Tamil Nadu Board 12th Standard Economics - Unit 2: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 2 – Economics from the Tamil Nadu State Board 12th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Economics Unit 2 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 12 students! Prepare well and aim for top scores. Thank you!
இயல் 2:நாட்டு வருமானம்
I. சரியான விடையை தேர்வு செய்க.
அ) நாட்டு வருமானம்
ஆ) உள்நாட்டு வருமானம்
இ) தலைவீத வருமானம்
ஈ) சம்பளம்
விடைகுறிப்பு:
அ) நாட்டு வருமானம்
2. முதன்மைத்துறை என்பது?_____________
அ) தொழில்
ஆ) வணிகம்
இ) வேளாண்மை
ஈ) கட்டடம் கட்டுதல்
விடைகுறிப்பு:
இ) வேளாண்மை
3. எத்தனை முறைகளால் நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஐந்து
ஈ) நான்கு
விடைகுறிப்பு:
ஆ) மூன்று
4. எவற்றைக் கூட்டி வருமான முறையில் நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது?
அ) உற்பத்தி
ஆ) வரி
இ) செலவு
ஈ) வருமானம்
விடைகுறிப்பு:
ஈ) வருமானம்
5. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது மிகப்பெரிய எண்ணாக இருக்கும் ?
அ) செலவிடக்கூடிய வருமானம்.
ஆ) தனிநபர் வருமானம்
இ) NNP
ஈ) GNP
விடைகுறிப்பு:
ஈ) GNP
6. _________ துறையில் செலவு முறையில் நாட்டு வருமானம் மதிப்பிடப்படுகிறது
அ) கட்டடத்துறை
ஆ) வேளாண்மைத் துறை
இ) பணித்துறை
ஈ) வங்கித் துறை
விடைகுறிப்பு:
அ) கட்டடத்துறை
7. மூன்றாம் துறை _________ எனவும் அழைக்கப்படுகிறது.
அ) பணிகள்
ஆ) வருமானம்
இ) தொழில்
ஈ) உற்பத்தி
விடைகுறிப்பு:
அ) பணிகள்
8. ஒரு நாட்டின் _________ செயலை நாட்டு வருமானம் குறிப்பிடுகிறது.
அ) தொழில்
ஆ) விவசாயம்
இ) பொருளாதாரம்
ஈ) நுகர்வு
விடைகுறிப்பு:
இ) பொருளாதாரம்
9. ___________ ஆல் நாட்டு வருமானத்தை வகுத்தால் தலைவீத வருமானம் கண்டறியலாம்.
அ) உற்பத்தி
ஆ) நாட்டின் மக்கள் தொகை
இ) செலவு
ஈ) GNP
விடைகுறிப்பு:
ஆ) நாட்டின் மக்கள் தொகை
10. GNP = ____________ + வெளிநாட்டிலிருந்து வரும் நிகர காரணி வருமானம்
அ) NNP
ஆ) GDP
இ) NDP
ஈ) தனிநபர் வருமானம்
விடைகுறிப்பு:
இ) GDP
11. NNP என்பது ______________
அ) Net National Product
ஆ) National Net Product
இ)National Net Provident
ஈ) Net National Provident
விடைகுறிப்பு:
அ) Net National Product
12. மொத்த மதிப்பிலிருந்து ___________ ஐ கழித்தால் நிகர மதிப்பு கிடைக்கும்?
அ) வருமானம்
ஆ) தேய்மானம்
இ) செலவு
ஈ) வினை முடிவடைந்த பண்டங்களின் மதிப்பு
விடைகுறிப்பு:
ஆ) தேய்மானம்
13. இந்தியாவில் நிதி ஆண்டு என்பது __________ .
