10th Social Science - Book Back Answers - Geography Unit 4 - Tamil Medium Guides

  


 


    SSLC / 10th Social Science - Book Back Answers - Geography Unit 4 - Tamil Medium

    Tamil Nadu Board 10th Standard Social Science - Geography Unit 4: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 4 – Geography from the Tamil Nadu State Board 10th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Geography Unit 4 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!


    அலகு 3:இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

    I. சரியான விடையைத் தேர்வு செய்க.

    1. மாங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
    அ) சேமிப்பு மின்கலன்கள்
    ஆ) எஃகு தயாரிப்பு
    இ) செம்பு உருக்குதல்
    ஈ) பெட்ரோலிய சுத்திகரிப்பு
    விடைகுறிப்பு:

    ஆ) எஃகு தயாரிப்பு

    2. ஆந்த்ரசைட் நிலக்கரி ……………. கார்பன் அளவை கொண்டுள்ளது.
    அ) 80% – 95%
    ஆ) 70% க்கு மேல்
    இ) 60% – 70%)
    ஈ) 50% க்கும் குறைவு
    விடைகுறிப்பு:

    அ) 80% – 95%

    3. பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் ………………………
    அ) ஆக்ஸிஜன்
    ஆ) நீர்
    இ) கார்பன்
    ஈ) நைட்ரஜன்
    விடைகுறிப்பு:

    இ கார்பன்

    4. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் ……………………..
    அ) சேலம்
    ஆ) சென்னை
    இ) மதுரை
    ஈ) கோயம்புத்தூர்
    விடைகுறிப்பு:

    ஈ) கோயம்புத்தூர்

    5. இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம் ……………………..
    அ) குஜராத்
    ஆ) இராஜஸ்தான்
    இ) மகாராஷ்டிரம்
    ஈ) தமிழ்நாடு
    விடைகுறிப்பு:

    இ மகாராஷ்டிரம்

    6. மிக அதிகமாக கிடைக்கக்கூடிய ஆற்றல் வளம் …………………..
    அ) உயிரி சக்தி
    ஆ) சூரியன்
    இ) நிலக்கரி
    ஈ) எண்ணெய்
    விடைகுறிப்பு:

    ஆ) சூரியன்

    7. புகழ் பெற்ற சிந்திரி உரத் தொழிலகம் அமைந்துள்ள மாநிலம் ………………..
    அ) ஜார்கண்ட்
    ஆ) பீகார்
    இ) இராஜஸ்தான்
    ஈ) அசாம்
    விடைகுறிப்பு:

    அ) ஜார்கண்ட்


    8. சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது ………………..
    அ) போக்குவரத்து
    ஆ) கனிமப்படிவுகள்
    இ) பெரும் தேவை
    ஈ) மின்சக்தி கிடைப்பது
    விடைகுறிப்பு:

    ஆ) கனிமப்படிவுகள்
     

    II. பொருத்துக.

    1.
    பாக்சைட்
    சிமெண்ட்
    2.
    ஜிப்சம்
    வானூர்தி
    3.
    கருப்பு தங்கம்
    மின்சாதனப் பொருள்கள்
    4.
    இரும்பு தாது
    நிலக்கரி
    5.
    மைக்கா
    மேக்னடைட்
    விடைகுறிப்பு:
     
    1.
    பாக்சைட்
    வானூர்தி
    2.
    ஜிப்சம்
     
    சிமெண்ட்
    3.
    கருப்பு தங்கம்
    நிலக்கரி
    4.
    இரும்பு தாது
    மேக்னடைட்
    5.
    மைக்கா
    மின்சாதனப் பொருள்கள்
     

    III. சுருக்கமான விடையளிக்கவும்.

    1. வளத்தை வரையறுத்து அதன் வகைகளை குறிப்பிடுக.
    விடைகுறிப்பு:

    வளம் மற்றும் அதன் வகைகள்:
    • இயற்கையில் இருந்து பெறப்பட்டு உயிரினங்களால் பயன்படுத்தப்ப வளம் என்று அழைக்கப்படுகிறது. அனைத்துமே
    i. புதுப்பிக்க இயலும் வளங்கள்.
    ii. புதுப்பிக்க இயலாத வளங்கள்.

    2. கனிமங்கள் மற்றும் அதன் வகைகள் யாவை?
    விடைகுறிப்பு:
     
    கனிமங்கள் மற்றும் அதன் வகைகள்:
    • ஒரு குறிப்பிட்ட வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளைக் கொண்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற இயற்கை மூலங்களே கனிமங்கள் ஆகும்.
    i. உலோகக் கனிமங்கள்.
    ii. அலோகக் கனிமங்கள்.
     
    3.  மெக்னீசியத்தின் பயன்களை குறிப்பிடுக.
    விடைகுறிப்பு:
     
    மெக்னீசியத்தின் பயன்கள்:
    • ஒரு டன் இரும்பு எஃகு உற்பத்தி செய்வதற்கு 10 கிலோ மாங்கனீசு தேவைப்படுகிறது.
    • வெளுக்கும் தூள், பூச்சிக் கொல்லிகள், வண்ணப் பூச்சிகள், மின்கலன்கள் தயாரிக்க.

    4. இயற்கை எரிவாயு என்றால் என்ன?
    விடைகுறிப்பு:
     
    இயற்கை எரிவாயு:
    • இயற்கை எரிவாயு பெட்ரோலிய பகுதிகளுடன் இணைந்து காணப்படுகிறது.
    • இயற்கையாக உருவாகும் ஒரு நீர்ம கரிம வாயு. மீத்தேன் வாயு அதிகம் உள்ளது.
    • சமையல் எரிவாயு, வாகன எரிபொருள், மின் உற்பத்தி தயாரிக்க பயன்படுகிறது.
     
    5.நிலக்கரியின் வகைகளை அதன் கரிம அளவுகளுடன் குறிப்பிடுக.
    விடைகுறிப்பு:
     
    நிலக்கரியின் வகைகளும் அதன் கரிம அளவுகளும்:

    • ஆந்தரசைட் -80 முதல் 90 சதவீதம்.
    • பிட்டுமினஸ் - 60 முதல் 80 சதவீதம்.
    • பழுப்பு நிலக்கரி - 40 முதல் 60 சதவீதம்.
    • மரக்கரி - 40 சதவீதத்திற்கும் குறைவு.

    6.  இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளைக் குறிப்பிடுக.
    விடைகுறிப்பு:
     
    இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகள்:
    • மேற்கு வங்கம், அசாம், பீகார், ஒடிசா, ஆந்திரா, உத்திரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர்.
    • மேற்கு வங்கம் ஹூக்ளி, டிட்டகார், ஜகட்டட், பட்ஜ்-பட்ஜ், ஹவுரா மற்றும் பத்ரேஸ்வர்.

    7.இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி பகுதிகளைக் குறிப்பிடுக.
    விடைகுறிப்பு:
     
    இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி பகுதிகள்:

    மேற்கு கடற்கரை பகுதி:
    • மும்பை ஹை எண்ணெய் வயல், குஜராத் கடற்கரை, பேஸ்ஸைம் எண்ணெய் வயல்.
    • அலியாபெத் எண்ணெய் வயல், அங்கலேஸ்வர், காம்பே லூனி பகுதிகள்.

    கிழக்கு கடற்கரை பகுதி:
    • பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு, சர்மா பள்ளத்தாக்கு, திக்பாய் எண்ணெய் வயல்.
    • நாகர்காட்டியா எண்ணெய் வயல், மன்னார் வளைகுடா, பலேஷ்வர் கடற்கரை.



    IV. வேறுபடுத்துக. 

    1. புதுப்பிக்க இயலும் வளங்கள் மற்றும் புதுப்பிக்க இயலா வளங்கள் 
    விடைகுறிப்பு: 
    புதுப்பிக்க இயலும் வளங்கள்
    புதுப்பிக்க இயலா வளங்கள்
    இயற்கையான முறையில் மீட்டுருவகாக்கம் செய்து கொள்வது.
    இயற்கையான முறையில் மீட்டுருவகாக்கம் செய்ய இயலாது.
    வற்றாத இயற்கை வளங்கள்.
    வற்றும் இயற்கை வளங்கள்.
    உதாரணம் - சூரிய ஆற்றல், ஓத சக்தி, காற்று சக்தி, உயிரி ஆற்றல்.
    உதாரணம் - நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கைவாயு, இரும்புத் தாது.
     
    2. உலோகம் மற்றும் அலோக கனிமங்கள்.
    விடைகுறிப்பு:  
    உலோக கனிமங்கள்
    அலோக கனிமங்கள்
    ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களைக் கொண்டிருக்கும்.
    இவ்வகை கனிமங்களில் உலோகத் தன்மை இருப்பதில்லை.
    தாது படிவங்களாக உள்ளன.
    புதை படிவங்களாக உள்ளன.
    உலோக கனிமங்கள் - இரும்பு, தாமிரம், மாங்கனீசு, பாக்சைட், நிக்கல், காரியம், துத்தநாகம், தங்கம்.
    அலோக கனிமங்கள் - மைக்கா, சுண்ணாம்பு, ஜிப்சம், நைட்ரேட், நிலக்கரி, பெட்ரோலியம்.
     
    3. வேளாண் சார்ந்த மற்றும் கனிமம் சார்ந்த தொழிலகங்கள். 
     விடைகுறிப்பு:  
    வேளாண் சார்ந்த தொழிலகங்கள்
    கனிமம் சார்ந்த தொழிலகங்கள்
    வேளாண் உற்பத்தி பொருட்களை மூலப்பொருட்களாக கொண்டது.
    உலோக மற்றும் அலோக கனிமங்களை மூலப்பொருட்களாக கொண்டது.
    உதாரணம் - பருத்தி, சணல், பட்டு நெசவாலைகள், சர்க்கரை ஆலைகள்.
    உதாரணம் இரும்பு எஃகு தொழிற்சாலை.
    அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
    ஆடம்பரமானப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
     
    4. சணல் ஆலைகள் மற்றும் சர்க்கரை ஆலைகள்.
     விடைகுறிப்பு:  
    சணல் ஆலைகள்
    சர்க்கரை ஆலைகள்
    சணல் பயிரில் இருந்து ஒரு வகை இழை நார் பிரித்தெடுத்தல்.
    கரும்பு, சர்க்கரை பொருட்கள் அடங்கிய பயிரில் இருந்து சர்க்கரை தயாரித்தல்.
    சணல் பயிரிடும் பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளன.
    கரும்பு பயிரிடும் பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளன.
    இந்தியாவின் இரண்டாவது பெரிய நெசவாலைத் துறையாகும்.
    இந்தியாவின் இரண்டாவது பெரிய வேளாண்சார் தொழில் துறையாகும்.
     

    V. ஒரு பத்தியில் விடையளிக்கவும்   

    1. இந்தியாவில் உள்ள பருத்தி நெசவாலைகளின் பரவல் பற்றி எழுதுக.

    ந்தியாவில் உள்ள பருத்தி நெசவாலைகளின் பரவல்:
    • இந்தியாவில் தற்பொழுது மொத்தம் 1719 பருத்தி நெசவாலைகள் அமைந்துள்ளன.
    • இந்தியாவில் பருத்தி நெசவாலைகளின் பரவல் - மகாராஷ்டிரம், குஜராத், மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு.
    •  மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதியில் பருத்தி ஆலைகள் செரிந்து காணப்படுகிறது.
    • மும்பை மாநகரம் இந்தியாவின் "மான்செஸ்டர்” என்று அழைக்கப்படுகிறது.
    • தமிழ்நாட்டில் தற்பொழுது மொத்தம் 435 பருத்தி நெசவாலைகள் அமைந்துள்ளன.
    • தமிழ்நாட்டில் பருத்தி நெசவாலைகளின் பரவல் - ஈரோடு, திருப்பூர், கரூர், சென்னை, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, சேலம் மற்றும் விருதுநகர்.
    • தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் மட்டுமே 200 பருத்தி நெசவாலைகள் உள்ளன.
    • கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.
     
    2. இந்தியத் தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பற்றி எழுதுக.
    விடைகுறிப்பு:
     
    இந்தியத் தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள்: 
    • இந்தியத் தொழிலகங்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளன. அவற்றில் சில முக்கியப் பிரச்சினைகள் கீழே பட்டியிலிடப்பட்டுள்ளன.
    • மின் பற்றாக்குறை மற்றும் சீரற்ற மின் வினியோகம்.
    • தொழிலகங்கள் நிறுவுவதற்கு ஏற்ற பரந்த நிலபரப்பு இல்லாமை.
    • கடன் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள்.
    • கடனுக்கான அதிக வட்டி விகிதம்.
    • மலிவான ஊதியத்திற்கு வேலையாட்கள் கிடைக்காமை.
    • ஊழியர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் தொழில் முறை பயிற்சிகள் இல்லாமை.
    • தொழிற்பேட்டைகளுக்கருகில் வசிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாமை.
     
     

    VI. இந்திய வரைப்படத்தில் கீழ்க்காண்பவற்றை குறிக்கவும்

    9th Social

     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive