அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!!! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, June 11, 2021

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!!!

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!
ஆணை :
மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் பள்ளிக் கல்வித் துறையில் அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியிடங்கள் நிர்ணயம் செய்திட நெறிமுறைகள் வகுக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது .
2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆசிரியர்களின் வேலைப்பளுவின் அடிப்படையில் வேளைகள் ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது . 3 . தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 12.03.2020 அன்று நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை சார்ந்த மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வி , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் பிறவற்றினிடையே பின்வரும் அறிவிப்பினை அறிவித்துள்ளார் : “ பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதன் காரணமாக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு , மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி , 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக ஆண்டு ஒன்றுக்கு ரூ . 1.11 கோடி கூடுதல் செலவில் தரம் உயர்த்தப்படும் . " 4 . மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட கடிதங்களில் , பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள் 01.08.2019 அன்றைய நிலவரப்படி , மேலே ஒன்று முதல் இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணைகளின்படி மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பாடவேளைக்கு ஏற்ப பணியாளர் நிர்ணயம் செய்வது குறித்து கணக்கீடு செய்யப்பட்டதில் , அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு தற்போது மொத்தம் 1984 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் / உடற்கல்வி இயக்குநர் ( முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நிலையில் ) பணியிடங்கள் கூடுதலாகத் GO NO 18 , Date : 01.02.2021 - Download here.
CLICK HERE TO DOWNLOAD-SCHOOL NAME & POST LIST
Government order
Subject List

Post Top Ad