அ) ஏப்ரல் 1 முதல் மார்ச் 31
ஆ) மார்ச் 1 முதல் ஏப்ரல் 30
இ) மார்ச் 1 முதல் மார்ச் 16
ஈ) ஐனவரி 1 முதல் டிசம்பர் 31
விடைகுறிப்பு:
அ) ஏப்ரல் 1 முதல் மார்ச் 31
14. NNP யிலிருந்து வெளிநாட்டு காரணிகளின் நிகர வருமானம் கழிக்கப்பட்டால் கிடைக்கும் நிகர மதிப்பு __________.
அ) மொத்த நாட்டு உற்பத்தி
ஆ) செலவிடக்கூடிய வருமானம்
இ) நிகர உள்நாட்டு உற்பத்தி
ஈ) தனிநபர் வருமானம்
விடைகுறிப்பு:
இ) நிகர உள்நாட்டு உற்பத்தி
15. உற்பத்திப் புள்ளியில் NNP யின் மதிப்பு __________ என அழைக்கப்படுகிறது.
அ) காரணி செலவில் NNP
ஆ) அங்காடி விலையில் NNP
இ) காரணி செலவில் GNP
ஈ) தலைவீத வருமானம்
விடைகுறிப்பு:
அ) காரணி செலவில் NNP
16. ஒரு நாட்டின் சராசரி வருமானம் என்பது __________
அ) தனிநபர் வருமானம்
ஆ) தலைவீத வருமானம்
இ) பணவீக்க வீதம்
ஈ) செலவிடக்கூடிய வருமானம்
விடைகுறிப்பு:
ஆ) தலைவீத வருமானம்
17. பணவீக்கத்திற்கு சரிபடுத்தப்பட்ட நாட்டு வருவாயின் மதிப்பு ____________ என அழைக்கப்படுகிறது
அ) பணவீக்க வீதம்
ஆ) செலவிடக்கூடிய வருமானம்
இ) GNP
ஈ) உண்மை நாட்டு வருமானம்
விடைகுறிப்பு:
ஈ) உண்மை நாட்டு வருமானம்
18. கீழ்வருவனவற்றுள் எது தடைபடா ஒட்டக் (Flow) கருத்துரு?
அ) சட்டைகளின் எண்ணிக்கை
ஆ) மொத்த சொத்து
இ) மாத வருமானம்
ஈ) பண அளிப்பு
விடைகுறிப்பு:
இ) மாத வருமானம்
19. PQLI என்பது _________ ன் குறியீடு ஆகும்
அ) பொருளாதார வளர்ச்சி
ஆ) பொருளாதார நலன்
இ) பொருளாதார முன்னேற்றம்
ஈ) பொருளாதார மேம்பாடு
விடைகுறிப்பு:
ஆ) பொருளாதார நலன்
20. மிக அதிக அளவிலான நாட்டு வருமானம் ______ லிருந்து வருகிறது.
அ) தனியார் துறை
ஆ) உள்துறை
இ) பொதுத்துறை
ஈ) எதுவும் இல்லை
விடைகுறிப்பு:
அ) தனியார் துறை
II. கீழ்க்காண்பவற்றுக்கு ஓரிரு சொற்களில் விடையளி
21. நாட்டு வருமானம் இலக்கணம் கூறுக.விடைகுறிப்பு:
- நாட்டு வருமானம் என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள், மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பாகும்.
22. GNP கணக்கிடும் வாய்ப்பாட்டை எழுதுக.
விடைகுறிப்பு:
- GNP = GDP + வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் நிகர வருமானம்
23. NNP க்கும் NDP க்கும் உள்ள வேறுபாடு யாது?
விடைகுறிப்பு:
- NNP = GNP - தேய்மான கழிவு
- NDP = GDP - தேய்மானம்
24.GNP க்கும் NNP க்கும் உள்ள தொடர்பினை எழுது.
விடைகுறிப்பு:
- GNP = GDP + வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் நிகர வருமானம்
- NNP = GNP - தேய்மான கழிவு
25. தனி நபர் வருமானம் என்றால் என்ன?
விடைகுறிப்பு:
- தனி நபர் வருமானம் என்பது ஒரு ஆண்டில் ஒரு நாட்டில் வாழும் ஒவ்வொரு தனி நபருக்கும் பல வழிகளில் இருந்து கிடைக்க பெறும் மொத்த வருமானம் ஆகும்.
26. GDP குறைப்பான் இலக்கணம் தருக.
விடைகுறிப்பு:
- GDP குறைப்பான் என்பது GDP யில் குறிப்பிட்டுள்ள பண்டங்கள், பணிகளின் விலை மாற்றக்குறியீட்டெண் ஆகும்.

27. நாட்டு வருமானம் கணக்கீட்டில் "சொந்த நுகர்வு "எவ்வாறு சிக்கலைத் தருகிறது ?
விடைகுறிப்பு:
- உழவர்கள் தங்களின் சொந்த நுகர்விற்காக உற்பத்தியில் ஒரு பகுதியை ஒதுக்கி வைக்கின்றனர்.
- அங்காடியில் விற்பனை செய்யாமல் ஒதுக்கிய உற்பத்தி நாட்டு வருமானத்தில் சேர்க்கப்பட்டதா என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது.
III. கீழ்வரும் வினாக்களுக்கு ஒரு பத்தி அளவில் பதில் தருக
28. தலைவீத வருமானம் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுக.விடைகுறிப்பு:
- நாட்டு வருமானத்தை மக்கள் தொகையால் வகுக்கக் கிடைப்பது தலா வருமானம் ஆகும்.

29. தனிமனிதர் வருமானத்திற்கும் செலவிடக்கூடிய வருமானத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
விடைகுறிப்பு:
தனிநபர் வருமானம்:
- தனிநபர் வருமானம் என்பது ஒரு ஆண்டில் ஒரு நாட்டில் வாழும் ஒவ்வொரு தனி நபருக்கும் பல வழிகளில் இருந்து கிடைக்கப் பெறும் மொத்த வருமானம் ஆகும்.
- செலவிடக்கூடிய வருமானம்
- செலவிடக்கூய வருமானம் என்பது தனிநபர் வருமானத்திலிருந்து நேர்முகவரிகளைக் கழித்தால் கிடைப்பது செலவிடக்கூடிய வருமானம் அகும்
30. காரணி செலவில் NNP - குறிப்பு தருக.
விடைகுறிப்பு:
- காரணிசெலவில் NNP என்பது உற்பத்தி காரணிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த வருமான செலுத்துதல் ஆகும்.
- காரணிசெலவில் NNP = சந்தை விலையில் NNP - மறைமுக வரி + மானியம்
31. செலவு முறை பற்றி ஒரு சிறு குறிப்பு தருக.
விடைகுறிப்பு:
- இம் முறையில் ஓர் ஆண்டில் சமுதாயத்தில் உள்ளவர்களால் மேற்கொள்ளப்படும் மொத்த செலவுகள் அனைத்தையும் கூட்டி நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது. மொத்த செலவும் கீழ்க்கண்ட முறையில் சமன்பாட்டின் மூலம் கணக்கிடப்படுகிறது.
- GNPC+I+G+ (X-M)
I- தனியார் முதலீட்டுச் செலவு
G - அரசின் கொள்முதல் செலவு
X-M= நிகர ஏற்றுமதி
விடைகுறிப்பு:
- ஒரு துறையின் வெளியீடு மற்றொரு துறையின் உள்ளீடு ஆகச் செல்ல வாய்ப்பு இருப்பதால் ஒரே பொருள் இருமுறை அல்லது பலமுறை கணக்கில் வர வாய்ப்பு உள்ளது. இதற்கு இரு முறை கணக்கிடுதல் என்று பெயர்.
- இதனை தவிர்க்க வினை முடிந்தப் பண்டங்களின் மதிப்பையோ அல்லது ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்ட மதிப்புக் கூட்டலையோ கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
33. நாட்டு வருமானம், பொதுநலன் அகியவற்றைப் பற்றி சுருக்கமாக எழுழக.
விடைகுறிப்பு:
- ஒரு நாட்டின் வளர்ச்சியும் பொருளாதார அந்தஸ்தும் அந்நாட்டின் நாட்டு வருமானத்தைப் பொருத்தே அமைகிறது
- அதிக தலைவீத வருமானம் உடைய நாடு, நல்ல வாழ்க்கைத்தரத்துடன் அதிக பொருளாதார நலனையும் பெற்றதாக இருக்கும்.
