ஆ) கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைவர்களின் பிறந்த நாள் எந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது
(குழந்தைகள் தினம், மாணவர் தினம், ஆசிரியர் தினம், தேசிய இளைஞர் தினம், கல்வி வளர்ச்சி நாள்)
1. காமராசர் பிறந்த நாள் ………………..
2. டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ……………………
3. அப்துல்கலாம் பிறந்த நாள் ………………………
4. விவேகானந்தர் பிறந்த நாள் ………………..
5. ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் ……………….
விடைகுறிப்பு:
1. கல்வி வளர்ச்சி நாள்
2. ஆசிரியர் தினம்
3. மாணவர் தினம்
4. தேசிய இளைஞர் தினம்
5. குழந்தைகள் தினம்
இ) இரு பொருள் தரக்கூடிய சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்கள் அமையுங்கள்
1. ( நூல், மாலை, ஆறு, படி)
(எ.கா) ஆடை தைக்க உதவுவது நூல்
மூதுரை அற நூல்
விடைகுறிப்பு:
1. மாலை – திருமாலுக்கு அணிவிப்பது துளசி மாலை.
மாலை வெயில் உடலுக்கு நல்லது.
2. ஆறு – சுவைகள் மொத்தம் ஆறு.
வைகையாற்றின் துணையாறுகளுள் ஒன்று மஞ்சளாறு.
3. படி – நூலை எடுத்துப் படி.
மேலே ஏறுவதற்குப் பயன்படுவது படி.
ஈ) பின்வரும் பத்தியைப் படித்து வினாவிற்கேற்ற விடையளிக்கவும்
காமராசரின்
வீட்டுக்குள் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் நுழைய முயன்றனர். ஊழியர்
அவர்களைத் தடுப்பதைக் காமராசர் கவனித்தார். உடனே அவர்களை உள்ளே அழைத்தார்.
“யாரைப் பார்க்க வந்தீங்க?’ என்று அன்புடன் வினவினார். “எங்க அண்ணனுக்குத்
தேர்வுக்குப் பணம் கட்ட அம்மாவிடம் வசதியில்லே. உங்களைப் பார்த்தால்…
”
என்று சிறுமி கூறி முடிப்பதற்குள், “அம்மா அனுப்பி விட்டாரா?” என்று
காமராசர் கேட்டார். “இல்லை நாங்களாகத்தான் வந்தோம். அம்மா அப்பளம் போட்டு
வீடு வீடாகக் கொண்டு போய் வித்துட்டு வருவாங்க. அதில் வரும் வருமானத்தை
வச்சுதான் எங்களைப் படிக்க வைக்கிறாங்க” என்று குழந்தைகள் கூறினர். அதனைக்
கேட்டதும் மாடியேறிச் சென்று பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார்.
மறுநாள்
குழந்தைகள் இருவரும் காமராசரைத் தேடி வந்தனர். “ஐயா தேர்வுக்குப் பணம்
கட்டியாச்சு. இந்த இரசீதை (பற்றுச் சீட்டை) அம்மா உங்களிடம் காட்டிட்டு
வரச் சொன்னாங்க” என்றனர். அதனைக் கேட்டுக் காமராசர் மனம் நெகிழ்ந்தார்.
1. காமராசரின் வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள் ……………
அ) பெற்றோர்
ஆ) சிறுவன், சிறுமி
இ) மக்கள்
ஈ) ஆசிரியர்கள்
விடைகுறிப்பு:
ஆ) சிறுவன், சிறுமி
2. இந்நிகழ்வு சிறுவனது குடும்பத்தின் எப்பண்பை விளக்குகிறது?
அ) ஏழ்மை
ஆ) நேர்மை
இ) உழைப்பு
ஈ) கல்லாமை
விடைகுறிப்பு:
ஆ) நேர்மை
3. மறுநாள் குழந்தைகள் வந்ததும் காமராசர் மனம் ………………….
விடைகுறிப்பு:
நெகிழ்ந்தார்
4. சிறுவனும் சிறுமியும் எதற்காகக் காமராசரின் வீட்டிற்கு வந்தனர்?
விடைகுறிப்பு:
சிறுவனும்
சிறுமியும் தன் அண்ணனுக்குத் தேர்வுக்குக் கட்டணம் கட்டுவதற்குப் பணம்
இல்லாததால் பண உதவி கேட்டு காமராசரின் வீட்டிற்கு வந்தனர்.
5. காமராசர் செய்த உதவி யாது?
விடைகுறிப்பு:
காமராசர் ஏழை மாணவன் ஒருவனுக்குத் தேர்வுக்குக் கட்ட வேண்டிய பணத்தைக் கொடுத்து உதவினார்.
ஈ) பின்வரும் சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்களை உருவாக்குங்கள்
ஆசிரியர்
மாணவன்
|
கவிதை
பாடம்
|
எழுதுகிறார்
|
எழுதுகிறான்
|
படிக்கிறார்
|
படிக்கிறான்
|
கற்பிக்கிறார்
|
விடைகுறிப்பு:
(i) ஆசிரியர் கவிதை எழுதுகிறார்.
(ii) மாணவன் கவிதை எழுதுகிறான்.
(iii) ஆசிரியர் பாடம் படிக்கிறார்.
(iv) மாணவன் பாடம் படிக்கிறான்.
(v) ஆசிரியர் பாடம் கற்பிக்கிறார்.
உ) கட்டுரை எழுதுக
தலைப்பு: காமராசர்
முன்னுரை:
- கல்விக் கண் தந்தவர்,கர்ம வீரர் என்று எல்லாம் பாராட்டப்படுபவர் காமராசர் அவர்கள்.அவரைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
இளமைக்காலம்:
- காமராசர் விருதுப் பட்டியில் 15.7.1903இல் பிறந்தார்.
- இவரின் பெற்றோர் குமாரசாமி, சிவகாமி
- இயற்பெயர்: காமாட்சி
- வறுமை காரணமாக 6 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.
கல்விப்பணி:
- காமராசர் முதல் அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் மூடப்பட்டு இருந்த பள்ளிகளைத் திறக்க ஆணையிட்டார்.
- இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை கொண்டு வந்தார்.
நிறைவேற்றிய திட்டங்கள்:
- மதியஉணவுத் திட்டத்தைக்கொண்டு வந்தார்.
- சீருடைத் திட்டத்தைஅறிமுகம் செய்தார்.
- பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம் கல்லூரிகள்,ஆசிரியப் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றைத் தொடங்கினார்.
- நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம், சர்க்கரை, சிமெண்ட் தொழிற்சாலை ஆகியவற்றை நிறுவினார்.
முடிவுரை:
- காலம் காமராசரை அழைத்தது.அவரின் திட்டங்கள் காலத்தை வென்றது.
III மொழியோடு விளையாடு
அ) கல்விக்கண் திறந்த காமராசர்’ இத்தொடரிலுள்ள எழுத்துகளை மட்டும் பயன்படுத்தி புதிய சொற்களை உருவாக்குங்கள்.
(எ.கா.) கண்.
விடைகுறிப்பு:
1. கல்வி
2. கவி
3. கதி
4. ராசர்
5. விண்
6. திற
7. கா
8. வில்
9. கல்
10. திறந்த
ஆ) முறை மாறியுள்ள சொற்களைச் சரியான இடத்தில் பொருத்திச் சொற்றொடரை நிறைவு செய்க
1.கற்க போற்றிக் கல்வியைப் வேண்டும்
விடைகுறிப்பு:
கல்வியைப் போற்றிக் கற்க வேண்டும்.
2.பயனை கூடாது கற்றதன் மறக்கக்
விடைகுறிப்பு:
கற்றதன் பயனை மறக்கக் கூடாது.
3. ஒருவன் விழுந்தான் மாணவன் மயங்கி
விடைகுறிப்பு:
மாணவன் ஒருவன் மயங்கி விழுந்தான்.
4. நூலகம் இங்கு உள்ளது மின்
விடைகுறிப்பு:
மின் நூலகம் இங்கு உள்ளது
5.சொல்லின் ஆய்தஎழுத்து வராது முதலில்
விடைகுறிப்பு:
சொல்லின் முதலில் ஆய்தஎழுத்து வராது.
இ) செயல் திட்டம்
1. காமராசர் குறித்த செய்திகள் மற்றும் புகைப்படங்களுடன் ஒரு படத்தொகுப்பு (Album) உருவாக்கவும்.
விடைகுறிப்பு:
காமராசர் நாளிதழ்களை படிக்கும்போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்குச் செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினை பற்றி மக்களுடன் விவாதிப்பார்.
காமராசருக்கு மக்களுடன் பேசுவது என்றால் கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் எல்லோரையும் அழைத்து பேசி விட்டுத்தான் தூங்க செல்வார். அவர் பேசும்போது சாதாரண மனிதர் போலவே பேசுவார். காமராசர் 1920-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனார். 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பைப் பயன்படுத்தி, பாராளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராசர் என்பது குறிப்பிடத்தக்கது.
வட இந்திய மக்கள் காமராசரை ‘காலா காந்தி’ என்று அன்போடு அழைத்தார்கள். ‘காலா காந்தி’ என்றால் ‘கறுப்பு காந்தி’ என்று பொருள். சட்டசபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு-செலவு திட்டத்தை முதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமை காமராசரையே சேரும். 12 ஆண்டுகள் காமராசர் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.
காமராசர் இளம் வயதில் கொஞ்ச காலம் காப்புறுதி முகவராக இருந்தார். பின்பு அதை விட்டு விட்டார். காமராசர் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும், ரஷ்யாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசு விருந்தினராக வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன. காமராசர் 1966-ஆம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச் சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லோவாக்கியா, யூகோஸ்லோவாக்கியா, பல்கேரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.
IV நிற்க அதற்குத் தக
அ) கலைச்சொல் அறிவோம்
1. கல்வி – Education
2. தொடக்கப் பள்ளி – Primary School
3. மேல்நிலைப் பள்ளி – Higher Secondary School
4. நூலகம் – Library
5. மின்படிக்கட்டு – Escalator
6. மின்தூக்கி – Lift
7. மின்னஞ்சல் – E – Mail
8. குறுந்தகடு – Compact Disk (CD)
9. மின் நூலகம் – E – Library
10. மின்நூல் – E – Books
11. மின் இதழ்கள் – E – Magazine
0 Comments:
Post a Comment