12th Economics - Book Back Answers - Unit 1 - Tamil Medium Guide

  

 


    Plus Two / 12th Economics - Book Back Answers - Unit 1 - Tamil Medium

    Tamil Nadu Board 12th Standard Economics - Unit 1 : Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 1 – Economics from the Tamil Nadu State Board 12th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Economics Unit 1 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 12 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 1:பேரியல் பொருளாதாரம்


    I. சரியான விடையை தேர்வு செய்க.

    1. பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை
    அ) சொத்தும் நலமும்
    ஆ) உற்பத்தியும் நுகர்வும்

    இ) தேவையும் அளிப்பும்
    ஈ) நுண்ணியலும் பேரியலும்
    விடைகுறிப்பு :

    ஈ) நுண்ணியலும் பேரியலும்

    2. "மேக்ரே"(Macro) என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?
    அ) ஆடம்ஸ்மித்
    ஆ) ஜே.எம்.கீன்சு
    இ) ராக்னர் பிரிக்சு
    ஈ) காரல் மார்க்சு
    விடைகுறிப்பு : 

    இ) ராக்னர் பிரிக்சு

    3. "புதிய பேரியல் பொருளியலின் தந்தை" என அழைக்கப்படுபவர் யார்?
    அ)ஆடம்ஸ்மித்
    ஆ) ஜே.எம்.கீன்சு
    இ) ராக்னர் பிரிக்சு
    ஈ) காரல் மார்க்சு
    விடைகுறிப்பு : 

    ஆ) ஜே.எம்.கீன்சு

    4. பேரியல் பொருளாதாரத்தின் வேறு பெயர் யாது?
    அ) விலை கோட்பாடு
    ஆ) வருவாய் கோட்பாடு
    இ) அங்காடி கோட்பாடு
    ஈ) நுண்ணியல் கோட்பாடு
    விடைகுறிப்பு : 

    ஆ) வருவாய் கோட்பாடு

    5. பேரியல் பொருளாதாரம் ஆய்வது.
    அ) தனி மனிதர்களை
    ஆ) நிறுவனங்ககளை
    இ) நாடுகளை
    ஈ) ஒட்டு மொத்தங்களை
    விடைகுறிப்பு : 

    ஈ) ஒட்டு மொத்தங்களை

    6. ஜே.எம்.கீன்சின் பங்களிப்பைக் குறிப்பிடுக.
    அ) நாடுகளின் செல்வம்
    ஆ) பொதுக் கோட்பாடு
    இ) மூலதனம்
    ஈ) பொது நிதி
    விடைகுறிப்பு : 

    ஆ) பொதுக் கோட்பாடு

    7. பொது மட்டத்தில் விலையின் தொடர் உயர்வைக் குறிப்பிடும் கருத்து ஆகும்.
    அ) மொத்த விலைக் குறியீடு
    ஆ) வணிகச் சுழல்
    இ) பணவீக்கம்
    ஈ) நாட்டு வருமானம்
    விடைகுறிப்பு : 

    இ) பணவீக்கம்

    8. பொருளாதார கொள்கைகளின் அவசியத்தைக் குறிப்பிடுக.
    அ)அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்ப்பது
    ஆ) தடைகளை முறியடிப்பது
    இ) வளர்ச்சியை அடைவது
    ஈ) மேலே கூறப்பட்ட அனைத்தும்

    விடைகுறிப்பு: 

    ஈ) மேலே கூறப்பட்ட அனைத்தும்

    9. ஒரு பொருளாதாரத்தின் அடிப்படைப் பொருளாதார நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.
    அ) உற்பத்தியும் பகிர்வும்
    ஆ) உற்பத்தியும் பரிமாற்றமும்
    இ)) உற்பத்தியும் நுகர்வும்
    ஈ)) உற்பத்தியும் சந்தையிடுகையும்
    விடைகுறிப்பு : 

    இ)) உற்பத்தியும் நுகர்வும்

    10. ஒரு பொருளாதாரத்தில் காணப்படுவது
    அ) உற்பத்தி துறை
    ஆ) நுகர்வு துறை
    இ) அரசு துறை
    ஈ) மேலே கூறப்பட்ட அனைத்தும்
    விடைகுறிப்பு: 

    ஈ) மேலே கூறப்பட்ட அனைத்தும்

    11. எந்த பொருளாதாரத்தில், உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது ?
    அ) முதலாளித்துவப் பொருளாதாரம்
    ஆ) சமதருமப் பொருளாதாரம்
    இ) உலகமய அமைப்பு
    ஈ) கலப்புப் பொருளாதாரம்
    விடைகுறிப்பு: 

