11th Economics - Book Back Answers - Unit 11 - Tamil Medium Guides


    Plus One / 11th Economics - Book Back Answers - Unit 11 - Tamil Medium

    Tamil Nadu Board 11th Standard Economics - Unit 11: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 11 – Economics from the Tamil Nadu State Board 11th Standard Economics textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Economics Unit 11 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 11 students! Prepare well and aim for top scores. Thank you!

    பாடம் 11 : தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

    1. உடல்நலக் குறியீட்டில் தமிழ்நாடு எந்த மாநிலத்திற்கு மேலாக உள்ளது?
    அ) கேரளா
    ஆ) பஞ்சாப்
    இ) குஜராத்
    ஈ) மேற்கூறிய அனைத்தும்
    விடைகுறிப்பு:
    இ) குஜராத்

    2. பாலின விகிதத்தில் தமிழ்நாட்டின் தரம்

    அ) முதல்
    ஆ) இரண்டாவது
    இ) மூன்றாவது
    ஈ) நான்காவது
    விடைகுறிப்பு:
    இ) மூன்றாவது

    3. தமிழ்நாடு எதில் வளமானது?
    அ) வன வளம்
    ஆ) மனித வளம்
    இ) கனிம வளம்
    ஈ) மேற்கூறிய அனைத்தும்
    விடைகுறிப்பு:
    ஆ) மனித வளம்

    4. நீர்ப்பாசனத்தின் முக்கிய ஆதாரம்
    அ) அணைக்கட்டுகள்
    ஆ) கால்வாய்கள்
    இ) கிணறுகள்
    ஈ) குளங்கள்
    விடைகுறிப்பு:
    இ) கிணறுகள்

    5. பின்னலாடை உற்பத்தி அதிகம் உள்ள இடம்

    அ) கோயம்புத்தூர்
    ஆ) திருப்பூர்
    இ) ஈரோடு
    ஈ) கரூர்
    விடைகுறிப்பு:
    ஆ) திருப்பூர்

    6. கீழ்க்காண்பவற்றுள் தவறான இணை எது?

    அ) தமிழ்நாட்டின் நுழைவாயில் -தூத்துக்குடி
    ஆ) வீட்டு ஜவுளி தயாரிப்பு - ஈரோடு
    இ) எஃகு நகரம் - சேலம்
    ஈ) பம்ப் நகரம் – கோயம்புத்தூர்
    விடைகுறிப்பு:
    ஆ) வீட்டு ஜவுளி தயாரிப்பு - ஈரோடு

    7. கீழுள்ள நகரங்களில் எதில் பன்னாட்டு விமான நிலையம் இல்லை?
    அ) மதுரை
    ஆ) திருச்சி
    இ) தூத்துக்குடி
    ஈ) கோயம்புத்தூர்
    விடைகுறிப்பு:
    இ) தூத்துக்குடி

    8.பயிர் உற்பத்தியில் எந்தப் பயிரைத் தவிர தமிழ்நாடு முன்னணியில் உள்ளது?

    அ) வாழைப்பழம்
    ஆ) தேங்காய்
    இ) தோட்டப்பயிர்கள்
    ஈ) ஏலக்காய்
    விடைகுறிப்பு:
    ஈ) ஏலக்காய்

    9. எந்தப் பயிர் உற்பத்திக்காக அதிகப் பரப்பு நிலம் பயன்படுத்தப்படுகிறது?
    அ) நெல்
    ஆ) கரும்பு
    இ) நிலக்கடலை
    ஈ) தேங்காய்
    விடைகுறிப்பு:
    அ) நெல்

    10. எழுத்தறிவு வீதத்தில் தமிழ்நாட்டின் தரம்
    அ) இரண்டு
    ஆ) நான்கு
    இ) ஆறு
    ஈ) எட்டு
    விடைகுறிப்பு:
    ஈ) எட்டு

    11. குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டில் தமிழ்நாட்டின் தரம்

    அ) I
    ஆ) II
    இ) III
    ஈ) IV
    விடைகுறிப்பு:
    அ) I

    12. தமிழ்நாட்டின் எம்மாவட்டத்தில் பாலின விகிதம் அதிகமாக உள்ளது?

    அ) நாகப்பட்டினம்
    ஆ) நீலகிரி
    இ) திருச்சி
    ஈ) தஞ்சாவூர்
    விடைகுறிப்பு:
    ஆ) நீலகிரி

    13. எம்மாவட்டத்தில் குழந்தைப் பாலின விகிதம் குறைவாகவுள்ளது?
    அ) மதுரை
    ஆ) தேனி
    இ) அரியலூர்
    ஈ) கடலூர்
    விடைகுறிப்பு:
    இ) அரியலூர்

    14. எந்த யூனியன் பிரதேசத்தில் பாலின விகிதம் அதிகமாகவுள்ளது?
    அ) சண்டிகர்
    ஆ) பாண்டிச்சேரி
    இ) இலட்சத்தீவு
    ஈ) அந்தமான் நிக்கோபர் தீவுகள்
    விடைகுறிப்பு:
    ஆ) பாண்டிச்சேரி

    15. தமிழ்நாட்டு உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்கு வகிப்பது?

    அ) வேளாண்மை
    ஆ) தொழில் துறை
    இ) சுரங்கம்
    ஈ) பணிகள்
    விடைகுறிப்பு:
    ஈ) பணிகள்

    16. மனித வளர்ச்சிக் குறியீட்டில் தமிழ்நாட்டின் தரம்
    அ) 2
    ஆ) 4
    இ) 6
    ஈ) 3
    விடைகுறிப்பு:
    ஈ) 3

    17. SPIC அமைந்துள்ள இடம்
    அ) சென்னை
    ஆ) மதுரை
    இ) தூத்துக்குடி
    ஈ) புதுக்கோ
    விடைகுறிப்பு:
    இ) தூத்துக்குடி

    18. TICEL-ன் பகுதி
    அ) இரப்பர் பூங்கா
    ஆ) ஜவுளி பூங்கா
    இ) உணவு பூங்கா
    ஈ) உயிரி பூங்கா,
    விடைகுறிப்பு:
    ஈ) உயிரி பூங்கா,

    19. சிமெண்ட உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவில் எந்த நிலையில் உள்ளது?
    அ) மூன்றாம்
    ஆ) நான்காம்
    இ) முதல்
    ஈ) இரண்டாம்
    விடைகுறிப்பு:
     அ) மூன்றாம்

    20. தென்னக இரயில்வேயின் தலைமையிடம்
    அ) திருச்சி
    ஆ) சென்னை
    இ) மதுரை
    ஈ) கோயம்புத்தூர்
    விடைகுறிப்பு:
    ஆ) சென்னை

    II. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வரிகளில் விடையளி

    21. சாதகமான பாலின விகிதம் கொண்ட இரண்டு மாவட்டங்களை எழுதுக. விகிதங்களையும் குறிப்பிடுக.
    • தேனி (900).
    • தர்மபுரி (946).
     
    22. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) வரையறு.
    • ஒரு மாநிலத்தில் ஓராண்டு காலத்தில் உற்பத்தி செய்யப்படும் வினை முடிந்த பண்டங்களின், பணிகளின் மொத்த மதிப்பு.
     
    23. தமிழ்நாட்டுக்கேற்ற நான்கு உணவுப் பயிர்களைக் குறிப்பிடுக.
    • நெல்
    • கம்பு
    • கேழ்வரகு
    • சோளம்
    • நிலக்கடலை
    • சிறு தானியங்கள்.
     
    24. தமிழ்நாட்டின் முக்கியத் துறைமுகங்கள் யாவை?
    • சென்னை
    • எண்ணூர்
    • தூத்துக்குடி
    • நாகப்பட்டணம்.
     
    25. பாரம்பரிய சுற்றுலா என்பது என்ன?
    • பாராம்பரியம், தொன்மை, புராதன சிறப்பு மிக்க இடங்களுக்கு மக்களால் மேற்கொள்ளப்படும் பயணங்களே பாராம்பரிய சுற்றுலா.
     
    26. தமிழ்நாட்டின் அணுமின் நிலையங்கள் யாவை?  
    • கல்பாக்கம்.
    • கூடங்குளம்
     
    27. குறு நிறுவனங்கள் - வரையறு.
    • 25 இலட்சத்திற்கு மிகமால் மூலதன மூதலீட்டை கொண்ட நிறுவங்கள்.
     

    III. பின்வரும் வினாக்களுக்கு ஒரு பத்தி அளவில் விடையளி

    28. தமிழ்நாட்டின் கனிம வளங்களைப் பற்றி குறிப்பு வரைக.
    தமிழ் நாட்டின் கனிம வளங்கள்:
    • நெய்வேலி 87% மிகப்பெரிய பழுப்பு நிலக்கரி வளத்தை கொண்டுள்ளது.(NLC).
    • சேலத்தில் மாங்கனிசு, ஏற்காட்டில் பாக்சைட், கஞ்சமலையில் இரும்புத்தாது சுரங்கங்கள் அமைந்துள்ளன.
    • மதுரை மாவட்டம் கரடிக்குட்டம் பகுதியில் மாலிப்டினம் தாது கிடைக்கிறது.
    • காவிரி வடி நிலப்பகுதிகளில் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு படிவுகள் காணப்படுகின்றன.
    • தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஜிப்சம் கிடைக்கிறது.
    • கன்னியாகுமரி கடற்கரை மணலில் இல்மனைட் மற்றும் ரூட்டைல் காணப்படுகிறது.
    • டைட்டானியம், மேகனசைட், கிராபைட், கிரானைட், பாக்சைட் போன்ற சுரங்கத் திட்டங்கள் தமிழகத்தில் உள்ளன.
     
    29. தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியை விளக்குக.
    தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி:
    • தமிழ்நாட்டின் GSDP 2016-17 நிதியாண்டின் படி 207.8 பில்லியன் டாலர்.
    • இது குவைத் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாகும்.
    • வாங்கும் சக்தியின் அடிப்படையில் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாகவும் உள்ளது.
    • பிற நாடுகளின் GDP யோடு ஒப்பிட தமிழ்நாட்டின் GSDP அதிகமாகும்.
    • தமிழ்நாட்டின் GSDP ல் துறைகளின் பங்களிப்பு
    • சேவைகள் துறை 63.7%, தொழில் துறை 28.5%, வேளாண்மை துறை 7.8%.
     
    30. தமிழ்நாட்டின் ஜவுளித்துறை முன்னேற்றம் பற்றி விளக்குக.
    தமிழ்நாட்டின் ஜவுளித்துறை:
    • தமிழ்நாடு இந்தியாவின் மிகப் பெரிய ஜவுளி உற்பத்தி மையம்.
    • 41% நூல் உற்பத்தியுடன் இந்தியாவின் நூல் கிண்ணமாக தமிழ்நாடு விளங்குகிறது.
    • 35 மில்லியன் மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குகிறது.
    • GDP யில் 4% பங்களிப்பையும் உற்பத்தித் துறையில் 14% பங்களிப்பையும் தருகிறது.
    • ஏற்றுமதி வருவாயில் 35% ஜவுளி துறை மூலம் கிடைக்கிறது.
    • 3 பில்லியன் டாலர் ஏற்றமதியுடன் பின்னலாடை நகரமாக திருப்பூர் விளங்குகிறது.
    • மொத்த, சில்லரை ஆயத்த ஆடைகளுக்கான முக்கிய ஜவுளி சந்தையாக ஈரோடு மாவட்டம் உள்ளது.
    • கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கலப்புநூல், பட்டுநூல் உற்பத்தி ஆலைகள் உள்ளன.
    • தமிழ்நாட்டின் நெசவு தலைநகரம் கரூர்.
     
    31. தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் ஏதேனும் இரண்டு உணவுப் பயிர்களின் உற்பத்தித் திறன்களை ஒப்பிடுக.
    உணவுப் பயிர்களின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகத்தின் நிலை:
    • நெல், தேங்காய். உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
    • கரும்பு, சூரியகாந்தி, சோளம் உற்பத்தியில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
    • மக்காச்சோளம், கம்பு, நிலக்கடலை, எண்ணெய் வித்துகள், பருத்தி உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது.
     
    32. சுற்றுலாத்துறை மேம்பாட்டின் செயல்பாடுகளை விவரி. சுற்றுலாத்துறை மேம்பாட்டின் செயல்பாடுகள்:
    • தமிழ்நாடு சிறந்த சுற்றுலா மையமாக விளங்குகிறது.
    • உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் புகலிடமாக தமிழகம் திகழ்கிறது.
    • தமிழ்நாட்டில் சுற்றலா துறையின் ஆண்டு சராசரி வளர்ச்சி 16 சதவீதமாகும்.
    • ஆண்டுதோரும் தமிழகத்திற்கு வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 28 கோடி.
    • இந்திய மாநிலங்களில் 25 கோடி சுற்றுலா பயணிகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
    • உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 கோடி.
    • தமிழ்நாடு சுற்றுலாத்துறை தமிழ்நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்துகிறது.
     
    33. தமிழ்நாட்டில் உள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் யாவை?
    தமிழ்நாட்டின் புதுப்பிக்கதக்க ஆற்றல் வளங்கள்:
    • புனல் மின்சாரம்:
    • தமிழ் நாட்டில் 20 க்கும் மேற்பட்ட புனல் மின் நிலையங்கள் உள்ளன.
    • குந்தா மேட்டூர், மரவகண்டி, பார்சன் வேலி முக்கிய நீர் மின்நிலையங்களாகும்.
    • சூரிய சக்தி மின்சாரம்:
    • தென் தமிழகம் சூரிய மின் சக்தி திட்டங்களை செயல்படுத்த உகந்த மண்டலமாக உள்ளது.
    • கிருஷ்ணகிரி, தர்மபுரி, சிவகங்கை மாவட்டங்களில் சூரிய மின் சக்தி நிலையங்கள் உள்ளன.
    • காற்றாலை மின்சாரம்:
    • தமிழ்நாடு அதிக அளவு காற்று வழி மின்சாரம் தயாரிக்கும் கட்டமைப்பை பெற்றுள்ளது.
    • தமிழ்நாட்டின் முக்கிய காற்றாலை மின் நிலையங்கள் கயத்தாறு, ஆரல்வாய்மொழி, முப்பந்தல்.
    • அணு மின் நிலையங்கள்:
    • தமிழ்நாட்டின் முக்கிய அணுமின் நிலையங்கள் கல்பாக்கம், கூடங்குளம்.
    • அணுக்களை பிளக்கும் போது வெளிப்படும் மிகுந்த வெப்பமே அணுசக்தி ஆற்றல்.
     
    34. உடல்நலத்துறையில் தமிழ்நாட்டின் செயல்திறனை விளக்குக.
    உடல்நலத் துறையில் தமிழ்நாட்டின் செயல்திறன்:
    • இந்திய அளவில் சுகாதார குறியீட்டின் தமிழகத்தின் நிலை மூன்று.
    • தமிழகத்தில் பச்சிளங் குழந்தைகளின் இறப்பு வீதம் மிக குறைவாக 14 என உள்ளது.
    • தமிழக மக்களின் சராசரி ஆயுட்காலம் 70.6 ஆண்டுகள்
    • தமிழ்நாடு மூன்றடுக்கு உடல் நல அடிப்படை கட்டமைப்பை பெற்றுள்ளது.
    • அவை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூக நலமையங்கள்.
     

    IV.பின்வரும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடையளி

    35. மக்கள் தொகையின் தரம் சார்ந்த சிறப்பியல்புகளை விவரி.
    மக்கள் தொகையின் தரம் சார்ந்த சிறப்பியல்புகள்:
    மக்கள் தொகை அடர்த்தி:
    • ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வாழும் மக்களின் எண்ணிக்கை.
    • தமிழகத்தின் மக்கள் தொகை அடர்த்தி 2011 ன் படி 555.
    • மக்கள் தொகை அடர்த்தியில் தமிழ்நாடு இந்திய அளவில் 12 வது இடத்தில் உள்ளது.
    நகரமயமாதல்:
    • தமிழத்தின் நகரமயமாதலின் சராசரி அளவு 48.4
    • இந்திய நகர மக்கள் தொகையில் தமிழகம் 9.61 சதவீதத்தை பெற்றுள்ளது.
    • இந்திய மக்கள் தொகையில் 6 சதவீதத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது.
    பாலின விகிதம்:
    • சமச்சீர் பாலின விகிதம் பெண்களின் வாழ்வியல் மேம்பாட்டை குறிக்கும்.
    • தமிழ்நாட்டின் பாலின விகிதம் 995.
    • தமிழகம் பாலின விகிதத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
    குழந்தை இறப்பு விகிதம்:
    • ஐந்து வயது பூர்த்தியடையும் முன் ஆயிரம் குழந்தைகளுக்கு இறக்கும் குழந்தைகளின்
    • எண்ணிக்கையே குழந்தை இறப்பு விகிதம்.
    • 2016 ஆம் ஆண்டில் தமிழகத்தின் குழந்தை இறப்பு விகிதம் 17.
    • தமிழ்நாட்டின் குழந்தை இறப்பு வீதம் பிற மாநிலங்களை விட குறைவாக உள்ளது.
    வாழ்நாள் எதிர்பார்பு காலம்:
    • சராசரியாக ஒரு நபரின் எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் அளவே ஆயுட்காலம்.
    • வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் குறைவாக உள்ளது.
    • இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் 67. 9 ஆண்டுகள்.
    • தமிழக மக்களின் சராசரி ஆயுட்காலம் 70.6 ஆண்டுகள்.
    மகப்பேறு இறப்பு விகிதம்:
    • ஒரு இலட்சம் மகப்பேறில் இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கையே மகப்பேறு இறப்பு விகிதம்.
    • இந்தியாவின் மகப்பேறு இறப்பு விகிதம் 159.
    • தமிழகத்தின் மகப்பேறு இறப்பு விகிதம் 79.
    • மகப்பேறு இறப்பு வீதத்தில் தமிழ்நாடு இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
    எழுத்தறிவு நிலை:
    • 2011 ன் படி தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம் 80.33
    • அதிக எழுத்தறிவு பெற்ற மாவட்டங்கள் கன்னியாகுமரி (92.4), மற்றும் சென்னை (90.33)
     
    36. தமிழ்நாட்டின் பல்வேறு வகையான ஆற்றல் வளங்களை விளக்குக.
    தமிழ்நாட்டின் ஆற்றல் வளங்கள்:
    புனல்(நீர்) மின் ஆற்றல்:
    • தமிழ் நாட்டில் 20 க்கும் மேற்பட்ட புனல் மின் நிலையங்கள் உள்ளன.
    • பைகார, குந்தா, மேட்டூர், மரவகண்டி, பார்சன் வேலி, பரப்பிக்குளம், பாபநாசம், மேயார், ஆழியார், கோதையார், பெரியார், சுருளியார் போன்றவை முக்கிய நீர் மின்நிலையங்களாகும்.
    சூரிய சக்தி ஆற்றல்:
    • தென் தமிழகம் சூரிய மின் சக்தி திட்டங்களை செயல்படுத்த உகந்த மண்டலமாக உள்ளது.
    • திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சிவகங்கை மாவட்டங்களில் சூரிய மின் சக்தி நிலையங்கள் உள்ளன.
    காற்றாலை ஆற்றல்:
    • தமிழ்நாடு அதிக அளவு காற்று வழி மின்சாரம் தயாரிக்கும் கட்டமைப்பை பெற்றுள்ளது.
    • தமிழ்நாட்டின் முக்கிய காற்றாலை மின் நிலையங்கள் கயத்தாறு, ஆரல்வாய்மொழி, முப்பந்தல், நாங்குநேரி, கல்தான்பேட்டை, பனங்குடி.
    அணு மின் ஆற்றல்:
    • தமிழ்நாட்டின் முக்கிய அணுமின் நிலையங்கள் கல்பாக்கம், கூடங்குளம்.
    • அணுக்களை பிளக்கும் போது வெளிப்படும் மிகுந்த வெப்பமே அணுசக்தி ஆற்றல்.
    கடல் அலை ஆற்றல்:
    • உயர் ஒத அலைகளின் சக்தியை கொண்டு விசை சுற்று கலன்களை சுழற்றி மின் ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் என்ற இடத்தில் கடல் அலை மின்சக்தி நிலையம் உள்ளது.
    அனல் மின் ஆற்றல்:
    • அனல் மின் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
    • டீசல் அனல் மின் உற்பத்தியில் 34 சதவீதத்திற்கும் மேலாக உற்பத்தி செய்து தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டின் முக்கிய அனல்மின் நிலையங்கள் வட சென்னை, எண்ணூர், மேட்டூர், நெய்வேலி, தூத்துக்குடி.
     
    37. தமிழ்நாட்டின் பொதுத்துறை போக்குவரத்து முறையினை விளக்குக.
    தமிழ்நாட்டின் பொதுத்துறை போக்குவரத்து:
    சாலை போக்குவரத்து:
    • சாலை போக்குவரத்தில் தமிழ்நாடு இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
    • தமிழ்நாட்டில் 28 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன.
    • தமிழ்நாட்டின் மொத்த சாலையின் நீளம் 1,67,000 கி.மீ
    • தங்க நாற்கரத் திட்டத்தின் முனையாக தமிழ்நாடு உள்ளது.
    • ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் சென்னை கோயம்பேட்டில் உள்ளது.
    • தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய பேருந்து நிலையம் ஈரோட்டில் உள்ளது.
    • தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகங்கள் பேருந்துகளை இயக்குகின்றன.
    இரயில் போக்குவரத்து:
    • தமிழ்நாட்டில் உள்ள இருப்பு பாதையின் மொத்த நீளம் 6693 கி.மீ.
    • தமிழ்நாட்டில் 690 இரயில் நிலையங்கள் உள்ளன.
    • ஆறு பிரிவுகளை கொண்ட தென்னக இரயில்வேயின் தலைமையிடம் சென்னை.
    • சென்னையில் மேம்படுத்தப்பட்ட அதி விரைவு மெட்ரோ இரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
    • தமிழ்நாட்டின் முக்கிய தொடர் வண்டி நிலையங்கள் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, சேலம். திருச்சி.
    வான்வழி போக்குவரத்து:
    • இந்தியாவில் மும்பை, டெல்லியை அடுத்து மூன்றாவது பெரிய பன்னாட்டு விமான நிலையம் சென்னை அண்ணா
    • பன்னாட்டு விமான நிலையம்.
    • தமிழ்நாட்டில் பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ள இடங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி.
    • தமிழ்நாட்டில் உள்நாட்டு விமான நிலையங்கள் உள்ள இடங்கள்: சென்னை(காமராஜர்), தூத்துக்குடி, சேலம், மதுரை.
    • வான்வழி போக்குவரத்து ஒவ்வொரு ஆண்டும் 18 சதவீதம் வளர்ச்சியடைகிறது.
    • இத் துறையின் சிறப்பான செயல்பாட்டால் பயணிகள், சரக்கு போக்குவரத்து உன்னத வளர்சியை பெறுகின்றன.
    நீர் வழி போக்குவரத்து:
    • தமிழ்நாடு 1076 கீ.மீ நீளம் உள்ள கடற்கரையை பெற்றுள்ளது.
    • சென்னை இந்தியாவின் இரண்டாவது பெரிய செயற்கை துறைமுகமாகும்.
    • சென்னை துறைமுகம் அனைத்து விதமான நிலக்கரி, கனிம போக்குவரத்துகளை கையாளுகிறது.
    • தமிழ்நாட்டின் பெரிய துறைமுகங்கள் சென்னை, எண்ணூர், தூத்துக்குடி.
    • தமிழ் நாட்டில் கடலூர், பாம்பன், இராமேஸ்வரம், குளச்சல், கன்னியாகுமரி, வாலிநோக்கம் என 23 சிறு துறைமுகங்கள் உள்ளன.
    • நாகப்பட்டினம் நடுத்தர துறைமுகமாகும்.
    • சிறு துறைமுகங்கள் ஆண்டுதோறும் 73 மில்லியன் மெட்ரிக்டன் சரக்குகளை கையாளுகிறது.
    • சிறு துறைமுகங்கள் தமிழ்நாடு கடல்சார் மையத்தால் நிர்வாகம் செய்யப்படுகிறது.
     

     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive