11th Economics - Book Back Answers - Unit 9 - Tamil Medium Guides


    Plus One / 11th Economics - Book Back Answers - Unit 9 - Tamil Medium

    Tamil Nadu Board 11th Standard Economics - Unit 9: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 9 – Economics from the Tamil Nadu State Board 11th Standard Economics textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Economics Unit 9 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 11 students! Prepare well and aim for top scores. Thank you!

    பாடம் 9 : இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

    1) கீழ்க்காண்பவற்றுள் எது தனியார் மயமாதலைக் குறிக்கும்.
    அ) முதலீட்டை திரும்பப் பெறுதல்
    ஆ) நாட்டுடைமை நீக்கல்
    இ) தொடர் நிறுவனமாக்கல்
    ஈ) இவை அனைத்தும்.
    விடைகுறிப்பு:
    ஈ) இவை அனைத்தும்.

    2) இன்றைய நாள்களில் வளர்ச்சிக்காக ஒவ்வொரு நாடும் __________ இருக்க வேண்டும்.
    அ) சார்ந்து
    ஆ) ஒன்றையொன்று சார்ந்து
    இ) தடையில்லா வணிகம்
    ஈ) முதலாளித்துவ அமைப்பு
    விடைகுறிப்பு:
    ஆ) ஒன்றையொன்று சார்ந்து

    3) LPG க்கு எதிரான வாதம்_________
    அ) பொருளாதார வளர்ச்சி
    ஆ) அதிக முதலீடு
    இ) மக்ககளிடையேயும் மண்டலங்களிடையேயும் ஏற்றத்தாழ்வு
    ஈ) நவீன மயமாக்கல்
    விடைகுறிப்பு:
    இ) மக்ககளிடையேயும் மண்டலங்களிடையேயும் ஏற்றத்தாழ்வு

    4) FDI என்பதன் விரிவாக்கம்
    அ) வெளிநாட்டு தனியார் முதலீடு
    ஆ) வெளிநாட்டு தொகுப்பு முதலீடு
    இ) வெளிநாட்டு நேரடி முதலீடு
    ஈ) வெளிநாட்டுச் செலாவணி தனியார் முதலீடு
    விடைகுறிப்பு:
    இ) வெளிநாட்டு நேரடி முதலீடு

    5) உலக அளவில் இந்தியா மிகப் பெரிய _________ உற்பத்தியில் உற்பத்தியாளராக விளங்குகின்றது.
    அ) பழங்கள்
    ஆ) மதுப்பொருட்கள்
    இ) காப்பி
    ஈ) தேயிலை
    விடைகுறிப்பு:
    அ) பழங்கள்

    6) வெளிநாட்டு முதலீடு_ _____________ உள்ளடக்கியது.
    அ) FDI மட்டும்
    ஆ) FPI மற்றும் FFT
    இ) FDL மற்றும் EPI
    ஈ) FDI மற்றும் FFT
    விடைகுறிப்பு:
    இ) FDL மற்றும் EPI

    7) சிறப்பு பொருளாதார மண்டலக் கொள்கை__________ வெளியிடப்பட்டது.
    அ) ஏப்ரல் 2000 இல்
    ஆ) ஜூலை 2000 இல்
    இ) ஏப்ரல் 2001 இல்
    ஈ) ஜூலை 2001 இல்
    விடைகுறிப்பு:
    அ) ஏப்ரல் 2000 இல்

    8) வேளாண் உற்பத்தி அங்காடிக் குழு ____________ஆகும்.
    அ) ஆலோசனைக் குழு
    ஆ) சட்டப்படியான குழு
    இ) அ மற்றும் ஆ
    ஈ) எதுவுமில்லை
    விடைகுறிப்பு:
    ஆ) சட்டப்படியான குழு

    9) பண்டங்கள், பணிகள் வரி என்பது
    அ) ஒரு முனை வரி
    ஆ)அடுக்கடுக்கு விளைவுகளைக் கொண்டது
    இ) மதிப்பு கூட்டப்பட்ட வரி போன்றது
    ஈ) பல முனை வரி அடுக்கு விளைவுகளற்றது.
    விடைகுறிப்பு:
    ஈ) பல முனை வரி அடுக்கு விளைவுகளற்றது

