10th Social Science - Book Back Answers - Economics Unit 2 - Tamil Medium Guides

  

 


    SSLC / 10th Social Science - Book Back Answers - Economics Unit 2 - Tamil Medium

    Tamil Nadu Board 10th Standard Social Science - Economics Unit 2: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 2 – Economics from the Tamil Nadu State Board 10th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Economics Unit 2 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!

    அலகு 2:உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

    I. சரியான விடையைத் தேர்வு செய்க.

    1. உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைவர் யார்?
    அ) அமைச்சரவை
    ஆ) தலைமை இயக்குநர்
    இ) துணை தலைமை இயக்குநர்
    ஈ) இவற்றில் எதுவுமில்லை
    விடைகுறிப்பு:

    ஆ) தலைமை இயக்குநர்

    2. இந்தியாவில் காலனியாதிக்க வருகை……………………….
    அ) போர்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு
    ஆ) டச்சு, ஆங்கிலேயர் , டேனிஷ், பிரெஞ்சு
    இ) போர்ச்சுகீசியர், டேனிஷ், டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்
    ஈ) டேனிஷ், போர்ச்சுகீசியர், பிரெஞ்சு, ஆங்கிலேயர், டச்சு
    விடைகுறிப்பு:

    அ) போர்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிலேயர்கள், டேனிஷ், பிரெஞ்சு

    3. காட்(GATT)-இன் முதல் சுற்று நடைபெற்ற இடம் ………………………
    அ) டோக்கியோ
    ஆ) உருகுவே
    இ) டார்குவே
    ஈ) ஜெனீவா
    விடைகுறிப்பு:

    ஈ) ஜெனீவா

    4. இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது?
    அ) 1984
    ஆ) 1976
    இ) 1950
    ஈ) 1994
    விடைகுறிப்பு:

    ஈ) 1994

    5. 1632இல் ஆங்கிலேயர்களுக்கு “கோல்டன் ஃபயர்மான்” வழங்கியவர் யார்?
    அ) ஜஹாங்கீர்
    ஆ) கோல்கொண்டா சுல்தான்
    இ) அக்பர்
    ஈ) ஒளரங்கசீப்
    விடைகுறிப்பு:

    ஆ) கோல்கொண்டா சுல்தான்

    6. வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை (FIP) அறிவித்த ஆண்டு …………
    அ) ஜூன் 1991
    ஆ) ஜூலை 1991
    இ) ஜூலை – ஆகஸ்ட் 1991
    ஈ) ஆகஸ்ட் 1991
    விடைகுறிப்பு:

    இ) ஜூலை – ஆகஸ்ட் 1991


    II. கோடிட்டஇடங்களை நிரப்புக.

    1. ஒரு நல்ல பொருளாதாரம் …………….. விரைவான வளர்ச்சிக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது.
    2. உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் ………………. ஆம் ஆண்டு அமுலுக்கு வந்தது.
    3. ……………… ஆல் உலகமயமாக்கல் என்ற பதம் கண்டுபிடிக்கப்பட்டது.
    விடைகுறிப்பு:
    மூலதனச் சந்தையின்
    ஜனவரி 01 1995
    பேராசிரியர் தியோடோர் லெவிட்


    III. பொருத்துக.

    1
    இந்தியாவில் பன்னாட்டு நிறுவனம்
    1947
    2
    பன்னாட்டு நிதி நிறுவனம் (MNC)
    அயல்நாட்டு வாணிபத்தை செயல்படுத்தல்
    3
    சுங்கவரி, வாணிபம் குறித்த பொது  உடன்பாடு (GATT)
    உற்பத்தி செலவு குறைத்தல்
    4
    8வது உருகுவே சுற்று
    இன்ஃபோசிஸ்
    5
    உலக வர்த்தக அமைப்பு (WTO)
    1986
    விடைகுறிப்பு: 
    1
    இந்தியாவில் பன்னாட்டு நிறுவனம்
    இன்ஃபோசிஸ்
    2
    பன்னாட்டு நிதி நிறுவனம் (MNC)
    உற்பத்தி செலவு குறைத்தல்
    3
    சுங்கவரி, வாணிபம் குறித்த பொது  உடன்பாடு (GATT)
    1947
    4
    8வது உருகுவே சுற்று
    1986
    5
    உலக வர்த்தக அமைப்பு (WTO)
    அயல்நாட்டு வாணிபத்தை செயல்படுத்தல்
     

    IV. குறுகிய விடைதருக. 

    1. உலகமயமாக்கல் என்றால் என்ன?
    விடைகுறிப்பு:

    உலகமயமாக்கல்:

    • உலகமயமாக்கல் என்பது பண்டங்கள் மற்றும் பணிகள், தொழில்நுட்பம், மூலதனம், உழைப்பு ஆகியவற்றின் தடையில்லா ஓட்டத்தில், எந்த தடையும் ஏற்படாமல் உலகின் பல்வேறு பொருளாதாரங்களை ஒருங்கிணைக்கும் செயல்முறை ஆகும்.

    2. உலகமயமாக்கலின் வகைகளை எழுதுக.
    விடைகுறிப்பு:

    உலகமயமாக்கலின் வகைகள்:

    • தொன்மையான உலகமயமாக்கல்.
    • இடைப்பட்ட உலகமயமாக்கல்.
    • நவீன உலகமயமாக்கல்.

    3. பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
    விடைகுறிப்பு:

    பன்னாட்டு நிறுவனங்கள்:

    • பன்னாட்டு நிறுவனம் என்பது நாட்டில் பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்யும் அல்லது கட்டுப்படுத்தும் ஒரு பெருநிறுவனம் ஆகும்.
    • சர்வதேச நிறுவனங்கள் அல்லது பன்னாட்டு அமைப்பு எனவும் கூறலாம்.

    4. உலகமயமாக்கலை மேற்கொள்ளும் சீர்திருத்தங்கள் யாவை?
    விடைகுறிப்பு:
    உலகமயமாக்கலை மேற்கொள்ளும் சீர்திருத்தங்கள்:

    • சில தொழிற்சாலைகளைத் தவிர, மற்றவை தொழில் உரிமம் பெறுவதை நீக்கியது.
    • பொதுத்துறை நிறுவனத்தில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

    5. நியாயமான வர்த்தகம் என்றால் என்ன?
    விடைகுறிப்பு:

    நியாயமான வர்த்தகம்:

    • நியாயமான வர்த்தகம் "விவசாயம் மற்றும் கைவினைப் பொருட்களின் உற்பத்தியாளரும், வாங்குவோரும் தானாக ஏற்றுக் கொண்ட பல சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் குறிக்கோள்களை முன்னெடுக்க வடிவமைக்கப்பட்ட வணிக நடைமுறைகள்" ஆகும்.

    6. "நியாயமான வர்த்தக நடைமுறைகளின்” ஏதாவது ஐந்து கொள்கைகளை எழுதுக.
    விடைகுறிப்பு:

    நியாயமான வர்த்தக நடைமுறைகளின் கொள்கைகள்:

    • பொருளாதார ரிதியில் பின்தங்கிய உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குதல்.
    • நியாயமான விலைக்கு விற்றல். சுற்றுசூழலுக்கு மதிப்பளித்தல். பாலின சமபங்கு காத்தல்.
    • குழந்தை தொழிலாளர் மற்றும் கட்டாயத் தொழிலாளர் இல்லை என்பதை உறுதி செய்தல்.

    7. உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கத்தை எழுதுக.
    விடைகுறிப்பு:

    உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கம் :

    • வேகமான வர்த்தகம், வாழ்க்கைத் தரம், வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
    • புதிய தொழில்நுட்பங்கள், புதிய அறிவியல் ஆராய்ச்சி முறைகள் அறிமுகமாயின.
    • மொத்த உள்நாட்டு உற்பத்தி, வெளிநாட்டின் நேரடி முதலீடு அதிகரித்துள்ளது.


    V. விரிவான விடை தருக.

    1. MNC இன் பரிமாண வளர்ச்சியை கூறி அதன் நன்மைகள் மற்றும் தீமைகளை சுருக்கமாக எழுதுக.
    விடைகுறிப்பு: 
    MNC இன் பரிமாண வளர்ச்சி:
    • 1920 களில் பன்னாட்டு நிறுவனங்கள் முதன் முதலில் இந்தியாவிற்குள் நுழைந்தன.
    • 1950 களுக்கு பிறகு உற்பத்தி மற்றும் பணிகள் துறையில் MNC ஈடுபட தொடங்கின.
    • அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், (ம) ஜெர்மனி இந்தியாவில் MNC வைத்துள்ளன.
    • 1991 இல் இந்தியா அறிவித்த LPG கொள்கை வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்த்தது.
    MNC இன் நன்மைகள்:
    • குறைந்த விலையில் தரமாகவும், பரிவர்த்தனை செலவு இல்லாமலும் உற்பத் உற்பத்தி செய்வது.
    • விலைகளை குறைப்பதால் உலகளாவிய நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது. 
    MNC இன் தீமைகள்:
    • முற்றுரிமையை வளர்க்கவும், சுற்றுசூழலில் தீங்கினை உருவாக்கவும் வாய்ப்புள்ளது.
    • பன்னாட்டு நிறுவனங்கள் சிறிய உள்ளூர் வணிகங்களின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். கங்களின்

    2. "உலக வர்த்தக அமைப்பு" பற்றி எழுதுக.
    விடைகுறிப்பு:
     
    உலக வர்த்தக அமைப்பு (WTO):
    • ஏப்ரல் 1994 இல் WTO அமைப்பதற்கான இறுதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • WTO உடன்படிக்கையை ஏற்று 104 காட் உறுப்பு நாடுகள் கையெழுத்திட்டன.
    • WTO உடன்படிக்கை ஜனவரி 1, 1995 முதல் நடைமுறைக்கு வந்தது.
    • தற்போது உலக வர்த்தக அமைப்பில் 164 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
    • தலைமையகம் - ஜெனிவா. WTO ஐந்து வகையான மானியங்களை  குறிப்பிடுகிறது. 
    உலக வர்த்தக அமைப்பின் முக்கிய நோக்கம்:
    • அயல் நாட்டு வாணிபத்திற்கான விதிகளை அமைத்தல் மற்றும் செயல்படுத்தல்.
    • உலக நாடுகள் இடையே எழுகின்ற வர்த்தகத் தகராறுகளைக் கையாளுதல்.
    • உலக வர்த்தகத்தில் வளர்ந்து வரும் நாடுகளின் வளர்ச்சியைப் பாதுகாத்தல்.

    3. உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக.
    விடைகுறிப்பு: 
    உலகமயமாக்கலின் சவால்கள்:
    • உலகமயமாக்கலில் நன்மைகள் அனைத்து நாடுகளுக்கும் நீடிக்கப்பட வேண்டும்.
    • உலகமயமாக்கல் கொள்கையை ஏற்ற நாடுகள் தன்னிச்சையாக செயல்பட முடியாது.
    • வளர்ந்து வரும் உலகில் இது உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என்ற அச்சம்.
    • தொழில்துறை உலகில் உலகளாவிய போட்டி அதிகரித்து அமைதியற்ற சூழல் நிலவுவது.
    • ஊதியங்கள், தொழிலாளர் உரிமைகள், வேலை வாய்ப்புகள் அடிமட்டத்திற்கு செல்வது.
    • உலகளாவிய சமத்துவமின்மை அதிகரித்து ஒரு இக்கட்டான சூழ்நிலை காணப்படுவது.
    • குழந்தை தொழிலாளர் மற்றும் அடிமைத்தனம் போன்ற நடவடிக்கைகள் அதிகரிப்பது.
    • துரித உணவு பொருட்கள் பெருகி உடல்நலக் குறைவு, நோய் பரவுதல் அதிகரிப்பது.

     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive