மதிப்பெண் இல்லாத சான்றிதழ் அரசு வேலைவாய்ப்பை பறிக்கும்? பெற்றோர்கள் அச்சம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, June 14, 2021

மதிப்பெண் இல்லாத சான்றிதழ் அரசு வேலைவாய்ப்பை பறிக்கும்? பெற்றோர்கள் அச்சம்


பத்தாம் வகுப்பில், மதிப்பெண்கள் இல்லாத சான்றிதழ் வழங்கினால், அதற்கு மதிப்பில்லாமல் போய் விடும் என்றும், அரசு வேலைவாய்ப்பை அது பாதிக்கும் என்றும், பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.
கொரோனா பிரச்னையால், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, பிளஸ் 1 மற்றும் பாலிடெக்னிக்கில், 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கையை நடத்த, அரசு அனுமதித்துள்ளது.எனவே, 10ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்காவிட்டால் பிரச்னை இல் : றை கருதி, மதிப்பெண் இன்றி சான்றிதழ் வழங்க முடிவு செய்துள்ளது. இதை, பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ், நேற்று அறிவித்தார். இந்த முடிவால், 10ம் வகுப்பு முடிப்பவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பு பாதிக்குமே என, அச்சம் ஏற்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு முடிக்கும் அனைவரும், மேல் படிப்புக்கு செல்வதில்லை. 25 சதவீதம் பேர் வரை, 10ம் வகுப்பிலேயே நின்று விடுகின்றனர்.

பிளஸ் 1, பிளஸ் 2 சேர்பவர்களிலும், 5 சதவீதம் பேர், பாதியில் படிப்பை கைவிடுகின்றனர். , 10ம் வகுப்புடன் முடித்து கொள்பவர்கள், எதிர்காலத்தில் அரசின் கீழ்நிலை பணிகளில் கருணை அடிப்படையிலோ, வாரிசு வேலையாகவோ அல்லது நேரடி நியமனமாகவோ சேர விரும்பினால், அவர்களுக்கு, 10ம் வகுப்பு மதிப்பெண் மிகவும் அவசியமாகிறது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற, 'குரூப் - 4' பதவிகளுக்கு, 10ம் வகுப்பு தான், கல்வித்தகுதியாக உள்ளது.வேலைவாய்ப்பு அபாயம்மத்திய, மாநில அரசின் பல துறைகளிலும், ரயில்வே, மின் வாரியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களிலும், கூட்டுறவு, உணவு வழங்கல் துறை, போலீஸ் துறை போன்றவற்றிலும், 10ம் வகுப்பை கல்வி தகுதியாக வைத்து, பல்வேறு பணி நியமனங்கள் உள்ளன. , உதவியாளர், அலுவலக உதவியாளர், டிரைவர், 'எலக்ட்ரீசியன்' உள்ளிட்ட கீழ் நிலை பணிகளுக்கு. பல அரசு துறைகளில் நேரடி பணி நியமனம் வழங்கப்படுகிறது. இதற்கும், 10ம் வகுப்பு மதிப்பெண் தேவைப்படுகிறது.தமிழ் படித்தவர்களுக்கு முன்னுரிமை என வரும் போது, அதிலும், 10ம் வகுப்பின் தமிழ் பாட மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. கடந்த காலங்களில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், ஆசிரியர் பணி நியமனங்களுக்கு, பள்ளி படிப்பு மதிப்பெண்களுக்கு, 'வெயிட்டேஜ் மார்க்' தரப்பட்டது. இந்த விவகாரம், உச்ச நீதிமன்றம் வரை சென்று, பின் ரத்து செய்யப்பட்டது.
எதிர்காலத்திலும் வெயிட்டேஜ் உத்தரவுகளை, அரசு பிறப்பிக்கலாம். உயர் படிப்புக்கான அரசு வேலைகளிலும், அவ்வப்போது அரசாணைகள் மாற்றப்பட்டு, பள்ளி படிப்பு மதிப்பெண் களுக்கு, வெயிட்டேஜ் மதிப்பெண் தரப்படுகிறது. எனவே, 10ம் வகுப்புக்கு மதிப்பெண்களே இன்றி, தற்போது சான்றிதழ் வழங்கினால், தற்போதைய மாணவர்கள், மற்ற கல்வி ஆண்டு மாணவர்களுடன் போட்டியிட்டு, வேலைவாய்ப்பு பெற முடியாத நிலை உருவாகும் என, பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர். தெளிவான அரசாணை :
இதுகுறித்து, பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:கொரோனா தொற்றின் காரணமாக, 10ம் வகுப்பு தேர்வை அரசு நடத்தவில்லை. எனவே, மாணவர்களுக்கு மதிப்பெண் இன்றி சான்றிதழ் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. எனவே, இந்த கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு, எதிர்காலத்தில் அரசு வேலைவாய்ப்பில் பாதிப்பு வராத வகையில், உரிய வழிகாட்டுதலுடன் அரசாணை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Post Top Ad