- இயற்கை வளங்களை மாசுபடுத்தி அதிக GDP யை பெற்றால் பொருளாதார நலன் குறையும்.
34. நாட்டு வருமானத்தைக் கணக்கிடுதலின் பயன்களைப் பட்டியலிடுக.
விடைகுறிப்பு:
- ஒரு நாட்டின் பொருளாதார செயல்திறன் அல்லது உற்பத்தி செயல்திறனை நாட்டு வருமானம் விளக்குகிறது.
- பொருளாதார வல்லுநர்கள், திட்டமிடுபவர்கள், அரசு, வியாபாரிகள், மற்றும் IMF, உலகவங்கி, போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நாட்டு வருமானம் பற்றிய புள்ளி விவரத்தை பயன்படுத்துகின்றன.
- மக்களின் வாழ்க்கைத்தரம் அதிகரித்துள்ளதா என்பதை கண்டறிய நாட்டு வருமானம் உதவுகிறது.
- ஒரு நாட்டின் வளர்ச்சியின் பயன்படுத்தப்படுகின்றது. அளவை கணக்கிட நாட்டு வருமானம்.
IV. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடையளி
விடைகுறிப்பு:
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நாட்டு வருமானம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டு வருமான பகுப்பாய்வின் முக்கியத்துவம் பின்வருமாறு.
- நாட்டு வருமானம் கணக்கீட்டில் பல்வேறு துறைகளின் முக்கியத்துவம் பற்றியும் நாட்டு வருமானத்தில் அத்துறைகளின் பங்களிப்பு பற்றியும் அறிய முடிகின்றது.
- பணவியல் மற்றும் பொதுநிதிக் கொள்கைகளை உருவாக்கவும், பொருளாதாரத்தைச் சரியான பாதையில் இட்டுச் செல்ல கடைபிடிக்க வேண்டிய சரியான வழிமுறைகளைக் கையாளவும் நாட்டு வருமானம் ஆய்வு உதவுகிறது.
- திட்டமிடுதலுக்கும், திட்டங்களின் விளைவுகளை மதிப்பிடுவதற்கும் நாட்டின் மொத்த வருமானம், உற்பத்தி, சேமிப்பு மற்றும் நுகர்ச்சியின் அளவு ஆகிய புள்ளி விவரங்களை நாட்டு வருமானம் கணக்கீடு அளிக்கின்றது.
- குறுகியகால மற்றும் நீண்டகால பொருளாதார மாதிரிகளை உருவாக்க நாட்டு வருமானம் கணக்கீடு பயன்படுகிறது.
- துறைவாரியான பொருளாதார விவரங்களையும், ஒரு நாட்டில் வட்டாரங்களின் வருமானத்தை ஒப்பிடவும், மற்ற நாடுகளின் வருமானத்தோடு ஒப்பிடவும், நாட்டு வருமானம் விவரங்கள் பயன்படுகின்றன.
- நாட்டு வருமானம் மூலம் தலா வருமானம் கணக்கிடப்படுகிறது. தலாவருமானம் ஒரு நாட்டின் பொருளாதார நலனை அறிய பயன்படுகிறது.
- ஒரு நாட்டில் இருக்கும் பல்வேறு உற்பத்தி காரணிகளின் வருமானப் பகிர்வை தெரிந்து கொள்ள நாட்டு வருமானம் பயன்படுகிறது.
36. நாட்டு வருமானத்தைக் கணக்கிடும் முறைகளை விளக்குக.
விடைகுறிப்பு:
நாட்டு வருமானத்தை மூன்று முறைகளை பயன்படுத்தி அளவிடலாம். அவை
2. வருமான முறை,
3. செலவு முறை
உற்பத்தி = வருமானம் = செலவு
- உற்பத்தி முறை என்பது ஒரு நாட்டின் உற்பத்தியை கணக்கிடுவது ஆகும். இம்முறை சரக்கு முறை என்றும் அழைக்கப்படுகிறது.
- ஒரு குறிப்பிட்ட ஆண்டில் வேளாண்மை, தொழில், வணிகம் ஆகிய துறைகளின் உற்பத்தியின் மொத்தமே நாட்டு உற்பத்தி ஆகும்.
- ஒரு துறையின் வெளியீடு மற்றொரு துறையின் உள்ளீடு ஆகச் செல்ல வாய்ப்பு இருப்பதால் ஒரே பொருள் இருமுறை அல்லது பலமுறை கணக்கில் வர வாய்ப்பு உள்ளது. இதற்கு இரு முறை கணக்கிடுதல் என்று பெயர்.
- இதனை தவிர்க்க வினை முடிந்த பொருள்களின் மதிப்பையோ அல்லது ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்ட மதிப்புக் கூட்டலையோ கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- வருமான முறை என்பது நாட்டு வருமான கணக்கிடலைப் பகிர்வு பகுதியிலிருந்து அணுகுகிறது.
- உற்பத்தி நிலைகளில் உற்பத்திக்காரணிகள் பெற்ற அனைத்து வித ஊதியங்களையும் கூட்டி நாட்டு வருமானத்தைக் கணக்கிடலாம்.
- வருமான முறையானது, காரணிகள் ஈட்டும் வருமான முறை எனவும் அழைக்கப்படுகிறது.
- உள்நாட்டு காரணி வருமானங்களுடன் ஏற்றுமதி, இறக்குமதியின் நிகர வருமானத்தை கூட்டுவதன் மூலம் நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது.
- Y= w+ г+і+ л + (R-P)
- இதில் w= கூலி, r = வாடகை, i = வட்டி, 1 = இலாபம், R = ஏற்றுமதி P = இறக்குமதி
- இம் முறையில் ஓர் ஆண்டில் சமுதாயத்தில் உள்ளவர்களால் மேற்கொள்ளப்படும் மொத்த செலவுகள் அனைத்தையும் கூட்டி நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது.
- தனிமனிதரின் சொந்த சுய நுகர்வுச் செலவுகள், நிகர உள்நாட்டு முதலீடு, அரசின் கொள்முதல் செலவு, முதலீட்டு பொருள்வாங்கும் செலவு மற்றும் நிகர ஏற்றுமதி போன்ற அனைத்து செலவுகளையும் கூட்டி செலவு முறையில் நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது.
- மொத்த செலவும் கீழ்க்கண்ட முறையில் சமன்பாட்டின் மூலம் கணக்கிடப்படுகிறது.
- GNP =C+I+G+ (X-M)
I - தனியார் முதலீட்டுச் செலவு
G -அரசின் கொள்முதல் செலவு
X-M= நிகர ஏற்றுமதி
விடைகுறிப்பு:
1. மாற்றுச் செலுத்துதல்கள்
- ஓய்வூதியம், வேலையின்மைக்கான உதவித்தொகை, மானியங்கள், போன்றவற்றை அரசு அளிக்கிறது. இவை அரசின் செலவுகள் ஆகும். ஆனால் இவைகளை நாட்டு வருவாயில் சேர்ப்பதில்லை.
- தேய்மானம் கொடுப்பளவு, விபத்து இழப்பீடு மற்றும் பழுது கட்டணங்கள் போன்றவற்றை நாட்டு வருவாயிலிருந்து கழிப்பது என்பது மிக எளிதானது அல்ல.
- இந்தியாவில் அதிகமான பெண்கள் வீட்டிலேயே அதிக வேலை செய்கின்றனர். உணவு தயாரித்தல், தையல், பழுது பார்த்தல், துவைத்தல், சுத்தம் செய்தல், குழந்தைகளை வளர்த்தல், போன்ற வேலைகளையும் எந்த வித பண வருமானமும் இன்றியும் நட்பு அன்பு, மரியாதை, போன்ற பணத்தால் மதிப்பிட முடியாத காரணங்களுக்காகவும் வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அர்ப்பணிப்பு நாட்டின் உற்பத்தியில் சேர்க்கப்படுவதில்லை.
- சூதாட்டம், கடத்தல், மற்றும் சட்ட விரோதமாக மதுவை தயாரித்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்படும் வருமானம் நாட்டு வருமானம் வருமானத்தில் சேர்க்கப்படுவது இல்லை.
- உழவர்கள் தங்களின் சொந்த நுகர்விற்காக உற்பத்தியில் ஒரு பகுதியை ஒதுக்கி வைக்கின்றனர். அங்காடியில் விற்பனை செய்யாமல் ஒதுக்கிய உற்பத்தி நாட்டு வருமானத்தில் சேர்க்கப்பட்டதா என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது.
- மூலதன சொத்துக்களான வீடு மற்றும் பிற சொத்துக்கள், பங்குகள், போன்றவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் மூலதன இலாபம் கிடைக்கிறது. நாட்டு வருமான கணக்கீட்டில் மூலதன இலாபம் சேர்க்கப்படுவது இல்லை.
- புள்ளி விவரங்களை சேகரிப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. ஒரே விவரத்தை பல முறை கணக்கில் சேர்ப்பது, நம்பகத்தன்மை, புள்ளி விவரங்கள் கிடைக்காமை, சேகரிப்பவர்களின் திறன் குறைவு, அர்ப்பணிப்பு இன்மை ஆகியவை நாட்டு வருமான கணக்கிடுதலில் சிக்கல்களைத் தரலாம்.
38. பொருளாதார ஆய்வில், சமூகக் கணக்கிடுதலின் அவசியத்தை விவாதி?
விடைகுறிப்பு:
- ஒரு நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறைகளாக பிரிக்கப்படுகிறது. தனி நபர்கள் உள்ளடக்கிய ஒரு குழு அல்லது பல நிறுவனங்கள் சேர்ந்த ஒரு குழு போன்றவைகளுக்கு இடையே நடைபெறும் பொருளாதாரப் பரிமாற்றங்களை ஒரு துறை என்கிறோம்.
i. நிறுவனங்கள்
ii. குடும்பங்கள்
iii. அரசு
iv. வெளிநாட்டு வாணிபம்
V. மூலதனத் துறை
- நிறுவனங்கள் உற்பத்திக் காரணிகளை பணியில் அமர்த்தி பண்டங்கள், பணிகளை உற்பத்தி செய்கின்றன.
- குடும்பங்கள் தங்கள் உழைப்பினை அளித்து கூலியை பெற்று அதன் மூலம் பண்டங்கள், பணிகளை வாங்குகின்றன. அதாவது ஊதியத்தினை பெற்று பண்டங்களை வாங்குகின்றது.
- அரசு துறையில் பல நிலைகள் உள்ளன. கிராமம், மாவட்டம், மாநிலம், மத்திய அரசு என பல நிலைகள் உள்ளன. வரி, தண்டனை, கட்டணம் மற்றும் கடன் மூலமாக அரசு நிதியை திரட்டி பண்டங்களையும் மற்றும் பணிகளையும் வாங்குகிறது. பாதுகாப்பு, பொது சுகாதாரம், கல்வி, ஆகியவற்றை மக்களுக்கு வழங்குவதுதான் அரசின் முக்கிய பணிஆகும்.
- ஏற்றுமதிகள், இறக்குமதிகள் மூலம் கிடைக்கும் வருமானம், வெளிநாட்டு கடன்கள், வெளிநாட்டு மூலதன வருமானம் மற்றும் செலுத்துதல்கள் போன்றவை வெளிநாட்டுத் துறையாக கருதப்படுகின்றன.
- மூலதனத்துறை சேமிப்பையும் முதலீட்டையும் உள்ளடக்கியது. காப்பீட்டு நிறுவனம், வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஆகியவற்றின் பண பரிமாற்றங்கள் இதில் அடங்கும். மூலதனத்துறை நிறுவனங்களாக கருதப்படுவது இல்லை. மாறாக தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்து வருகின்றன.
0 Comments:
Post a Comment