9th Tamil - Book Back Answers - Unit 6 - Guide

  

 


    9th Tamil - Book Back Answers - Unit 6 - Download

    Tamil Nadu Board 9th Standard Tamil - Unit 6: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 6 – from the Tamil Nadu State Board 9th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 6 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 9 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 6

    I. திறன் அறிவோம்

    அ) பலவுள் தெரிக.

    1. பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று_________.
                அ) மாமல்லபுரம்

    2. 'பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்திடும்' நிலப்பகுதி
                இ) முல்லை

    3. மரவேர் என்பது 
    _________ புணர்ச்சி
                ஈ) கெடுதல்

    4. ‘அதிரப் புகுதக் கனாக் கண்டேன்’ – யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்.
                ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

    5. திருநாதர்குன்றில் ஒருபாறையில் படைப்புச் சிற்பங் களாக உள்ளவ
    _________.
                ஆ)தீர்த்தங்கரர் உருவங்கள்
     

    ஆ) குறு வினா

    1. செப்புத் திருமேனிகள் பற்றிக் குறிப்பு வரைக.
    விடைகுறிப்பு:

    • செப்புத் திருமேனிகள் சோழர் கால சிற்பக்கலை நுட்பத்திற்குச் சிறந்த சான்றாகும்.
    • சோழர் காலத்தில்தான் மிகுதியான செப்புத்திருமேனிகள் உருவமைக்கப்பட்டன.
    • கடவுளின் உருவங்களும், மனித உருவங்களும் மிகுந்த கலை நுட்பத்தோடு வடிவமைக்கப் பட்டன.
    • சோழர் காலம் “செப்புத் திருமேனிகளின் பொற்காலம்” என்று அழைக்கப்படும் அளவிற்கு அவை அழகுற அமைந்துள்ளன.

    2. நடுகல் என்றால் என்ன?
    விடைகுறிப்பு:

    • நடுகல் பற்றியக் குறிப்பு தொல்காப்பியத்தில் காணப்படுகிறது.
    • போரில் விழுப்புண்பட்டு இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும்.
    • அக்கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப் பெறும். 
    • அவரது வீரத்தின் சிறப்பும் கூறப்பெறும்.
    • தமிழரின் தொடக்ககாலச் சிற்பக் கலைக்குச் சான்றாக இதனைக் குறிப்பிடுவர்.

    3. இசைத்தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டவை?
    விடைகுறிப்பு:

            பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைத் தூண்கள் விஜய நகர மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டன.

    4. கண்ண ன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது?
    விடைகுறிப்பு:

    • கண்ணன் புகுந்த பந்தலானது முத்துக்களையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்டதாக இருந்தது.
    • மத்தளம் முழங்கியதாகவும், வரிகளை உடைய சங்குகளைஊதுபவர்கள் நின்றுகொண்டிருந்தனர் என்று, கண்ணன் புகுந்த பந்தல் இருந்த நிலையை ஆண்டாள் கூறுகிறாள்.

    5. இடிகுரல், பெருங்கடல் – இலக்கணக் குறிப்புத் தருக.
    விடைகுறிப்பு:

    இடிகுரல் – உவமைத் தொகை
    பெருங்கடல் – பண்புத் தொகை

    6. பாலை நிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரணம் என்ன?
    விடைகுறிப்பு:

            மராமலர்களை மாலையாக அணிந்த சிறுவர்கள், எருதின் கொம்புகளைப் போல் இருந்த பாலைக்காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு கோலினால் அடித்தனர். அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்து ஓடின.
    “வெடிக்கவிட்டு ஆடிட விரும்பிக் கோலினால் அடிக்கும் ஓசையின் பருந்து அஞ்சி ஓடுமே”

    இ) சிறு வினா

    1. முழு உருவச் சிற்பங்கள் – புடைப்புச் சிற்பங்கள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு யாது?
    விடைகுறிப்பு:
     
    முழு உருவச் சிற்பம்:
            உருவத்தின் முன் பகுதியும், பின் பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் முழு உருவத்துடன் அமைந்து இருக்கும்.

    புடைப்புச் சிற்பம்:
            புடைப்புச் சிற்பத்தில் முன்பகுதி மட்டுமே தெரியும் படி அமைந்து இருக்கும்.

