'கல்பனா சாவ்லா' விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான 'கல்பனா சாவ்லா விருது' ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் முதல்வரால் வழங்கப்படும். விருதாளருக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் ஒரு பதக்கம் வழங்கப்படும். தமிழகத்தைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இவ்விருது பெற தகுதியானவர்கள். இந்த ஆண்டு வழங்க உள்ள விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விரிவான தன்விபர குறிப்பு உரிய விபரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் சம்பந்தப் பட்ட மாவட்ட கலெக்டர் வழியாகவோ அல்லது awards.tn.gov.in என்ற இணையதளம் வழியாகவோ 'அரசு செயலர் பொதுத்துறை தலைமை செயலகம் சென்னை -- 600 009' என்ற முகவரிக்கு ஜூன் 30ம் தேதிக்கு முன் அனுப்பி வைக்க வேண்டும். விருது பெற தகுதி உள்ளவர்கள் இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படுவர் என சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.