அனைவருக்கும் வணக்கம். இன்று 8.7.2021 (வியாழன்) நமது பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் சார்பில் தொடுத்த வழக்கான உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மூத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். பதவி உயர்வு பெற்று முதுகலை ஆசியராக சென்றவர்களுக்கு எந்த காரணம் கொண்டும் பணி விதிகளுக்கு புறம்பாக உயர் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி வழங்கக் கூடாது என நாம் தொடுத்துள்ள வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று 8.7.2021 (வியாழன்) 39வது வரிசை எண்ணில் இடம் பெற்று வழக்கு விசாரணைக்கு வருகிறது. என்ற மகிழ்ச்சியான செய்தியை மீண்டும் நமது இயக்க உறுப்பினர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் மிக்க மகிழ்ச்சி. மற்றும் வழக்கு நிதி அனுப்பி வைத்த நமது உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. நன்றி. இவண், நல்லாசிரியர், ஆ வ அண்ணாமலை, மாநில சிறப்புத் தலைவர், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், விழுப்புரம். கைபேசி எண் 9443619586
Home »
» உயர் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது!
0 Comments:
Post a Comment