    2. நாயக்கர் காலச் சிற்பங்களின் நுட்பங்கள் யாவை?
    விடைகுறிப்பு:

    • நாயக்கர் காலச் சிற்பங்களில் ஆடை ஆபரணங்கள் கலை நயத்துடன் காணப்படும்.
    • நாயக்கர் காலச் சிற்பங்களை, கலை நுட்பத்தின் உச்சநிலை படைப்பு என்று கூறலாம்.
    • விழியோட்டம், புருவ நெளிவு, நக அமைப்பு என மிக மிக நுட்பமாகக் கலை நயத்துடன் அவை படைக்கப்பட்டுள்ளன.

    3. இராவண காவியத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு உவமைகளை எடுத்துக் காட்டுக.
    விடைகுறிப்பு:

    குன்று போல:

            முல்லை நிலத்தவர்கள், முதிரை. சாமை, கேழ்வரகு மணி போன்ற குதிரை வாலி ஆகியவற்றை கதிர் அடித்து களத்தில் குவித்து வைத்திருக்கும் காட்சியானது குன்று போல இருந்தது என்று தானியக் குவியலுக்கு குன்றினை உவமைப்படுத்தியுள்ளார்.

    மதியம் தொடரும் மேகம் போல:

            கடற்கரை மணலிடை உலவி தன் நீண்ட சிறகினை உலர்த்திய வண்டானது, தாமரை மலரை ஒத்த பெண்களின் முகத்தினை நோக்கி தொடர்ந்து செல்லும். அக்காட்சியானது வானில் முழுநிலவைத் தொடர்ந்து செல்லும் ஒரு மேகத்தின் காட்சி போல் உள்ளது என்று உவமைப்படுத்தியுள்ளார் புலவர் குழந்தை.

    4. ஆண்டாளின் கனவுக் காட்சிகளை எழுதுக.
    விடைகுறிப்பு:

    • சதிராடும் இளம்பெண்கள், தம் கைகளில் கதிரவன் போன்ற ஒளியையுடைய விளக்கையும் கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர் கொண்டு அழைக்கிறார்கள்.
    • மதுராபுரியை ஆளும் மன்னனாம் கண்ணன், பாதங்களில் பாதுகை அணிந்து கொண்டு புவி அதிர மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறான்.
    • மத்தளம் முழங்க, வரி சங்கம் ஊத, முத்துக்களையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் என்னைத் திருமணம் செய்து கொள்கிறான் என்று ஆண்டாள் கனவு கண்டதாகக் கூறுகிறாள்.

    5. குறிஞ்சி மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக.
    விடைகுறிப்பு:

            தீயில் இட்ட சந்தன மரக் குச்சிகளின் மணமும், அகில் போன்ற வாசனைப் பொருட்களின் நறுமணமும், உலையில் இட்ட மலை நெல் அரிசி சோற்றின் மணமும், குறிஞ்சி நிலம் முழுவதும் பரவிக் கிடந்த காந்தள் மலரின் மணமும், எங்கும் பரவித் தோய்ந்து கிடந்ததனால் குறிஞ்சி நிலப்பகுதி முழுவதும் மணந்தது.

    6. கைபிடி, கைப்பிடி – சொற்களின் பொருள் வேறுபாடுகளையும் அவற்றின் புணர்ச்சி வகைகளையும் எழுதுக.
    விடைகுறிப்பு:
     
    “கை பிடி” – கையைப் பிடித்துக் கொள் என்று பொருள்.
    “கைப்பிடி” – கைப்பிடி அளவைக் குறிப்பது. (ஒரு கைப்பிடி பருப்பு கொடு)
    கை + பிடி → கைபிடி – இயல்புப் புணர்ச்சி ஆகும்.
    கை + பிடி → கைப்பிடி (தோன்றல்) – விகாரப்புணர்ச்சி ஆகும்.

    ஈ) நெடு வினா

    1.தமிழ் நாட்டுச் சிற்பங்கள் கலை நயம் மிக்கனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக. 
    விடைகுறிப்பு:


                மாமல்லபுரச் சிற்பங்கள் பெரும்பாறைகளைச் செதுக்கிப் பற்பல உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பஞ்சபாண்டவர்கள் இரதத்தில் உள்ள சிற்ப வேலைப் பாடுகள் அழகாக உள்ளன.

                தஞ்சைப் பெரியகோவிலில் காணப்படும் 14 அடி உயரமுள்ள வாயிற்காவலர் உருவங்களும், நந்தியும் வியப்பூட்டும் படி உள்ளது.

                நாயக்கர் மன்னர்கள் சிற்ப வேலைப்பாடுடன் ஆயிரங்கால் மண்டபத்தை அமைத்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரம் கால் மண்டபத்து தூண்களில் கண்ணப்பர், குறவன், குறத்தி, ஆகியவற்றில் ஆடை ஆபரணங்கள் கலைநயத்துடன் காணப் படுகின்றன.

                கோவை பேரூர் சிவன் கோவிலில் உள்ள சிற்பங்கள் விழியோட்டம், புருவ நெளிவு, நகஅமைப்பு என மிக மிக நுட்பமாகக் கலைநயத்துடன் அவை அமைக்கப் பட்டுள்ளன.

    2.இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரி.
    விடைகுறிப்பு:


    மருதம்:
    • ஆறும் குளத்து நீரும் காட்டாறும் மருத நிலத்தில் பாயும்.
    • நெற்பயிரினைக் காக்க கரும்பு நிற்கும்.
    • வரும் நீரைக் கால்வாய் வழி வயலில் தேக்கி வளம் பெருகும்.
    • வயலில் காஞ்சி,வஞ்சி மலர்கள் பூக்கும்.
    குறிஞ்சி:
    • தீயில் இட்ட சந்தன மரக்குச்சிகள், அகில் இவற்றின் நறுமணம்.
    • நெல்லரிசிச் சோற்றின் மணம்.
    • காந்தள் மலரின் மணம்.
    • எங்கும் வீசியதால் குறிஞ்சி நிலம் எங்கும் மணக்கின்றது.

    3.இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லை என்பதைச் 'செய்திக் கதையின் மூலம் விளக்குக.
    விடைகுறிப்பு:


    முன்னுரை
                இசைக்கு நாடு, மொழி இனம் தேவையில்லை என்பதை இக்கதையில் காண்போம்.

    செய்தி
                இசை நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு நாதசுவர வித்வானும் பிலிப் போல்ஸ்கா என்ற வெளிநாட்டுக் கலைஞரும் வந்திருந்தனர்.
     
                நாதஸ்வர வித்வான்: வாசிக்கத் தொடங்கினார். நாதஸ்வர இசைஆரம்பித்தது.
     
                போல்ஸ்கா தன்னையே இழந்து இரசிக்கின்றார். வித்துவானின் சாமாராகம் அனைவரையும் மயங்கச் செய்தது.
     
                வித்வானிடம் சாந்தமுலேகாவை பல முறை வாசிக்கக் கேட்டு மகிழ்ந்தார்.
    இதில் ஒரு செய்தி இருப்பதாகவும், ஏதோ ஒரு உலகத்தில் இருந்து வந்த செய்தி கேட்கிறது என்றார் போல்ஸ்கா.
     
                அது தமிழ் இசையின் செய்தி. வேறு எந்த இசையும்; இதனைக் கொடுக்கவும் இல்லை. அதனை நான் வாங்கிக் கொண்டேன்.

    முடிவுரை
                இக்தை இசைக்கு நாடு, மொழி, மதம் என எதுவும் இல்லை என்பதை உணர்த்துகிறது.


    II. மொழியை ஆள்வோம்

    அ) படித்து சுவைக்க.


    ஆ) மொழி பெயர்க்க.

    1. Strengthen the body.
    2. Love your food.
    3. Thinking is great.
    4. Walk like a bull.
    5. Union is strength.
    6. Practice what you have learnt.
        -Putiya Athichoti by Bharathiyar

    விடைகுறிப்பு:

    1. உடலினை உறுதி செய்
    2. ஊண் மிக விரும்பு
    3. எண்ணுவது உயர்வு
    4. ஏறு போல் நட
    5. ஒற்றுமை வலிமையாம்
    6. கற்றது ஒழுகு
        - பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி
     

    இ) மரபுத் தொடர்களைக் கொண்டு தொடர் அமைக்க.

    (எட்டாக்கனி, உடும்புப்பிடி, கிணற்றுத்தவளை, ஆகாயத்தாமரை, எடுப்பார் கைப்பிள்ளை, மேளதாளத்துடன்.)

    எ.கா: எட்டாக்கனி:
    முயன்றால் எந்தச் செயலிலும் வெற்றி என்பது எட்டாக்கனி இல்லை.

    விடைகுறிப்பு:

    உடும்புப்பிடி: 
    என் தம்பிக்கு பிடிவாத குணமாததால் பிடித்தால் உடும்புப்பிடிதான்.

    கிணற்றுத் தவளை: 
    கிணற்றுத் தவளை போல் உன் வாழ்வை ஒரு குறுகிய எல்லைக்குள் சுருக்கிக் கொள்ளாதே! 
    (அல்லது) 
    கிணற்றுத் தவளை போல் எதுவும் தெரியாமல் இருக்காதே.

    ஆகாயத்தாமரை:
    ஆகாயத் தாமரையைப் பறிக்க விரும்புவது போல் இல்லாத ஒன்றை விரும்பி ஏற்காதே.

    எடுப்பார் கைப்பிள்ளை: 
    என் நண்பன் எடுப்பார் கைப்பிள்ளை போல் யார் எதனைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்வான்; நம்பி விடுவான்.

    மேளதாளத்துடன்:
    எம் பள்ளிக்கு வருகை தந்த அமைச்சரை மேளதாளத்துடன் வரவேற்றோம்.
     

    ஈ) பத்தியில் இடம்பெற்றுள்ள இயல்பு புணர்ச்சிகளையும் விகாரப்  புணர்ச்சிகளையும் எடுத்தெழுதுக.

        காஞ்சி கயிலாசநாதர் கோவில் சுற்றுச்சுவர் முழுவதும் சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்கிறது. அதே போன்று காஞ்சி வைகுந்த பெருமாள் கோவிலிலும் பல்லவர் காலச் சிற்பங்கள் மிகுதியாக உள்ளன. இங்குத் தெய்வச்சிற்பங்கள் மட்டுமல்லாது பிற சிற்பங்களும் கோவில் உட்புறச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன. பல்லவர் காலக் குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்று சிற்பங்கள் படைக்கப்பட்டுள்ளன.

    விடைகுறிப்பு:

    இயல்புப் புணர்ச்சி சொற்கள்:
    நுழைவு வாயிலின் – நுழைவு + வாயிலின்
    நிற்பது போன்று – நிற்பது + போன்று

    விகாரப்புணர்ச்சிச் சொற்கள்

    1. தோன்றல் விகாரப் புணர்ச்சி

    சுற்று + சுவர் → சுற்றுச்சுவர்
    கலை + கூடம் → கலைக்கூடம்
    தெய்வம் + சிற்பங்கள் → தெய்வச்சிற்பங்கள்
    குடைவரை + கோயில் → குடைவரைக்கோயில்

    2. கெடுதல் விகாரப் புணர்ச்சி
    வைகுந்தம் + பெருமாள் → வைகுந்த பெருமாள்

    3. திரிதல் விகாரப் புணர்ச்சி
    பல்லவர் காலம் + குடைவரைக் கோவில் → பல்லவர் காலக் குடைவரைக் கோவில்
     

    உ) மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

    1. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.
    விடைகுறிப்பு:

    இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்.

    2. கயல்பானை செய்யக் கற்றுக் கொண்டாள்.
    விடைகுறிப்பு:

    கயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள்.

    3. நேற்று தென்றல் காற்று அடித்தது.
    விடைகுறிப்பு:

    நேற்று தென்றல் வீசியது.

    4. தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார்.
    விடைகுறிப்பு:

    தென்னங்கீற்றில் இருந்து நார் கிழித்தனர் (கிழித்தார்).

    5. அணில் பழம் சாப்பிட்டது.
    விடைகுறிப்பு:

    அணில் பழம் தின்றது.

    6. கொடியிலுள்ள மலரை எடுத்து வா.
    விடைகுறிப்பு:

    கொடியில் உள்ள மலரைக் கொய்து வா. 
    (அல்லது) 
    கொடியில் உள்ள பூக்களைப் பறித்து வா.

    ஊ) கவிதை படைக்க .

    (மூடநம்பிக்கை, புவியைப் போற்று, அன்பினவழி)
     
    எ.கா:
    மூட நம்பிக்கை
    பூனை குறுக்கே போனதற்குக்
    கவலைப்படுகிறாயே!
    அந்தப் பூனைக்கு என்ன ஆனதோ?
     
    விடைகுறிப்பு:

    புவியைப் போற்று

    புத்துலகமாய் மாற்று 
    சுற்றுச்சூழல் காத்திடு 
    சுகமாய் வாழ்ந்திடு 
    சுகமாய் வாழ்ந்திடு 
    உயிரனைத்தும் பேணிடு 
    உலகையழிக்க நாணிடு

    அன்பின் வழி
    அன்பு எனும் ஒற்றை வழியே 
    இவ்வுலகினை ஆள்கிறது 
    அன்பு வழியும் தெய்வீக வழியும் ஒன்றே 
    எங்கே அன்பின் வழி உளதோ 
    அங்கே தெய்வம் குடி கொள்ளும்!

    III. மொழியோடு விளையாடு

    அ) விடையைத் தமிழ் எண்களில் எழுதுக.

    விடையைத் தமிழ் எண்களில் எழுதுக.
    விடைகுறிப்பு:

    ஆ) கண்டுபிடிக்க.

    1. எண்ணும் எழுத்தும் கண் – இத்தொடரை ஒருவர் 1, 2, 3, 4, 1, 5, 6, 7, 4, 8, 2 என்று குறிப்பிடுகிறார். இதே முறையைப் பின்பற்றி கீழ்க்காணும் சொற்களை எப்படிக் குறிப்பிடுவார்.
    அ) எழுது – ……………………
    ஆ) கண்ணும் – ……………………
    இ) கழுத்து – ……………………
    ஈ) கத்து – ……………………
    விடைகுறிப்பு:

    அ) எழுது – 1, 5, 7
    ஆ) கண்ணும் – 8, 2, 3, 4
    இ) கழுத்து – 8, 5, 6, 7
    ஈ) கத்து – 8, 6, 7

    2. என் வகுப்பில் படிக்கும் அனைவரும் புதிய 
    புத்தகம் வைத்திருந்தனர். இராமனும் புதிய புத்தகம் வைத்திருந்தான். எனவே, இராமன் என் வகுப்பு மாணவன் – இக் கூற்று.

    அ) உண்மை
    ஆ) பொய்
    இ) உறுதியாகக் கூறமுடியாது
    விடைகுறிப்பு:
    இ) உறுதியாகக் கூறமுடியாது
    காரணம் : அனைவரும் என்று கூறிய பின் இராமன் வேறு வகுப்பு மாணவனாகக் கூட இருக்கலாம்

    இ) அகராதியில் காண்க .

    ஏங்கல், கிடுகு, தாமம், பான்மை, பொறி
    விடைகுறிப்பு:
     
    அ) ஏங்கல் – ஓசை, மயிற்குரல், அழுதல், குழந்தைகளுக்கு வரும் ஒருவகை நோய்
    ஆ) கிடுகு – கேடகம், முடைந்த ஓலைக் கீற்று, சட்டப்பலகை
    இ) தாமம் – பூமாலை, வடம், புகழ், ஒளி, பரமபதம்
    ஈ) பான்மை – குணம், தகுதி, முறைமை, சிறப்பு
    உ) பொறி – புள்ளி, தழும்பு, எந்திரம், ஒளி, ஐம்பொறி

    ஈ) உவமைத் தொடர்களை உருவகத் தொடர்களாக மாற்றுக.

    1. மலர்விழி வீணை வாசித்தாள்: கேட்டவர் வெள்ளம் போன்ற இன்பத்தில் நீந்தினர்.
    விடைகுறிப்பு:

    மலர்விழி வீணை வாசித்தாள். கேட்டவர் இன்ப வெள்ளத்தில் நீந்தினர்.

