தடுப்பூசி முகாம் நடத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.கல்வியாண்டு துவக்கப்பட்ட நிலையில், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஜூன் 14 முதல் பள்ளிக்கு வர வேண்டும் என கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:மாணவர் சேர்க்கை பணிகளுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஆனால் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பலரும் இதுவரை தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை.பள்ளிகளுக்கு பெற்றோர்களை வரவழைத்து மாணவர் சேர்க்கை நடக் கும் பட்சத்தில் தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம்.எனவே, வட்டார அளவில் சிறப்பு முகாம் நடத்தி தலைமை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிபடுத்திய பின்னரே பள்ளிக்கு வரவழைக்க வேண்டும்.ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஆசிரியர்கள், இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள், கர்ப்பிணி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர விலக்கு அளிக்க வேண்டும். நீண்ட நாட்களாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தினால், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Post Top Ad
Friday, June 11, 2021
Home
Unlabelled
ஆசிரியர்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்தப்படுமா?