடவேண்டியது இல்லை
    • தமிழ் உலகத்திலேயே உயர்ந்தமொழி.
    • ஆதி மொழி தொன்மை மொழி தமிழ் மொழியாகும்.
    • இரண்டு நாடுகளின் அரசாங்கமொழி ஸ்ரீலங்கா, சிங்கப்பூர்.
    • மலேசியாவில் ஒரே கல்விமொழி.
    • செம்மொழிகளில் முழுமையான இலக்கண வடிவம் கொண்டது தமிழ்மொழி தொல்காப்பியம்.

    கீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக

    1. நான் அறிந்த பழமொழிகள் 

    அன்னைத் தமிழில் வணங்குகிறேன்! நான் அறிந்த பழமொழிகளைப் பற்றி இங்கு பேச வந்துள்ளேன்.

    1. முயற்சி திருவினையாக்கும் :
    பழமொழி விளக்கம் : 
    முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து எந்தவொரு செயலையும் செய்து வந்தால் வாழ்வில் உயர்வு அடையலாம் என்பதே இப்பழமொழியின் விளக்கம். ‘சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பதை உணர்ந்து தொடர்ந்து முயற்சி செய்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்பதே இப்பழமொழி உணர்த்தும் நீதி.

    2. இளமையில் கல் :

    பழமொழி விளக்கம் :
    மனித வாழ்வில் கல்வி இன்றியமையாதது. ஆனால் கற்க வேண்டிய இளம் வயதில் கல்வி கற்க வேண்டும். இளமையில் மட்டுமே கல்வியை கற்க முடியும், கற்க வேண்டும் என்பது இப்பழமொழியின் நீதியாகும்.

    3. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் :
    பழமொழி விளக்கம் :

    வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்கள் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அந்த சந்தர்ப்பதை தவறவிடாமல் பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும்.

    4. உப்பிட்டவரை உள்ளளவும் நினை :
    பழமொழி விளக்கம் : 
    நாம் பசியால் வாடிய பொழுது நமக்கு உணவளித்தவரை என்றுமே மறக்கக்கூடாது. நம்முடைய உள்ளத்தில் என்றுமே அவர்களை நினைக்க வேண்டும்.

    5. கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு :
    பழமொழி விளக்கம் :

    எனக்கு எல்லாம் தெரியும் என்று செருக்கு கொள்ளக்கூடாது. ஏனெனில் நாம் கற்றுக் கொண்டது நமது கையினைப் போன்ற சிறிய அளவே. கல்லாதது உலகளவு உள்ளது என்பதே இப்பழமொழியின் விளக்கம். எல்லாம் தெரியும் என்ற செருக்கு ஒருவனுக்கு இருக்கக்கூடாது என்பதை உணர்த்துவதே இப்பழமொழியின் நீதியாகும்.

    கட்டுரை எழுதுக.

    தாய்மொழிப் பற்று

    முன்னுரை:
    தாயும் தாய்மொழியும் உலகில் சிறந்தவை.தாய்மொழிப் பற்று பற்றி விரிவாகக் காண்போம்.

    தாய்மொழிப் பற்று:
    • நமது எண்ணங்களை மற்றவர்கள் புரிந்து கொள்ள உதவுவது மொழியாகும்.
    • குழந்தைக்குத் தாய் முதன் முதலில் சொல்லித் தரும் மொழியே தாய்மொழி. குழந்தைகளுக்குத் தாய்மொழி இயற்கையாகவே வரும்.
    • உலகம் போற்றும் சாதனையாளர்கள் அவரவர் தாய்மொழியிலேயே செயல்களைச் செய்து சாதனை படைத்துள்ளனர்.
    • பாரதியார்,காந்தியடிகள்,தாகூர் எனப் பலரும் படைப்புகளைத் தம் தாய்மொழியிலேயேதந்தனர்.
    • வேற்று மொழி மோகம் கொண்டு அலையாமல் தாய்மொழி மீது பற்று வைக்கவேண்டும்.
    • தாய்மொழி வழிக் கல்வி பெறுதலே சிறப்பு என்பதை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
    • தாய்மொழியிலேயே பயில வேண்டும்.

    முடிவுரை:
    புரியாத மொழியில் படிப்பதை விட புரிந்த மொழியில் படிப்பதே சிறந்தது.


    IV மொழியோடு விளையாடு

    தொகைச் சொற்களை விரித்து எழுதுக.

    (எ.கா.) இருதிணை : உயர்திணை, அஃறிணை 
    முக்கனி, முத்தமிழ், நாற்றிசை, ஐந்திணை, அறுசுவை.
    விடைகுறிப்பு:
    முக்கனி : மா, பலா, வாழை
    முத்தமிழ் : இயல், இசை, நாடகம்
    நாற்றிசை : கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
    ஐவகை நிலம்: குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை
    அறுசுவை : இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு
     
     

    இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக.

    (எ.கா.) அரசுக்குத் தவறாமல் வரி செலுத்த வேண்டும்.
                    ஏட்டில் எழுதுவது வரி வடிவம்.
    1. மழலை பேசும் __________ அழகு.
       இனிமைத் தமிழ் ___________ எமது.

    2. அன்னை தந்தையின் கைப்பிடித்துக் குழந்தை ________________ பழகும்.
       அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்குமொழி _______________.
     
    3.நீ அறிந்ததைப் பிறருக்குச் _________.
      எழுத்துகள் தொடர்ந்துநின்று பொருள் தருவது __________.
     
    4. உழவர்கள் நாற்று __________ வயலுக்குச் செல்வர்.
       குழந்தையை மெதுவாக ____________ என்போம்.
    விடைகுறிப்பு:
    1. மழலை பேசும் மொழி அழகு.
       இனிமைத் தமிழ் மொழி எமது.

    2. அன்னை தந்தையின் கைப்பிடித்துக் குழந்தை நடை பழகும்.
       அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்குமொழி நடை 
     
    3.நீ அறிந்ததைப் பிறருக்குச்  சொல்
      எழுத்துகள் தொடர்ந்துநின்று பொருள் தருவது சொல்
     
    4. உழவர்கள் நாற்று  வயலுக்குச் நட செல்வர்.
       குழந்தையை மெதுவாக  நட என்போம்.
     
     

    V நிற்க அதற்குத் தக   

    கலைச்சொற்கள்

    ஊடகம் - Media
    மொழியியல் - Linguistics
    ஒலியியல் - Phonology
    இதழியல் - Journalism
    பருவ இதழ் - Periodical
    பொம்மலாட்டம் - Puppetry
    எழுத்திலக்கணம் - Orthography
    உரையாடல் - - Dialogue


     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive