வங்கிக்கணக்கில் பணம் குறையுதா... '155260'க்கு கூப்பிடுங்க! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, July 11, 2021

வங்கிக்கணக்கில் பணம் குறையுதா... '155260'க்கு கூப்பிடுங்க!வங்கிக்கணக்கில் இருந்த ஓ.டி.பி., மூலம் அல்லது வேறு வகையில் மோசடியாக பணம் எடுக்கப்பட்டால், 155260 என்ற எண்ணுக்கு அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:

வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, கணக்கில் இருந்த பணம் எடுக்க ஓ.டி.பி., எண் கள் வழங்கப்படுவது, தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இந்த ஓ.டி.பி., எண்கள் மூலமாகவோ அல்லது, வேறு வகையிலோ உங் கள் கணக்கில் இருந்து மோசடியாக பணம் எடுக் கப்பட்டால், பதட்டப்பட வேண்டாம்.

உடனடியாக, 155260 என்ற எண்ணுக்கு அழைக்கவும். உங்களது வங்கியில் இருந்து எடுக் கப்பட்டு மோசடி நபர்களின் வங்கிக் கணக்குக்கு செலுத்தப்பட்ட பணத்தை, அவர்களால் எடுக்க முடியாதபடி, தடுக்கப்படும். இந்த சேவை, முற்றிலும் இலவசமாக வழங் கப்படுகிறது. பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post Top Ad