    2. குழலியின் இசையைச் சுவைத்தவர், கடல் போன்ற கவலையிலிருந்து நீங்கினர்.
    விடைகுறிப்பு:

    குழலியின் இசையைச் சுவைத்தவர் கவலைக்கடலில் இருந்து நீங்கினர்.

    3. தேன் போன்ற மொழியைப் பவள வாய் திறந்து படித்தாள்
    விடைகுறிப்பு:

    பவளவாய் திறந்து மொழித்தேனைப் படித்தாள்.

    4. முத்துநகை தன் வில் போன்ற புருவத்தில் மை தீட்டினாள்.
    விடைகுறிப்பு:

    முத்துநகை தன் புருவவில்லில் மை தீட்டினாள்.

    உ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

    என்னை நானே
    செதுக்கும் சிற்பியாவேன் – ஆம்
    கல்வி எனும் உளி கொண்டு
    உயரிய சிந்தனை செயல் எனும்
    நுட்பங்களுடன் என்னை நானே
    வடித்து கொள்கிறேன் சிற்பமாக 
     

    IV. செயல் திட்டம்

    உங்கள் மாவட்டத்தின் கலைநயம் மிக்க இடங்களின் சிறப்புகளைப் படங்களுடன் திரட்டிப் பள்ளியில் காட்சிப்படுத்துக.
    விடைகுறிப்பு:
        அந்தந்த மாவட்டத்தின் சிறப்புகளைக் குறிக்கும் தொகுப்பேட்டை, மாணவர்களே உருவாக்குங்கள்.
     

    V. நிற்க அதற்குத் தக...

    என்னை மகிழச் செய்த பணிகள்
    (எ.கா)
    1. இக்கட்டான நேரத்தில் தம்பிக்கு உதவியதற்காக அப்பாவிடம் பாராட்டுப் பெற்றேன்.
    2. எனது வகுப்பறையில் கரும்பலகையின் கீழ் சிதறிக் கிடந்த சுண்ணக் கட்டித்துண்டுகளைத் திரட்டி எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டதற்கு ஆசிரியர் மற்றும் வகுப்புத் தோழர்களிடம் கைதட்டல் பெற்றேன்.
    3. ____________________________________________.
    விடைகுறிப்பு:

    1. இக்கட்டான நேரத்தில் தம்பிக்கு உதவியதற்காக அப்பாவிடம் பாராட்டுப் பெற்றேன்.
    2. எனது வகுப்பறையில் கரும்பலகையின் கீழ் சிதறிக் கிடந்த சுண்ணக் கட்டித்துண்டுகளைத் திரட்டி எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டதற்கு ஆசிரியர் மற்றும் வகுப்புத் தோழர்களிடம் கைதட்டல் பெற்றேன்.
    3. வயதான என் பாட்டியின் விருப்பத்தை நிறைவேற்ற அவர்களைப் பாதுகாப்பாகக் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். அம்மா பாராட்டினாள் – மகிழ்ந்தேன்.
    4. செஞ்சிலுவைச் சங்கத்தில் இணைந்து மாணவப் பருவத்திலே சேவை செய்து அனைவரது பாராட்டையும் பெற்றேன்; மகிழ்ச்சியடைந்தேன்.

    VI. கலைச்சொல் அறிவோம்

    குடைவரைக்கோயில் – (Cave temple)
    கருவூலம் – (Treasury)
    மதிப்புறு முனைவர் – (Honorary Doctorate)
    மெல்லிசை – (melody)
    ஆவணக் குறும்படம் – (Document short film)
    புணர்ச்சி – (combination)
     

     VII. அறிவை விரிவு செய்

    நட்புக்காலம் - கவிஞர் அறிவுமதி 
    திருக்குறள் கதைகள் - கிருபானந்தவாரியார்
    கையா, உலகே ஒரு உயிர் - ஜேம்ஸ் லவ்லாக்
                                                            - தமிழில்: சா. சுரேஷ்
     
     
     
     
    விடைக் குறிப்பு தயாரித்தவர்:
     'Nallasiriyar' S. SETTU MATHARSHA,
    GRADUATE TEACHER IN TAMIL, 
    EKM A. G MATHARASA ISLAMIA HIGH SCHOOL, 
    ERODE 
     
     
     
     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive