Tamil Nadu Board 11th Standard Economics - Unit 10: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 10 – Economics from the Tamil Nadu State Board 11th Standard Economics textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Economics Unit 10 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 11 students! Prepare well and aim for top scores. Thank you!
பாடம் 10 : ஊரக பொருளாதாரம்
I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
அ) ஊராட்சி
ஆ) வருவாய் கிராமம்
இ) நகரம்
ஈ) நகராட்சி
விடைகுறிப்பு:
ஆ) வருவாய் கிராமம்
2) எது ஊரகப் பகுதியை கண்டறியும் பண்பு______
அ) குறைந்த மக்கள் தொகை அடர்த்தி
ஆ) அதிக மக்கள் தொகை அடர்த்தி
இ) குறைந்த இயற்கைவளம்
ஈ) குறைந்த மனிதவளம்
விடைகுறிப்பு:
அ) குறைந்த மக்கள் தொகை அடர்த்தி
3) ஊரகப் பொருளாதாரத்தின் முக்கிய இயல்பு ________
அ) வேளாண்மையைச் சார்ந்திருத்தல்
ஆ) அதிக மக்கள் தொகை அடர்த்தி
இ) குறைந்த அளவு மக்கள் தொகை
ஈ) ஏற்றத்தாழ்வுக் குறைவு
விடைகுறிப்பு:
அ) வேளாண்மையைச் சார்ந்திருத்தல்
4) 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் மொத்த மக்கள் தொகையில் ஊரகத்தில் வாழும் மக்கள் தொகை விழுக்காடு என்ன?
அ) 40
ஆ) 50
இ) 60
ஈ) 70
விடைகுறிப்பு:
இ) 60
5) தேவைக்கு அதிகமாக வேலையில் ஈடுபடும் மக்களின் நிலைமை
அ) வேலையின்மை
ஆ) மறைமுக வேலையின்மை
இ) முழுவேலை
ஈ) சுயவேலை
விடைகுறிப்பு:
ஆ) மறைமுக வேலையின்மை
6) இரண்டு முற்றிலும் வேறுபட்ட தன்மைகளை தொடர்புப்படுத்திக் குறிப்பது
அ) நுட்பம்
ஆ) சார்ந்திருப்பு
இ) இரட்டைத்தன்மை
ஈ) சமமின்மை
விடைகுறிப்பு:
இ) இரட்டைத்தன்மை
7) ஊரகப்பகுதி, ஊரக மக்கள், ஊரக வாழ்க்கையை மேம்படுத்துதல் என்பது
அ) ஊரகப் பொருளாதாரம்
ஆ) ஊரகப் பொருளியல்
இ) ஊரக வேலைவாய்ப்பு
ஈ) ஊரக மேம்பாடு
விடைகுறிப்பு:
ஈ) ஊரக மேம்பாடு
8) ஊரகப் பொருளாதாரத்தில் வேளாண்மை சிக்கலுக்குத் தொடர்புடையதாகக் கருதப்படுவது
அ) மோசமான செய்தித் தொடர்பு
ஆ) சிறிய அளவு நில உடைமை
இ) ஊரக ஏழ்மை
ஈ) மோசமான வங்கிச் செயல்பாடுகள்
விடைகுறிப்பு:
ஆ) சிறிய அளவு நில உடைமை
9) ஊரகப் பகுதியில் ஒரு மனிதன் எடுத்துக்கொள்ள வேண்டிய கலோரி அளவு
அ) 2100
ஆ) 2200
இ) 2300
ஈ) 2400
விடைகுறிப்பு:
ஈ) 2400
10) ஊரக ஏழ்மைக்கான காரணத்தைச் சுட்டுக
அ) வேளாண்மை சாரா வேலையின்மை
ஆ) அதிக வேலை நிலை
இ) குறைந்த பணவீக்க வீதம்
ஈ) அதிக முதலீடு
விடைகுறிப்பு:
அ) வேளாண்மை சாரா வேலையின்மை
11) மறைந்திருக்கும் வேலையின்மைக்கு மற்றொரு பெயர் என்ன?
அ) திறந்த
ஆ) மறைமுக
இ) பருவ கால
ஈ) ஊரக
விடைகுறிப்பு:
ஆ) மறைமுக
12) குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வேலைவாய்ப்புப் பெறுவதை எப்படிக் கருதுவது?
அ) திறந்த வேலைவாய்ப்பு
ஆ) மறைமுக வேலைவாய்ப்பு
இ) பருவகால வேலைவாய்ப்பு
ஈ) ஊரக வேலைவாய்ப்பு
விடைகுறிப்பு:
இ) பருவகால வேலைவாய்ப்பு
13) ஊரக தொழிற்சாலைக்கு எடுத்துக்காட்டு தருக
அ) சர்க்கரை ஆலைத்தொழில்
ஆ) பாய் தயாரிக்கும் தொழில்
இ) சிமெண்ட் தொழில்
ஈ) காகிதத் தொழில்
விடைகுறிப்பு:
ஆ) பாய் தயாரிக்கும் தொழில்
14) இந்தியாவில் உள்ள ஊரகக் குடும்பங்களில் கடனாளிகளின் பங்கு எவ்வளவு?
அ) பாதியளவு
ஆ) நான்கில் ஒரு பங்கு
இ) மூன்றில் இரண்டு பங்கு
ஈ) நான்கில் மூன்று பங்கு
விடைகுறிப்பு:
ஈ) நான்கில் மூன்று பங்கு
15) இந்தியாவில் ஊரகக் கடனுக்குக் காரணமாக கருதப்படுவது
அ) ஏழ்மை
ஆ) அதிக மக்கள் தொகை
இ) அதிக உற்பத்தி
ஈ) முழுவேலை நிலை
விடைகுறிப்பு:
அ) ஏழ்மை
16) எந்த ஆண்டு வட்டார ஊரக வங்கியானது பயன்பாட்டிற்கு வந்தது?
அ) 1965
ஆ) 1970
இ) 1975
ஈ) 1980
விடைகுறிப்பு:
இ) 1975
17) MUDRA வங்கி செயல்படுத்தப்பட்ட ஆண்டை குறிப்பிடுக.
அ )2000
ஆ) 2005
இ) 2015
ஈ) 2010
விடைகுறிப்பு:
ஈ) 2010
18) தேசிய ஊரக சுகாதாரப்பணி செயல்படுத்தப்பட்ட ஆண்டைக் குறிப்பிடுக.
அ) 2000
ஆ) 2005
இ) 2010
ஈ) 2015
விடைகுறிப்பு:
ஆ) 2005
19) ஊரகச் சாலையின் பயன்பாடாகக் கருதப்படுவது.
அ) ஊரக அங்காடி வசதி
ஆ) வேலைவாய்ப்பு
இ) ஊரக வளர்ச்சி
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடைகுறிப்பு:
ஈ) மேற்கண்ட அனைத்தும்
20) "இந்திய விவசாயி கடனாளியாக பிறந்து, கடனாளியாக வாழ்ந்து, கடனாளியாக இறந்து. கடனையே சந்ததிக்கு விட்டுச் செல்கிறான்" இச்சொற்றொடரைக் கூறியவர் யார்?
அ) ஆடம் ஸ்மித்
ஆ) காந்தி
இ) அமர்தியா சென்
ஈ) சர் மால்கம் டார்லிங்
விடைகுறிப்பு:
ஈ) சர் மால்கம் டார்லிங்
II. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வரிகளில் விடையளி
- பொருளாதார கொள்கைகளை ஊரக பகுதிகளில் நடைமுறைப்படுத்தி வளர்ச்சியடைய செய்தல்.
22. ஊரக வளர்ச்சி என்றால் என்ன?
- ஊரக பகுதிகள், ஊரக மக்கள், ஊரக வாழ்க்கை முறை ஆகியவற்றை மேம்படுத்துவதே ஊரக வளர்ச்சி.
- ஊரக மக்களின் சமூக பொருளாதார மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட உத்தி - உலக வங்கி.
- ஊரக மக்களின் சமூநலம் மற்றும் வாழும் சூழ்நிலையை மேம்படுத்துதலே ஊரக வளர்ச்சி.
23. ஊரக ஏழ்மை வரையறு.
- கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான வருமானத்தை ஈட்ட முடியாத நிலை
24. திறந்த நிலை வேலையின்மை என்றால் என்ன?
- வேலை செய்யும் விருப்பமும் தகுதியும் இருந்து நடைமுறை கூலி வீதத்தில் எந்த வேலையும் கிடைக்காமல் இருப்பது.
- வேளாண்மை தொழிலாளர்கள், கிராம கைவினைஞர்கள், கற்றவர்கள் இதில் அடங்குவர்.
25. மறைமுக வேலையின்மை என்றால் என்ன?
- தேவைக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியில் இருக்கும் நிலை.
- பணியில் இருந்து சிலரை நீக்கினாலும் உற்பத்தி குறையாது.
- தொழிலாளரின் இறுதிநிலை உற்பத்தி திறன் பூஜ்யம்.
26. குடிசைத் தொழில் வரையறு.
- குடும்ப உறுப்பினர்களை கொண்டு முழு அல்லது பகுதிநேர தொழிலாக மேற்கொள்ளப்படும் மரபுவழித் தொழில்கள்.
- உதாரணம்: பாய் பின்னுதல், கயிறு திரித்தல், கூடை முடைதல்.
27. குறுங் கடன்(Mirce finance) என்றால் என்ன?
- குறுங்கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் குறுங்கடன்களே குறுநிதி.
- குறைந்த வருமானம் உள்ள மக்களுக்கு அளிக்கப்படும் கடன், சேமிப்பு, காப்பீடு மற்றும் நிதி தொடர்பான திட்டங்களை உள்ளடக்கியதே குறுநிதி.
- மூலதன ஆதாரமில்லாத சிறு தொழில் முனைவோருக்கு தேவையான நிதியை வழங்கி முதலீடு செய்ய வைத்தல்.
28. ஊரக வீட்டுவசதி சிக்கலுக்கான காரணங்களில் எதேனும் இரண்டு கூறு.
- தூய்மையான குடிநீர்வசதி இன்மை.
- நல்ல சுகாதார வசதி இன்மை.
- முறைப்படி கழிவுகளை அப்புறப்படுத்தும் வழிகள் மிக குறைவு.
- வீட்டுமனை பெறுவதில் உள்ள சட்ட பிரச்சனைகள். தனிக் குடும்பமாக வசிக்க விரும்புதல்.
29. ஊரக மின் மயமாக்கல் வரையறு.
- ஊரகப் பகுதிகளுக்கு மின் வசதியை ஏற்படுத்தி தருவதே ஊரக மின்மயமாக்கல்.
30. இந்தியாவில் ஊரக மின்மயமாக்கலின் இரண்டு பாதக காரணிகளை எழுதுக.
- நிதிப் பற்றாக்குறை
- சீரற்ற நிலப்பரப்பு
- மின் அனுப்புகையில் ஏற்படும் இழப்பு.
- மின் திருட்டு
- மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகள்.
III. பின்வரும் வினாக்களுக்கு ஒரு பத்தி அளவில் விடையளி
ஊரக மேம்பாட்டின் முக்கியத்துவங்கள்:
- ஊரக மக்களின் முன்னேற்றம் மற்றும் பங்களிப்பு இன்றி நாட்டின் முன்னேற்றம் அமையாது.
- நகர்புறங்களுக்கு தேவையான குடிநீர், பால், உணவு, கட்சா பொருட்களை பெற ஊரக மேம்பாடு அவசியம்.
- ஊரக பகுதிகளை முன்னேற்றுவதன் மூலம் இயற்கை வளங்களை முழுமையாக பயன்படுத்த முடியும்.
- ஊரக மக்களுக்கு கல்வி, மருத்துவம் மற்றம் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை அளிப்பதன் மூலம் மனித வளங்களை உருவாக்கலாம்.
- ஊரக மேம்பாட்டின் மூலம் வேலைவாய்ப்பை தேடி நகர் பகுதிகளுக்கு மக்கள் குடிபெயர்தலை தடுக்கலாம்.
ஊரக வளர்ச்சியின்மைக்கான காரணங்கள்:
- நிலங்கள் சரியாக பிரிக்கப்படாமை:
- ஊரக நிலப்பகுதிகள் ஒரு சிலரிடம் குவிந்து காணப்படுகிறது.
- மக்களால் கூலிக்கு வேலை செய்து தங்களது தேவைகளை நிறைவு செய்ய முடிவதில்லை.
- பண்ணை சாராத தொழில்களில் வேலைவாய்ப்பின்மை:
- அதிகரிக்கும் உழைப்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கிராமங்களில் தொழில்கள் வளரவில்லை.
- மிகுதியான தொழிலாளர்களால் ஊரகப் பகுதிகளில் கூலி குறைவாகவே உள்ளது.
- பணவீக்கம்:
- விலை அதிகரிப்பதால் ஊரக மக்களின் வாங்கும் சக்தி குறையும் இது பின்தங்கிய நிலைக்கு காரணமாகும்.
- குறைவான உற்பத்தி திறன்:
- ஊரக தொழிலாளர்கள் மற்றும் பண்ணைகளின் உற்பத்தி திறன் குறைவாக உள்ளது.
- பொதுத் துறைகளில் முதலீடு இன்மை:
- மனித வளத்தை மேம்படுத்துவதற்கான பொதுத்துறை முதலீடு மிகவும் குறைவாக உள்ளது.
- சமூக குறைபாடுகள்:
- எழுத்தறிவின்மை, தொழில்நுட்ப அறிவின்மை, நம்பிக்கை குறைவு. பற்றுகள் மற்றும் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள்.
- பழைமையான தொழில்நுட்பங்கள்.
- உள்கட்டமைப்பு சார்ந்த பிரச்சணைகள்:
- நீர், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, தகவல் தொடர்பு, மருத்துவ வசதி, வங்கி மற்றும் காப்பீடு போன்ற வசதிகள் ஊரக பகுதிகளில் போதுமானதாக இல்லை.
ஊரக வறுமையை நீக்குவதற்கான வழிமுறைகள்:
- ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.
- வறுமை ஒழிப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.
- ஊரகப் பகுதிகளில் தொழிற்சாலைகளை தொடங்க சலுகைகள் வழங்கி ஊக்குவித்தல், நீர்பாசன வசிதிகளை அதிகரித்தல், மேம்படுத்துதல்.
- தொழிற்கல்வி, தொழில் நுட்ப கல்வி, சுயவேலை வாய்ப்புக்கான கல்வி வழங்குதல்.
- தீவிர சாகுபடி முறைகளை அதிகரித்தல்.
- கிராம புற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சி அளித்தல்.
- உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், மேம்படுத்துதல்.
ஊரக வேலையின்மையை நீக்குவதற்கான வழிமுறைகள்:
- துணைத் தொழில்களை தொடங்க ஊக்கப்படுத்துதல்.
- கடன் வசதிகளை ஏற்படுத்தி தருதல்.
- நீர்பாசன வசிதிகளை அதிகரித்தல், மேம்படுத்துதல்.
- தீவிர சாகுபடி முறைகளை அதிகரித்தல்.
- உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், மேம்படுத்துதல்,
- தொழிற்கல்வி, தொழில் நுட்ப கல்வி, சுயவேலை வாய்ப்புக்கான கல்வி வழங்குதல்.
- ஊரக வேலை வாய்ப்பு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துதல்
வட்டார ஊரக வங்கிகள்(RRB):
- நரசிம்மன் குழுவின் பரிந்துரை படி வட்டார ஊரக வங்கிகள் 1975 அக்டோபர் 2 முதல் செயல்படத் தொடங்கின.
- சிறு-குறு விவசாயிகள், வேளாண் தொழிலாளர்கள், கிராம கைவினைஞர்களுக்கு கடன் வழங்க RRB உருவாக்கப்பட்டன.
- சிறுகுறு, குடிசை தொழில்களுக்கு கடன், பிற உதவிகளை RRB வழங்குகிறது.
- மத்திய அரசு 50%, மாநில அரசு 15%, வழங்கும் வணிக வங்கி 35% மூலதனத்தை வழங்குவதன் மூலம் இவை உருவாக்கப்படுகின்றன.
- தற்போது இந்தியாவில் 64 வட்டார ஊரக வங்கிகள் செயல்படுகின்றன.
- பொருளாதாரத்தில் நலிவடைந்தோர்க்கு மட்டும் இவை கடன் வழங்குகிறது.
- இதன் வட்டிவீதம் கூட்டுறவு சங்கங்களின் வட்டி வீதத்தை போல் அமையும்.
- உதாரணம்: பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி
- உறுப்பினர்கள் பொதுவாக ஒரே மாதிரியான பொருளாதார நிலையில் இருப்பர்.
- பொதுவாக சுய உதவிக் குழுக்களில் 10 முதல் 20 பெண் உருப்பினர்கள் இருப்பர்.
- தமக்கென வடிவமைக்கப்பட்ட சட்டங்களையும், விதிமுறைகளையும் கொண்டுள்ளன.
- முடிவுகள் உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து ஆலோசித்து எடுக்கப்படும்.
- உறுப்பினர்களின் முழு பங்கேற்புடன் நிர்வாகம் அமையும்
- உறுப்பினர்களின் சிறு சேமிப்பை அதிகரிக்க உதவுகின்றன.
- உறுப்பினர்களின் பரஸ்பர உதவி சுய உதவி மூலம் பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
முத்ரா(MUDRA) வங்கியின் நோக்கங்கள்:
- ஒழுங்கு குறுங்கடன் வழங்குபவரையும் பெறுபவரையும் ஒழுங்குப்படுத்துதல்.
- குறுங்கடன் வழங்குவதில் நிலைத்த தன்மையை உருவாக்குதல்.
- சிறு நிதி நிறுவனங்களுக்கு நிதி மற்றும் கடன் வசதிகளை ஏற்படுத்தி தருதல்.
- சிறு நிதி நிறுவனங்களை பதிவு, ஒப்புதல், தர நிர்ணயம் செய்தல்.
- சிறு தொழில் கடன் உத்திரவாத திட்டம் தொடங்குதல்.
- கடன் வழங்குதல், பெறுதல், பகிர்ந்தளித்தலுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல்.
IV.பின்வரும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடையளி
ஊரக பொருளாதாரத்தின் பண்புகள்:
ஊரகம் ஒரு நிறுவனம்:
- கிராமம் முதன்மை நிறுவனமாக செயல்பட்டு அனைத்து தேவைகளையும் நிறைவு செய்கிறது.
- ஊரக மக்கள் அனைவரும் மனித நேயத்துடன் ஒற்றுமையுடன் உணர்வுப்பூர்வமாக இருப்பர்.
- இயற்கை, வேளாண்மை, வேளாண்மை சார்ந்த தொழில்களை ஊரக பொருளாதாரம் சார்ந்துள்ளது.
- ஊரக மக்களின் முக்கிய தொழில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்கள்.
- ஊரக வேலையின்மையின் பிரதான இயல்பு பருவகால வேலையின்மை மற்றும் மறைமுக வேலையின்மை.
- மக்கள் தொகை அடர்த்தி கிராமங்களில் மிகவும் குறைவாக இருக்கும். வீடுகள் கிராமம் முழுக்க பரவி காணப்படும்.
- அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய முடியாத நிலையே வறுமை.
- 2011-2012 மதிப்பீட்டின் படி 22 கோடி மக்கள் கிராமங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கின்றனர்.
- ஊரக மக்களின் வாழ்க்கை முறை மிகவும் எளிமையானது.
- ஊரக மக்கள் மூட நம்பிக்கைகள், பாராம்பரிய கலாச்சார நடைமுறைகளை சார்ந்துள்ளனர்.
- ஊரக மக்களின் வாழ்க்கை தரம் எழ்மை நிலையிலும் பரிதாபமாகவும் உள்ளது.
- ஒரு இந்திய உழவன் கடனில் பிறந்து, கடனில் வாழ்ந்து, கடனிலே இறந்து, கடனையே சந்ததிகளுக்கு விட்டுச்செல்கிறான். - சர். மால்கம் டார்லிங்.
- கிராம மக்கள் கடன் சுமையால் தற்கொலைக்கு ஆளாகின்றனர்.
- ஊரக மக்கள் வேலை தேடி நகரத்திற்கு இடம் பெயருகின்றனர்.
- பகைமை, அடிப்படை வசதிகள் இன்மை போன்ற காரணங்களால் கிராம மக்கள் இடம் பெயருகின்றனர்.
- ஊரகப் பகுதிகளில் வருமானம், சொத்து, செல்வம் ஆகியவற்றின் பகிர்வில் ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது.
- நிலம், கால்நடை மற்றும் பிற சொத்துக்கள் ஒரு சிலரிடமே குவிந்துள்ளது.
- ஊரக மக்கள் நகரத்தில் வேலை செய்யும் தமது குடும்ப உறுப்பினர்களின் வருவாயையும்,
- அரசின் சமூக உதவிகளையும் பெருமளவு சார்ந்துள்ளனர்.
- வளர்ந்த மற்றும் பின் தங்கிய நிலை, ஏழை மற்றும் பணக்காரன் போன்ற முரண்படான இரட்டை தன்மை ஊரக பொருளாதாரத்தில் காணப்படுகிறது.
- ஊரகப் பகுதிகளில் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவாக கிடைப்பதால் அவர்களின் வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைவாக உள்ளது.
39. ஊரக பொருளாதாரத்தின் சிக்கல்களை ஆராய்க
ஊரக பொருளாதாரத்தின் பிரச்சனைகள்: (சிக்கல்கள்)
மக்கள் தொடர்புடைய பிரச்சனைகள்:
- எழுத்தறிவின்மை, போதிய தொழில்நுட்ப அறிவின்மை, நம்பிக்கை குறைவு, பற்றுகள், குறைவான வாழ்க்கைத்தரம் போன்றவை மக்கள் தொடர்புடைய பிரச்சனைகள்.
- உள்ளீடுகள் கிடைக்காமை, அங்காடிப்படுத்தும் வசதிகள் குறைவு, பன்முகத் திறன் கொண்ட பணியாளர்கள் இன்மை, நிலங்கள் துண்டாடப்படுதல், உள்கட்டமைப்பு வசதிகள் இன்மை, விழிப்புணர்வு இன்மை முதலியவை வேளாண்மை தொடர்புடைய பிரச்சனைகள்.
- ஊரக பகுதிகளில் உள் கட்டமைப்பு வசதிகளான நீர், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், தகவல் தொடர்பு, பண்டக சேமிப்பு வசதி, வங்கி, காப்பீடு போன்ற வசதிகள் போதுமானதாக இல்லை.
- நலிவடைந்த தொழில்கள், குறைவான வருமானம், கடன் சுமை, செல்வ வருமான ஏற்றத்தாழ்வு.நவீன உள்ளீடுகளை பயன்படுத்த இயலாமை போன்றவை பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள்.
- அரசியல் தலையீடு, ஊக்கமின்மை, ஆர்வமின்மை, குறைந்த கூலி, சிறந்த தலைமை இன்மை, வரவு - செலவு கணக்குகளை முறையாக பயன்படுத்தாமை ஆகியவை நிர்வாகம் சார்ந்த பிரச்சனைகள்.
- தகுதியற்ற செயல்படாத நபர்கள் தலைமை பொறுப்பில் இருத்தல், சுய விருப்புடன் செயல்படும் தலைவர்கள், குறைந்த பேரசக்தி ஆற்றல், திறமையை மறுத்தல், அரசியல் தலைவர்களின் தலையீடு போன்றவை தலைமை சார்ந்த பிரச்சனைகள்.
- ஊரக பகுதிகளில் ஜாதிமுறை இன்றளவும் மாறாமல் உள்ளது.
- ஆதிக்க ஜாதியினர் பெருமளவு சொத்துக்களுடன் சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக உள்ளனர்.
- வகுப்பு மற்றும் சாதி சார்ந்த சுரண்டல்கள் ஊரக பகுதிகளில் உச்சத்தில் உள்ளது.
- வறுமை, ஊட்டச்சத்து குறைவு, குழந்தை திருமணம், கலப்பு திருமணம், பெண்சிசு கொலை போன்றவை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
ஊரக கடன் சுமைகள்:
- ஒரு இந்திய உழவன் கடனில் பிறந்து, கடனில் வாழ்ந்து கடனிலே இறந்து, கடனையே சந்ததிகளுக்கு விட்டுச்செல்கிறான். - சர். மால்கம் டார்லிங்.
- கிராம மக்கள் கடன் சுமையால் தற்கொலைக்கு ஆளாகின்றனர்.
உழவர்களின் ஏழ்மை நிலை:
- வேளாண்மை செய்ய, நுகர்வு, குடும்ப விழா. திருவிழா மற்றும் பண்டிகைக்காக உழவர்கள் கடன் பெறுகின்றனர். ஏழ்மை நிலை, கடன் மற்றும் கடனுக்கான வட்டி போன்றவை உழவர்களை கடன் கொடுப்பவர்களின் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
- அடிக்கடி பருவமழை பொய்த்து போவதால் உழவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
- வாங்கிய கடனை செலுத்தவும் அதற்கான வட்டியை செலுத்தவும் புதிய கடனை பெறுகின்றனர். இதனால் கடன்சுமை மேலும் அதிகரிக்கிறது.
- விவசாயம் சிறக்கும் காலங்களில் விவசாய பண்டங்களில் விலை குறைவதால் உழவர்களின் வருமானம் குறைகிறது.
- நிலம் தொடர்பான வழக்குகளுக்கு செலவிட உழவர்கள் அதிகம் கடன் பெறுகின்றனர்.
- வழக்குகள் நீண்டகாலம் இழுக்கப்பட்டு அவர்களின் சேமிப்பு மற்றும் சொத்துகள் அழிக்கப்படுகின்றன.
- உள்ளூரில் வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் அதிக வட்டி வசூலிப்பதுடன் வட்டியை அசலுடன் சேர்த்து அதிகரித்துக் கொண்டே செல்வதால் உழவர்கள் கடனில் மூழ்கும் நிலை உள்ளது.
- வட்டியோடு கடனை திருப்பி செலுத்த இயலாத நிலையில் ஊரக மக்களிடையே தற்கொலைகள் போன்ற தீய விளைவுகள் ஏற்படுகிறது.
- இந்தியாவின் நிதி கட்டமைப்பு பலவீனமாக இருத்தல்.
- வேளாண்மை கருவிகளை வாங்குதல்.
- பண்டிகை கொண்டாட்டங்கள்.
- திடீர் மருத்துவ செலவு.
- மதுபான நுகர்வு
- குறைவான அங்காடி வசதிகள்
- வேலைவாய்ப்புகளில் தேக்கநிலை.
- குறைவான வருமானம் போன்றவை ஊரக கடன் சுமைக்கான பிற காரணங்களாகும்.







0 Comments:
Post a Comment