9th Tamil - Book Back Answers - Unit 2 - Guide

 


    9th Tamil - Book Back Answers - Unit 2 - Download

    Tamil Nadu Board 9th Standard Tamil - Unit 2: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 2 – from the Tamil Nadu State Board 9th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 2 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 9 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 2

    I. திறன் அறிவோம்

    அ) பலவுள் தெரிக.

    1."மாடு" - என்பதன் பொருள் என்ன? 
        இ) பக்கம்

    2. நீர்நிலைகளோடு தொடர்பில்லாதது எது? 
        ஈ.புலரி

    3.பொருத்தமான விடையைத் தெர்க.
    க.நீரின்றி அமையாது உலகு - திருவள்ளுவர்
    உ.நீரின்று அமையாது யாக்கை - ஒளவையார்
    ங.மாமழை போற்றுதும் - இளங்கோவடிகள்
    அ)க.ங ஆ)உங் இக,உ ஈ)க.உங
        
    அ)க.ங

    4.பகுதி, விகுதி மட்டும் இடம் பெறும் சொல் எது?
        
    இ) வளர்க

    5.மல்லல் மூதூர் வயவேந்தே - கோடிட்ட சொல்லின்
        
    இ) வளம்

    ஆ) குறு வினா

    1.கூவல் என்பதன் பொருள் யாது?
    • உவர் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை கூவல்.

    2.உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர் நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
    • ஆறு,குளம்,வாய்க்கால்

    3.உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோரே -குறிப்புத் தருக.
    • உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார்.

    4.நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது?
    • எருமைகள் நீரில்விழுவதால்,அங்கு உள்ள மீன்கள் அருகில் உள்ள பாக்கு மரங்கள் மீது பாய்கிறது.
    • இது நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் ஒப்பிடுகின்றது.

    4.மணிநீரும் மண்ணும் மலையும் அணி நிழற் காடும் உடையது அரண்.இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?
    • நீர்நிலை,வெற்றுநிலம்,மலை,காடு

    இ) சிறு வினா

    1.அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை -அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.
    • நீரைச் சிக்கனப்படுத்த வேண்டும்.
    • மழை நீரைச் சேமிக்க வேண்டும்.
    • நீரை வீணாக்கக் கூடாது.
    • ஏரி,குளம்,குட்டை ஆகியவற்றில் மழைநீரைச் சேமிக்க வேண்டும்.

    2.நிலைத்தபுகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?
    • உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார்.
    • நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் உலகில் உடலையும் உயிரையும் ஒன்று சேர்த்தவராவர்.
    • நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலை பெருகச் செய்க.
    • நிலத்துடன் நீரைக் கூட்டியவர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழும் பெறுவர்.

    3.சோழர் காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப் பட்டது?
    • பயன்படுத்தத் தேவையான தண்ணீரை வெளியேற்றவும்.
    • சேற்றை வெளியேற்றவும்
    • சோழர் காலக் குமிழித் தூம்பு பயன்படுத்தப் பட்டது.  

    4.வானவில்லை ஒப்பிட்டுப் பெரியபுராணம் கூறும செய்தியை விளக்கி எழுதுக.
    • நீர்நிலைகளில் எருமைகள் வீழும்.
    • அதனால் நீரிலுள்ள மீன்கள் அருகில் உள்ள பாக்கு மரங்கள் மீது பாய்கிறது.
    • இதற்கு வானவில்லை பெரியபுராணம் ஒப்பிடுகின்றது.
     

    ஈ) நெடு வினா

    1.வேளாண்மை, நீரை அடிப்படையாகக் கொண்டது என்பதை விளக்குக.
    • நீர் இல்லாமல் எதுவும் உயிர் வாழ முடியாது.
    • சிறிய புல்லின் நுனியைக் கூட நீர் இல்லாமல் காணமுடியாது.
    • அதனால் தான் நீரின்று அமையாது உலகு என்றார் வள்ளுவர்.
    • எல்லா உயிர்களுக்கும் உணவும் நீரும் அவசியமாகும்.
    • மழையே பயிரும் உயிரும் வாழப் துணை புரிகின்றது.
    • மழையால் விதை ஆயிரமாகப் பெருகுகிறது.
    • மண் வளமாகின்றது. விதை முளைக்கின்றது. பயிர் வளர்கின்றது.
    • நீரால் உழவு செழிக்கின்றது.

    2.பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.
    • காவிரி மலையிலிருந்து புதிய பூக்களை அடித்து வர,அதனை வண்டுகள் மொய்த்து ஒலி எழுப்பும்.
    • காடுகளில் கரும்புகள் உள்ளன.சோலைளில் அரும்புகள் உள்ளன
    • பக்கங்களில் குவளை மலர்கள் உள்ளன.
    • வயல்களில் சங்குகள் கிடக்கின்றன.
    • குளங்கள் எல்லாம் கடல் போல உள்ளன.
    • நீர்நிலைகளில் எருமைகள் மூழ் மீன்கள் அருகில் உள்ள பாக்கு மரங்கள் மீது பாயும். இது வானத்தில் தோன்றி மறையும் வானவில் போன்றுள்ளது.
    • நெல்கட்டுகள், மீன்கள், முத்துக்கள், மலர்கள் ஆகியவற்றை கரையில் குவித்து வைத்திருந்தனர்.

    3.'தண்ணீர்' கதையைக் யக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.

    முன்னுரை
            'தண்ணீர் கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கிக் காண்போம்.

    தண்ணீர் பிரச்சனை
            அது ஒரு சிற்றூர். கிணறுகளில் தண்ணீர் இல்லை. மூன்று மைல் தூரம் நடந்து சென்று பிலாப்பட்டியில் தண்ணீர் பிடித்து வரவேண்டும்.பிலாப்பட்டி மக்கள் மதியம் வரை தண்ணீர் எடுப்பார்கள். பிறகு தான் வெளியூர்க் காரர்கள் பிடிக்க வேண்டும்.

    ரயிலில் தண்ணீர்
            ரயிலில் தண்ணீர் பிடிக்கலாமென ஊர்க்காரர்கள் முடிவு செய்தார்கள்.3 மணிக்கு வரும் பயணிகள் ரயிலில் தண்ணீர்ப் பிடிக்க முடிவு செய்தார்கள். இந்திராவும் மற்ற பெண்களும் குடங்களை எடுத்துக் கொண்டு புகைவண்டி நிலையம் நோக்கி ஓடுவார்கள்.

    இந்திரா
            ஒரு நாள் இந்திராவும் தண்ணீர்ப் பிடிக்க பெட்டியில் ஏறினாள். தண்ணீர்ப் பிடிப்பதற்குள் வண்டி கிளம்பியது. வண்டியிலிருந்து குதித்துவிடலாம் என்று நினைத்து போது வடக்கத்தியப் பெண், இவள் தற்கொலைக்கு முயல்வதாக நினைத்து பெட்டிக்குள் இந்திராவை இழுத்துவிடுகிறாள்.

    குடும்பம் தேடுதல்
            இந்திரா வண்டியோட போய்ட்டா என்று அலறி அடித்து அம்மா, ஐயா, சின்னவன், உறவினர். ஊர்க்காரர்கள் தேடிச் சென்றார்கள். இந்திராவின் அம்மா நானும் சாகிறேன் என்று ஓட இந்திரா குடத்தைக் தூக்கிட்டு வருகிறாள். மகளே இவ்வளவு நடந்தும் இத சுமந்து வரனுமா என்று ஐயா கூற, நாளைக்கு வரைக்கும் தண்ணிக்கு எங்கப் போறது
    என்றாள் இந்திரா.

    முடிவுரை
    தண்ணீருக்காக மக்கள் படும் துன்பத்தை அறிந்தோம்.
     

    II. மொழியை ஆள்வோம்

    அ) படித்துச் சுவைக்க.

    பூ மொழி
     
    வீட்டின பக்கத்தில் நிற்கிறது ஒரு மரம் 
    கூடத்துச் சன்னலையும்
    சமையலறைச் சன்னலையும்
    விரிந்த கிளைகளால் 
    பார்த்துக் கொண்டிருக்கிறது.
    கைகளசைத்துக் கால்களுதைத்துக்
    கூடத்தில் கிடக்கும் சிசு
    மிழற்றுகிறது ஒரு சொல்லை 
    சமையலறையில்
    பணி முனைந்திருக்கிற அம்மா
    அச்சொல்லையே நீள வாக்கியங்களாக்கிப்
    பதில் அனுப்புகிறாள்.
    விரல் நீட்டிச் சிசு பேசுகிறது மீண்டும்
    அத்தொனியிலேயே அம்மா குழறுகிறாள் 
    கடவுளுக்கும் புரியாத அவ்வுரையாடலைக் கிரகிக்கக்
    கூடத்துச் சன்னலுக்கும்
    சமையலறைச் சன்னலுக்குமாய்க் 
    கிளைகளின் வழியே ஓடி ஓடிக் 
    கவனிக்கிறது அணில்.
    பெருகும் சொற்களும் 
    அபூர்வ எதிர்வினைகளும் 
    அதீதக் குழப்பத்திலாழ்த்த 
    அணில் ஓடிக் களைக்கிறது சன்னல்களுக்கிடையே
    அர்த்தங்களை மரம் பூக்களாக மொழிபெயர்த்து 
    அதன்மீது உதிர்த்திக்கொண்டிருப்பது தெரியாமல்.
                                            - யூமா வாசுகி

    ஆ) அறிஞர்களின் பொன்மொழிகளைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுக.

    1. Every flower is a Soul blossoming in nature – Gerard De Nerval
    விடைகுறிப்பு:

    மொழி பெயர்க்க: 
            எல்லாப் பூக்களும் இயற்கையில் உயிருடன் இருக்கிறது.

    பழமொழி: 
            மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு.

    2. Sunset is still my favourite colour, and rainbow is second – Mattie Stepanek
    விடைகுறிப்பு:

    மொழி பெயர்க்க: 
            சூரிய அஸ்தமனமே முதலில் எனக்குப் பிடித்த வண்ணம், வானவில்லின் வண்ணம் அடுத்த நிலை தான்.

    பழமொழி: 
            தோல்வியே வெற்றிக்கு அடிப்படை (அ) ஒன்றன் மறைவில் இருந்தே புதியன தோன்றும்.

    3. An early morning walk is a blessing for the whole day – Henry David Thoreau
    விடைகுறிப்பு:

    மொழி பெயர்க்க: 
            அதிகாலை நடைப்பயிற்சி அந்நாளுக்கே ஒரு வரமாகும்.

    பழமொழி:
             நன்றாய்த் தொடங்கும் செயல் நன்றாகவே முடியும். (அ)
    சிறந்த தொடக்கமே வெற்றிக்கு அடிப்படை.

    4. Just living is not enough …. one must have sunshine, freedom and a little flower – Hans Christian Anderson. 
    விடைகுறிப்பு:

    மொழி பெயர்க்க: 
            வெறுமையான வாழ்வு மட்டும் போதாது ஒவ்வொருவருக்குள்ளும் ஒளி, ஆற்றல், விடுதலை மலர் என இருத்தல் வேண்டும்.

    பழமொழி: 
            இலட்சியமுள்ள வாழ்வே சிறந்த வாழ்வாகும், வெறும் வாழ்வு வீணே.

    இ) பிழை நீக்கி எழுதுக.

    1. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.
    விடைகுறிப்பு:

            சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.

    2. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள்.
    விடைகுறிப்பு:

            மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்.

    3. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன: விடைகுறிப்பு:
            மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது.

    4. நீலனும் மாலனும் அவசர காலத் தொடர்புக்கான தொலைபேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறோம்.
    விடைகுறிப்பு:

            நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைபேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறார்கள்.

    5. சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத் தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்.
    விடைகுறிப்பு:

            சூறாவளியின் போது மேல் மாடியில் தங்காமல் தரைத் தளத்திலேயே தங்கியதால் தப்பித்தனர்.

    ஈ) பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.

    1. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல.
    விடைகுறிப்பு:

            நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல நல்லார் சொன்ன அறிவுரை தீயவர்க்கும் போய்ச் சேர்ந்தது.

    2. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
    விடைகுறிப்பு:

            நெடுஞ்சாலையில் அடிபட்டுக்கிடந்தவரை வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் காப்பாற்றியது தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் எனத் தெரிந்து கொண்டேன்.

    3. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.
    விடைகுறிப்பு:

            அப்பா கூறிய அறிவுரை மூர்க்கத்தனமாகச் செயல்பட்ட என் அண்ணனையும் மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் எனத் திருத்தியது.

    4. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது.
    விடைகுறிப்பு:

            தேர்வை முடித்துவிட்டு கிரிக்கெட் போட்டிக்குச் செல்லலாம் என்று அப்பா சொன்னதைக் கேட்டு கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது எனப் புரிந்து கொண்டேன்.

    உ) வடிவ மாற்றம் செய்க.

     
    நீர்ச்சுழற்சி
     
    மேற்காணும் படத்தில் உள்ளது போல, வாயு மண்டலத்தில் உள்ள நீர், பனி மற்றும் உறை பனியில் உள்ள நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி, பின் குளிர்ந்த காற்றால் மேகமாகி மழைபொழிந்து நிலத்தை அடைந்து. கடல், ஆறு, நிலத்தடி நீர் இவற்றைப் பெருக்குகிறது. பின்னர் மீண்டும் கடல், ஆறு, தரையில் உள்ள நீர் நிலைகள், நிலத்தடி நீர் ஆகியவை சூரிய ஒளியால் ஆவியாக்கப் படுகிறது. ஆவியான நீர்த்திவலைகள் மேகமாகி, குளிர்ந்து மீண்டும் மழையாகி நிலத்தைக் குளிரச் செய்து வளமுடைய தாக்குகிறது. மீண்டும் ……. இதுவே இப்படம் விளக்குடம் நீர்ச் சுழற்சி ஆகும்.

    ஊ) வரவேற்பு மடல் எழுதுக.

    சுற்றுச்சூழலைப் பேணிக் காக்கும் புள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்து கொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக.
     
    வரவேற்பு மடல்!
     
    கல்வித் தந்தையே!
    மாணவர்கள் மீது அக்கறை கொண்டவர். எங்கள் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களை வருக!வருக! என வரவேற்கிறோம்.

    அன்பின் ஊற்றே!
    பெரியவர், சிறியவர் என்று பார்க்காமல், அனைவரிடமும் அன்புடன் பழகுபவரே! வருக!வருக!

    நேர்மையானவரே!
    தன் பணியில் கடமை தவறாமல்,நேர்மையாக நடக்கும் உத்தமரே!வருக!வருக!

    நாள் :
    இடம்:
    இப்படிக்கு
    பள்ளி இலக்கிய மன்றம்
     

    எ) நயம் பாராட்டுக.

    கொடுக்கப்பட்டுள்ள பாடலைப் படித்து நயம் பாராட்டுக 

    கல்லும் மலையும் குதித்துவந்தேன் - பெருங்
        காடும் செடியும் கடந்துவந்தேன்;
    எல்லை விரிந்த சமவெளி - எங்கும்நான் 
        இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்,
    ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல 
        ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;
    ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல் 
        ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.

    திரண்ட கருத்து:
    காடு, மலை குதித்து, செடிகளைக் கடந்து மேடுகள் பல ஏறி, ஏரி குளங்கள் நிரப்பி வந்தேன். நீர் ஊறாத ஊற்றிலும் உள்ளே புகுந்து ஓடி வந்தேன்.

    பொருள் நயம்:
    ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன் என்பதில் பொருள் நயம் சிறப்பாக உள்ளது.

    சொல் நயம்:
    குதித்து, கடந்து, நிரப்பி ஆகிய சொற்கள் சொல் நயம் தோன்ற உள்ளது.

    மோனை நயம்:
    முதல் எழுத்து ஒரே மாதிரி வருவது மோனை.
    கல்லும் - கடந்து தவழ்ந்து - தவழ்ந்து

    எதுகை நயம்:
    இரண்டாம் எழுத்து ஒரே மாதிரி வருவது எதுகை.
    கல்லும் - எல்லையும் ஏறாத - ஊறாத

    அணிநயம்:
    இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது.

    சந்த நயம்:
    சிந்து சந்தத்தில் இப்பாடல் அமைந்துள்ளது.

    சுவை நயம்:
    பெருமிதச் சுவையில் இப்பாடல் அமைந்துள்ளது.
     

    III. மொழியோடு விளையாடு

    அ) சொல்லுக்குள் சொல் தேடுக.

    எ.கா : ஆற்றங்கரையோரம் – ஆறு / கரை / ஓரம்
    அ) கடையெழுவள்ளல்கள்
    ஆ) எடுப்பார் கைப்பிள்ளை
    இ) தமிழ்விடு தூது
    ஈ). பாய்மரக்கப்பல்
    உ) எட்டுக்கால்பூச்சி
    விடைகுறிப்பு:

    அ) கடையெழுவள்ளல்கள் – கடை / எழு / வள்ளல்
    ஆ) எடுப்பார் கைப்பிள்ளை – எடுப்பார் / கை / பிள்ளை
    இ) தமிழ்விடு தூது – தமிழ்/விடு / தூது
    ஈ). பாய்மரக்கப்பல் –  பாய் / மரம் / கப்பல்
    உ) எட்டுக்கால்பூச்சி – எட்டு / கால் / பூச்சி

    ஆ) அகராதியில் காண்க.

    கந்தி, நெடில், பாலி, மகி, கம்புள், கைச்சாத்து
    விடைகுறிப்பு:

    கந்தி - கந்தகம், கழுகு, தவப்பெண், வாசம்
    நெடில் - நெட்டெழுத்து, மூங்கில்
    பாலி - அணை, ஆலமரம், எல்லை, ஒரு பாஷை, பாற்பசு, செம்பருத்தி, கறை
    மகி – பூமி, பசு
    கம்புள் - கம்பங்கோழி, சங்கு, வானம்பாடி
    கைச்சாத்து - கையெழுத்து, பொருள்பட்டி
     

    இ) சொற்களை இணைத்துத் தொடர்களை விரிவுபடுத்துக.

    எ.கா : அரிசி போடுகிறேன்.
    புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
    காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
    நாள்தோறும் காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
    நான் நாள்தோறும் காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
    நான் நாள்தோறும் காலையில் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
    நான் நாள்தோறும் காலையில் ஒருபோதும் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
    1. மழை பெய்தது.
    2. வானவில்லைப் பார்த்தேன்.
    3. குழந்தை சிரித்தது.
    4. எறும்புகள் போகின்றன.
    5. படம் வரைந்தான்.

    விடைகுறிப்பு:

    1. மழை பெய்தது.

    மாலையில் மழை பெய்தது.
    நேற்றுக் மாலையில் மழை பெய்தது.
    நாள்தோறும் மாலையில் மழை பெய்தது.
    நாள்தோறும் மாலையில் விடாமல் மழை பெய்தது.
    நாள்தோறும் மாலையில் விடாமல் தொடர்ந்து மழை பெய்தது.
    நாள்தோறும் மாலையில் தவறாமல் மழை பெய்தது.

    2. வானவில்லைப் பார்த்தேன்.
    மாலையில் வானவில்லைப் பார்த்தேன்.
    மாலையில் மழை பெய்யும் போது வானவில்லைப் பார்த்தேன்.
    நான் மாலையில் மழைபெய்யும் போது வானவில்லைப் பார்த்தேன்.
    நான் மாலையில் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.
    நான் நாள்தோறும் மாலையில் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.
    நான் நாள்தோறும் மாலையில் மறக்காமல் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.

    3. குழந்தை சிரித்தது.
    தொட்டிலில் குழந்தை சிரித்தது.
    தொட்டியில் அழுத குழந்தை சிரித்தது.
    அம்மாவைப் பார்த்தது அழுத குழந்தை சிரித்தது.
    அழுத குழந்தை அம்மாவைப் பார்த்து பார்த்து சிரித்தது.
    அழுத குழந்தை அம்மாவைப் பார்த்து மேலும் பொக்கைவாய் திறந்து சிரித்தது.
    அழுத குழந்தை தொட்டிலை நீக்கிப் பார்த்துச் சிரித்தது.

    4. எறும்புகள் போகின்றன.
    எறும்புகள் போகின்றன.
    எறும்புகள் வரிசையாகப் போகின்றன.
    எறும்புகள் வரிசையாகக் கல்லில் போகின்றன.
    எறும்புகள் வரிசையாகப் புற்றுக்குள் போகின்றன.
    சர்க்கரையை நோக்கி வரிசையாகப் போகின்றன.
    அடுக்கில் உள்ள சர்க்கரையை நோக்கி எறும்புகள் போகின்றன.

    5. படம் வரைந்தான்.
    படம் வரைந்தான். அவன் அழகாக வரைந்தான்.
    விலங்குகளின் படங்களை வரைந்தான்.
    இயற்கையைப் படம் வரைந்தான்.
    இயற்கை மரங்களைப் படமாக வரைந்தான்.
    படிக்கும் பறவைகளைப் படமாக வரைந்தான்.

    ஈ) வேறுபட்ட வினையெச்சங்களைப் பயன்படுத்தி, முதல்வினைகளைத் துணைவினைகளாக மாற்றுக.

    முதல்வினைகள் – பார்த்தேன், கொடுத்தார், நடந்தான், சேர்ந்தார், அமைத்தோம்.
    எ.கா : பார்த்தேன்
    1. எழுதிப் பார்த்தேன்
    2. தடுக்கப் பார்த்தேன்
    3. கொடுத்துப் பார்த்தேன்
    4. ஓடப் பார்த்தேன்
    விடைகுறிப்பு:

    அ) கொடுத்தார்
    1. எழுதிக் கொடுத்தார்
    2. படிக்கக் கொடுத்தார்
    3. வாங்கிக் கொடுத்தார்
    4. பார்த்துக் கொடுத்தார்

    ஆ) நடந்தான்
    1. பார்த்து நடந்தான்
    2. கேட்டு நடந்தான்
    3. வாங்கி நடந்தான்
    4. சிரித்து நடந்தான்
    இ) சேர்ந்தார்
    1. வந்து சேர்ந்தார்
    2. போய்ச் சேர்ந்தார்
    3. நடந்து சேர்ந்தார்
    4. ஓய்ந்து சேர்ந்தார்
    ஈ) அமைத்தோம்
    1. பார்த்து அமைத்தோம்
    2. கண்டு அமைத்தோம்
    3. கேட்டு அமைத்தோம்
    4. சேர்த்து அமைத்தோம்

    உ) வினையடிகளை முதல்வினையாகவும் துணைவினையாகவும் அமைத்துத் தொடர்களை உருவாக்குக.

    வினையடி – வா, போ, செய், மாற்று, இரு, கொடு, கொள், எழுது, விடு, போடு. எ.கா : வினையடி – வை
    விடைகுறிப்பு:

    ஊ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

    மூவறிவுடைய எறும்பே
    ஆறு அறிவுடையவனுக்கு
    அறிவு புகட்டுகிறாய்!
    உன் எடையைக் காட்டிலும்
    எட்டு மடங்கு எடையைத் தூக்கிச் செல்கிறாயே!
    நீ ஊர்ந்து செல்லச் செல்ல
    கல் கூடத் தேயுமாமே?
    மனிதப் பண்புகளின் மகத்துவத்தை
    உன்னிடத்தில் இருந்து தெரிந்து கொண்டோம்.

    IV. செயல் திட்டம்.

    கொடுக்கப்பட்ட இணையத்தள இணைப்பில் உள்ள காணொலியைக் கண்டு அது குறித்த உங்கள் கருத்துகளை இருபக்க அளவில் எழுதி வகுப்பறையில் கலந்துரையாடுக.
    https:// www.youtube.com/watch?v=oReVrONNvoQ
     

    V. நிற்க அதற்குத் தக.

    என் பொறுப்புகள்…

    அ) தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.
    ஆ) வகுப்பறையில் நண்பர்கள் வைத்திருக்கும் பொருள்கள் மீது நாட்டம் இருந்தும் அவற்றைத் தொரியாமல் எடுக்கும் ஒழுங்கற்ற செயலைச் செய்யமாட்டேன்.
    இ) அறையை விட்டு வெளியே செல்லும்போது மின்விசிறி, மின்விளக்குகளை நிறுத்திவிட்டுச் செல்வேன்.
    ஈ) ………………………………………………………………………………………
    உ) ………………………………………………………………………………………
    ஊ) ………………………………………………………………………………………
    விடைகுறிப்பு:

    அ) தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.
    ஆ) வகுப்பறையில் நண்பர்கள் வைத்திருக்கும் பொருள்கள் மீது நாட்டம் இருந்தும் அவற்றைத் தொரியாமல் எடுக்கும் ஒழுங்கற்ற செயலைச் செய்யமாட்டேன்.
    இ) அறையை விட்டு வெளியே செல்லும்போது மின்விசிறி, மின்விளக்குகளை நிறுத்திவிட்டுச் செல்வேன்.
    ஈ) வெற்றுக் காகிதங்களைச் சுருட்டி வகுப்பறைக்குள்ளும் பள்ளி வளாகத்திலும்
    போடமாட்டேன்.
    உ) பள்ளி வளாகத்துக்குள்ளிருக்கும் மரங்களுக்கு ஊறு விளைவிக்க மாட்டேன்
    ஊ) ஆசிரியர்களிடத்தும் பெற்றோர்களிடத்தும் மதிப்புடன் நடந்து கொள்வேன்.

    VI. கலைச்சொல் அறிவோம்.

    குமிழிக் கல் – Conical Stone
    நீர் மேலாண்மை – Water Management
    பாசனத் தொழில்நுட்பம் – Irrigation Technology
    வெப்ப மண்டலம் – Tropical Zone
     

    VII. அறிவை விரிவு செய்.

    1. அழகின் சிரிப்பு     - பாவேந்தர் பாரதிதாசன்
    2. தண்ணீர் தண்ணீர்  - கோமல் சுவாமிநாதன்
    3. தண்ணீர் தேசம்    - வைரமுத்து
    4. வாய்க்கால் மீன்கள் - வெ. இறையன்பு
    5. மழைக்காலமும் குயிலோசையும் - மா. கிருஷ்ணன்
     
     

    விடைக் குறிப்பு தயாரித்தவர்:
     'Nallasiriyar' S. SETTU MATHARSHA,
    GRADUATE TEACHER IN TAMIL, 
    EKM A. G MATHARASA ISLAMIA HIGH SCHOOL, 
    ERODE 

     

     


     
     
     
     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive