9th Tamil - Book Back Answers - Unit 5 - Guide

   

 


    9th Tamil - Book Back Answers - Unit 5 - Download

    Tamil Nadu Board 9th Standard Tamil - Unit 5: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 5 – from the Tamil Nadu State Board 9th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 5 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 9 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 5

    I. திறன் அறிவோம்

    அ) பலவுள் தெரிக.

    1. பொருத்தமான விடையைத் தேர்க.
    அ) சிறுபஞ்ச மூலம் – 1. காப்பிய இலக்கியம்
    ஆ) குடும்ப விளக்கு – 2. சங்க இலக்கியம்
    இ) சீவக சிந்தாமணி – 3. அற இலக்கியம்
    ஈ) குறுந்தொகை – 4. தற்கால இலக்கியம்

    க) அ – 3, ஆ – 4, இ – 1, ஈ – 2
    உ) அ – 2, ஆ – 3, இ – 1, ஈ – 4
    ங) அ – 3, ஆ – 1, இ – 4, ஈ – 2
    ச) அ – 4, ஆ – 1, இ – 2, ஈ – 3
    விடைகுறிப்பு:
    க) அ- 3, ஆ – 4, இ – 1, ஈ – 2

    2. மாறுபட்டுள்ள குழுவினைக் கண்டறிக.
    அ) கலைக்கூடம், திரையரங்கம், ஆடுகளம், அருங்காட்சியகம்
    ஆ) கடி, உறு, கூர், கழி
    இ) வினவினான், செப்பினான், உரைத்தான், பகன்றான்
    ஈ) இன், கூட, கிறு, அம்பு
    விடைகுறிப்பு:
    ஈ) இன், கூட, கிறு, அம்பு

    3. கீழ்க்காண்பவற்றுள் உணர்ச்சித் தொடர் எது?
    அ) சிறுபஞ்சமூலத்தில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன.
    ஆ) இந்திய நூலகவியலின் தந்தையென அறியப்படுபவர் யார்?
    இ) என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!
    ஈ) வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடத்தைப் புத்தகசாலைக்குத் தருக.
    விடைகுறிப்பு:
    இ) என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!

    4. சரியான கூற்றினைத் தெரிவு செய்க.
    அ) ‘ஆ’ என்பது எதிர்மறை இடைநிலை.
    ஆ) வீட்டிற்கோர் புத்தகசாலை என்பது அண்ணாவின் மேடைப்பேச்சு.
    இ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்.

    1. ஆ, இ சரி; அ தவறு
    2. அ, இ, சரி; ஆதவறு
    3. மூன்றும் சரி
    4. மூன்றும் தவறு
    விடைகுறிப்பு:
    3) மூன்றும் சரி

    5. பூவாது காய்க்கும், மலர்க்கை அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது?
    அ) பெயரெச்சம், உவமைத்தொகை
    ஆ) எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம்
    இ) வினையெச்சம், உவமை
    ஈ) எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை
    விடைகுறிப்பு:
    ஈ) எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை.

    ஆ) குறு வினா

    1. தலைவியின் பேச்சில் வெளிப்படுகின்ற பாடுபொருள் யாது?
    விடைகுறிப்பு:

    • குடும்ப விளக்கின் தலைவியின் பேச்சில்,
    • பெண்ணுக்கு விடுதலை வேண்டுமெனில் கல்வி வேண்டும்;
    • பெண் ஒளிர வேண்டுமெனில் கல்வி வேண்டும்;
            நாட்டின்வழக்கத்தை மாற்ற வேண்டுமெனில் கல்விவேண்டும் என்று “பெண்கல்விவேண்டும்” என்பதையே பாடுபொருளாகக் கொண்டு தலைவி பேசி, தன் கருத்தை வெளிப்படுத்துகிறாள்.

    2. மூவாது மூத்தவர் –  நூல் வல்லார் – இத்தொடர் உணர்த்தும் பொருளைக் குறிப்பிடுக.
    விடைகுறிப்பு:

            இத்தொடரின் பொருளாவது, நன்மை, தீமை உணர்ந்த நூல்வல்லோர், வயதில் இளையோராக இருப்பினும் மூத்தவரோடு வைத்து எண்ணத்தக்கவர் ஆவார்.

    3. நீங்கள் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள் யாவை?
    விடைகுறிப்பு:

    • உலக அறிவைத் தரக்கூடிய பொது அறிவு நூல்கள்.
    • அறநூலாம் திருக்குறள்.
    • விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைக் கூறும் அறிவியல் நூல்கள்.
    • வீரர்கள், தியாகிகள், கவிஞர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்.

    4.சாரதா சட்டம் எதற்காக இயற்றப்பட்டது?
    விடைகுறிப்பு:

    • பெண் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத்திருமணம்.
    • அதனைத் தடுக்கும் நோக்கத்தில் 1929ம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது.

    இ) சிறு வினா

    1. சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக.
    விடைகுறிப்பு:
     
    பெண்பாற் புலவர்கள்:
    • ஔவையார்
    • நக்கண்ணையார்
    • ஒக்கூர் மாசாத்தியார்
    • காக்கைப்பாடினியார் ஆதிமந்தியார்
    • வெள்ளிவீதியார் வெண்ணிக்குயத்தியார்
    • நப்பசலையார் பொன்முடியார்
    • காவற்பெண்டு
    • அள்ளூர் நன்முல்லையார் ஆகியோர் ஆவார்.

    2. சமைப்பது தாழ்வா? இன்பம் சமைக்கின்றார் சமையல் செய்வார்.
    அ) இன்பம் சமைப்பவர் யார்?
    ஆ) பாவேந்தர் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா?
    விடைகுறிப்பு:

     
    அ) இன்பம் சமைப்பவர்:
    உணவைச் சமைப்பவரே, அதனை அன்புடன் படைப்பது மூலம் (பரிமாறுவது மூலம்) இன்பத்தையும் சமைப்பவர் ஆவார்.

    ஆ) சமைப்பது தாழ்வா:
    உணவைச் சமைத்துத் தருவது உயிரை உருவாக்குவது போன்றதாகும். எனவே பாவேந்தர் கூற்றுப்படி சமையல் தாழ்வாகாது.

    3. விதைக்காமலே முளைக்கும் விதைகள்- இத்தொடரின் வழிச் சிறுபஞ்சமூலம் தெரிவிக்கும் கருத்துகளை விளக்குக.
    விடைகுறிப்பு:
     
    விதைக்காமலே முளைக்கும் விதை: 
    • கழனியிலே பாத்தி அமைத்து, விதை விதைக்காமலே தானே முளைத்து வரும் விதைகளும் உள்ளன.
    • தானே முளைப்பதுடன் உயிர்களுக்குப் பயனும் நல்குவன.
    • அதைப்போலவே, அறிவுடைய மேதையரும் பிறர் உணர்த்தாமலே, எதையும் தாமே உணர்ந்து உயரிய செயலாற்றுவதோடு, பிறருக்கும் பயன் நல்கி பெருமையுறுவர்.

    4. இன்றைய பெண்கல்வி என்னும் தலைப்பில் வில்லுப்பாட்டு வடிவில் பாடல் எழுதுக?
    விடைகுறிப்பு:

    இன்றைய பெண்கல்வி
    குழுத்தலைவர் ! ஊதாங்குழலை எடுக்கும் பெண்ணே
    நீ எழுதுகோலை எடுக்கவேணும், கையிலே….
    மற்றோர் : ஆமா கையிலே….
    குழுத்தலைவர் ! ஓடு, செங்கல் செய்யும் பெண்ணே , ஏடெடுத்து நீ போகணும்….
    மற்றோர் : ஆமா … போகணும்.
    குழுத்தலைவர் – சிந்திக்கும் மூளை உனக்கு வேண்டும்.
    அம்மா…. நீ நிந்தையைப் பொறுத்துக்கோ
    அம்மா… நீ உன் திறமையைக் காட்டு அம்மா…
    மற்றோர் ! ஆமா… திறமையைக் காட்டு அம்மா…
    குழுத்தலைவர் – முடியாது பெண்ணாலே என்ற கேலியினை விரட்டி அடித்து முடித்துக் காட்டு
    அம்மா நீ … முடித்துக் காட்டு அம்மா ….
    மற்றோர் ! ஆமா… முடித்துக் காட்டு…
    குழுத்தலைவர் – செல்லம்மா நீ செல் அம்மா பள்ளிக்கு… பட்டம் பெறு அம்மா சட்டம் செய்.
    அம்மா… நாடே உன்னை வணங்கட்டும் அம்மா…
    மற்றோர் : ஆமா… நாடே உன்னை வணங்கட்டும் அம்மா…

    5. மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.
    விடைகுறிப்பு:

     
    மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகள்:
    • 1886-ல் பிறந்த முத்துலெட்சுமி அவர்கள் பல சாதனைகளுக்கும், போற்றுதலுக்கும் உரியவர்.
    • தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.
    • இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும், சென்னை மாநகராட்சியின் முதல் துணை
    • மேயராகவும், சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் ஆவார்.
    • அடையாற்றில் 1930-ல் அவ்வை இல்லம், 1952ல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.
    • தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், இருதாரத்தடைச்சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்துள்ளார்.

    6. நீலாம்பிகை அம்மையாரின் தமிழ்ப்பணியின் சிறப்பைக் குறித்து எழுதுக.
    விடைகுறிப்பு:
     
    தமிழ்ப்பணியின் சிறப்பு:
    • நீலாம்பிகை அம்மையார் மறைமலையடிகளின் மகள் ஆவார். தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்.
    • இவரது தனித்தமிழ் கட்டுரை, வடசொல் – தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தடிகள் பாராட்டிய மூவர் ஆகிய நூல்களை எழுதி தமிழ்ப் பணியாற்றியுள்ளார்.
    • மேலும், இவருடைய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.

    ஈ) நெடு வினா

    1.நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க.
     
    முன்னுரை:
        நிலைத்த புகழுடைய கல்வியாலும் சாதனைகளாலும், பல தடைகளைத் தாண்டிப் பல பெண்மணிகள் சாதனை புரிந்து அழியாப் புகழ் பெற்றுள்ளனர். அவர்களுள் சிலரைப் பற்றி அறிந்து கொள்வோம்.

    பண்டித ரமாபாய்:
        1858 -ஆம் ஆண்டு முதல் 1922 – ஆம் ஆண்டு வரை வாழ்ந்த இவர் சமூகத் தன்னார்வலர். பல தடைகளை மீறிக் கல்வி கற்றுப் பண்டிதராகியவர். பெண்களின் உயர்வுக்குத் துணை நின்றவர், “பெண்மை என்றால் உயர்வு” என்பதற்குச் சான்றாவார்.

    ஐடாஸ் சோபியா:
        1870 முதல் 1960 வரை வாழ்ந்தவர். பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில் மருத்துவம் கற்றதோடு, தமிழகத்திற்கு வந்து மருத்துவராகி வேலூர் கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனையை நிறுவியவர்.
     
    முதல் பெண் ஆசிரியர்:
        பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர் சாவித்திரிபூலே. இவரே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராவார்.

    மருத்துவர் முத்துலட்சுமி
        தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர். அடையாறில் அவ்வைஇல்லம், புற்றுநோய் மருத்துவமனை நிறுவினார். பெண்களுக்கு சொத்துரிமமைச் சட்டத்திற்குப் பாடுபட்டார்.

    நீலாம்பிகை அம்மையார்
        தனித்தமிழ் கட்டுரை ,வடசொல் தமிழ் அகராதி. முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர் ஆகியவற்றை எழுதியுள்ளார்.
     
    முடிவுரை:
    இன்று பல்துறைகளிலும் சிறப்புற்று விளங்க, முன்பே வழிகாட்டிய இவர்கள் அனைவருமே சாதனைப் பெண்மணிகளே 


    2.குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண் கல்விக்கான கருத்துக்களை இன்றைய சூழலில் ஒப்பிடுக.
    • கல்வியறிவில்லாத பெண்கள் பயன்படாத நிலம் போன்றவர்கள்.
    • கல்வி அறிவு இல்லாத பெண்களின் குழந்தைகள் சிலர் தீய பழக்கங்கள்  செய்கின்றனர்.
    • கல்வி அறிவுள்ள பெண்கள் நல்ல நிலத்தைப் போன்றவர்கள்.
    • இன்று கல்வி கற்ற பெண்களின் குழந்தைகள் பலர் நல்ல பழக்கங்களை கற்றுஉயர்ந்து இருக்கின்றனர்.

    3.நூலகம், நூல்கள் குறித்து அண்ணாவின் வானொலி உரையில் வெளிப்படுகின்ற கருத்துகள் யாவை?

    முன்னுரை
        நூலகம், நூல்கள் குறித்து அண்ணா கூறியுள்ளவற்றைக் காண்போம்.

    நூலகம்
    1. சிறிய கடை அளவிற்கு உடைகளையும் களையும் மருந்துகளையும் வைத்துஇருக்கிறோம்.
    2. அடிப்படைத் தேவைக்கு அடித்தபடியாக நூலகம் வீட்டில் இருக்க வேண்டும்.
    3. ஆனால் நாம் நூலகத்தை வீட்டில் வைத்திருப்பதில்லை.
    4. வீட்டில் நூலகம் அமைக்க வேண்டும்.

    நூல்கள்:
    1. வரலாறு புவியியல், அறிவியல் கண்டுபிடிப்புகள், அறிஞர்கள் ஆகிய நூல்கள் 2. வீட்டுநூலகத்தில் வைக்கவேண்டும்.
    3. திருக்குறள் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டும்.
    4. தலைவர்கள் பற்றிய நூல்கள் இருக்க வேண்டும்.

    முடிவுரை
        ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகம் வைக்க வேண்டும்.
     
    II. மொழியை ஆள்வோம்

    அ) ஒப்பிட்டுச் சுவைப்போம்.


    ஆ) மொழி பெயர்க்க.

    Akbar said, “How many crows are there in this city?”
    Without even a moment’s thought, Birbal replied “There are fifty thousand five hundred and eighty nine crows, my lord”.
    “How can you be so sure?” asked Akbar.
    Birbal said, “Make your men count, My lord. If you find more crows it means some have come to visit their relatives here. If you find less number of crows it means some have gone to visit their relatives elsewhere”.
    Akbar was placed very much by Birbal’s wit.
    விடைகுறிப்பு:
     
    பீர்பாலின் நகைச்சுவையுணர்வு

            இந்த நகரத்தில் எத்தனை காகங்கள் இருக்கின்றன? என்று அக்பர் கேட்டார். பீர்பால் ஒரு கணம் கூட யோசிக்காமல் ஐம்பதாயிரத்து ஐநூற்று எண்பத்தொன்பது காகங்கள் இருக்கின்றன அரசே என்று பதிலளித்தார்.
     
            எப்படி உன்னால் உறுதியாகச் சொல்ல முடிகிறது என்றார் அக்பர்.
     
        உங்களது ஆட்களை வைத்து எண்ணுங்கள் அரசே என்றார். இதை விட அதிகமான காகங்கள் இருந்தால் சில இங்குள்ள தங்களுடைய உறவினர்களைப் பார்க்க வந்திருக்கும். நான் கூறியதைவிடக் குறைவாக இருந்தால், வேறு இடங்களில் உள்ள தங்கள் உறவினர்களைக் காணச் சென்றிருக்கும் என்று அர்த்தம் என்றார் பீர்பால்.

        பீர்பாலுடைய நகைச்சுவையையும், நகைச்சுவை உணர்வையும் எண்ணி அக்பர், திருப்தியும், மன மகிழ்வும் அடைந்தார்.

    இ) பிழை நீக்கி எழுதுக  .

    1. மதீனா சிறந்த இசைவல்லுநர் வேண்டும்.
    விடைகுறிப்பு:

    மதீனா சிறந்த இசைவல்லுநராக வேண்டும்.

    2. நல்ல தமிழுக்கு எழுதுவோம்.
    விடைகுறிப்பு:

    நல்ல தமிழில் எழுதுவோம்.

    3. பவள விழிதான் பரிசு உரியவள்.
    விடைகுறிப்பு:

    பவளவிழிதான் பரிசுக்கு உரியவள்.

    4. துன்பத்தால் பொறுத்துக் கொள்பவனே வெற்றி பெறுவான்.
    விடைகுறிப்பு:

    துன்பத்தைப் பொறுத்துக் கொள்பவன் தான் வெற்றியைப் பெறுவான்.

    5. குழலியும் பாடத் தெரியும்.
    விடைகுறிப்பு:

    குழலிக்கும் பாடத் தெரியும்.
     

    ஈ) இடைச் சொற்களைக் கொண்டு தொடர்களை இணைக்க.

    (எ.கா) பெரும் மழை பெய்தது. வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
    பெரும் மழை பெய்ததால் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

    1. அலுவலர் வந்தார் அனைவரும் பதற்றம் அடைந்தனர்.
    விடைகுறிப்பு:

    அலுவலர் வந்தவுடன் அனைவரும் பதற்றம் அடைந்தனர்.
    (அல்லது)
    அலுவலர் வந்ததால் அனைவரும் பதற்றம் அடைந்தனர்

    2. சுடர்க்கொடி பாடினாள்; மாலன் பாடினான்.
    விடைகுறிப்பு:

    சுடர்க்கொடியும் மாலனும் பாடினார்கள்.

    3. பழனிமலை பெரியது; இமயமலை மிகப் பெரியது.
    விடைகுறிப்பு:

    பழனிமலையைவிட இமயமலைதான் மிகவும் பெரியது.

    4. கவலையற்ற எதிர்காலம்; கல்வியே நிகழ்காலம்.
    விடைகுறிப்பு:

    கவலையற்ற எதிர்காலம் அமைய வேண்டுமெனில் கல்வியே நிகழ்காலமாக வேண்டும்.
     

    உ) விளம்பரத்தைச் செய்தித்தாள் செய்தியாக மாற்றி அமைக்க.

    செய்தித்தாள் 
     
    புத்தகத் திருவிழா
    செப் – 18. தஞ்சாவூர்.

    தஞ்சாவூரில் உள்ள சரசுவதி மகால் நூலக வளாகத்தில் செப்டம்பர் 19 முதல் 28 வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

    நாள்தோறும் காலை 8 மணி தொடங்கி மாலை 6 மணி வரை புத்தகங்கள் விற்பனைக்கும், படிப்பதற்கும் வைக்கப்படுகின்றன. இப்புத்தகத் திருவிழாவினை முதல் நாள் காலை 9 மணிக்குத் தமிழகக் கல்வி அமைச்சர் தொடங்கி வைக்கிறார். நாள்தோறும் மாலை 6 மணிக்கு புதிய புத்தகங்கள் வெளியீடும் புகழ்பெற்ற பேச்சாளர்களின் சொற்பொழிவுகளும் இடம் பெறுகின்றன. அனைவரும் வருகை தந்து அறிவுத்திறம் பெற்றுச் செல்லுமாறு விழாக்குழவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஊ) நிகழ்வினைப் படித்து, வினாக்களுக்கு விடையளிக்க .

    1. மகிழுந்தில் வந்திருப்பது அண்ணா என்பதை வருவாய் அலுவலர் எப்படி அறிந்தார்?
    விடைகுறிப்பு:

        மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள் வாழ்த்து மடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் வந்திருப்பது அண்ணா என வருவாய் அலுவலர்
    அறிந்து கொண்டார்.

    2. அண்ணாவிடம் ஏன் வருவாய் அலுவலர் பொறுத்துக் கொள்ளச் சொன்னார்?
    விடைகுறிப்பு:

        முதலமைச்சர் என்று தெரியாமல் சோதனைச்சாவடியில் மகிழுந்தை திறந்து காட்டச் சொன்னதால், என்ன நடக்குமோ என்று அச்சப்பட்டு, தெரியாமல் நடந்துவிட்டது பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார்.

    3. அண்ணா வருவாய் அலுவலரின் செயலை எவ்வாறு பாராட்டினார்?
    விடைகுறிப்பு:

        சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப் போன்றவர்கள் கையில்தான் இருக்கிறது. உங்களைப் போன்றவர்களே உயர்பதவிக்கு வரவேண்டும் என்று பாராட்டினார்.

    4. பத்தியில் இடம்பெறும் இடைச் சொற்களைக் கொண்டு இரு புதிய சொற்றொடர்களை உருவாக்குக?
    விடைகுறிப்பு:

    தான்: பதவி உயர்வு வழங்கத்தான் உம் பெயரைக் கேட்டேன். 
    இன்: சட்டத்தைக் காக்கும் பொறுப்பு அலுவலரின் கையில்தான் உள்ளது 
    கள்: பொறுப்புணர்வுடன் செயல்படும் அலுவலர்கள் நாட்டிற்குத் தேவை.

    5. நிகழ்வுக்குப் பொருத்தமான தலைப்பிடுக:
    விடைகுறிப்பு:

        “பொறுப்புணர்வு” (அல்லது) “கடமையுணர்வு”.
     

    III. மொழியோடு விளையாடு

    அ) சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை உருவாக்குக.

    மாணவர்கள், ஆசிரியர், பாடவேளை, கரும்பலகை. புத்தகம், எழுதுகோல், அழிப்பான், வழிபாட்டுக் கூட்டம், அறை, கல்லூரி, உயர்நிலை, சீருடை, மடிக்கணினி
    எ.கா. வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் சீருடையுடன் நின்றனர்.
    விடைகுறிப்பு:

    1. மாணவர்கள் உயர்நிலை அடைய வேண்டும் என்றார் ஆசிரியர்.
    2. மாணவர்களே! எழுதுகோலும் அழிப்பானும் கொண்டு வாருங்கள் என்றார் ஆசிரியர்.
    3. பாடவேளையின் பொழுது ஆசிரியர் கரும்பலகையில் எழுதினார்.
    4. மாணவர்கள் பாடவேளைக்குரிய புத்தகங்களைக் கொண்டுவரவில்லை.
    5. வழிபாட்டுக் கூட்டத்தில் மடிக்கணினி வழங்கப்பட்டது.
    6. ஆசிரியர் அறையிலிருந்து  புத்தகம் எடுத்து வா.
    7. கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி தேவை.
    8. சீருடை அணிந்தே வழிபாட்டுக்கூட்டத்திற்கு வரவேண்டும்.
    9. கரும்பலகையை அழிப்பானால் சுத்தம் செய்தான்.
    10. சீருடையும், மடிக்கணினியும் அரசு விலையின்றிக் கொடுக்கிறது.
     

    ஆ) அகராதியில் காண்க.

    (அரங்கு, ஒட்பம், கான், நசை, பொருநர்)
    விடைகுறிப்பு:

    அரங்கு – அரங்கம், உள்வீடு
    ஒட்பம் – அறிவு, அழகு, நன்மை, மேன்மை
    கான் – காடு, மணம், வாய்க்கால், இசை
    நசை – ஆசை, குற்றம், எள்ளல், ஈரம்
    பொருநர் – படைவீரன், தலைவன், போர்க்களத்து சென்று பாடும் கூத்தன்
    .
     

    இ) படங்களை இணைத்தால் கிடைக்கும் நூல்களின் பெயர்களைத் தேர்தெடுத்து எழுதுக.


    ஈ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

     
    ‘வாழ்க்கையின் கீழ்படியில் நின்றேன்
    அண்ணாந்து பார்த்தேன்
    உயரச் செல்ல ஏங்கினேன்
    பள்ளியின் படியில் கால் வைத்தேன்
    கசடற கற்றேன் உயர்ந்தேன்
    பட்டங்களும் பதவிகளும் தேடி வந்தன ன
    கல்வியே நம்மை உயர்த்தும்
    படிக்கட்டு என உணர்ந்தேன்……..

    உ) கடிதம் எழுதுக. 

    உங்கள் பள்ளி நூலகத்திற்குத் தமிழ் – தமிழ் – ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதிகள் பத்துப்படிகளைப் பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.
    விடைகுறிப்பு:

     
    அனுப்புநர்,
                            மா.இனியன்,
                            அரசு ஆண்கள் மேல்நிைைலப்பள்ளி,
                            நாவலூர்.

    பெறுநர்,
                            மேலாளர் அவர்கள்,
                            நெய்தல் பதிப்பகம்,
                            மதுரை – 16.

    ஐயா,

                        பொருள் : நூலகத்திற்கு அகராதி அனுப்புதல் தொடர்பாக.
     
            வணக்கம். எங்கள் பள்ளி நாவலூரில் அமைந்துள்ளது. சுமார் 500 மாணவர்கள் பயில்கின்றோம். எங்கள் பள்ளி நூலகத்திற்கு, தங்கள் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள, தமிழ் – தமிழ் – ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதிகள் பத்துப்படிகளைப் பின்வரும் முகவரிக்குப் பதிவு அஞ்சலில் அனுப்பும்படி வேண்டிக்கொள்கிறேன்.
    நாள் : 06.08.18
    இடம் : நாவலூர்
    இப்படிக்கு,
    மா. இனியன்.
    அகராதிகள் அனுப்ப வேண்டிய முகவரி
    மா. இனியன்,
    அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
    நாவலூர், வேலூர் மாவட்டம்.
    நன்றி!

    IV. செயல் திட்டம்

    பெண்கல்வி வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் பற்றிய செய்திப் படத்தொகுப்பினை உருவாக்குக.
    விடைகுறிப்பு:

    மாணவர்களே!
    பெண்கல்வி வளர்ச்சிக்கு உழைத்தவர்கள்:
    மகாத்மா காந்தி, ஈ.வெ.ரா. பெரியார், பாரதியார், பாரதிதாசன், கைலாஷ் சத்யார்த்தி
     
    இவர்களின் புகைப்படங்களைச் சேகரித்து ஒரு படத் தொகுப்பினை உருவாக்குங்கள். இவர்கள் மட்டுமல்ல. இன்னும் கல்விக்காக தொண்டு புரிந்த, உனக்குத் தெரிந்த தலைவர்களின் படங்களையும் சேகரித்துக் கொள்ளுங்கள்.

    V. நிற்க அதற்குத் தக...

    எனக்குப் பிடித்தவை / என் பொறுப்புகள்
    1. என்னை உயர்வாகப் பேசுவது எனக்குப் பிடிக்கும்.
    எவரையும் காயப்படுத்தாமல் நடந்து கொள்வதும், குறை கூறாமல் பேசுவதும் என் பொறுப்பு
    2. எனக்குப் படம் வரைவது பிடிக்கும்.
    பள்ளிச்சுவர், வீட்டுச்சுவர், பொதுச்சுவர் ஆகியவற்றில் வரையாமல் எழுதாமல் இருப்பதோடு பிறரையும் அவ்வாறு செய்யவிடாமல் தடுப்பது என் பொறுப்பு
    விடைகுறிப்பு:

    எனக்குப் பிடித்தவை:
    • என்னை உயர்வாகப் பேசுவது எனக்குப் பிடிக்கும். 
    • எனக்குப் படம் வரைவது பிடிக்கும். 
    • நகைச்சுவை எனக்கு மிகவும் பிடிக்கும். 
    என் பொறுப்புகள்: 
    • பிறரைக் காயப்படுத்தாமல் நடந்து கொள்வதும், குறை கூறாமல் இருப்பதும் என் பொறுப்பு 
    • பள்ளி, வீடு, பொதுச்சுவர்களில் வரையாமல், எழுதாமல் இருப்பதும், பிறரையும் எழுத, வரைய விடாமல் தடுப்பதும் என் பொறுப்பு 
    • நகைச்சுவைக்காகப் பிறரை புண்படுத்தாது, இகழாது இருப்பது என் பொறுப்பு
        இகழாது இருப்பது என் பொறுப்பு இவ்வாறு, நமக்குப் பிடித்தமான செயல்களைச் செய்கின்ற பொழுது, எந்நிலையிலும் பிறரைப் பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளாது இருப்பது நம் பொறுப்பாகும்.

    அ. கலைச்சொல் அறிவோம்

    1. Social Reformer- சமூக சீர்திருத்தவாதி
    2. Volunteer -தன்னார்வலர்
    3. Saline Soil - களர்நிலம்
    4. Sentence - சொற்றொடர்
     

     VI. அறிவை விரிவு செய்

     ஓய்ந்திருக்கலாகாது - கல்விச் சிறுகதைகள் (தொகுப்பு: அரசி ஆதிவள்ளியப்பன்) 
    முதல் ஆசிரியர்-சிங்கிஸ் ஐத்மாத்தவ் 
    கல்வியில் நாடகம் - பிரளயன் 
    மலாலா - கரும்பலகை யுத்தம்
     
     
     
     
    விடைக் குறிப்பு தயாரித்தவர்:
     'Nallasiriyar' S. SETTU MATHARSHA,
    GRADUATE TEACHER IN TAMIL, 
    EKM A. G MATHARASA ISLAMIA HIGH SCHOOL, 
    ERODE 
     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive