Tamil Nadu Board 11th Standard Economics - Unit 8: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 8 – Economics from the Tamil Nadu State Board 11th Standard Economics textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Economics Unit 8 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 11 students! Prepare well and aim for top scores. Thank you!
பாடம் 8 : இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும்
I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
அ) 1498
ஆ) 1948
இ) 1489
ஈ) 1849
விடைகுறிப்பு:
அ) 1498
2. 1614 இல் தாமஸ் ரோ யாரிடம் அனுமதி பெறுவதில் வெற்றி பெற்றார்?
அ) அக்பர்
ஆ) ஷாஜகான்
இ) ஜஹாங்கீர்
ஈ) நூர்ஜஹான்
விடைகுறிப்பு:
இ) ஜஹாங்கீர்
3. இந்தியாவை ஆளும் உரிமை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து ஆங்கிலேய அரசுக்கு மாற்றப்பட்ட ஆண்டு
அ)1885
ஆ) 1858
இ) 1868
ஈ) 1878
விடைகுறிப்பு:
ஆ) 1858
4. இரயத்வாரி முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இடம்
அ) கேரளா
ஆ) வங்காளம்
இ) தமிழ்நாடு
ஈ) மகாராஸ்டிரா
விடைகுறிப்பு:
இ) தமிழ்நாடு
5. முதலாம் உலகப்போர் தொடங்கிய ஆண்டு
அ) 1914
ஆ) 1814
இ) 1941
ஈ) 1841
விடைகுறிப்பு:
அ) 1914
6.இந்திய அரசாங்கம் தனது தொழிற்கொள்கையை வெளியிட்ட ஆண்டு முதல்
அ) 1456
ஆ)1991
இ)1948
ஈ) 2000
விடைகுறிப்பு:
இ)1948
7. 1956ஆம் ஆண்டின் தொழிற்கொள்கையின் நோக்கம்
அ) பெரிய நிறுவனங்களை முன்னேற்றுவது
ஆ) வேளாண்துறையை மட்டும் முன்னேற்றுவது
இ) தனியார் துறையை மட்டும் முன்னேற்றுவது
ஈ) குடிசைத் தொழில்களை மட்டும் முன்னேற்றுவது
விடைகுறிப்பு:
அ) பெரிய நிறுவனங்களை முன்னேற்றுவது
8. 1993ஆம் ஆண்டில் முன் பதிவு நீக்கப்பட்ட தொழில்துறை
அ) இரயில்வே துறை
ஆ) செம்பு மற்றும் சிங்க் சுரங்கத் தொழில்
இ) அணு ஆற்றல்
ஈ) அணு கனிமங்கள்
விடைகுறிப்பு:
ஆ) செம்பு மற்றும் சிங்க் சுரங்கத் தொழில்
9. இந்தியாவின் பசுமைப்புரட்சியின் தந்தை என்றழைக்கப்படுபவர்
அ) M.S.சுவாமிநாதன்
ஆ) காந்தி
இ) விஸ்வேஸ்வரையா
ஈ) N.R.விஸ்வநாதன்
விடைகுறிப்பு:
அ) M.S.சுவாமிநாதன்
10. 1969-ஆம் ஆண்டில் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை
அ) 10
ஆ) 12
இ) 14
ஈ) 16
விடைகுறிப்பு:
இ) 14
11. வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம்
அ) தனியார் சமூக நலம்
ஆ) சமூக நலம்
இ) வருவாய் ஈட்ட
ஈ) தொழில் முற்றுரிமை
விடைகுறிப்பு:
ஆ) சமூக நலம்
12. திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு
அ) 1950
ஆ) 1955
இ) 1960
ஈ) 1952
விடைகுறிப்பு:
அ) 1950
13. முதலாம் ஐந்தாண்டுத்திட்டத்தின் முதன்மையான நோக்கம்
அ) சேவை
ஆ) தொழில்
இ) வேளாண்மை
ஈ) வங்கி
விடைகுறிப்பு:
இ) வேளாண்மை
14.பத்தாம் ஐந்தாண்டுத் திட்ட காலம்
அ) 1992-1997
ஆ) 2002-2007
இ) 2007-2012
ஈ) 1997-2002
விடைகுறிப்பு:
ஆ) 2002-2007
15. 2016-ஆம் ஆண்டுக்கான மனித வளர்ச்சி அறிக்கையின் படி 188 நாடுகளில் இந்தியாவின் தரம்
அ) 130
ஆ) 131
இ) 135
ஈ) 1435
விடைகுறிப்பு:
ஆ) 131
16. ஆண்டுத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டு
அ) 1989-1991
ஆ) 1990-1992
இ )2000-2001
ஈ) 1981-1983
விடைகுறிப்பு:
ஆ) 1990-1992
17. இந்தியாவின் மிகப்பழமையான பெரிய அளவிலான தொழில்
அ) பருத்தி
ஆ) சணல்
இ) இரும்பு
ஈ) சிமெண்ட்
விடைகுறிப்பு:
அ) பருத்தி
18. மனித மேம்பாட்டுக் குறியீட்டெண்ணை உருவாக்கியவர்
அ) ஜவர்கர்லால் நேரு
ஆ) M.K.காந்தி
இ) அமர்த்தியா குமார் சென்
ஈ) தாகூர்
விடைகுறிப்பு:
இ) அமர்த்தியா குமார் சென்
19. பனிரெண்டாம் முக்கிய நோக்கம் ஐந்தாண்டுத் திட்டத்தின்
அ) விரைவான மற்றும் அதிகமான ஒருங்கிணைந்த வளர்ச்சி
ஆ) சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி
இ) சோசலிச முறையிலான சமூகம்
ஈ) விரைவான உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சி
விடைகுறிப்பு:
ஈ) விரைவான உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சி
20. வாழ்க்கைதரக் குறியீட்டெண்ணை உருவாக்கியவர்
அ) திட்டக்குழு
ஆ) நேரு
இ) D.மோரிஸ்
ஈ) பிஸ்வாஜித்
விடைகுறிப்பு:
இ) D.மோரிஸ்
II. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வரிகளில் விடையளி
- வணிக மூலதனக் காலம் (1753 -1813)
- தொழில் மூலதனக் காலம் (1813-1858)
- நிதி மூலதனக் காலம் (1858-1947).
22. விடுதலை அடைவதற்கு முன் இந்தியாவில் காணப்பட்ட நிலஉடைமை முறைகள் யாவை?
- ஜமின்தாரி முறை.
- மகல்வாரி முறை.
- இரயத்வாரி முறை
23. மற்ற முறைகளிருந்து நிலஉடைமை முறையை வேறுபடுத்துவதற்கான கூறுகளை கூறு.
- நிலம் யாறுக்கு சொந்தமானது?.
- நிலத்தில் யார் அறுவடை செய்வது?.
- நில வருவாயை அரசுக்கு செலுத்த பொறுப்பானவர் யார்?
24. பசுமைப்புரட்சியின் பலவீனங்களைப் பட்டியலிடுக?
- பருவ மழையை நம்பி இருத்தல்.
- மூலதன பற்றாக்குறை
- பண்ணைகள் இயந்திரமயமாதல்.
- விவசாயிகளுக்கு இடையேயான வருமான இடைவெளி.
- பகுதிகளுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள்.
25. பத்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கங்கள் யாவை?
- தலா வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துதல்.
- 8 சதவீதம் வளர்ச்சி வீதத்தை அடைதல்.
- வறுமை விகிதத்தை 15 சதவீதமாக குறைத்தல்,
- சமத்துவம் மற்றும் சமூகநீதி.
|
மனித மேம்பாட்டுக்
குறியீட்டு எண் (HDI)
|
வாழ்க்கைத் தர
குறியீட்டு எண்(PQLI)
|
|
உடல் மற்றும் பணம் சார்ந்த மேம்பாட்டை காட்டுகிறது.
|
உடல் சார்ந்த மேம்பாட்டை காட்டுகிறது.
|
|
வருமானம் சேர்க்கப்படுகிறது.
|
வருமானம் நீக்கப்படுகிறது.
|
|
குறியீடுகள்: வாழ்நாள், கல்விதகுதி, தனிநபர் வருமானம்
|
குறியீடுகள்:
ஆயுட்கலாம்,குழந்தை இறப்பு விகிதம், எழுத்தறிவு
|
- வாழ்நாள் (ஆயுட்காலம்).
- கல்வி தகுதி.
- வாங்கும் சக்தியின் அடிப்படையில் தனிநபர் வருமானம்.
III. பின்வரும் வினாக்களுக்கு ஒரு பத்தி அளவில் விடையளி
வணிக மூலதன காலம் (1757 -1813):
- கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் முற்றுரிமை வாணிபம் செய்து லாபத்தை இங்கிலாந்திற்கு கடத்தியது.
- பிரிட்டனில் தொழில் மூலதனத்தை அதிகரிக்க இந்தியாவின் வளங்கள் சுரண்டப்பட்டன.
- கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை மிக முக்கிய சுரண்டல் பிரதேசமாக கருதி சுரண்டியது.
- இதன் அலுவலர்கள் நேர்மையற்று ஊழல் செய்தனர்.
- பாகுபாடான சுங்கவரிக் கொள்கை மூலம் பிரிட்டிஷ் அரசு இந்திய கைவினைப் பொருட்களை அழித்தது.
- இந்திய அரசர்கள் காலம் முடிவுற்ற பிறகு இந்திய கைவினை தொழில்களை ஆதரிக்க எவரும் இல்லை.
- இந்தியாவில் ரயில்வே அறிமுகமான பிறகு பிரிட்டிஷ் பொருட்களுக்கான உள்நாட்டு சந்தை அதிகரித்தது.
- இயந்திர தயாரிப்பு பொருட்களுடன் போட்டியிட முடியவில்லை.
ஜமின்தாரிமுறை:
- ஜமின்தார்கள் விவசாயிகளிடம் இருந்து நில வரியை பெற்று அரசுக்கு செலுத்தினர்.
- ஜமின்தார்கள் நிலத்தின் உரிமையாளராக கருதப்பட்டனர்.
- வசூலிக்கப்ட்ட நிலவரியில் 11 ல் 10 பங்கு அரசுக்கு செலுத்தப்பட வேண்டும்.
- கிராம மக்கள் குழுவினர் விவசாயிகளிடம் இருந்து நிலவரியை பெற்று அரசுக்கு செலுத்தினர்.
- கிராம மக்கள் குழுவினர் நிலத்தின் உரிமையாளர்களாக இருந்து நிலத்தை பிரித்து விவசாயிகளிடம் கொடுத்தனர்.
- 66 சதவீதம் வரிவசூல் செய்யப்பட்டது.
- உழவர்களே நிலத்தின் உரிமையாளர்களாக கருதப்பட்டனர்.
- உழவர்களே நிலவரியை அரசுக்கு நேரடியாக செலுத்தினர்.
- தமிழ்நாட்டில் சென்னையில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- சமூக நலத்தை அடைதல்.
- தனியாரிடம் இருந்த வணிக வங்கிகள் அரசின் திட்டங்கள், சமூக நலத்திற்கும் உதவிகள் செய்ய தவறின.
- கிராமப்புற மக்களிடையே வங்கி செயல்பாடுகளை ஊக்குவித்தல்.
- கிராம மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வங்கி கிளைகளை தொடங்கி வளர்ச்சியடைய செய்தல்.
- வட்டாரங்களுக்கிடைய இருந்த ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்.
- வங்கித் தொழிலில் தனியார் முற்றுரிமையை தகர்த்தல்.
- வேளாண்மை, சிறு - குடிசை தொழில்களுக்கு தேவையான கடன்களை இலகுவாக வழங்குதல்.
- பொது சேமிப்பு சமூக விரோத செயல்களுக்கு பயன்படுவதை தடுத்தல்.
- அதிகாரமும் சொத்தும் ஒரே இடத்தில் குவிதலை தடுத்தல்.
1991 ஆம் ஆண்டு தொழிற் கொள்கையின் நோக்கங்கள்:
- தனியார் துறையின் பங்கேற்பை ஊக்குவிக்க ஒதுக்கீடு மற்றும் கட்டுபாடுகளை நீக்குதல்.
- முற்றுரிமை வாணிப கட்டுப்பாட்டு சட்டத்தை ஒழித்தல்.
- அந்நிய முதலீடு மற்றும் அயல்நாட்டு தொழில் நுட்பத்திற்கு சிவப்பு கம்பள வரவேற்பு தருதல்.
- வேலைவாய்ப்பு, உற்பத்தியில் நீடித்த வளர்ச்சியை பராமரித்தல்.
- சர்வதேச போட்டிகளை எதிர்கொள்ளுதல்,
- நலிந்த தொழில் நிறுவனங்களை மறு சீரமைத்தல்.
பன்னிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டம்: (2012-2017)
- இதன் முதன்மை நோக்கம் விரைவான அதிகமான உள்ளடங்கிய மற்றும் நிலையான வளர்ச்சி.
- இதன் வளர்ச்சி இலக்கு 8 சதவீதம்.
- மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை நேரடியாக வழங்குதல்.
- வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் விகிதத்தை 30 இருந்து 10 சதவீதமாக குறைத்தல்
- வேளாண்மைத் துறையில் 4 சதவீத வளர்ச்சி விகிதத்தை அடைதல்.
- இத்திட்டத்தின் மொத்த செலவு ₹47.7 இலட்சம் கோடி.
வாழ்க்கை தரக் குறியீட்டெண்: (POLI).
- வாழ்க்கை தரக் குறீயீட்டெண்ணை உருவாக்கியவர் டி. மோரிஸ்.
- PQLI ஒரு நாட்டின் வாழ்க்கை தரத்தினை அளவிடப் பயன்படுகிறது.
- எதிர்பார்ப்பு ஆயுட்காலம், குழந்தை இறப்பு விகிதம், எழுத்தறிவு விகிதம் PQLI ன் குறியீடுகள்.
- PQLI உடல் சார்ந்த மேம்பாட்டை மட்டும் குறிக்கும். இதில் வருமானம் நீக்கப்படுகிறது.
- 1 நாட்டின் மோசமான செயல்பாட்டையும் 100 சிறப்பான செயல்பாட்டையும் குறிக்கும்.
IV.பின்வரும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடையளி
சுரண்டல்:
- இயற்கை வளங்கள், மனித வளம் அனைத்தும் சுரண்டப்பட்டன.
- பிரிட்டனின் தொழில்துறை வளர்ச்சிக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்கவும், பிரிட்டிஷ் உற்பத்திப் பொருட்களை விற்கவும் இந்தியா பயன்படுத்தப்பட்டது.
- பொருளாதாரம் அடிப்படையில் விவசாயத்தை நம்பியிருந்தது (சுமார் 85% மக்கள் விவசாயத்தைச் சார்ந்திருந்தனர்).
- பிரிட்டிஷ் கொள்கைகளால் நில வருவாய் வரிச்சுமை அதிகரித்தது, விவசாயிகள் வறுமையில் தள்ளப்பட்டனர்.
- இந்தியாவின் செழிப்பான கைவினைப் பொருட்கள் மற்றும் ஜவுளித் தொழில்கள் அழிக்கப்பட்டன.
- பிரிட்டிஷ் இயந்திரத் துணிகள் மலிவாக இறக்குமதி செய்யப்பட்டதால், இந்தியத் தொழில்கள் போட்டி போட முடியாமல் அழிந்தன.
- இந்தியாவின் உலகளாவிய உற்பத்தி ஏற்றுமதிப் பங்கு 27%ல் இருந்து 2% ஆகக் குறைந்தது.
- இந்தியா மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்து, பிரிட்டிஷ் தயாரிப்புகளை இறக்குமதி செய்யும் பொருளாதாரமாக மாறியது.
- சுதந்திரத்திற்கு முன்பு இந்தியப் பொருளாதாரம் மிகக் குறைந்த வளர்ச்சியையே கண்டது (1900-1950 காலகட்டத்தில் சுமார் 2% வளர்ச்சி).
- பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவின் தேசிய வருமானம் அல்லது தனிநபர் வருமானத்தைக் கணக்கிட எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
- பிரிட்டிஷ் பொருளாதார நலன்களே முதன்மையாகக் கருதப்பட்டன.
- பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவின் வளர்ச்சியை விட, பிரிட்டனின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலேயே கவனம் செலுத்தின.
வேலைவாய்ப்பு அதிகரித்தல்:
- சிறு தொழில்கள் இயந்திரங்களை விட அதிக அளவில் தொழிலாளர்களை பயன்படுத்துவதால் வேலைவாய்ப்பு அதிகரிக்கின்றன.
- சிறு தொழில்கள் பின்தங்கிய மற்றும் கிராமப் பகுதிகளில் அமைவதால் சமமான மண்டல வளர்ச்சிக்கு உதவுகிறது.
- சிறு தொழில்கள் உள்ளூர் வளங்களை முழுமையாக பயன்படுத்தி குடும்பத்திறன்களை வளர்க்க உதவுகிறது.
- மூலதனம், காத்திருப்பு காலம் மற்றும் இடர்பாடுகள் சிறு தொழில்களில் மிகவும் குறைவாக இருப்பதால் மூலதனப் பயன்பாடு உத்தம அளவில் இருக்கும்.
- சிறு தொழில்கள் கைவினை பொருட்களை வளர்த்தெடுத்து ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்து அந்நியச் செலாவணியை ஈட்டி தருகிறது.
- சிறு தொழில் நிறுவனங்கள் பேரளவு தொழிற்சாலைகளுக்கு தேவையான உதிரி பாகங்களை உற்பத்தி செய்து உதவுகின்றன.
- வேலை தேடுவோருக்கு சுய வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் சிறுதொழில்கள் தொழில்முனைவோரை ஊக்குவிக்கிறது.
- சிறு தொழில் நிறுவனங்கள் நுகர்வுப் பொருட்களை உற்பத்தி செய்து குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்குகின்றன.
- பல்வேறு வழிகளில் சிறுதொழில்கள் தேசியவருமானம் தனிநபர், தலா வருமானத்தை அதிகரிக்க செய்து மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துகின்றன.
வணிக வங்கிகள் தேசியமயமாக்கப் பட்டத்தற்கான காரணங்கள்
- சமூக நலத்தை அடைதல்.
- கிராமப்புற மக்களிடையே வங்கி செயல்பாடுகளை ஊக்குவித்தல்.
- கிராம மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வங்கி கிளைகளை தொடங்கி வளர்ச்சியடைய செய்தல்.
- தனியாரிடம் இருந்த வணிக வங்கிகள் அரசு திட்டங்கள், சமூக நலத்திற்கு உதவிகள் செய்ய தவறின.
- வட்டாரங்களுக்கிடைய இருந்த ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்.
- வேளாண்மை, சிறு குடிசை தொழில்களுக்கு தேவையான கடன்களை சுலபமாக வழங்குதல்.
- வங்கி தொழிலில் தனியார் முற்றுரிமையை தவிர்த்தல்.
- பொது சேமிப்பு சமூக விரோத செயல்களுக்கு பயன்படுவதை தடுத்தல்.
- அதிகாரமும் சொத்தும் ஒரே இடத்தில் குவிதலை தடுத்தல்.
|
திட்டம்
|
நோக்கம்
/ மாதிரி
|
வளர்ச்சி
இலக்கு
|
பெற்ற
இலக்கு
|
செயல்பாடுகள்
|
|
முதல் ஐந்தாண்டுத்திட்டம் (1951-1956).
|
வேளாண்மையை முன்னேற்றுதல். ஹாரேட் டாமர் மாதிரி.
|
2.1
|
3.6
|
மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல்.
|
|
இரண்டாம் ஐந்தாண்டுத்திட்டம் (1956-1961)
|
விரைவான தொழில்மயமாதல். |
4.5
|
4.1
|
அடிப்படை மற்றும் கனரக தொழில் வளர்ச்சி.
|
|
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் (1961-1966)
|
சுதந்திரமான பொருளாதாரம். சுய முன்னேற்றம். காட்கில் திட்டம். |
5.6 |
2.2 |
தோல்விக்கான காரணம் சீன இந்திய போர். |
|
நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் (1969-1974) |
நிலையான வளர்ச்சி, தற்சார்பு அடைதல்.
|
5.7
|
3.3
|
14 வணிக வங்கிகள் நாட்டுடை பசுமை புரட்சி.
|
|
ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் (1974-1979)
|
வறுமை ஒழிப்பு மற்றும் சமூகநீதி டி.பி. தார் தயாரித்தார்.
|
4.4
|
4.8
|
இருபது அம்ச திட்டம். குறைந்த பட்ச தேவைகள் திட்டம்.
|
|
ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம் (1980-1985)
|
வறுமை ஒழிப்பு மற்றும் தற்சார்பு
|
5.2
|
5.7
|
நபார்டு வங்கி தொடக்கம்.
|
|
ஏழாவது ஐந்தாண்டுத் திட்டம் (1985-1990)
|
தன்னிறைவு பொருளாதாரம். வேலைவாய்ப்புகளை அதிகரித்தல்
|
5.0
|
6.0
|
தனியார் துறைக்கு முன்னுரிமை.
|
|
எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் (1992-1997)
|
வேலைவாய்ப்பு, கல்வி சமூகநலம்.
|
5.6
|
6.8
|
புதிய பொருளாதார கொள்கை. |
|
ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம் (1997-2002)
|
சமூகநீதியுடன் கூடிய சமமான வளர்ச்சி
|
7.0
|
5.6
|
வேலைவாய்ப்பை அதிகரிக்க பொது. நிலையான விலையுடன் வளர்ச்சி
|
|
பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம் (2002-2007)
|
சமத்துவம் மற்றும் சமூகநீதி, தவா வருமானத்தை இரண்டு மடங்கு உயர்த்துதல்,
|
8.0
|
7.2
|
இலாபகரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.
|
|
பதினொறாவது ஐந்தாண்டுத் திட்டம் (2007-2012)
|
விரைவான அதிகமான உள்ளடக்கிய வளர்ச்சி
|
8.1 |
7.9
|
சுற்றுச்சூழல் நிலைத்த தன்மை. கல்வி மற்றும் திறன்
மேம்பாடு.
|
|
பன்னிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (2012-2017) |
விரைவான அதிகமான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சி
|
8
|
7.8 |
பாலின மற்றும் சமூக இடைவெளியை நீக்குதல். |







0 Comments:
Post a Comment