ஏ.டி.எம்., பரிவர்த்தனைகட்டணம் உயருகிறது:
அடுத்தஆண்டு ஜன.,1 முதல், ஏ.டி.எம்., மையங்களில்மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை கட்டணத்தை, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
தற்போதுஒரு வங்கியின் வாடிக்கையாளர், அதே வங்கியின் ஏ.டி.எம்., வாயிலாக, மாதம், ஐந்து முறையும், பிறவங்கி ஏ.டி.எம்.,களில் மூன்று
முறையும், பணப் பரிவர்த்தனைகளை கட்டணமின்றி மேற்கொள்ளலாம்.
இதற்குமேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், 20 ரூபாய் கட்டணமாகவசூலிக்கப்படுகிறது.
ஜன.,1 முதல், தற்போதுள்ள இலவசபரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொருபணப் பரிவர்த்தனைக்கான கட்டணம், 20 ரூபாயில் இருந்து, 21 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.
வங்கிகள்இடையிலான, ஏ.டி.எம்., நிதிப் பரிவர்த்தனை கட்டணம், 15 ரூபாயில் இருந்து, 17 ரூபாய்; நிதி சாராதபரிவர்த்தனைகளுக்கான கட்டணம், 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.