    10) புதிய வெளிநாட்டு வணிக கொள்கை ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

    அ) 2000
    ஆ) 2002
    இ) 2010
    ஈ) 2015
    விடைகுறிப்பு:
    ஈ) 2015

    11) நிதித்துறை சீர்திருத்தங்கள் முக்கியமாக ________ துறைக்கானது.
    அ) காப்பீட்டுத் துறை
    ஆ) வங்கித்துறை
    இ) அ மற்றும் ஆ
    ஈ) போக்குவரத்துத் துறை
    விடைகுறிப்பு:
    இ) அ மற்றும் ஆ

    12) பண்டங்கள். பணிகள் வரி சட்டம் _________அமல்படுத்தப்பட்டது.
    அ) 2017 ஜூலை |ஆம் நாள்
    ஆ) 2016 ஜூலை 1ஆம் நாள்
    இ) 2017 ஜனவரி 1ஆம் நாள்
    ஈ) 2016 ஜனவரி 1ஆம் நாள்
    விடைகுறிப்பு:
    அ) 2017 ஜூலை |ஆம் நாள்

    13) புதியபொருளாதாரக்கொள்கை கீழ்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியது?
    அ) வெளிநாட்டு முதலீடு
    ஆ) வெளிநாட்டு தொழில்நுட்பம்
    இ) வெளிநாட்டு வணிகம்
    ஈ) இவை அனைத்தும்.
    விடைகுறிப்பு:
    ஈ) இவை அனைத்தும்.

    14) ________ ஆம் ஆண்டு நிதிதொடர்பான நரசிம்மம் குழுவின் பரிந்துரைகள் ஒப்படைக்கப்பட்டன.
    அ) 1990
    ஆ) 1991
    இ) 1995
    ஈ) 2000
    விடைகுறிப்பு:
    ஆ) 1991

    15) உழவர் கடன் அட்டையைப் பயன்படுத்தி உழவர்கள் எந்த வங்கியில் கடன் பெற முடியும்?
    அ) கூட்டறவு வங்கிகளில்
    ஆ) மண்டல கிராமப்புற வங்கிகளில்
    இ) பொதுத்துறை வங்கிகளில்
    ஈ) இவை அனைத்தும்
    விடைகுறிப்பு:
    ஈ) இவை அனைத்தும்

    16. வணிகக் கொள்கை சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட ராஜா செல்லையா குழுவின் பரிந்துரைப்படி அதிகபட்ச இறக்குமதி சுங்கத் தீர்வை ____________ஆகும்.
    அ) 25%
    ஆ) 50%
    இ) 60%
    ஈ) 100%
    விடைகுறிப்பு:
    ஆ) 50%

    17 இந்தியாவில் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஏற்படுத்தப்பட்ட இடம்________.
    அ) மும்பை
    ஆ) சென்னை
    இ) காண்ட்லா
    ஈ) கொச்சி
    விடைகுறிப்பு:
    இ) காண்ட்லா

    18) ராஜ் கிருஷ்ணாவால் வார்க்கப்பட்ட "இந்து வளர்ச்சி வீதம்" என்பது___________ குறிக்கும்.
    அ) குறைவான பொருளாதார வளர்ச்சியை
    ஆ) இந்து மக்கள் தொகையின் அதிகமான விகிதத்தை
    இ) நிலையான GDPயை
    ஈ) எதுவுமில்லை
    விடைகுறிப்பு:

    அ) குறைவான பொருளாதார வளர்ச்சியை

    19) GST யில் அதிக அளவு வரிவிதிப்பு _________ஆகும். (ஜீலை 1, 2017 நாளின்படி)
    அ) 18%
    ஆ) 24%
    இ) 28%
    ஈ) 32%
    விடைகுறிப்பு:
    இ) 28%

    20) தொழில் உடைமையை பொதுத்துறையிலிருந்து தனியார் துறைக்கு மாற்றுவது ________எனப்படும்.
    அ) உலகமயமாக்கல்
    ஆ) தாராளமயமாக்கல்
    இ) தனியார் மயமாக்கல்
    ஈ) நாட்டுடைமையாக்கல்
    விடைகுறிப்பு:
    இ) தனியார் மயமாக்கல்

    II. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வரிகளில் விடையளி

    21. இந்திய பொருளாதாரத்தில் கட்டமைப்பு சீர்திருத்தங்களை செயல்படுத்த காரணம் யாது?
    • இந்தியா பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. வெளிநாட்டு வாணிபக் கணக்கில் ஏற்பட்ட பேரிழப்பு.
     
    22. LPG கொள்கையை செயபடுத்த காரணம் யாது?
    • இந்தியா பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.
    • புதிய பொருளாதார கொள்கையை செயல்படுத்த.
    • தனியார் மயமாதல் அவசிமானதாக கருதப்பட்டது.
    • தொழில் கட்டுபாடுகளை தளர்த்த வேண்டிய அவசியம்.
    • தனியார் துறைக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
    • பொதுத் துறையின் நிர்வாகம் மற்றும் உரிமைகளை தனியாருக்கு மாற்றுதல்.
     
    23. தனியார்மயமாக்கல் என்றால் என்ன?
    • பொதுத் துறையின்   நிர்வாகம் மற்றும்உரிமைகளை தனியாருக்கு மாற்றுதல்.            
     
    24. முதலீட்டை திரும்ப பெறுதல் வரையறு.
    • அரசு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியார் நிறுவனங்கள் அல்லது வங்கிகளுக்கு விற்பதாகும்.

    25. நிதிச் சமநிலை இன்மையை கட்டுப்படுத்த 1991-92 ல் ஏற்பட்ட கொள்கை முயற்ச்சிகள் மூன்றினைக் கூறுக.
    • உர மானியம் மற்றும் சர்க்கரை மானியங்கள் குறைக்கப்பட்டன.
    • வருவாயை அதிகப்படுத்த பொதுத்துறை சொத்துகள் விற்கப்பட்டன.
    • அரசு நலத் திட்டங்களுக்கான நிதியை படிப்படியாக குறைத்தது.
     
    26. சிறப்பு பொருளாதார மண்டலம் என்பதன் பொருள் யாது ?
    • வணிகம், முதலீடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அதிகரிக்கவும், அயல்நாட்டு நேரடு முதலீட்டை ஈர்க்கவும் பொது சட்டங்களில் இருந்து விலகல் அளித்து சிறப்பு சலுகைகளுடன் அரசால் உருவாக்கப்படும் கட்டமைப்பே சிறப்பு பொருளாதார மண்டலம்.
     
    27. மத்திய மற்றும் மாநில அரசுகள் அறுவடைக்குப் பின் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் உட்கூறுகளை எழுதுக.
    • பெரிய உணவு பூங்கா.
    • மதிப்பு கூட்டி பாதுகாக்கும் கட்டமைப்பு.
    • நவீன இறைச்சிவதைக் கூடங்கள்.
    • தர உத்திரவாத திட்டம்.
    • ஒருங்கிணைந்த குளிர்பதன மற்றும்
    • பதப்படுத்தும் கட்டமைப்பு வசதிகள்.
     

    III. பின்வரும் வினாக்களுக்கு ஒரு பத்தி அளவில் விடையளி

    28. தனியார் மயமாக்கலின் நன்மைகளை எவ்வாறு நியாயப்படுத்தலாம்?
    தனியார் மயமாதலின் நன்மைகள்:
    • போட்டியை அதகரித்து குறைவான விலையில் தரமான பண்டங்கள் பணிகளை வழங்குதல்.
    • பொருளாதார வளர்ச்சியில் தனியார் துறைக்கு போதுமான வாய்ப்புகளை வழங்குதல்.
    • மூலதன பயன்பாட்டின் திறனை அதிகரிக்கச் செய்தல்.
    • நாட்டின் வளங்களை முழு திறனுடன் பயன்படுத்தி மேம்பட்ட பொருளாதார வளர்ச்சியை பெறுதல்.
    • சமூக நலத்திட்டங்களுக்கு தேவையான வளங்களை திரட்டுதல்.
    • மேம்பட்ட நிர்வாகத்துடன் காலதாமதம் மற்றும் ஊழவற்ற சேவைகளை வழங்குதல்.

    29. உலக மயமாக்கல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விவரி.
    உலகமயமாதல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:
    • உள்நாட்டு பொருளாதாரத்தையும் ஏனைய பொருளாதாரங்களையும் ஒன்றிணைப்பதே உலகமயமாதல்.
    • சுங்கவரி குறைப்பு, சுங்கவரி தவிர்ப்பு மூலம் இறக்குமதியை எளிமைப்படுத்துதல்.
    • அயல்நாட்டு நேரடி முதலீடு (FDI), அயல்நாட்டு தொகுப்பு முதலீடு (FPI) ஆகியவற்றுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு தரப்பட்டது.
    • பல நாடுகளுக்கு இடையே உயர் தொழில்நுட்ப முதலீடு மற்றும் பரிவர்த்தனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
    • 1991 ல் 51% பங்குகள் வரை அயல்நாட்டு நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது.
    • இதன் அளவு பின்னர் 74% மாகவும் பின்னர் 100% மாகவும் மாற்றியமைக்கப்பட்டது.
    • வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அமைக்கப்பட்டது.

    30. வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை பற்றிக் குறிப்பு வரைக.
    வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை:
    • அயல்நாட்டு நேரடி முதலீடு(FDI), அயல்நாட்டு தொகுப்பு முதலீடு(FPI) மற்றும் பன்னாட்டு தொழில் நுட்பத்திற்கு சிவப்பு கம்பள வரவேற்பு தரப்பட்டது.
    • வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அமைக்கப்பட்டது.
    • 1991 ல் 51% பங்குகள் வரை அயல்நாட்டு நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது.
    • இதன் அளவு பின்னர் 74% மாகவும் பின்னர் 100% மாகவும் மாற்றியமைக்கப்பட்டது.
    • பல நாடுகளுக்கு இடையே உயர் தொழில்நுட்ப முதலீடு மற்றும் பரிவர்த்தனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    31. குளிர் பதனக் கிடங்கு பற்றி விவரி.
    குளிர்பதனக் கிடங்கு:
    • வேளாண் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க குளிர்மைப்படுத்தப்பட்டு உருவாக்கப்படும் கிடங்கு.
    • 1955 ஆம் ஆண்டு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழ் குளிர்பதன கிடங்கு ஆணை 1964 ல் உருவாக்கப்பட்டது.
    • விளைநிலம் முதல் அங்காடி வரை ஒருங்கிணைந்த குளிர்பதன வசதி, பதப்படுத்தும் கட்டமைப்பு வசதியும் உருவாக்கப்பட்டது.
    • இருப்பினும் குளிர்பதன சேமிப்பு கிடங்கு வசதி போதிய அளவில் இல்லை.
    • விரைவில் அழுகும் தன்மையுடைய பழங்கள், காய்கறிகளை சந்தைப்படுத்துவதில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
    • அறுவடைக்கு பின்னால் ஏற்படும் 25% முதல் 30% வரையிலான இழப்புகளினால் நனி நபருக்கு கிடைக்கக் கூடிய பழங்கள், காய்கறிகளின் அளவு குறைகிறது.
    • நுகர்வோரை சென்றடையும் நேரத்தில் அதன் தரம் குறைவதால் விலையை குறைத்தாலும் தேக்கம் ஏற்படுகிறது.

    32. வேளாண் உற்பத்தி அங்காடிக் குழுவின் பணிகளை கூறுக.
    வேளாண் உற்பத்தி அங்காடிக் குழுவின் பணிகள்:
    வேளாண் நடவடிக்கைகளை ஊக்குவித்தல்.
    சந்தை சார்ந்த விரிவாக்க சேவைகளை வழங்குதல்.
    வேளாண் பொருட்கள் தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிடுதல், காட்சிப்படுத்துதல்.
    விற்பனை செய்த அதே நாளில் விவசாயிகள் பணம் பெறுவதை உறுதி செய்தல்.
    விலை நிர்ணயம், அங்காடி பரிமாற்றங்களில் வெளிப்படை தன்மைகளை பின்பற்றுதல்.
    வேளாண் சந்தைகளில் பொது மற்றும் தனியார் இடையே கூட்டுறவை வளர்ச்சியடைய செய்தல்,
     
    33. புதிய வணிகக் கொள்கையின் சாரத்தை விளக்குக.
    சுதந்திரமான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி:
    • 1992 ல் இருந்து இறக்குமதி வரையறுக்கப்பட்ட எதிர்மறைப் பட்டியல் மூலம் ஒழுங்குப்படுத்தப்படுகிறது.
    • ஏறத்தாழ அனைத்து இடைவினை மற்றும் மூலதனப் பண்டங்களுக்கான இறக்குமதி சுதந்திரமாக்கப்பட்டது.
    • 71 பொருட்கள் மட்டுமே தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ளது.
    சுங்க கட்டண அமைப்பு மற்றும் அளவு கட்டுப்பாடுகளை நீக்குதல்:
    • ராஜா செல்லையா குழு இறக்குமதிக்கான தீர்வையை 50 சதவீதம் குறைக்க பரிந்துரை செய்தது.
    • 1991-92 நிதிநிலை அறிக்கையில் இறக்குமதி வரி 300 இருந்து 150 சதவீதமாக குறைக்கப்பட்டது.
    • அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கையில் சுங்கவரியை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    34. GSTஎன்றால் என்ன? அதன் நன்மைகளை எழுதுக.
    பண்டங்கள் மற்றும் பணிகள் மீதான வரி: (GST)
    • மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து மறைமுக வரிகளுக்கு மாற்றாக நுகர்வோர் நுகரும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மீது விதிக்கப்படும் மறைமுக வரியே GST.
    • GST 2017 ஜூலை 1 ல் நடைமுறைக்கு வந்தது.
    GST யின் நன்மைகள்:
    • ஒருமுனை மறைமுக வரி.
    • பதிவுக்கான வாசலாக உள்ளது.
    • இணைய வழி மூலம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
    • தளவாடங்களின் திறன் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
    • அடுக்குவரி விளைவுகளை நீக்கியது.
    • சிறிய நிறுவனங்களுக்கான கலவைத் திட்டங்கள் உள்ளன.
    • மின்னணு வணிகம் வரையறுக்கப்பட்டுள்ளது.
    • அமைப்பு ரீதியற்ற துறையை ஒழுங்கப்படுத்துகிறது.

    IV.பின்வரும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடையளி

    35. தொழிற் கொள்கை தொடர்பாக இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை விளக்குக. 
    தொழில் உரிம விலக்களித்தல்:
    • 1991 ஆம் ஆண்டு புதிய தொழிற் கொள்கை தொழிலுக்கு உரிமம் பெறுவதில் இருந்து விலக்களித்தது.
    • சிவப்பு நாடா முறை, மெத்தனம் மற்றும் காலதாமதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
    தொழில் துறையில் உள்ள ஒதுக்கீட்டை நீக்குதல்:
    • அணுசக்தி, சுரங்கம், இரயில்வே துறைகள் மட்டும் அரசுக்கு ஒதுக்கப்பட்டன.
    • மற்ற துறைகளின் கட்டுபாடுகள் நீக்கப்பட்டு தனியாருக்கு திறந்து விடப்பட்டன.
    பொதுத்துறை சார்பான சீர்திருத்தங்கள்:
    • நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைத்தல். பண்டத்த
    • திறமையாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தன்னாட்சி வழங்குதல்.
    • முதலீட்டுக் குறைப்புக் கொள்கை மூலம் பொதுத்துறையை மாற்றி அமைத்தல்.
    முற்றுரிமை வாணிப கட்டுப்பாட்டுச் சட்டத்தை ஒழித்தல்:
    • முற்றுரிமை வாணிப கட்டுப்பாட்டுச் சட்டம் நீக்கப்பட்டது.
    • பொருளாதார போட்டிகளை கண்காணிக்க 2010 ல் போட்டிக்குழு அமைக்கப்பட்டது.
    • இது தனியார் துறையில் போட்டியை ஏற்படுத்தவும் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கவும் உதவியது.
    அயல் நாட்டு முதலீட்டுக் கொள்கை:
    • வெளிநாட்டு நேரடி முதலீடு, வெளிநாட்டு தொகுப்பு முதலீடு மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்பம் போன்றவைகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தல்.
    • 1991 ல் 51 சதவீத பங்குகள் வரை அயல்நாட்டு நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது.
    • இதன் அளவு பின்னர் 74 சதவீதமாகவும், பின்னர் 100 சதவீதமாகவும் மாற்றப்பட்டது.
    • பன்னாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அமைக்கப்பட்டது.

    36. சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் நோக்கங்களையும் மற்றும் பண்புகளையும் விளக்குக.
    நோக்கங்கள்: (Objectives)
    ஏற்றுமதியை அதிகரித்தல்:  
    • ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குதல்.
    முதலீட்டை ஈர்த்தல்:  
    • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்க்க சலுகைகள் அளித்தல்.
    வேலைவாய்ப்பை உருவாக்குதல்: 
    • புதிய தொழில்களை நிறுவுவதன் மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்குதல்.
    பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுதல்:  
    • நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு உதவுதல்.
    உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்:  
    • உலகத்தரம் வாய்ந்த சாலைகள், மின்சாரம், தகவல் தொடர்பு வசதிகளை உருவாக்குதல். 
    பண்புகள்: (Characteristics)
    வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதி:  
    • நாட்டின் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அமைந்திருக்கும்.
    சாதகமான கொள்கைகள்:  
    • பொதுவான சட்டங்களில் இருந்து விலக்குகள் மற்றும் வரி சலுகைகள் வழங்கப்படும்.
    சிறந்த உள்கட்டமைப்பு:  
    • தொழில் செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் இருக்கும்.
    வரிச் சலுகைகள்:  
    • மூலப்பொருட்கள் மற்றும் மூலதனப் பொருட்களை இறக்குமதி செய்ய வரிவிலக்கு உண்டு.
    வணிகத்திற்கு உகந்த சூழல்: 
    • வர்த்தக நடைமுறைகளை எளிதாக்குதல் (Ease of Doing Business). 

    37. 2015- 2020 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கையின் சிறப்பியல்புகளை விளக்குக.
    புதிய அயல்நாட்டு வாணிபக் கொள்கை 2015 ஏப்ரல் 1 ல் அறிமுகம் செய்யப்பட்டது.
    நோக்கங்கள்: 
    • ஏற்றுமதி சூழல்களை மேம்படுத்துதல். உற்பத்தியை அதிகரிக்கச் செயதல். இந்தியாவில் தயாரிப்பு, மின்னணு இந்தியா.
    சிறப்பியல்புகள்:
    • ஏற்றுமதி உதவிகளை குறைத்து இந்திய பொருட்களை ஊக்குவிக்க இந்திய தயாரிப்பு என்ற கருத்து உருவாக்கப்பட்டது.
    • டிஜிட்டல் இந்தியா முறைப்படி வரித்தாக்கல், முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த கைபேசி செயலியை உருவாக்குதல்.
    • பட்டயக் கணக்காளர், கணக்கு காசாளர்களால் மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்ட ஆவணங்களை தயாரித்தல்.
    • ஏற்றுமதி, இறக்குதியாளர்கள் தங்களது சுயவிவர ஆவணங்களின் அசல் நகல்களை மீண்டும் மீண்டும் ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை.
    • பாதுகாப்பு, இராணுவக் கிடங்கு, விண்வெளி, அணுசக்தி போன்ற கோரிக்கைகளுக்கு கால அளவு 24 மாதங்கள்.
    • உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கை இருமடங்காக உயர்த்துதல்.

     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive