+2- மதிப்பெண் வழங்கும் முறை, விளக்க எடுத்துக்காட்டு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, June 26, 2021

+2- மதிப்பெண் வழங்கும் முறை, விளக்க எடுத்துக்காட்டு


📱📱மதிப்பெண் வழங்கும் முறை, விளக்க எடுத்துக்காட்டு
🏮10 ஆம் வகுப்பு

உயர் மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்களின்மதிப்பெண் 70,80,90 எனக்கொண்டால் இவற்றின் சராசரி, அதாவது மூன்றையும்கூட்டி மூன்றால் வகுக்க கிடைப்பது 80 ஆகும். இந்த 80 இல் 50 சதவீதம் 40 ஆகும். இந்த 40 மதிப்பெண்ணை 12 ஆம் வகுப்பில் ஒவ்வொருபாட மதிப்பெண்ணுக்கும் கூட்டிக்கொள்ள வேண்டும்.

🏮11ஆம் வகுப்பு

தமிழில்பெற்ற மொத்த மதிப்பெண் 90 எனில்அக மதிப்பீட்டு மதிப்பெண் 10 போக மீதம் உள்ளது80 ஆகும். இதில் 20 சதவீதம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது 80 ஐ 5 ஆல் வகுத்துக்கொள்ள வேண்டும். அப்படியெனில் 16 ஆகும். அதாவது 12 ஆம்வகுப்புக்கு தமிழ் பாடத்தில் சேர்க்கவேண்டிய மதிப்பெண் 16 ஆகும். இதே போன்றுஒவ்வொரு பாடத்திற்கும் கணக்கிட வேண்டும்.

🏮12 ஆம் வகுப்பு

 இதில் செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களுக்குசெய்முறைத் தேர்வுக்கு 20 + அக மதிப்பீட்டு மதிப்பெண்ணுக்கு10 என மொத்தம் 30 மதிப்பெண் எடுத்துக்கொள்ள வேண்டும். செய்முறைத் தேர்வு இல்லாத படங்களுக்குஅந்தந்த பாடத்திற்கு வழங்கப்பட்ட அக மதிப்பீட்டு மதிப்பெண்ணைமூன்றால் பெருக்கிக் கொள்ள வேண்டும். உதாரணமாகஒருவருக்கு தமிழ் பாடத்தில் அகமதிப்பீட்டு மதிப்பெண் 8 வழங்கப்பட்டது எனில் அவருக்கு 12 ஆம்வகுப்பில் தமிழ் பாடத்திற்கு 8×3=24 எனஎடுத்துக்கொள்ள வேண்டும்.

🏮12 ஆம் வகுப்பிற்கு மதிப்பெண்வழங்கும் முறை

உதாரணமாகதமிழ் பாடத்திற்கு எடுத்துக்கொள்வோம். 

பத்தாம்வகுப்பில் கணக்கிட்ட மதிப்பெண் 40, பதினோன்றாம்வகுப்பில் கணக்கிட்ட மதிப்பெண் 16, பண்ணிரண்டாம் வகுப்பில் கணக்கிட்ட மதிப்பெண் 24 ஆகிய அனைத்தையும்கூட்ட கிடைப்பது 40+16+24=80. எனவே 12 ஆம் வகுப்பிற்குஅவருக்கு தமிழ் பாடத்தில் 80 மதிப்பெண்வழங்கப்படும். இதே முறையை அனைத்துபாடங்களுக்கும் பின்பற்றவும்.Post Top Ad