தற்போது Emis இணையதளத்தில் மூலம் TC வழங்கும் வசதி மற்றும் Promotion செய்யும் வசதி புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ளப்படுகிறது.
குறிப்பு :
இப் பணிகளை செய்வதற்கு முன் தங்கள் பள்ளியின் 2020-21 அண்டிற்கான அனைத்து விவரங்களையும் Emis இணையதளத்தில் இருந்து Download செய்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் தயார் செய்து வழங்குவதற்கும் மாணவரது விபரங்களை common pool பகுதிக்கு அனுப்புவதற்கும் , பள்ளி உள்நுழைவில் Students Students TC details வாயிலாக Current student list ல் மாணவர்களின் பெயருக்கு எதிரே உள்ள என்ற குறியீட்டை தேர்வு செய்து , ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள மாணவரது சுய விபரங்களை சரி பார்த்துக்கொண்டு , மாற்றுச் சான்றிதழில் இடம் பெறும் கூடுதல் விவரங்களை பூர்த்தி செய்து கொடுத்திட Save Details வேண்டும் . அதன்பின்பு என்ற குறியீட்டை கிளிக் செய்து மாணவர் பள்ளியை விட்டு செல்வதற்கான காரணத்தை தேர்வு செய்து செய்திட வேண்டும் . அவ்வாறு செய்வதன் மூலம் சார்ந்த மாணவரது விபரம் common pool பகுதிக்கு அனுப்பப்படும். அதன்பின்பு past students list பகுதியினை திறந்து , தாங்கள் இதற்கு முன்பு மாற்று சான்றிதழ் தயார் செய்த மாணவரின் பெயருக்கு எதிரே உள்ள என்ற குறியீட்டின் மீது கிளிக் செய்து TC PDF COPY பதிவிறக்கம் செய்துகொள்ள இயலும். இவ்வாறு தயார் செய்யப்பட்ட மாற்றுச் சான்றிதழில் ஏதேனும் தவறுகள் கண்டறியப்படின் , அத்தவறுகளை திருத்தம் செய்து திரும்பவும் ( TC Edit option working upto 3 times for every student ) ( 3 V Update TC Details கொடுத்து print out எடுத்துக் கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது.