12th Economics - Book Back Answers - Unit 7 - Tamil Medium Guides

  

 


    Plus Two / 12th Economics - Book Back Answers - Unit 7 - Tamil Medium

    Tamil Nadu Board 12th Standard Economics - Unit 7 : Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 7 – Economics from the Tamil Nadu State Board 12th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Economics Unit 7 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 12 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 7:பன்னாட்டுப் பொருளியல்


    I. சரியான விடையை தேர்வு செய்க.

    1. இரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம் என்பது
    அ) வெளிவாணிகம்
    ஆ) உள்வாணிகம்
    இ) மண்டலங்களுக்கிடையான வாணிகம்
    ஈ) உள்நாட்டு வாணிகம்
    விடைகுறிப்பு: 
    அ) வெளிவாணிகம்

    2. கீழ்க ண்டவற்றுள் வாணிகத்தை தீர்மானிக்கும் காரணி எது?
    அ) ஒரு பண்டத்தின் மேம்பாட்டு கால கட்டம்
    ஆ) உற்பத்தி காரணிகளின் ஒப்பீட்டு விலை
    இ) அரசாங்கம்
    ஈ) மேற்கண்ட அனைத்தும்
    விடைகுறிப்பு: 

    ஈ) மேற்கண்ட அனைத்தும்

    3. பன்னாட்டு வாணிகம் உள்நாட்டு வாணிகத்திலிருந்து வேறுபடக் காரணம்
    அ) வணிகக் கட்டுப்பாடுகள்
    ஆ) உற்பத்தி காரணிகள் இடம் பெயர இயலாமை
    இ) நாடுகளின் கொள்கை வேறுபாடுகள்
    ஈ) மேற் சொன்ன அனைத்தும்
    விடைகுறிப்பு: 

    ஈ) மேற் சொன்ன அனைத்தும்

    4. நாடுகள் பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபட அடிப்படை காரணம்
    அ) ஒரு நாடு ஒரு குறிப்பிட்ட பண்டத்தையும் வேறு நாடு மற்றொரு பண்டத்தையும் உற்பத்தி செய்ய விரும்புகிறது
    ஆ) உற்பத்தி வளங்கள் நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுடன் பகிரப்பட்டுள்ளன.
    இ) பன்னாட்டு வாணிகம் இலாபக் குவிப்பு வாய்ப்பை அதிகப்படுத்துகிறது
    ஈ) நாடுகளில் நிலவும் வட்டி வீதமும் வெவ்வேறு அளவில் உள்ளது
    விடைகுறிப்பு: 

    ஆ) உற்பத்தி வளங்கள் நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுடன் பகிரப்பட்டுள்ளது

    5. புதிய பன்னாட்டு வாணிபக் கோட்பாடு எதன் அடிப்படையில் அமைந்தது?
    அ) முழுமைச் செலவு
    ஆ) ஒப்புமைச் செலவு
    இ) உற்பத்திக் காரணி கோட்பாடு
    ஈ) எதுவுமில்லை
    விடைகுறிப்பு: 

    இ) உற்பத்திக் காரணி கோட்பாடு

    6. பண மாற்று வீதம் நிர்ணயமாகும் சந்தை
    அ) பண சந்தை
    ஆ)அயல்நாட்டுச் செலாவணி
    இ) பங்கு சந்தை
    ஈ) மூலதன சந்தை
    விடைகுறிப்பு: 

    ஆ) அயல்நாட்டுச் செலாவணி

    7. கீழ்கண்ட எந்த பரிமாற்று வீத முறையில் அங்காடி சக்திகளான தேவையும் அளிப்பும் பரி மாற்று வீதத்தை நிர்ணயிக்கின்றன.
    அ) மாறா பண மாற்று வீதம்
    ஆ) மாறுகின்ற  பண மாற்று வீதம்
    இ) நிலைத்த பணமாற்று வீதம்
    ஈ)அரசு ஒழுங்காமைப்பு முறை
    விடைகுறிப்பு: 

    ஆ) மாறுகின்ற பணமாற்று வீதம்

    8. ஏற்றமதி நிகரம் என்பது
    அ) ஏற்றுமதி X இறக்குமதி
    ஆ) ஏற்றுமதி + இறக்குமதி
    இ) ஏற்றுமதி – இறக்குமதி
    ஈ) பணிகள் ஏற்றமதி 
    விடைகுறிப்பு: 

    இ) ஏற்றுமதி - இறக்குமதி

    9. கீழ்கண்டவர்களில் யார் ஒற்றைக் காரணி வாணிப வீதத்தை வடிவமைத்தவர்
    அ) ஜேக்கப் வைனர்
    ஆ) G.S. டோரன்ஸ்
    இ) எப்.டபில்யூ டாசிக்
    ஈ) ஜே. எஸ். மில்
    விடைகுறிப்பு: 

    அ) ஜேக்கப் வைனர்

    10. வாணிப வீதம் பற்றி குறிப்பிடுகின்றது
    அ) பொருள் ஏற்றமதி இறக்குமதி விகிதம்
    ஆ) இறக்குமதி வழி விகிதம்
    இ) ஏற்றுமதி விலை இறக்குமதி விலை விகிதம்
    ஈ) (அ) வும் (இ) யும்
    விடைகுறிப்பு: 

    இ) ஏற்றுமதி விலை இறக்குமதி விலை விகிதம்

    11. சாதகமான வாணிகச் சூழலில் ஏற்றுமதி இறக்குமதியைவிட ஆக இருக்கும்.
    அ) அதிகமாக
    ஆ) குறைவாக
    இ) கிட்டத்தட்ட சமமாக
    ஈ)  சமமாக
    விடைகுறிப்பு: 

    அ) அதிகமாக

    12. இறக்குமதி ஏற்றுமதியைவிட அதிகமாக இருத்தலை கீழ்கண்ட வழிகளில் எது சரி செய்யும்
    அ) சுங்கத் தீர்வையைக் குறைத்தல்
    ஆ) ஏற்றுமதிவரியை அதிகரித்தல்
    இ) ஏற்றுமதிக்கு ஊக்கமளித்தல்
    ஈ) இறக்குமதிக்கு ஊக்கமளித்தல்
    விடைகுறிப்பு: 

    ஆ) ஏற்றுமதி வரியை அதிகரித்தல்

    13. அயல்நாட்டுச் செலுத்துச் சம நிலை உள்ளடக்கிய இனங்கள்
    அ) புலனாகும் பண்டங்கள் மட்டும்
    ஆ) புலனாகாத பணிகள் மட்டும்
    இ) அ மற்றும் ஆ
    ஈ) பண்ட  வாணிகம் மட்டும்
    விடைகுறிப்பு: 

    இ) அ மற்றும் ஆ

    14. அயல்நாட்டுச் செலுத்துச் சம நிலைக் கூறுகள் கீழ் காண்பவற்றில் எவை
    அ) நடப்பு கணக்கு
    ஆ) மையவங்கி இருப்பு
    இ) மூலதன கணக்கு
    ஈ) அ, ஆ, இ மூன்றும்
    விடைகுறிப்பு: 

    ஈ) அ, ஆ, இ மூன்றும்

    15. வாணிகச் சமநிலை அறிக்கையில்
    அ) பண்டப் பரிமாற்றம் மட்டும் பதிவாகிறது
    ஆ) பண்டங்கள் பணிகள் பரிமாற்றங்கள் பதிவாகிறது
    இ) மூலதனம் மற்றும் நிதி பரிமாற்றங்கள் பதிவாகின்றன.
    ஈ) மேற்கண்ட அனைத்தும் பதிவாகிறது
    விடைகுறிப்பு: 

    அ) பண்டப் பரிமாற்றம் மட்டும் பதிவாகிறது

    16. சுற்றுலாவும் வெளிநாட்டுப் பயணமும் தொடர்புடைய பரிமாற்றங்கள் அயல்நாட்டு செலுத்து சமநிலையின் எந்த கணக்கின் கீழ் பதிவாகின்றன.
    அ) பண்டங்கள் வாணிகக் கணக்கு
    ஆ) பணிகள் வாணிகக் கணக்கு
    இ) பரிமாற்றக் கணக்கு
    ஈ) மூலதனக் கணக்கு
    விடைகுறிப்பு: 

    ஆ) பணிகள் வாணிகக் கணக்கு

    17. சுழற்சி அயல்நாட்டுச் செலத்து சமநிலை சமமற்ற நிலைக்கான காரணம்
    அ) வாணிகச் சழற்ச்சியின் மாறுபட்ட கால கட்டம்
    ஆ) வருமானமும் விலை தேவை நெகிழ்ச்சியும் நாடுகளுக்கிடையே வேறுபடுதல்
    இ) நீண்டகாலப் பொருளாதார மாற்றங்கள்
    ஈ) அ மற்றம் ஆ
    விடைகுறிப்பு: 

    ஈ) அ மற்றம் ஆ

    18. கீழ்க்கண்டவைகளில் எவை வெளிநாட்டு நேரடி மூலதனத்திற்கான எடுத்துக்காட்டாக கூற முடியாது?
    அ) வெளிநாட்டில் தன்னூர்தி ஆலை அமைத்தல்
    ஆ) வெளிநாட்டில் செயல்பட்டுக்கொண்டிருக்கிற இரும்பு உருக்கு ஆலையை வாங்குதல்
    இ) வெளிநாட்டு துணி நிறுவனம் வெளியிட்ட பங்கு அல்லது கடன் பத்திரத்தை வாங்குவது
    ஈ) முழு தனி உரிமையுடன் ஒரு புதிய நிறுவனத்தை வெளிநாட்டில் தொடங்குவது
    விடைகுறிப்பு:

     இ) வெளிநாட்டு துணி நிறுவனம் வெளியிட்ட பங்கு அல்லது கடன் பத்திரத்தை வாங்குவது

    19. இந்தியாவில் வெளிநாட்டு நேரடி மூலதனம் அனுமதிக்கப்படாத துறை?
    அ) வங்கி
    ஆ) அணுஆற்றல்
    இ) மருந்து உற்பத்தி
    ஈ) காப்பீடு
    விடைகுறிப்பு: 

    ஆ) அணுஆற்றல்

    20. கோட்பாட்டு அடிப்படையில் வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் நன்மைகளாவன
    அ) பொருளாதார வளர்ச்சி
    ஆ) பன்னாட்டு வாணிக வளர்ச்சி
    இ) வேலைவாய்ப்பும் திறன் அதிகரித்தலும்
    ஈ) மேற்கண்ட அனைத்தும்
    விடைகுறிப்பு: 

    ஈ) மேற்கண்ட அனைத்தும்


    II. கீழ்க்காண்பவற்றுக்கு ஓரிரு சொற்களில் விடையளி

    21. பன்னாட்டுப் பொருளியல் என்றால் என்ன?
    விடைகுறிப்பு:

    • பன்னாட்டு பொருளியல் என்பது பொருட்கள் மற்றும் பணிகளை, நாடுகளுக்கிடையே பரிமாற்றம் செய்வது புற்றிய பொருளியலின் ஒரு பாடப்பிரிவாகும்.

    22. பன்னாட்டு வாணிகம் வரைவிலக்கணம் தருக.
    விடைகுறிப்பு:
    • பன்னாட்டு வாணிகம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையேயான வாணிகம் ஆகும்.
    • இது ஒரு நாட்டின் புவி மற்றும் அரசியல் எல்லைகளைக் கடந்து நடைபெறும் வாணிகமாகும்.

    23. பன்னாட்டு வாணிகத்தின் நன்மைகளில் ஏதேனும் இரண்டு குறிப்பீடுக.
    விடைகுறிப்பு:

    • மக்கள் வாங்கி பயன்படுத்த பலவகையான பொருட்கள் கிடைக்க வழி செய்கிறது.
    • உழைப்பு பகுப்பு மற்றும் பொருள் உற்பத்தியில் தனிதேர்ச்சியடைதலுக்கு உதவுகிறது.
    • போக்குவரத்து வசதிகள் வளரும்.

    24. பன்னாட்டு வாணிகத்தின் அடிப்படைகளை விளக்குவதில் ஆடம் ஸ்மித்துக்கும் டேவிட் ரிக்கார்டோவுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
    விடைகுறிப்பு:

    • ஆடம் ஸ்மித் முழுச் செலவுக் கோட்பாட்டையும், ரிக்கார்டோ ஒப்புமைச் செலவுக் கோட்பாட்டையும் வலியுறுத்துகின்றனர்.

    25. வாணிப வீதத்தினை விளக்குக.
    விடைகுறிப்பு:

    • ஏற்றுமதி பொருளின் விலைக்கும் இறக்குமதி பொருளின் விலைக்கும் இடையிலான விகிதமே வாணிப வீதம் ஆகும். 

    26. வாணிப செலுத்துநிலை பற்றி நீவிர் அறிவது யாது?
    விடைகுறிப்பு:

    • ஒரு நாடு ஒரு குறிப்பிட்ட காலத்தில் உலக நாடுகளுடன் மேற்கொள்ளும் பொருளாதார பரிவர்த்தனைகளை கணக்கியல் முறையில் தொகுத்தளிக்கும் அறிக்கையை அயல்நாட்டுச் செலுத்துநிலை என்கிறோம்.

    27. செலாவணி மாற்று வீதம் என்றால் என்ன?
    விடைகுறிப்பு:

    • ஒரு அலகு அயல் பணத்தை பெறுவதற்கு எத்தனை அலகு உள்நாட்டுப் பணத்தை கொடுக்கிறோம்.

      III. கீழ்வரும் வினாக்களுக்கு ஒரு பத்தி அளவில் பதில் தருக

      41. பன்னாட்டுப் பொருளியலின் உள்ளடக்கத்தை பட்டியலிடுக.
      விடைகுறிப்பு:
      • தூய வாணிபக் கோட்பாடு
      • கொள்கை சச்சரவுகள்
      • பன்னாட்டு வாணிகக் கூட்டமைப்பும் ஒன்றியங்களும்
      • பன்னாட்டு நிதி மற்றும் வாணிப ஒழுங்குபடுத்தும் நிறுவனங்கள்
      • பன்னாட்டு பண நிதியம், உலக வங்கி, உலக வர்த்தக நிறுவனம்

      42. பன்னாட்டு வாணிகத் தொன்மைக் கோட்பாட்டிற்கும் புதிய கோட்பாட்டிற்குமிடையிலான வேறுபாடுகளை எழுது.
      விடைகுறிப்பு:
      தொன்மைப் பன்னாட்டு வாணிபக் கோட்பாடு
      புதிய பன்னாட்டு வாணிபக் கோட்பாடு
       
      உழைப்பைச் சார்ந்த மதிப்புக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.
      பொது மதிப்புக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.
       
      இது ஒரு காரணி (உழைப்பு) மாதிரியாகும்.
      இது இரு காரணி (உழைப்பு மற்றும் மூலதனம்) மாதிரியாகும்.
       
      30. மொத்த மற்றும் நிகர பண்ட பரிமாற்று வாணிப வீதத்தை கருக்கமாக எழுதுக
      விடைகுறிப்பு:

      நிகர பண்டமாற்று வீதம்:
      ஏற்றுமதி விலைகளுக்கும் இறக்குமதி விலைகளுக்கும் இடையிலான விகிதமே நிகர பண்டமாற்றுய வீதமாகும்.
      நிகர பண்டமாற்று வாணிப வீதம் Tn=(PxPm)×100
      மொத்த பண்டமாற்று வீதம்:
      விற்கும் மொத்த இறக்குமதி பொருட்களில் குறியீட்டெண்ணிற்கும். ஏற்றுமதி பொருட்களின் குறியீட்டெண்ணிற்கும் மொத்த ஏற்றுமதி இடையிலான விகிதத்தை 100 ஆல் பெருக்க கிடைக்கும் தொகையே மொத்த பண்டமாற்று வானிப் வீதமாகும்.
      மொத்த பண்டமாற்று வீதம் Tg=(QmQx)×100


      31. வாணிபக் கொடுப்பல் நிலைக்கும் அயல்நாட்டுச் செலுத்து நிலைக்குமிடையிலான ஏதேனும் மூன்று வேறுபாடுகளை பட்டியலிடுக.
      விடைகுறிப்பு:
      வாணியக் கொடுப்பல் நிலை
      அயல்நாட்டு செலுத்து நிலை
      ஒரு நாட்டின் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் பண்டங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு
      ஒரு நாடு குறிப்பிட்ட காலத்தில் உலக நாடுகளுடன் மேற்கொள்ளும் பொருளாதார பரிவர்த்தனை அறிக்கை. 
      பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதியை "புலப்படும் வாணிகம்" எனவும் அழைக்கலாம்.
      இரட்டை கணக்கியல் முறையில் தயாரிக்கப்படும் அறிக்கை

       

       
      32. இறக்குமதி பங்களவு என்றால் என்ன?
      விடைகுறிப்பு:

      • ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் ஒரு பொருளை குறிப்பிட்ட அளவில், குறிப்பிட்ட மதிப்பிற்குள் இறக்குமதி செய்ய அனுமதிப்பது இறக்குமதி பங்களவாகும்
      • அயல்நாட்டு செலுத்து சமமின்மையை நீக்குவதற்கு இது வழி வகுக்கிறது.

      33. மாறுகின்ற பணமாற்று வீதத்தின் பொருள் தருக.
      விடைகுறிப்பு:

      • அந்நிய செலாவணி சந்தை விசைகளான மாறுகின்ற அந்நிய செலாவணிக்கான தேவையும் அளிப்பும் பண மாற்று வீதத்தை நிர்ணயிக்கும் முறையே மாறுகின்ற பண மாற்று  வீதமாகும்.
      • இது மிதக்கும் பணமாற்று வீதம் என்றும் அழைக்கலாம்.

      34. வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் நோக்கங்களை குறிப்பிடும்.
      விடைகுறிப்பு:

      • விற்பனையை விரிவுபடுத்துதல்
      • இயற்கையான வளங்களை கையகப்படுத்துதல்
      • வாணிக பரவலாக்கம்
      • போட்டி இடர்களை குறைத்தல்
       

      IV. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடையளி

      35. உள்நாட்டு வாணிகத்துக்கும் பன்னாட்டு வாணிகத்துக்குமிடையிலான வேறுபாடுகளை விவாதிக்கவும்.
      விடைகுறிப்பு:
      உள்நாட்டு வாணிகம்
      பன்னாட்டு வாணிகம்
      ஒரு நாட்டிற்குள் நடைபெறும் வாணிகம்.
      பல நாடுகளுககிடையே நடைபெறும் வாணிகம்.
      உழைப்பு மற்றும் மூலதனம் ஒரு நாட்டிற்குள் தடையில்லாமல் இடம் பெயரும்.
      உழைப்பு மற்றும் மூலதனம் நாடுகளுக்கிடையே இடம் பெயர்தல் தடைகளுக்குட்பட்டது
      பொருட்கள் மற்றும் பணிகள் இடம் பெயர்தலில் தடை இல்லை .
      பொருட்கள் மற்றும் பணிகள் இடம் பெயர்தலை சுங்கவரி மற்றும் பங்களவு கட்டுப்படுத்துகிறது.
      வாணிபத்தில் ஒரே ஒரு பணம் மட்டுமே பயன் படுத்தப்படுகிறது.
      பலநாட்டு பணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
      வாணிகம் மற்றும் நிதி நடைமுறைகள் ஒரே மாதிரியானவை.
      வாணிகம் மற்றும் நிதி நடைமுறைகள் வேறுபடும்
      போக்கு கொண்டவை.
       
       36. ஒப்புமைச் செலவுக் கோட்பாட்டினை விவரி.
       விடைகுறிப்பு:
       கோட்பாடு:
      • ரிக்கார்டோ இரண்டு பொருட்களை ஒரு நாடு குறைந்த தனி அடக்க செலவில் உற்பத்தி செய்ய முடிந்தாலும் அந்த நாடு மற்ற நாட்டு உற்பத்தி செலவுடன் ஒப்பிட்டு குறைந்த செலவில் உற்பத்தி செய்ய இயலும் பொருள் உற்பத்தியில் தனித்தேர்ச்சி அடைந்து ஏற்றுமதி செய்யலாம்.
      • இதே போன்று எந்த பொருளையும் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய இயலாத நாடு மற்ற நாட்டின் பொருள் உற்பத்தி செலவுடன் ஒப்பிட்டு மிக உயர்வான உற்பத்தி செலவுள்ள பொருள் உற்பத்தியை நிறுத்திவிட்டு அவற்றை இறக்குமதி செய்து பலனடையலாம்.
      எடுகோள்கள்:
      1. இரண்டு நாடுகள் இரண்டு பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
      2. கூலிச் செலவு மட்டுமே உற்பத்தி செலவாகும்.
      3. உழைப்பாளர்கள் அனைவரும் சமமான திறன் பெற்றவர்கள்
      4. உழைப்பு ஒரு நாட்டுக்குள் இடம் பெயர தக்கது.
      5. போக்குவரத்து செலவு கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை
      6. நாட்டின் சந்தையில் நிறைவுப் போட்டி நிலவுகிறது

      எடுத்துக்காட்டு விளக்கம்:
      • ரிக்கார்டோவின் ஒப்புமைச் செலவு கோட்பாட்டினை அமெரிக்காவும் இந்தியாவின் துணி மற்றும் கோதுமை உற்பத்தி செலவுகளை கற்பனை உதாரணங்களாக கொண்டு புரிந்து கொள்ளலாம்.
       37. புதிய பன்னாட்டு வாணிகக் கோட்பாட்டினை விவாதிக்கவும்
       விடைகுறிப்பு:
      கோட்பாடு:
      • ஒப்புமைச் செலவு வேறுபாடே பன்னாட்டு வாணிகத்திற்கான காரணம் என தொன்மைக் கோட்பாடுகளில் காணப்படுகிறது. ஆனால் புதிய வாணிகக் கோட்பாடு ஒப்புமைச் செலவு வேறுபாட்டிற்கான காரணங்களை விளக்குகிறது.
      • கீழ்க்கண்ட இரண்டு காரணங்களால் நாடுகளுக்கிடையே ஒப்புமைச் செலவு வேறுபடுகின்றது.
      1. நாடுகள் பெற்றுள்ள உற்பத்தி காரணிகள் அளவு வேறுபடுகிறது.
      2. உற்பத்திக்குத் தேவைப்படும் உற்பத்தி காரணிகளின் விகிதமும் வேறுபடுகிறது.

      எடுகோள்கள்:
      1. இரண்டு நாடுகள் இரண்டு உற்பத்தி காரணிகளை பயன்படுத்தி இரண்டு விதமான பொருட்களை உற்பத்தி செய்கிறது
      2. நாடுகள் வெவ்வேறு அளவுகளில் உற்பத்தி காரணிகளை பெற்றுள்ளது.
      3. இரண்டு நாடுகளும் ஒரே விதமான உற்பத்தி தொழில் நுட்பத்தை பயன்படுத்துகின்றன.
      4. இரண்டு நாடுகளும் ஒரே இயல்பான தேவையை பெற்றுள்ளன.
      5. இரண்டு நாட்டின் பொருள் மற்றும் காரணிகளுக்கான சந்தையில் நிறைவுப் போட்டி நிலவுகிறது.

       
      38. ஜேக்கப் வைனரால் வடிவமைக்கப்பட்ட வாணிப வீத வகைகளை விவரி 
      விடைகுறிப்பு:
      ஒற்றைக்காரணி வாணிப வீதம் 
      • Tf=(PxPm)Fx இங்கு 
      இரட்டை காரணி வாணிப வீதம்:
      • Tff=(PxPm)(FxFm)

      39. அயல்நாட்டுச் செலுத்துநிலையின் கூறுகளை அட்டவணை வடிவில் விளக்குக.
      விடைகுறிப்பு:

      40. அயல்நாட்டுச் செலுத்துநிலை சமமின்மையின் வகைகளை விவரி.
      விடைகுறிப்பு:
      1. சுழற்சி சமனற்ற நிலை
      2. நீண்டகால சமனற்ற நிலை
      3. கட்டமைப்பு சமனற்ற நிலை

      41. பணமாற்று வீதம் எவ்வாறு இரண்டு முறைகளில் நிர்ணயமாகிறது என்பதை உதாரணத்துடன் விளக்குக.
      விடைகுறிப்பு:
      • ஒரு அலகு அயல்நாட்டுப் பணத்தை பெறுவதற்கு எத்தனை அலகு உள்நாட்டுப் பணத்தை கொடுக்கிறோம் என்பதே பணமாற்று வீதமாகும்.
      பணமாற்று வீதம் நிர்ணய முறைகள்:
      1. நிலையான / மாறாத பண மாற்று வீதம்
      2. மாறுபடும் / நிலையற்ற பணமாற்று வீதம் 

      42. வெளிநாட்டு நேரடி முதலீட்டினால் ஏற்படும் நன்மைகளைக் குறிப்பிடுக.
      விடைகுறிப்பு: 
      1. வெளிநாட்டு நேரடி மூலதனம் அது சென்றடையும் நாட்டின் மூலதன அளவை உயர்த்தி வேலைவாய்ப்பு அளவையும் அதிகரிக்கும்.
      2. நேரடி வெளிநாட்டு மூலதனம் சென்றடையும் நாட்டிற்கு புதிய தொழில் நுட்பத்தையும் கொண்டு வருகிறது
      3. வெளிநாட்டு நேரடி முதலீடு நுழையும் நாட்டின் அரசுக்கு நிறுவன இலாப வரி செலுத்துவதன் மூலம் வருவாயை கொண்டு வருகிறது.
      4. லாபத்தின் ஒரு பகுதியை மறுமுதலீடு செய்வதன் மூலம் தொழில்வளம் பெருகும்.
      5. புதிய தொழில் மேலாண்மை முறைகளை அறிமுகப்படுத்தும்.
      6. ஏற்றுமதியை அதிகப்படுத்தி இறக்குமதிக்கான அவசியத்தை குறைத்து அயல்நாட்டுச் செலுத்துநிலை சமமின்மையை நீக்கும்
      7. போட்டியை உருவாக்கி உள்நாட்டு முற்றுரிமையை தகர்க்கும்
      8. முதலீடு செய்த நாட்டின் உள்நாட்டு உற்பத்தியின்நிகர மதிப்புக் கூடுவது முதலீட்டிலிருந்து கிடைத்த வருவாயைவிட அதிகமாக இருந்தால் வெளிநாட்டு முதலீட்டிலிருந்து கிடைக்கும் தனியார் நிறுவனத்திற்கான லாபத்தை விட சமூகத்துக்கு கிடைக்கும் பலன் அதிகம்.
      9. வெளிநாட்டு நேரடி மூலதனம் முதலீட்டையும் அந்நிய செலாவணியையும் கொண்டு வருவதன் மூலம் சேமிப்பு, முதலீடு இடைவெளியையும் நிரப்ப உதவுகிறது.
      10. உள்நாட்டு துணைத் தொழில் நிறுவனங்கள் வளரவும், வெளிநாட்டு நிறுவனங்களோடு இணைந்து உள்நாட்டு சிறுதொழில்கள் வளரவும் உதவும்.
      11. உள்நாட்டு தொழில் முனைவோர்களை வெளிநாட்டு மூலதனம் மற்ற நாடுகளில் முதலீடு செய்ய தூண்டுகிறது.

       
       
       
       
       





      0 Comments:

      Post a Comment

      Recent Posts

      Total Pageviews

      Code

      Blog Archive