    அ) முதலாளித்துவப் பொருளாதாரம்

    12. பகிர்வில் சமத்துவத்தை கடைப்பிடிக்கிற பொருளாதார அமைப்பு ஆகும்
    அ) முதலாளித்துவ பொருளாதாரம்
    ஆ) உலகமயத்துவ அமைப்பு
    இ) கலப்புப் பொருளாதாரம்
    ஈ) சமதருமப் பொருளாதாரம்
    விடைகுறிப்பு: 

    ஈ) சமதருமப் பொருளாதாரம்

    13. முதலாளித்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
    அ) ஆடம்ஸ்மித்
    ஆ) காரல் மார்க்ஸ்
    இ) தக்கேரி
    ஈ) ஜே.எம்.கீன்ஸ்
    விடைகுறிப்பு: 

    அ) ஆடம்ஸ்மித்

    14. முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடு ஆகும்
    அ) இரஷ்யா
    ஆ) அமெரிக்கா
    இ) இந்தியா
    ஈ) சீனா
    விடைகுறிப்பு: 

    ஆ) அமெரிக்கா

    15. சமதருமக் கொள்கையின் தந்தை எனப்படுபவர் யார்?
    அ) ஜே.எம்.கீன்சு
    ஆ) காரல் மார்க்சு
    இ)ஆடம்ஸ்மித்
    ஈ) சாமுவேல்சன்
    விடைகுறிப்பு: 

    ஆ) காரல் மார்க்சு

    16. தனியாரும், அரசும் சேர்ந்து பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாதார அமைப்பை குறிப்பிடும் பதம் ஆகும்.
    அ) முதலாளித்துவப் பொருளாதாரம்
    ஆ) சமதருமப் பொருளாதாரம்
    இ) உலகமயத்துவ பொருளாதாரம்
    ஈ) கலப்புப் பொருளாதாரம்
    விடைகுறிப்பு: 
    ஈ) கலப்புப் பொருளாதாரம்

    17. ஒரு குறிப்பிட்ட காலத்தில் (point of time) குவிந்த சரக்குகளின் அளவை குறிப்பிடும் பதம் ஆகும்.
    அ) உற்பத்தி
    ஆ) இருப்பு
    இ) மாறிலி
    ஈ) ஓட்டம்
    விடைகுறிப்பு:
     
    ஆ) இருப்பு

    18. கீழ்வருவனவற்றுள் தடைபடா ஓட்ட மாறிலியைக் கண்டுபிடி.
    அ) பண அளிப்பு
    ஆ) சொத்துக்கள்
    இ) வருமானம்
    ஈ) வெளிநாட்டுச் செலாவணி இருப்பு
    விடைகுறிப்பு: 

    இ) வருமானம்

    19. இரு துறை மாதிரியில் உள்ள இரு துறைகளைக் குறிப்பிடுக
    அ) குடும்பங்களும் நிறுவனங்களும்
    ஆ) தனியாரும் பொதுத்துறையும்
    இ) உள்நாட்டு, வெளிநாட்டுத் துறைகள்
    ஈ) நிறுவனங்களும் அரசும்
    விடைகுறிப்பு:

    அ) குடும்பங்களும் நிறுவனங்களும்

    20. திறந்துவிடப்பட்ட பொருளாதாரத்தின் சுழல் ஒட்ட மாதிரி என்பது ஆகும்
    அ) இருதுறை மாதிரி
    ஆ) முத்துறை மாதிரி
    இ) நான்கு துறை மாதிரி
    ஈ) மேல் சொல்லப்பட்ட அனைத்தும்
    விடைகுறிப்பு: 

    இ) நான்கு துறை மாதிரி

    II. கீழ்க்காண்பவற்றுக்கு ஓரிரு சொற்களில் விடையளி

    21. பேரியல் பொருளியலின் இலக்கணம் தருக.
    விடைகுறிப்பு:

    • பேரியல் பொருளாதாரம் என்பது ஒட்டு மொத்தங்களாகிய நாட்டு வருமானம், வேலைவாய்ப்பு, நாட்டு உற்பத்தி முதலானவற்றை உள்ளடக்கியது.
    • பேரியல் பொருளாதாரத்தை வருவாய் கோட்பாடு எனவும் அழைப்பர்.

    22. பணவீக்கம் என்ற பதத்தின் பொருள் தருக.ள்
    விடைகுறிப்பு:

    • பணவீக்கம் என்பது பொதுவான விலை அளவு தொடர்ந்து அதிகரிப்பதை குறிப்பதாகும்.

    23. "பொருளாதாரம் " என்பதன் பொருள் யாது?
    விடைகுறிப்பு:

    • பொருளாதாரம் என்கிற கருத்தினை ஏ.ஜே.பிரவுண் என்பவர் "மக்கள் தங்கள் பிழைப்பை அமைத்து கொள்ளும் முறையை குறிப்பது" என வரையறுத்துள்ளார்.

    24. வளர்ச்சி நிலை அடிப்படையில் பொருளாதாரங்களை வகைப்படுத்துக.
    விடைகுறிப்பு:

    1. வளர்ந்த பொருளாதாரம்
    2. வளர்ச்சிகுன்றிய பொருளாதாரம்
    3. வளராத பொருளாதாரம்
    4. வளரும் பொருளாதாரம்

    25. முதலாளித்துவம் என்றால் என்ன?
    விடைகுறிப்பு:

    • உற்பத்தி நடவடிக்கைகள் தனியார் வசம் இருக்கும்.
    • இலாப நோக்கம் கொண்டது.

    26. பொருளாதார மாதிரியின் இலக்கணம் தருக.
    விடைகுறிப்பு:

    • மாதிரி என்பது உண்மை சூழலை எளிமையாக பிரதிபலிப்பது ஆகும்.
    • மாதிரி என்பது பொருளாதாரம் எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்குகிறது.

    27. "வருமான சுழல் ஓட்டம் "- வரையறு.
    விடைகுறிப்பு:

    • ஒரு பொருளாதாரத்தின் வருமான சுழல் ஒட்ட மாதிரியானது அந்த பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கிடையே உள்ள தொடர்பினை விளக்குவதாகும்.
     

    III. கீழ்வரும் வினாக்களுக்கு ஒரு பத்தி அளவில் பதில் தருக

    28. பேரியல் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக.
    விடைகுறிப்பு:

    1. ஒரு பொருளாதார அமைப்பின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை புரிந்து கொள்ள உதவுகிறது.
    2. எதிர்கால சிக்கல்களைப் புரிந்து கொள்ளவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பேரியல் பொருளாதாரம் பயன்படுகிறது.
    3. நடப்புப் பிரச்சினைகளை அறிவியல் பூர்வ விசாரணை மூலம் அறிய பேரியல் பொருளாதாரம் வாய்ப்பளிக்கிறது.

    29. பொருளாதார முறைகளின் வகைகளை குறிப்பிடுக.
    விடைகுறிப்பு:
    பொருளாதார முறை மூன்று வகைப்படும்:

    1. முதலாளித்துவ பொருளாதார முறை
    2. சமதருமப் பொருளாதார முறை
    3. கலப்புப் பொருளாதார முறை

    30. முதலாளித்துவத்தின் சிறப்பினை வரிசைப்படுத்துக.
    விடைகுறிப்பு:

    1. தானாக இயங்குதல்
    2. வளங்களைத் திறமையாக பயன்படுத்துதல்
    3. கடின உழைப்பிற்கு வெகுமதி
    4. பொருளாதார முன்னேற்றம்
    5. நுகர்வோர் இறையாண்மை
    6. மூலதன ஆக்க வீதம் அதிகரித்தல்
    7. புதிய தொழில் நுட்ப முன்னேற்றம்

    31. சமதரும குறைகளைக் கூறுக.
    விடைகுறிப்பு:

    1. சிகப்பு நாடா முறையும் அரசு அலுவலர்களும்
    • அனைத்து முடிவுகளையும் அரசு அமைப்புகளே எடுப்பதால், அரசு அலுவலர்கள் பலரின் அனுமதி பெற வேண்டி, கோப்புகள் ஒரு மேஜையிலிருந்து மற்றொன்றுக்கு செல்ல எடுக்கும் கால அளவு அதிகமாகிறது. இதனால் சிகப்பு நாடா முறை ஏற்படுகிறது.
    2. ஊக்கமில்லாமை
    • சமதருமத்தின் மிகப்பெரிய குறை என்பது, இந்த முறையில் திறமைக்கு எந்த ஊக்கமும் அளிப்பதில்லை. எனவே உற்பத்தி திறனும் பாதிக்கப்படும்.
    3. தெரிவு செய்வதில் சுதந்திரம் குறைவு
    • பண்டங்கள் மற்றும் பணிகளை நுகர்வதில் தெரிவு செய்யும் சுதந்திரம் நுகர்வோரால் அனுபவிக்க முடியாது

    32. கலப்புப் பொருளாதாரத்தின் முக்கிய இயல்புகளை எடுத்தெழுதுக.
    விடைகுறிப்பு:

    1. பொதுத்துறையும், தனியார் துறையும் இணைந்திருக்கும்
    • கலப்பு பொருளாதாரத்தில் தனியார் துறைகள், பொதுத்துறைகள் ஆகிய இரண்டும் இணைந்திருக்கும். தனியார் துறை இலாப நோக்கத்திற்காகவும் பொதுத்துறை சமூக நலனுக்காகவும் செயல்படும்.
    2. பொருளாதாரத் திட்டமிடல்
    • அரசினால் தயாரிக்கப்படும் தேசிய திட்டங்களை தனியார் துறையும் பொதுத்துறையும் மதித்து பின்பற்றும்.
    3. சுதந்திரமும் கட்டுப்பாடும்
    • வளங்களை உரிமை கொண்டாடவும், பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்து பகிரவும் தனியாருக்குச் சுதந்திரம் இருந்தாலும் கூட, அனைத்து பொருளாதார நடவடிக்கைகளின் ஒட்டு மொத்தக் கட்டுப்பாடும் அரசிடமே காணப்படும்.

    33. முதலாளித்துவத்தையும் சமதருமத்தையும் வேறுபடுத்துக.
    விடைகுறிப்பு:
    வ.
    எண்
    முதலாளித்துவம்
    சமதருமம்
    1
    தனியார் உரிமை
    பொது உரிமை
    2
    இலாபம்
    சமூக நலன்
    3
    தடையில்லா சந்தை முறை
    ஒன்றிய அரசின் திட்டமுறை
    4
    சமனற்ற நிலை
    சமநிலை
    5
    தனியார் நிறுவனம்
    அரசு நிறுவனம்

    34. இருதுறை சுழல் ஒட்ட மாதிரியினை விளக்குக.
    விடைகுறிப்பு:

    • இல்லத்துறை மற்றும் நிறுவனத்துறை என்ற இரு துறைகள் மட்டுமே காணப்படும்.
    1. இல்லத்துறை:
    • இல்லத்துறைதான் பண்டங்கள், பணிகளை வாங்கும் ஒரே துறையும், நிலம், உழைப்பு, மூலதனம் மற்றும் தொழில்அமைப்பு ஆகிய உற்பத்தி காரணிகளை அளிக்கும் ஒரே துறையும் ஆகும்.
    2. நிறுவனத்துறை:
    • நிறுவனத்துறையானது பண்டங்கள் பணிகளை இல்லத்துறைக்கு விற்பனை செய்வதன் மூலம் வருவாயை ஈட்டுகின்றது. இல்லத்துறைக்கு சொந்தமான நிலம், உழைப்பு, மூலதனம் மற்றும் அமைப்பு ஆகிய உற்பத்திக்காரணிகளை பணியமர்த்துகிறது.


    IV. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடையளி

    35. பேரினப் பொருளியலின் பரப்பெல்லையை விவரி.
    விடைகுறிப்பு:

    • பேரியல் பொருளாதாரத்தின் பரப்பெல்லை மிகப்பெரியதாகவும் பல முக்கிய பகுதிகளை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது.
    நாட்டு வருமானம்:
    • நாட்டு வருமானம் கணக்கிடுதல், நாட்டு வருமானத்தில் பல துறைகளின் பங்கு முதலானவை பேரியல் பொருளாதார பகுத்தாய்வின் அடிப்படை கூறுகளாகும்.
    பணவீக்கம்:
    • பணவீக்கம் என்பது பொதுவான விலை அளவு தொடர்ந்து அதிகரிப்பதை குறிப்பதாகும். மொத்த விலை குறியீட்டெண், மற்றும் நுகர்வோர் விலை குறியீட்டெண் போன்ற விலை குறியீட்டெண்களைப் பயன்படுத்தி மொத்த விலை அளவை மதிப்பிடுவது அவசியமாக இருக்கறிது.
    வாணிபச் சுழற்சி:
    • பொதுவாக எல்லா நாடுகளும் வணிக ஏற்றத் தாழ்வாலும், வணிக சுழற்சியலும் ஏற்படும் சிக்கல்களைச் சந்திக்கின்றன. மொத்த பொருளாதார காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் வணிகச் சுழற்சி மாற்றங்களைத் (செழிப்பு, பின்னிறக்கம், மந்தநிலை, மீட்பு) தெரிந்து கொள்ள முடிகிறது.
    வறுமையும் வேலையின்மையும்:
    • வளங்கள் நிறைந்த நாடுகளிலும் வறுமையும் வேலையின்மையும் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. இச்சிக்கல்களுக்குத் தீர்வு காண, வளங்களை ஒதுக்கீடு செய்யவும், சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பேரியல் பொருளாதாரம் உதவுகிறது.
    பொருளாதார வளர்ச்சி:
    • பேரியல் பகுத்தாய்வின் மூலம் தான் ஒரு பொருளாதார அமைப்பின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம், அவற்றைத் தீர்மானிக்கும் காரணிகள் ஆகியவற்றை புரிந்து கொள்ள முடியும்.
    பொருளாதார கொள்கைகள்:
    • பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதற்குப் பேரியல் பொருளாதாரம் உதவுகிறது.  
    • அடிப்படை சிக்கல்களுக்குத் தீர்வு காணவும், தடைகளை தகர்த்தெறியவும், வளர்ச்சியை அடைவதற்கும் பொருளாதாரக் கொள்கைகள் தேவைப்படுகின்றன.

    36. நடவடிக்கைகள் அடிப்படையில் ஒரு பொருளாதார அமைப்பு செயல்படுவதை விவரி.
    விடைகுறிப்பு:
    1. அடிப்படை நடவடிக்கைகள்:

    • ஒரு பொருளாதாரத்தின் அடிப்படை நடவடிக்கைகள் உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகும். இந்த இரு நடவடிக்கைகளுக்கு பல்வேறு பிற நடவடிக்கைகள் உதவுகின்றன. இந்த நடவடிக்கைகளின் தலையாய நோக்கம் வளர்ச்சியை அடைவதாகும்.
    • இந்த பரிமாற்ற நடவடிக்கையானது உற்பத்திக்கும், நுகர்வு பணிகளுக்கும் உதவுகின்றது. இந்த நடவடிக்கைகள் பல்வேறு பொருளாதாரம், பொருளாதாரமற்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்படுகின்றன.
    2. வரைபடம்:
    3. முக்கிய பொருளாதார நடவடிக்கைகள்:
    • போக்குவரத்து, வங்கிப்பணி, திட்டமிடல், அரசின் கொள்கை மற்றும் பிற பணிகள் ஆகும்
    • 4. முக்கிய பொருளாதாரமற்ற நடவடிக்கைகள்
    • சுற்றுச் சூழல், ஆரோக்கியம், கல்வி, பொழுது போக்கு, ஆட்சிமுறை, நெறிப்படுத்துதல் போன்றவை ஆகும்.
    • 5. பொருளாதாரத்தின் வெளி நடவடிக்கைகள்
    • இறக்குமதி, ஏற்றுமதி, பன்னாட்டு உறவுகள், குடியேற்றம், இடப்பெயர்ச்சி, பன்னாட்டு முதலீடு, பன்னாட்டு மாற்று வருவாய் போன்றவை பொருளாதார அமைப்பின் மொத்த செயல்பாட்டையும் பாதிக்கின்றன.

    37. முதலாளித்துவம், மற்றும் சமத்துவம், ஆகியவற்றின் இயல்புகளை ஒப்பிடுக.
    விடைகுறிப்பு:
    தன்மைகள்
    முதலாளித்துவம்
    சமத்துவம்
    உற்பத்தி மூலங்களின் உரிமை
    தனியார் உரிமை
    பொது உரிமை
    பொருளாதார நோக்கம்
    இலாபம்
    சமூக நலன்
    மைய பிரச்சினைகளின் தீர்வு
    தடையில்லா சந்தை முறை
    ஒன்றிய அரசின் திட்டமுறை
    அரசின் பங்கு
    மூலப்பொருட்கள் கட்டுப்பாடு மட்டும்
    முழு ஈடுபாடு

     

    வருமானப் பங்கீடு
    சமனற்ற நிலை
    சமநிலை
    நிறுவன தன்மை
    தனியார் நிறுவனம்
    அரசு நிறுவனம்
    பொருளாதார சுதந்திரம்
    முழுமையான சுதந்திரம்
    சுதந்திரமின்மை

     

    முக்கிய பிரச்சனை
    சமமின்மை
    திறனின்மை

     38. முதலாளித்துவம், சமத்துவம், கலப்புத்துவம் இவற்றின் தன்மைகளை ஒப்பிடுக.
    விடைகுறிப்பு:

     





    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive