கான்செப்ட் வேளாண் நுட்ப ஆலோசனை மையம் வெளியிட்டுள்ள தேசிய தரவரிசை பட்டியலில் கோவை வேளாண் பல்கலைகழகத்தின் வேளாண் , ஊரக மேலாண்மைத் துறை பிரிவு 15ம் இடம் பெற்றுள்ளது. வேளாண் கல்வி நிறுவனங்களின் தொழில் சார்ந்த பாடத்திட்டம், கற்பித்தலில் புதுமை, மாணவர் சேர்க்கை, கல்விக்கட்டணம், விளை யாட்டு, தொழில் நிறுவனத் தொடர்பு, வேலை வாய்ப்பு, சர்வதேச மாணவர் பரிமாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வேளாண், ஊரக மேலாண்மை துறையின் கீழ் இளநிலை, முதுநிலை, பி.எச்டி படிப்புகள் உள்ளன. தரவரிசை பட்டியலில் அகமதாபாத், லக்னோவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் முதல், இரண்டாம் இடம் பெற்றன.
Post Top Ad
Wednesday, June 9, 2021
Home
Unlabelled
வேளாண்மைப் பல்கலைக்கழகம் தேசிய அளவில் 15வது இடம்